| 1 | அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு: | அப் 18:24-28 1கொரி 1:12 1கொரி 3:4-7 1கொரி 16:12 |
| 2 | நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். | அப் 19:5 அப் 2:17 அப் 2:38 அப் 2:39 அப் 8:15-17 அப் 10:44 அப் 11:15-17 ரோம 1:11 |
| 3 | அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள். | மத் 28:19 1கொரி 12:13 |
| 4 | அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். | அப் 1:5 அப் 11:16 அப் 13:23-25 மத் 3:11 மத் 3:12 மத் 11:3-5 மத் 21:25-32 மாற் 1:1-12 லூக் 1:76-79 லூக் 3:16-18 யோவா 1:15 யோவா 1:27 யோவா 1:29-34 யோவா 3:28-36 யோவா 5:33-35 |
| 5 | அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். | அப் 2:38 அப் 8:12 அப் 8:16 ரோம 6:3 ரோம 6:4 1கொரி 1:13-15 1கொரி 10:2 |
| 6 | அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள். | அப் 6:6 அப் 8:17-19 அப் 9:17 1தீமோ 5:22 2தீமோ 1:6 |
| 7 | அந்த மனுஷரெல்லாரும் ஏறக்குறையப் பன்னிரண்டு பேராயிருந்தார்கள். |
| 8 | பின்பு பவுல் ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, தைரியமாய்ப் பிரசங்கித்து, மூன்று மாதமளவும் தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக்குறித்துச் சம்பாஷணைபண்ணி, புத்திசொல்லிக்கொண்டு வந்தான். | அப் 13:14 அப் 13:46 அப் 14:1 அப் 26:22 அப் 26:23 |
| 9 | சிலர் கடினப்பட்டு அவிசுவாசிகளாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்க்கத்தை நிந்தித்தபோது, அவன் அவர்களை விட்டு விலகி, சீஷரை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு என்னும் ஒருவனுடைய வித்தியாசாலையிலே அநுதினமும் சம்பாஷித்துக் கொண்டுவந்தான். | அப் 7:51 அப் 13:45 அப் 13:46 அப் 18:6 2இரா 17:14 2நாளா 30:8 2நாளா 36:16 நெகே 9:16 நெகே 9:17 நெகே 9:29 சங் 95:8 ஏசா 8:14 எரே 7:26 எரே 19:15 யோவா 12:40 ரோம 9:18 ரோம 11:7 எபிரெ 3:13 |
| 10 | இரண்டு வருஷகாலம் இப்படி நடந்ததினாலே ஆசியாவில் குடியிருந்த யூதரும் கிரேக்கருமாகிய எல்லாரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள். | அப் 18:11 அப் 20:18 அப் 20:31 ரோம 10:18 |
| 11 | பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார். | அப் 5:12 அப் 14:3 அப் 15:12 அப் 16:18 மாற் 16:17-20 யோவா 14:12 ரோம 15:18 ரோம 15:19 கலா 3:5 எபிரெ 2:4 |
| 12 | அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும், கச்சைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன. | அப் 5:15 2இரா 4:29-31 2இரா 13:20 2இரா 13:21 |
| 13 | அப்பொழுது தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். | ஆதி 4:12 ஆதி 4:14 சங் 109:10 |
| 14 | பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஒரு யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள். |
| 15 | பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, | அப் 16:17 அப் 16:18 ஆதி 3:1-5 1இரா 22:21-23 மத் 8:29-31 மாற் 1:24 மாற் 1:34 மாற் 5:9-13 லூக் 4:33-35 லூக் 8:28-32 |
| 16 | பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள். | மாற் 5:3 மாற் 5:4 மாற் 5:15 லூக் 8:29 லூக் 8:35 |
| 17 | இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது. | அப் 2:43 அப் 5:5 அப் 5:11 அப் 5:13 அப் 13:12 லேவி 10:3 1சாமு 6:20 2சாமு 6:9 சங் 64:9 லூக் 1:65 லூக் 7:16 |
| 18 | விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்கள் செய்கைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள். | லேவி 16:21 லேவி 26:40 யோபு 33:27 யோபு 33:28 சங் 32:5 நீதி 28:13 எரே 3:13 எசே 16:63 எசே 36:31 மத் 3:6 ரோம 10:10 1யோவா 1:9 |
| 19 | மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கும் முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் கிரயத்தைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள். | அப் 8:9-11 அப் 13:6 அப் 13:8 யாத் 7:11 யாத் 7:22 உபா 18:10-12 1சாமு 28:7-9 1நாளா 10:13 2நாளா 33:6 ஏசா 8:19 ஏசா 47:12 ஏசா 47:13 தானி 2:2 |
| 20 | இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது. | அப் 6:7 அப் 12:24 ஏசா 55:11 2தெச 3:1 |
| 21 | இவைகள் முடிந்தபின்பு, பவுல் மக்கெதோனியா அகாயா என்னும் நாடுகளில் சுற்றிநடந்து, எருசலேமுக்குப் போகும்படி ஆவியில் நிருணயம்பண்ணிக்கொண்டு: நான் அங்கே போனபின்பு ரோமாபுரியையும் பார்க்கவேண்டியதென்று சொல்லி, | ரோம 15:25-28 கலா 2:1 |
| 22 | தனக்கு உதவி செய்தவர்களில் இரண்டுபேராகிய தீமோத்தேயுவையும் எரஸ்துவையும் மக்கெதோனியாவுக்கு அனுப்பிவிட்டு; தான் பின்னும் சிலகாலம் ஆசியாவிலே தங்கினான். | அப் 16:9 அப் 16:10 அப் 18:5 அப் 20:1 2கொரி 1:16 2கொரி 2:13 2கொரி 8:1 2கொரி 11:9 1தெச 1:8 |
| 23 | அக்காலத்திலே இந்த மார்க்கத்தைக்குறித்துப் பெரிய கலகம் உண்டாயிற்று. | 2கொரி 1:8-10 2கொரி 6:9 |
| 24 | எப்படியென்றால், தெமேத்திரியு என்னும் பேர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின் கோவிலைப்போல வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்தான். | அப் 19:27 அப் 19:28 அப் 19:34 அப் 19:35 |
| 25 | இவர்களையும் இப்படிப்பட்ட தொழில்செய்கிற மற்ற வேலையாட்களையும் அவன் கூடிவரச்செய்து: மனுஷர்களே, இந்தத் தொழிலினால் நமக்கு நல்ல பிழைப்பு உண்டாயிருக்கிறதென்று அறிவீர்கள். | அப் 16:19 ஓசி 4:8 ஓசி 12:7 ஓசி 12:8 2பேது 2:3 வெளிப் 18:3 வெளிப் 18:11-19 |
| 26 | இப்படியிருக்க, கைகளினால் செய்யப்பட்ட தேவர்கள் தேவர்களல்லவென்று இந்தப் பவுல் என்பவன் சொல்லி, எபேசுவிலேமாத்திரமல்ல, கொஞ்சங்குறைய ஆசியா எங்கும் அநேக ஜனங்களுக்குப் போதித்து, அவர்களை வசப்படுத்திக்கொண்டான் என்று நீங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறீர்கள். | அப் 19:10 அப் 19:18-20 1கொரி 16:8 1கொரி 16:9 1தெச 1:9 |
| 27 | இதனால் நம்முடைய தொழில் அற்றுப்போகும்படியான அபாயம் நேரிட்டிருக்கிறதுமல்லாமல், மகா தேவியாகிய தியானாளுடைய கோவில் எண்ணமற்றுப்போகிறதற்கும், ஆசியா முழுமையும் பூச்சக்கரமும் சேவிக்கிற அவளுடைய மகத்துவம் அழிந்துபோகிறதற்கும் ஏதுவாயிருக்கிறது என்றான். | அப் 19:21 செப் 2:11 மத் 23:14 1தீமோ 6:5 |
| 28 | அவர்கள் இதைக் கேட்டு, கோபத்தால் நிறைந்து: எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று சத்தமிட்டார்கள். | அப் 7:54 அப் 16:19-24 அப் 21:28-31 சங் 2:2 வெளிப் 12:12 |
| 29 | பட்டணம் முழுவதும் கலகத்தினால் நிறைந்தது. பவுலுக்கு வழித்துணையாய் வந்த மக்கெதோனியராகிய காயுவையும் அரிஸ்தர்க்குவையும் அவர்கள் இழுத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அரங்கசாலைக்குப் பாய்ந்தோடினார்கள். | அப் 19:32 அப் 17:8 அப் 21:30 அப் 21:38 |
| 30 | பவுல் கூட்டத்துக்குள்ளே போக மனதாயிருந்தபோது, சீஷர்கள் அவனைப் போகவிடவில்லை. | அப் 14:14-18 அப் 17:22-31 அப் 21:39 |
| 31 | ஆசியாநாட்டுத் தலைவரில் அவனுக்குச் சிநேகிதராயிருந்த சிலரும் அவனிடத்திற்கு ஆள் அனுப்பி, அரங்கசாலைக்குள் போகவேண்டாம் என்று எச்சரித்தார்கள். | அப் 19:10 அப் 16:6 நீதி 16:7 |
| 32 | கூட்டத்தில் அமளியுண்டாகி, சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள்; தாங்கள் கூடிவந்த காரணம் இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது. | அப் 19:29 அப் 21:34 |
| 33 | அப்பொழுது யூதர்கள் அலெக்சந்தர் என்பவனை முன்னிற்கத் தள்ளுகையில், கூட்டத்திலே சிலர் அவனை முன்னே இழுத்துவிட்டார்கள். அலெக்சந்தர் கையமர்த்தி, ஜனங்களுக்கு உத்தரவு சொல்ல மனதாயிருந்தான். | 1தீமோ 1:20 2தீமோ 4:14 |
| 34 | அவன் யூதனென்று அவர்கள் அறிந்தபோது, எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று இரண்டுமணி நேரமளவும் எல்லாரும் ஏகமாய்ச் சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள். | அப் 19:26 அப் 16:20 ரோம 2:22 |
| 35 | பட்டணத்துச் சம்பிரதியானவன் ஜனங்களை அமர்த்தி: எபேசியரே, எபேசியருடைய பட்டணம் மகா தேவியாகிய தியானாளுக்கும் வானத்திலிருந்து விழுந்த சிலைக்கும் கோவிற்பரிசாரகியாயிருக்கிறதை அறியாதவன் உண்டோ? | எபே 2:12 |
| 36 | இது எதிர்பேசப்படாத காரியமாகையால், நீங்கள் ஒன்றும் பதறிச் செய்யாமல் அமர்ந்திருக்க வேண்டும். | அப் 5:35-39 நீதி 14:29 நீதி 25:8 |
| 37 | இந்த மனுஷரை இங்கே கொண்டு வந்தீர்கள்; இவர்கள் கோவிற்கொள்ளைக்காரருமல்ல, உங்கள் தேவியைத் தூஷிக்கிறவர்களுமல்ல. | அப் 25:8 1கொரி 10:32 2கொரி 6:3 |
| 38 | தெமேத்திரியுவுக்கும் அவனைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கும் ஒருவன்மேல் ஒரு காரியம் உண்டாயிருந்தால், நியாயம் விசாரிக்கிற நாட்களுண்டு, தேசாதிபதிகளும் இருக்கிறார்கள்; ஒருவர் பேரிலொருவர் வழக்காடிக்கொள்ளட்டும். | அப் 18:14 உபா 17:8 1கொரி 6:1 |
| 39 | நீங்கள் வேறே யாதொரு காரியத்தைக்குறித்து விசாரிக்கவேண்டியதானால், அது நியாயசங்கத்திலே தீர்க்கப்படும். |
| 40 | இன்றைக்கு உண்டான கலகத்தைக்குறித்து நாம் உத்தரவு சொல்லுகிறதற்கு ஏதுவில்லாதபடியால், இந்தக் கலகத்தைக்குறித்து நாங்கள் விசாரிக்கப்படும்போது, குற்றவாளிகளாகிறதற்கு ஏதுவாயிருப்போமே என்று சொல்லி, | அப் 17:5-8 |
| 41 | பின்பு கூட்டத்தை அனுப்பிவிட்டான். | நீதி 15:1 நீதி 15:2 பிரச 9:17 |