| 1 | ஜெபவேளையாகிய ஒன்பதாம்மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். | அப் 4:13 அப் 8:14 மத் 17:1 மத் 26:37 யோவா 13:23-25 யோவா 20:2-9 யோவா 21:7 யோவா 21:18-22 கலா 2:9 |
| 2 | அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டு வந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அவனை அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள். | அப் 4:22 அப் 14:8 யோவா 1:9-30 |
| 3 | தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும், யோவானையும் அவன் கண்டு பிச்சை கேட்டான். |
| 4 | பேதுருவும், யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். | அப் 11:6 அப் 14:9 அப் 14:10 லூக் 4:20 |
| 5 | அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான். |
| 6 | அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி, | மத் 10:9 1கொரி 4:11 2கொரி 6:10 2கொரி 8:9 யாக் 2:5 |
| 7 | வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது. | அப் 9:41 மாற் 1:31 மாற் 5:41 மாற் 9:27 லூக் 13:13 |
| 8 | அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான். | அப் 14:10 ஏசா 35:6 லூக் 6:23 யோவா 5:8 யோவா 5:9 யோவா 5:14 |
| 9 | அவன் நடக்கிறதையும், தேவனைத்துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு: | அப் 14:11 மாற் 2:11 மாற் 2:12 லூக் 13:17 |
| 10 | தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள். | அப் 3:2 அப் 4:14-16 அப் 4:21-16 அப் 4:22-16 யோவா 9:3 யோவா 9:18-21 |
| 11 | குணமாக்கப்பட்ட சப்பாணி பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், ஜனங்களெல்லாரும் பிரமித்து, சாலொமோன் மண்டபம் என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள். | லூக் 8:38 |
| 12 | பேதுரு அதைக் கண்டு ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலரே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்கள் சுயசக்தியினாலாவது, எங்கள் சுயபக்தியினாலாவது, இவனை நடக்கப்பண்ணினோமென்று நீங்கள் எங்களை நோக்கிப்பார்க்கிறதென்ன? | அப் 2:22 அப் 13:26 ரோம 9:4 ரோம 11:1 |
| 13 | ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது, அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள். | அப் 5:30 அப் 7:32 யாத் 3:6 சங் 105:6-10 மத் 22:32 எபிரெ 11:9-16 |
| 14 | பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலை பண்ணவேண்டுமென்று கேட்டு, | அப் 2:27 அப் 4:27 அப் 7:52 அப் 22:14 சங் 16:10 சகரி 9:9 மாற் 1:24 லூக் 1:35 யாக் 5:6 1பேது 3:18 1யோவா 2:1 வெளிப் 3:7 |
| 15 | ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். | யோவா 1:4 யோவா 4:10 யோவா 4:14 யோவா 5:26 யோவா 10:28 யோவா 11:25 யோவா 11:26 யோவா 14:6 யோவா 17:2 ரோம 8:1 ரோம 8:2 1கொரி 15:45 கொலோ 3:3 கொலோ 3:4 எபிரெ 2:10 எபிரெ 5:9 1யோவா 5:11 1யோவா 5:12 1யோவா 5:20 வெளிப் 21:6 வெளிப் 22:1 வெளிப் 22:17 |
| 16 | அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப்பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது. | அப் 3:6 அப் 4:7 அப் 4:10 அப் 4:30 அப் 16:18 மத் 9:22 |
| 17 | சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச் செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன். | அப் 7:40 ஆதி 21:26 ஆதி 39:8 ஆதி 44:15 யாத் 32:1 எண் 22:6 ரோம 11:2 பிலிப் 1:22 |
| 18 | கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் முன்னறிவித்தவைகளை இவ்விதமாய் நிறைவேற்றினார். | அப் 17:2 அப் 17:3 அப் 26:22 அப் 26:23 அப் 28:23 லூக் 24:26 லூக் 24:27 லூக் 24:44 1கொரி 15:3 1கொரி 15:4 1பேது 1:10 1பேது 1:11 வெளிப் 19:10 |
| 19 | ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும், | அப் 2:38 அப் 11:18 2தீமோ 2:25 |
| 20 | உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள். | அப் 17:31 மத் 16:27 மத் 24:3 மத் 24:30-36 மாற் 13:26 மாற் 13:30-37 லூக் 19:11 லூக் 21:27 2தெச 2:2 2தெச 2:8 எபிரெ 9:28 வெளிப் 1:7 வெளிப் 19:11-16 |
| 21 | உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும். | அப் 1:11 |
| 22 | மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. | அப் 7:37 உபா 18:15-19 |
| 23 | அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான். | அப் 13:38-41 உபா 18:19 மாற் 16:16 யோவா 3:18-20 யோவா 8:24 யோவா 12:48 2தெச 1:7-9 எபிரெ 2:3 எபிரெ 10:28-30 எபிரெ 10:39-30 எபிரெ 12:25 வெளிப் 13:8 வெளிப் 20:15 |
| 24 | சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள். | அப் 3:19 அப் 3:21 ரோம 3:21 |
| 25 | நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடேபண்ணின உடன்படிக்கைக்கும் புத்திரராயிருக்கிறீர்கள். | அப் 2:39 அப் 13:26 ஆதி 20:7 ஆதி 27:36-40 ஆதி 48:14-20 ஆதி 49:1-33 சங் 105:8-15 மத் 3:9 மத் 3:10 |
| 26 | அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான். | அப் 1:8 அப் 13:26 அப் 13:32 அப் 13:33 அப் 13:46 அப் 13:47 அப் 18:4-6 அப் 26:20 அப் 28:23-28 மத் 10:5 மத் 10:6 லூக் 24:47 ரோம 2:9 ரோம 2:10 வெளிப் 7:4-9 |