| 1 | அகிரிப்பா பவுலை நோக்கி: நீ உனக்காகப் பேச உனக்கு உத்தரவாகிறது என்றான். அப்பொழுது பவுல் கையை நீட்டி, தனக்காக உத்தரவு சொல்லத் தொடங்கினான். | அப் 25:16 நீதி 18:13 நீதி 18:17 யோவா 7:51 |
| 2 | அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சாட்டுகிற சகல காரியங்களைக்குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாக உத்தரவு சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன். |
| 3 | விசேஷமாய் நீர் யூதருடைய சகலமுறைமைகளையும் தர்க்கங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்; ஆகையால் நான் சொல்வதைப் பொறுமையோடே கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். | அப் 26:26 அப் 6:14 அப் 21:21 அப் 24:10 அப் 25:19 அப் 25:20 அப் 25:26 அப் 28:17 உபா 17:18 1கொரி 13:2 |
| 4 | நான் என் சிறுவயதுமுதற்கொண்டு, எருசலேமிலே என் ஜனத்தாருக்குள்ளே இருந்தபடியால், ஆதிமுதல் நான் நடந்த நடக்கையை யூதரெல்லாரும் அறிந்திருக்கிறார்கள். | 2தீமோ 3:10 |
| 5 | நம்முடைய மார்க்கத்திலுள்ள சமயபேதங்களில் மிகவும் கண்டிப்பான சமயத்துக்கு இசைந்தபடி பரிசேயனாய் நடந்தேனென்று சாட்சிசொல்ல அவர்களுக்கு மனதிருந்தால் சொல்லலாம். | அப் 22:5 |
| 6 | தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயத்தீர்ப்படைகிறவனாய் நிற்கிறேன். | அப் 26:8 அப் 23:6 அப் 24:15 அப் 24:21 அப் 28:20 |
| 7 | இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்துவருகிற நம்முடைய பன்னிரண்டு கோத்திரத்தாரும் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்று நம்பியிருக்கிறார்கள். அகிரிப்பா ராஜாவே, அந்த நம்பிக்கையினிமித்தமே யூதர்கள் என்மேல் குற்றஞ்சாட்டுகிறார்கள். | எஸ்றா 6:17 எஸ்றா 8:35 மத் 19:28 லூக் 22:30 யாக் 1:1 வெளிப் 7:4-8 |
| 8 | தேவன் மரித்தோரை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் எண்ணுகிறதென்ன? | அப் 4:2 அப் 10:40-42 அப் 13:30 அப் 13:31 அப் 17:31 அப் 17:32 அப் 25:19 ஆதி 18:14 மத் 22:29-32 லூக் 1:37 லூக் 18:27 யோவா 5:28 யோவா 5:29 1கொரி 15:12-20 பிலிப் 3:21 |
| 9 | முன்னே நானும் நசரேயனாகிய இயேசுவின் நாமத்திற்கு விரோதமாய் அநேக காரியங்களை நடப்பிக்கவேண்டுமென்று நினைத்திருந்தேன். | யோவா 16:2 யோவா 16:3 ரோம 10:2 கலா 1:13 கலா 1:14 பிலிப் 3:6 1தீமோ 1:13 |
| 10 | அப்படியே நான் எருசலேமிலும் செய்தேன். நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரம் பெற்று, பரிசுத்தவான்களில் அநேகரைச் சிறைச்சாலைகளில் அடைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்படுகையில் நானும் சம்மதித்திருந்தேன். | அப் 7:58 அப் 8:1 அப் 8:3 அப் 9:13 அப் 9:26 அப் 22:4 அப் 22:19 அப் 22:20 1கொரி 15:9 கலா 1:13 |
| 11 | சகல ஜெப ஆலயங்களிலும் நான் அவர்களை அநேகந்தரம் தண்டித்து, தேவதூஷணஞ்சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள்பேரில் மூர்க்கவெறிகொண்டவனாய் அந்நியப்பட்டணங்கள்வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன். | அப் 22:19 மத் 10:17 மாற் 13:9 லூக் 21:12 |
| 12 | இப்படிச் செய்துவருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும்போது, | அப் 9:1 அப் 9:2 அப் 22:5 |
| 13 | மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம்பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன். | அப் 9:3 அப் 22:6 |
| 14 | நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். | அப் 21:40 அப் 22:2 |
| 15 | அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. | யாத் 16:8 மத் 25:40 மத் 25:45 யோவா 15:20 யோவா 15:21 |
| 16 | இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன். | அப் 9:6-9 அப் 22:10 |
| 17 | உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி, | அப் 9:23-25 அப் 9:29-25 அப் 9:30-25 அப் 13:50 அப் 14:5 அப் 14:6 அப் 14:19 அப் 14:20 அப் 16:39 அப் 17:10 அப் 17:14 அப் 18:10 அப் 18:12-16 அப் 19:28-41 அப் 21:28-36 அப் 22:21 அப் 22:22 அப் 23:10-24 அப் 25:3 அப் 25:9-11 அப் 27:42-44 சங் 34:19 சங் 37:32 சங் 37:33 2கொரி 1:8-10 2கொரி 4:8-10 2கொரி 11:23-26 2தீமோ 3:11 2தீமோ 4:16 2தீமோ 4:17 |
| 18 | அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். | அப் 9:17 அப் 9:18 சங் 119:18 சங் 146:8 ஏசா 29:18 ஏசா 32:3 ஏசா 35:5 ஏசா 42:7 ஏசா 43:8 லூக் 4:18 லூக் 24:45 யோவா 9:39 2கொரி 4:4 2கொரி 4:6 எபே 1:18 |
| 19 | ஆகையால், அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழப்படியாதவனாயிருக்கவில்லை. | அப் 26:2 அப் 26:26 அப் 26:27 |
| 20 | முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா தேசமெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு புறஜாதியாரிடத்திலும் நான் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பிக் குணப்படவும், மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன். | அப் 9:19-22 அப் 11:26-30 |
| 21 | இதினிமித்தமே யூதர்கள் தேவாலயத்திலே என்னைப் பிடித்துக் கொலைசெய்யப் பிரயத்தனம் பண்ணினார்கள். | அப் 21:30 அப் 21:31 அப் 22:22 அப் 23:12-15 அப் 25:3 |
| 22 | ஆனாலும் தேவ அநுக்கிரகம் பெற்று, நான் இந்நாள்வரைக்கும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சிகூறி வருகிறேன். | அப் 26:17 அப் 14:19 அப் 14:20 அப் 16:25 அப் 16:26 அப் 18:9 அப் 18:10 அப் 21:31-33 அப் 23:10 அப் 23:11 அப் 23:16-22 1சாமு 7:12 எஸ்றா 8:31 சங் 18:47 சங் 66:12 சங் 118:10-13 சங் 124:1-3 சங் 124:8-3 2கொரி 1:8-10 2தீமோ 3:11 2தீமோ 4:17 2தீமோ 4:18 |
| 23 | தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுயஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான். | ஆதி 3:15 சங் 22:1-69 ஏசா 53:1-12 தானி 9:24-26 சகரி 12:10 சகரி 13:7 லூக் 18:31-33 லூக் 24:26 லூக் 24:46 1கொரி 15:3 |
| 24 | இவ்விதமாய் அவன் தனக்காக உத்தரவு சொல்லுகையில், பெஸ்து உரத்தசத்தமாய்: பவுலே, நீ பிதற்றுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான். | அப் 22:1 |
| 25 | அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சொஸ்தபுத்தியுமுள்ள வார்த்தைகளைப் பேசுகிறேன். | யோவா 8:49 1பேது 2:21-23 1பேது 3:9 1பேது 3:15 |
| 26 | இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல. | அப் 26:2 அப் 26:3 அப் 25:22 |
| 27 | அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா? விசுவாசிக்கிறீர் என்று அறிவேன் என்றான். | அப் 26:22 அப் 26:23 |
| 28 | அப்பொழுது அகிரிப்பா பவுலை நோக்கி: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றான். | அப் 26:29 அப் 24:25 எசே 33:31 மத் 10:18 மாற் 6:20 மாற் 10:17-22 2கொரி 4:2 யாக் 1:23 யாக் 1:24 |
| 29 | அதற்குப் பவுல்: நீர்மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும், கொஞ்சங்குறையமாத்திரம் அல்ல, இந்தக் கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். | யாத் 16:3 எண் 11:29 2சாமு 18:33 2இரா 5:3 1கொரி 4:8 1கொரி 7:7 2கொரி 11:1 |
| 30 | இவைகளை அவன் சொன்னபோது, ராஜாவும் தேசாதிபதியும் பெர்னீக்கேயாளும் அவர்களுடனேகூட உட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து, | அப் 18:15 அப் 28:22 |
| 31 | தனியே போய்: இந்த மனுஷன் மரணத்துக்காவது கட்டுகளுக்காவது பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். | அப் 23:9 அப் 23:29 அப் 25:25 அப் 28:18 2சாமு 24:17 லூக் 23:4 லூக் 23:14 லூக் 23:15 1பேது 3:16 1பேது 4:14-16 |
| 32 | அகிரிப்பா பெஸ்துவை நோக்கி: இந்த மனுஷன் இராயனுக்கு அபயமிடாதிருந்தானானால், இவனை விடுதலைபண்ணலாகும் என்றான். | அப் 25:11 அப் 25:12 அப் 25:25 அப் 28:18 |