| 1 | நாங்கள் இத்தாலியா தேசத்துக்குக் கப்பல் ஏறிப்போகும்படி தீர்மானிக்கப்பட்டபோது, பவுலையும் காவலில் வைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அகுஸ்து பட்டாளத்தைச் சேர்ந்த யூலியு என்னும் பேர்கொண்ட நூற்றுக்கு அதிபதியினிடத்தில் ஒப்புவித்தார்கள். | அப் 19:21 அப் 23:11 அப் 25:12 அப் 25:25 ஆதி 50:20 சங் 33:11 சங் 76:10 நீதி 19:21 புலம் 3:27 தானி 4:35 ரோம 15:22-29 |
| 2 | அதிரமித்தியம் ஊர்க்கப்பலில் நாங்கள் ஏறி, ஆசியா நாட்டுக் கரைபிடித்தோடவேண்டுமென்று நினைத்துப் புறப்பட்டோம். மக்கெதோனியா தேசத்துத் தெசலோனிக்கே பட்டணத்தானாகிய அரிஸ்தர்க்கு எங்களுடனேகூட இருந்தான். | அப் 21:1 லூக் 8:22 |
| 3 | மறுநாள் சீதோன் துறைபிடித்தோம். யூலியு பவுலைப் பட்சமாய் நடப்பித்து, அவன் தன் சிநேகிதரிடத்திலே போய்ப் பராமரிப்படையும்படிக்கு உத்தரவு கொடுத்தான். | அப் 12:20 ஆதி 10:15 ஆதி 49:13 ஏசா 23:2-4 ஏசா 23:12-4 சகரி 9:2 |
| 4 | அவ்விடம்விட்டு நாங்கள் புறப்பட்டு, எதிர்க்காற்றாயிருந்தபடியினால், சீப்புரு தீவின் ஒதுக்கிலே ஓடினோம். | அப் 4:36 அப் 11:19 அப் 11:20 அப் 13:4 அப் 15:39 அப் 21:3 அப் 21:16 |
| 5 | பின்பு சிலிசியா பம்பிலியா நாடுகளின் கடல்வழியாய் ஓடி, லீசியா நாட்டு மீறாப்பட்டணத்தில் சேர்ந்தோம். | அப் 6:9 அப் 15:23 அப் 15:41 அப் 21:39 அப் 22:3 கலா 1:21 |
| 6 | இத்தாலியாவுக்குப் போகிற அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலை நூற்றுக்கு அதிபதி அங்கே கண்டு, எங்களை அதில் ஏற்றினான். | அப் 6:9 அப் 18:24 அப் 28:11 |
| 7 | காற்று எங்களைத் தடுத்தபடியினாலே, நாங்கள் அநேகநாள் மெதுவாய்ச் சென்று, வருத்தத்தோடே கினீதுபட்டணத்திற்கு எதிரே வந்து, சல்மோனே ஊருக்கு எதிராய்க் கிரேத்தாதீவின் ஒதுக்கில் ஓடினோம். | அப் 27:12 அப் 27:13 அப் 27:21 அப் 2:11 தீத் 1:5 தீத் 1:12 |
| 8 | அதை வருத்தத்தோடே கடந்து, நல்ல துறைமுகம் என்னப்பட்ட ஒரு இடத்திற்கு வந்தோம்; லசேயபட்டணம் அதற்குச் சமீபமாயிருந்தது. |
| 9 | வெகுகாலம் சென்று, உபவாசநாளும் கழிந்துபோனபடியினாலே, இனிக் கப்பல் யாத்திரை செய்கிறது மோசத்திற்கு ஏதுவாயிருக்குமென்று, பவுல் அவர்களை நோக்கி: | லேவி 16:29 லேவி 23:27-29 எண் 29:7 |
| 10 | மனுஷரே, இந்த யாத்திரையினாலே சரக்குக்கும் கப்பலுக்கும் மாத்திரமல்ல, நம்முடைய ஜீவனுக்கும் வருத்தமும் மிகுந்த சேதமும் உண்டாயிருக்குமென்று காண்கிறேன் என்று சொல்லி, அவர்களை எச்சரித்தான். | அப் 27:21-26 அப் 27:31-26 அப் 27:34-26 ஆதி 41:16-25 ஆதி 41:38-25 ஆதி 41:39-25 2இரா 6:9 2இரா 6:10 சங் 25:14 தானி 2:30 ஆமோ 3:7 |
| 11 | நூற்றுக்கு அதிபதி பவுலினால் சொல்லப்பட்டவைகளைப் பார்க்கிலும் மாலுமியையும் கப்பல் எஜமானையும் அதிகமாய் நம்பினான். | அப் 27:21 யாத் 9:20 யாத் 9:21 2இரா 6:10 நீதி 27:12 எசே 3:17 எசே 3:18 எசே 33:4 எபிரெ 11:7 |
| 12 | அந்தத் துறைமுகம் மழைகாலத்திலே தங்குவதற்கு வசதியாயிராதபடியினால், அவ்விடத்தை விட்டுத் தென்மேற்கையும் வடமேற்கையும் நோக்கியிருக்கும் கிரேத்தா தீவிலுள்ள துறைமுகமாகிய பேனிக்ஸ் என்னும் இடத்தில் சேரக்கூடுமானால் சேர்ந்து, மழைகாலத்தில் தங்கும்படி அநேகம்பேர் ஆலோசனை சொன்னார்கள். | அப் 27:8 சங் 107:30 |
| 13 | தென்றல் மெதுவாயடித்தபடியால், தாங்கள் கோரினது கைகூடிவந்ததென்று எண்ணி, அவ்விடம்விட்டுப் பெயர்ந்து கிரேத்தா தீவுக்கு அருகாக ஓடினார்கள். | யோபு 37:17 சங் 78:26 உன்ன 4:16 லூக் 12:55 |
| 14 | கொஞ்சநேரத்துக்குள்ளே யூரோக்கிலிதோன் என்னுங்கடுங்காற்று அதில் மோதிற்று. | யாத் 14:21-27 யோனா 1:3-5 |
| 15 | கப்பல் அதில் அகப்பட்டுக்கொண்டு, காற்றுக்கு எதிர்த்துப்போகக்கூடாதபடியினால் காற்றின் போக்கிலே கொண்டுபோகப்பட்டோம். | அப் 27:27 யாக் 3:4 |
| 16 | அப்படிக் கிலவுதா என்னப்பட்ட ஒரு சின்ன தீவின் ஒதுக்கிலே ஓடுகையில் வெகு வருத்தத்தோடே படவை வசப்படுத்தினோம். |
| 17 | அதை அவர்கள் தூக்கியெடுத்தபின்பு, பல உபாயங்கள் செய்து, கப்பலைச் சுற்றிக் கட்டி, சொரிமணலிலே விழுவோமென்று பயந்து, பாய்களை இறக்கி, இவ்விதமாய்க் கொண்டுபோகப்பட்டார்கள். | அப் 27:29 அப் 27:41 |
| 18 | மேலும் பெருங்காற்றுமழையில் நாங்கள் மிகவும் அடிபட்டபடியினால், மறுநாளில் சில சரக்குகளைக் கடலில் எறிந்தார்கள். | சங் 107:27 |
| 19 | மூன்றாம் நாளிலே கப்பலின் தளவாடங்களை எங்கள் கைகளினாலே எடுத்து எறிந்தோம். | யோபு 2:4 யோனா 1:5 மாற் 8:35-37 லூக் 9:24 லூக் 9:25 |
| 20 | அநேகநாளாய்ச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல், மிகுந்த பெருங்காற்றுமழையும் அடித்துக் கொண்டிருந்தபடியினால், இனித் தப்பிப்பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று. | யாத் 10:21-23 சங் 105:28 மத் 24:29 |
| 21 | அநேகநாள் அவர்கள் போஜனம்பண்ணாமல் இருந்தபோது, பவுல் அவர்கள் நடுவிலே நின்று: மனுஷரே, இந்த வருத்தமும் சேதமும் வராதபடிக்கு என் சொல்லைக்கேட்டு, கிரேத்தாதீவை விட்டுப்புறப்படாமல் இருக்கவேண்டியதாயிருந்தது. | அப் 27:33-35 சங் 107:5 சங் 107:6 |
| 22 | ஆகிலும் திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற் சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது. | அப் 27:25 அப் 27:36 அப் 23:11 1சாமு 30:6 எஸ்றா 10:2 யோபு 22:29 யோபு 22:30 சங் 112:7 ஏசா 43:1 ஏசா 43:2 2கொரி 1:4-6 2கொரி 4:8 2கொரி 4:9 |
| 23 | ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்து நின்று: | அப் 5:19 அப் 12:8-11 அப் 12:23-11 அப் 23:11 தானி 6:22 எபிரெ 1:14 வெளிப் 22:16 |
| 24 | பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும், இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான். | அப் 18:9 அப் 18:10 ஆதி 15:1 ஆதி 46:3 1இரா 17:13 2இரா 6:16 ஏசா 41:10-14 ஏசா 43:1-5 மத் 10:28 வெளிப் 1:17 |
| 25 | ஆனபடியினால் மனுஷரே, திடமனதாயிருங்கள். எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன். | அப் 27:11 அப் 27:21 எண் 23:19 2நாளா 20:20 லூக் 1:45 ரோம 4:20 ரோம 4:21 2தீமோ 1:12 |
| 26 | ஆயினும் நாம் ஒரு தீவிலே விழவேண்டியதாயிருக்கும் என்றான். | அப் 28:1 |
| 27 | பதினாலாம் இராத்திரியானபோது, நாங்கள் ஆதிரியாக் கடலிலே அலைவுபட்டு ஓடுகையில், நடுஜாமத்திலே கப்பலாட்களுக்கு ஒரு கரை கிட்டிவருகிறதாகத் தோன்றிற்று. | அப் 27:30 1இரா 9:27 யோனா 1:6 வெளிப் 18:17 |
| 28 | உடனே அவர்கள் விழுதுவிட்டு இருபது பாகமென்று கண்டார்கள்; சற்றப்புறம் போனபொழுது, மறுபடியும் விழுதுவிட்டுப் பதினைந்து பாகமென்று கண்டார்கள். |
| 29 | பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின்னணியத்திலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, பொழுது எப்போது விடியுமோ என்றிருந்தார்கள். | அப் 27:17 அப் 27:41 |
| 30 | அப்பொழுது கப்பலாட்கள் கப்பலை விட்டோடிப்போக வகைதேடி, முன்னணியத்திலிருந்து நங்கூரங்களைப் போடப்போகிற பாவனையாய்ப் படவைக் கடலில் இறக்குகையில், | அப் 27:16 அப் 27:32 |
| 31 | பவுல் நூற்றுக்கு அதிபதியையும் சேவகரையும் நோக்கி: இவர்கள் கப்பலில் இராவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் என்றான். | அப் 27:11 அப் 27:21 அப் 27:42 அப் 27:43 |
| 32 | அப்பொழுது, போர்ச்சேவகர் படவின் கயிறுகளை அறுத்து, அதைத் தாழ விழவிட்டார்கள். | லூக் 16:8 பிலிப் 3:7-9 |
| 33 | பொழுது விடிகையில் எல்லாரும் போஜனம்பண்ணும்படி பவுல் அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி: நீங்கள் இன்று பதினாலுநாளாய் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாயிருக்கிறீர்கள். |
| 34 | ஆகையால் போஜனம்பண்ணும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாயிருக்கும்; உங்கள் தலையிலிருந்து ஒரு மயிரும் விழாது என்றான். | மத் 15:32 மாற் 8:2 மாற் 8:3 பிலிப் 2:5 1தீமோ 5:23 |
| 35 | இப்படிச் சொல்லி. அப்பத்தை எடுத்து, எல்லாருக்குமுன்பாகவும் தேவனை ஸ்தோத்தரித்து, அதைப் பிட்டுப் புசிக்கத்தொடங்கினான். | அப் 2:46 அப் 2:47 1சாமு 9:13 மத் 15:36 மாற் 8:6 லூக் 24:30 யோவா 6:11 யோவா 6:23 ரோம 14:6 1கொரி 10:30 1கொரி 10:31 1தீமோ 4:3 1தீமோ 4:4 |
| 36 | அப்பொழுது எல்லாரும் திடமனப்பட்டுப் புசித்தார்கள். | சங் 27:14 2கொரி 1:4-6 |
| 37 | கப்பலில் இருநூற்றெழுபத்தாறுபேர் இருந்தோம். | அப் 2:41 அப் 7:14 ரோம 13:1 1பேது 3:20 |
| 38 | திருப்தியாகப் புசித்தபின்பு அவர்கள் கோதுமையைக் கடலிலே எறிந்து, கப்பலை இலகுவாக்கினார்கள். | அப் 27:18 அப் 27:19 யோபு 2:4 யோனா 1:5 மத் 6:25 மத் 16:26 எபிரெ 12:1 |
| 39 | பொழுது விடிந்தபின்பு, இன்னபூமியென்று அறியாதிருந்தார்கள். அப்பொழுது சமமான கரையுள்ள ஒரு துறைமுகம் அவர்களுக்குத் தென்பட்டது; கூடுமானால் அதற்குள் கப்பலையோட்ட யோசனையாயிருந்து, |
| 40 | நங்கூரங்களை அறுத்துக் கடலிலே விட்டுவிட்டு, சுக்கான்களுடைய கட்டுகளைத் தளரவிட்டு, பெரும்பாயைக் காற்று முகமாய் விரித்து, கரைக்கு நேராய் ஓடி, | அப் 27:29 அப் 27:30 |
| 41 | இருபுறமும் கடல் மோதிய ஒரு இடத்திலே கப்பலைத் தட்டவைத்தார்கள்; முன்னணியம் ஊன்றி அசையாமலிருந்தது, பின்னணியம் அலைகளுடைய பலத்தினால் உடைந்துபோயிற்று. | அப் 27:17 அப் 27:26-29 2கொரி 11:25 |
| 42 | அப்பொழுது காவல்பண்ணப்பட்டவர்களில் ஒருவனும் நீந்தி ஓடிப்போகாதபடிக்கு அவர்களைக் கொன்றுபோடவேண்டுமென்று போர்ச்சேவகர் யோசனையாயிருந்தார்கள். | சங் 74:20 நீதி 12:10 பிரச 9:3 மாற் 15:15-20 லூக் 23:40 லூக் 23:41 |
| 43 | நூற்றுக்கு அதிபதி பவுலைக் காப்பாற்ற மனதாயிருந்து, அவர்களுடைய யோசனையைத் தடுத்து, நீந்தத்தக்கவர்கள் முந்திக் கடலில் விழுந்து கரையேறவும், | அப் 27:3 அப் 27:11 அப் 27:31 அப் 23:10 அப் 23:24 நீதி 16:7 2கொரி 11:25 |
| 44 | மற்றவர்களில் சிலர் பலகைகள்மேலும், சிலர் கப்பல் துண்டுகள்மேலும் போய்க் கரையேறவும் கட்டளையிட்டான்; இவ்விதமாய் எல்லாரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள். | அப் 27:22 அப் 27:24 சங் 107:28-30 ஆமோ 9:9 யோவா 6:39 யோவா 6:40 2கொரி 1:8-10 1பேது 4:18 |