| 1 | அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள். | அப் 6:7 அப் 2:41 அப் 2:47 அப் 4:4 அப் 5:14 அப் 5:28 சங் 72:16 சங் 110:3 ஏசா 27:6 எரே 30:19 |
| 2 | அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல. | அப் 21:22 |
| 3 | ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம். | அப் 9:30 அப் 15:23 மத் 23:8 1யோவா 3:14-16 |
| 4 | நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள். | அப் 2:42 அப் 20:19-31 ரோம 12:6-8 1கொரி 9:16 கொலோ 4:17 1தீமோ 4:13-16 2தீமோ 4:2 |
| 5 | இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு, | அப் 15:22 ஆதி 41:37 நீதி 15:1 நீதி 15:23 நீதி 25:11 நீதி 25:12 |
| 6 | அவர்களை அப்போஸ்தலருக்குமுன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள். | அப் 1:24 அப் 8:17 அப் 9:17 அப் 13:3 1தீமோ 4:14 1தீமோ 5:22 2தீமோ 1:6 |
| 7 | தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள். | அப் 12:24 அப் 19:20 கொலோ 1:6 2தீமோ 2:9 |
| 8 | ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான். | அப் 6:3 அப் 6:5 அப் 6:10 அப் 6:15 அப் 7:55 எபே 4:11 1தீமோ 3:13 |
| 9 | அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே தர்க்கம்பண்ணினார்கள். | அப் 13:45 அப் 17:17 அப் 17:18 |
| 10 | அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று. | அப் 5:39 அப் 7:51 யாத் 4:12 ஏசா 54:17 எரே 1:18 எரே 1:19 எரே 15:20 எசே 3:27 மத் 10:19 மத் 10:20 லூக் 12:11 லூக் 12:12 லூக் 21:15 யோவா 7:46 |
| 11 | அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை ஏற்படுத்தி; | அப் 23:12-15 அப் 24:1-13 அப் 25:3 அப் 25:7 1இரா 21:10 1இரா 21:13 மத் 26:59 மத் 26:60 மத் 28:12-15 யோவா 16:3 ரோம 3:8 |
| 12 | ஜனங்களையும் மூப்பரையும் வேதபாரகரையும் எழுப்பிவிட்டு; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்; | அப் 13:50 அப் 14:2 அப் 17:5 அப் 17:13 அப் 21:27 நீதி 15:18 |
| 13 | பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனுஷன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷணவார்த்தைகளை ஓயாமற்பேசுகிறான்; | அப் 6:11 சங் 27:12 சங் 35:11 சங் 56:5 |
| 14 | எப்படியென்றால், நசரேயனாகிய அந்த இயேசு இந்த ஸ்தலத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த முறைமைகளை மாற்றுவானென்று இவன் சொல்லக்கேட்டோம் என்றார்கள். | அப் 25:8 |
| 15 | ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவன்மேல் கண்ணோக்கமாயிருந்து, அவன் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக் கண்டார்கள். | யாத் 34:29-35 பிரச 8:1 மத் 13:43 மத் 17:2 2கொரி 3:7 2கொரி 3:8 2கொரி 3:18 |