| 1 | அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தை விட்டு, கொரிந்து பட்டணத்துக்கு வந்து; | அப் 17:32 அப் 17:33 |
| 2 | யூதரெல்லாரும் ரோமாபுரியை விட்டுப் போகும்படி கிலவுதியுராயன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாய் வந்திருந்த பொந்து தேசத்தானாகிய ஆக்கில்லா என்னும் நாமமுள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும் அங்கே கண்டு, அவர்களிடத்திற்குப் போனான். | அப் 18:26 ரோம 16:3 ரோம 16:4 1கொரி 16:19 2தீமோ 4:19 |
| 3 | அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனானபடியினாலே அவர்களிடத்தில் தங்கி, வேலைசெய்துகொண்டுவந்தான். | அப் 20:34 அப் 20:35 1கொரி 4:12 1கொரி 9:6-12 2கொரி 11:9 1தெச 2:9 2தெச 3:8 2தெச 3:9 |
| 4 | ஓய்வு நாள்தோறும் இவன் ஜெப ஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்தி சொன்னான். | அப் 13:14-52 அப் 14:1 அப் 17:1-3 அப் 17:11-3 அப் 17:17-3 அப் 19:8 லூக் 4:16 |
| 5 | மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான். | அப் 17:14 அப் 17:15 1தெச 3:2 |
| 6 | அவர்கள் எதிர்த்துநின்று தூஷித்தபோது, அவன் தன் வஸ்திரங்களை உதறி: உங்கள் இரத்தப்பழி உங்கள் தலையின்மேல் இருக்கும்; நான் சுத்தமாயிருக்கிறேன்; இதுமுதல் புறஜாதியாரிடத்திற்குப் போகிறேனென்று அவர்களுடனே சொல்லி, | அப் 13:45 அப் 19:9 அப் 26:11 லூக் 22:65 1தெச 2:14-16 2தீமோ 2:25 யாக் 2:6 யாக் 2:7 1பேது 4:4 1பேது 4:14 |
| 7 | அவ்விடத்தைவிட்டு, தேவனை வணங்குகிறவனாகிய யுஸ்து என்னும் பேருள்ள ஒருவனுடைய வீட்டிற்கு வந்தான்; அவன் வீடு ஜெப ஆலயத்திற்கு அடுத்ததாயிருந்தது. | கொலோ 4:11 |
| 8 | ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் தன் வீட்டார் அனைவரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள். | 1கொரி 1:14 |
| 9 | இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே; | அப் 16:9 அப் 22:18 அப் 23:11 அப் 27:23-25 2கொரி 12:1-3 |
| 10 | நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார். | யாத் 4:12 யோசு 1:5 யோசு 1:9 நியா 2:18 ஏசா 8:10 ஏசா 41:10 ஏசா 43:2 எரே 1:18 எரே 1:19 மத் 1:23 மத் 28:20 2கொரி 12:9 2தீமோ 4:17 2தீமோ 4:22 |
| 11 | அவன் ஒரு வருஷமும் ஆறு மாதமும் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்குள்ளே உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான். | அப் 14:3 அப் 19:10 அப் 20:31 |
| 12 | கல்லியோன் என்பவன் அகாயா நாட்டிற்கு அதிபதியானபோது, யூதர்கள் ஒருமனப்பட்டு, பவுலுக்கு விரோதமாய் எழும்பி, அவனை நியாயாசனத்துக்கு முன்பாகக் கொண்டுபோய்: | அப் 13:7 அப் 13:12 |
| 13 | இவன் வேதப்பிரமாணத்துக்கு விகற்பமாய்த் தேவனைச் சேவிக்கும்படி மனுஷருக்குப் போதிக்கிறான் என்றார்கள். | அப் 18:4 அப் 6:13 அப் 21:28 அப் 24:5 அப் 24:6 அப் 25:8 |
| 14 | பவுல் பேசுவதற்கு எத்தனப்படுகையில், கல்லியோன் யூதரை நோக்கி: யூதர்களே, இது ஒரு அநியாயமாய், அல்லது பொல்லாத நடக்கையாயிருக்குமேயானால் நான் உங்களுக்குப் பொறுமையாய்ச் செவிகொடுப்பது நியாயமாயிருக்கும். | அப் 21:39 அப் 21:40 அப் 22:1 அப் 22:2 அப் 26:1 அப் 26:2 லூக் 21:12-15 1பேது 3:14 1பேது 3:15 |
| 15 | இது சொற்களுக்கும், நாமங்களுக்கும், உங்கள் வேதத்துக்கும் அடுத்த தர்க்கமானபடியினாலே, இப்படிப்பட்டவைகளைக்குறித்து, விசாரணைசெய்ய எனக்கு மனதில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி, | அப் 23:29 அப் 25:11 அப் 25:19 அப் 26:3 1தீமோ 1:4 1தீமோ 6:4 2தீமோ 2:23 தீத் 3:9 |
| 16 | அவர்களை நியாயாசனத்தினின்று துரத்திவிட்டான். | சங் 76:10 ரோம 13:3 ரோம 13:4 வெளிப் 12:16 |
| 17 | அப்பொழுது கிரேக்கரெல்லாரும் ஜெப ஆலயத்தலைவனாகிய சொஸ்தேனேயைப் பிடித்து, நியாயாசனத்துக்கு முன்பாக அடித்தார்கள். இவைகளில் ஒன்றையுங்குறித்துக் கல்லியோன் கவலைப்படவில்லை. | 1கொரி 1:1 |
| 18 | பவுல் அநேகநாள் அங்கே தரித்திருந்தபின்பு, சகோதரரிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு, சீரியா தேசத்துக்குப் போகக் கப்பல் ஏறினான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனுடனே கூடப்போனார்கள். | அப் 15:23 அப் 15:41 அப் 21:3 கலா 1:21 |
| 19 | அவன் எபேசு பட்டணத்துக்கு வந்தபோது, அங்கே அவர்களை விட்டு நீங்கி, ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, யூதருடனே சம்பாஷணைபண்ணினான். | அப் 18:24 அப் 19:1 அப் 19:17 அப் 19:26 அப் 20:16 1கொரி 16:8 எபே 1:1 1தீமோ 1:3 2தீமோ 1:18 2தீமோ 4:12 வெளிப் 1:11 வெளிப் 2:1 |
| 20 | அவன் இன்னுஞ் சிலகாலம் தங்களுடனே இருக்கவேண்டுமென்று அவர்கள் கேட்டுக்கொண்டபோது அவன் சம்மதியாமல்,, | அப் 20:16 அப் 21:13 அப் 21:14 மாற் 1:37 மாற் 1:38 1கொரி 16:12 |
| 21 | வருகிற பண்டிகையிலே எப்படியாயினும் நான் எருசலேமில் இருக்கவேண்டும், தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடத்திற்கு வருவேனென்று சொல்லி, அவர்களிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி, எபேசுவை விட்டுப் புறப்பட்டு, | அப் 15:29 லூக் 9:61 2கொரி 13:11 |
| 22 | செசரியா பட்டணத்துக்கு வந்து, எருசலேமுக்குப் போய், சபையைச் சந்தித்து, அந்தியோகியாவுக்குப் போனான். | அப் 8:40 அப் 10:1 அப் 10:24 அப் 11:11 அப் 18:22 அப் 23:23 |
| 23 | அங்கே சிலகாலம் சஞ்சரித்தபின்பு, புறப்பட்டு, கிரமமாய்க் கலாத்தியா நாட்டிலேயும் பிரிகியா நாட்டிலேயும் சுற்றித்திரிந்து, சீஷரெல்லாரையும் திடப்படுத்தினான். | அப் 16:6 1கொரி 16:1 கலா 1:2 கலா 4:14 |
| 24 | அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்தவனும் சாதுரியவானும் வேதாகமங்களில் வல்லவனுமான அப்பொல்லோ என்னும் பேர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்துக்கு வந்தான். | அப் 19:1 1கொரி 1:12 1கொரி 3:5 1கொரி 3:6 1கொரி 4:6 1கொரி 16:12 தீத் 3:13 |
| 25 | அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஸ்நானத்தைமாத்திரம் அறிந்தவனாயிருந்து, ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம் பண்ணிக்கொண்டுவந்தான். | அப் 13:10 அப் 16:17 அப் 19:9 அப் 19:23 ஆதி 18:19 நியா 2:22 1சாமு 12:23 சங் 25:8 சங் 25:9 சங் 119:1 ஏசா 40:3 எரே 6:16 ஓசி 14:9 மத் 3:3 மாற் 1:3 மாற் 12:14 லூக் 3:4 யோவா 1:23 |
| 26 | அவன் ஜெப ஆலயத்தில் தைரியமாய்ப் பேசத்தொடங்கினபோது, ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைச் சேர்த்துக்கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக் காண்பித்தார்கள். | அப் 14:3 ஏசா 58:1 எபே 6:19 எபே 6:20 |
| 27 | பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டுமென்றிருக்கையில், சீஷர்கள் அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர் அவர்களுக்கு எழுதினார்கள். | அப் 9:27 ரோம 16:1 ரோம 16:2 1கொரி 16:3 2கொரி 3:1 2கொரி 3:2 |
| 28 | அவன் அங்கே வந்தபின்பு வெளியரங்கமாக யூதர்களுடனே பலமாய்த் தர்க்கம்பண்ணி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக் கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான். | அப் 18:5 அப் 18:25 அப் 9:22 அப் 17:3 அப் 26:22 அப் 26:23 லூக் 24:27 லூக் 24:44 1கொரி 15:3 1கொரி 15:4 எபிரெ 7:1-10 |