| 1 | அவர்கள் அம்பிபோலி பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்கு வந்தார்கள்; அங்கே யூதருக்கு ஒரு ஜெப ஆலயம் இருந்தது. | அப் 20:4 அப் 27:2 பிலிப் 4:16 1தெச 1:1 2தெச 1:1 2தீமோ 4:10 |
| 2 | பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வு நாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து, | லூக் 4:16 யோவா 18:20 |
| 3 | கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான். | அப் 2:16-36 அப் 3:22-26 அப் 13:26-39 |
| 4 | அவர்களில் சிலரும், பக்தியுள்ள கிரேக்கரில் திரளான ஜனங்களும்,, கனம்பொருந்திய ஸ்திரீகளில் அநேகரும் விசுவாசித்து, பவுலையும் சீலாவையும் சேர்ந்துகொண்டார்கள். | அப் 17:34 அப் 2:41 அப் 2:42 அப் 2:44 அப் 4:23 அப் 5:12-14 அப் 14:1 அப் 14:4 அப் 28:24 நீதி 9:6 நீதி 13:20 உன்ன 1:7 உன்ன 1:8 உன்ன 6:1 சகரி 2:11 சகரி 8:20-23 2கொரி 6:17 2கொரி 6:18 |
| 5 | விசுவாசியாத யூதர்கள் வைராக்கியங்கொண்டு வீணராகிய சில பொல்லாதவர்களைச் சேர்த்துக்கொண்டு, கூட்டங்கூடி, பட்டணத்தில் அமளியுண்டாக்கி, யாசோனுடைய வீட்டை வளைந்துகொண்டு, அவர்களைப் பட்டணத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுவர வகைதேடினார்கள். | அப் 17:13 அப் 7:9 அப் 13:45 அப் 14:2 அப் 14:19 அப் 18:12 நீதி 14:30 ஏசா 26:11 மத் 27:18 1கொரி 3:3 கலா 5:21 கலா 5:26 யாக் 4:5 |
| 6 | அவர்களைக் காணாமல், யாசோனையும் சில சகோதரரையும் பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டு வந்து: உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள். | அப் 6:12 அப் 6:13 அப் 16:19 அப் 16:20 அப் 18:12 அப் 18:13 |
| 7 | இவர்களை யாசோன் ஏற்றுக்கொண்டான். இவர்களெல்லாரும் இயேசு என்னும் வேறொருவனை ராஜா என்று சொல்லி, இராயனுடைய கட்டளைகளுக்கு விரோதமாகச் செய்கிறார்களென்று கூக்குரலிட்டு, | அப் 16:21 அப் 25:8-11 எஸ்றா 4:12-15 தானி 3:12 தானி 6:13 லூக் 23:2 யோவா 19:12 1பேது 2:15 |
| 8 | இவைகளைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனங்களையும் பட்டணத்து அதிகாரிகளையும் கலங்கப்பண்ணினார்கள். | மத் 2:3 யோவா 11:48 |
| 9 | பின்பு அவர்கள் யாசோனிடத்திலும் மற்றவர்களிடத்திலும் ஜாமீன் வாங்கிக்கொண்டு, அவர்களை விட்டுவிட்டார்கள். |
| 10 | உடனே சகோதரர் இராத்திரிகாலத்திலே பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சேர்ந்து, யூதருடைய ஜெப ஆலயத்திற்குப் போனார்கள். | அப் 17:14 அப் 9:25 அப் 23:23 அப் 23:24 யோசு 2:15 யோசு 2:16 1சாமு 19:12-17 1சாமு 20:42 |
| 11 | அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள். | நீதி 1:5 நீதி 9:9 எரே 2:21 யோவா 1:45-49 |
| 12 | அதனால் அவர்களில் அநேகம்பேரும் கனம்பொருந்திய கிரேக்கரில் அநேக ஸ்திரீகளும் புருஷர்களும் விசுவாசித்தார்கள். | அப் 17:2-4 அப் 13:46 அப் 14:1 சங் 25:8 சங் 25:9 யோவா 1:45-49 யோவா 7:17 எபே 5:14 யாக் 1:21 |
| 13 | பெரோயாவிலும் தேவவசனம் பவுலினால் அறிவிக்கப்படுகிறதென்று தெசலோனிக்கேயரான யூதர்கள் அறிந்தபோது, அங்கேயும் வந்து, ஜனங்களைக் கிளப்பிவிட்டார்கள். | அப் 17:5 மத் 23:13 1தெச 2:14-16 |
| 14 | உடனே சகோதரர் பவுலைச் சமுத்திரவழியாய்ப் போக அனுப்பிவிட்டார்கள். சீலாவும் தீமோத்தேயும் அங்கே தங்கியிருந்தார்கள். | அப் 17:10 அப் 9:25 அப் 9:30 மத் 10:23 |
| 15 | பவுலை வழிநடத்தினவர்கள் அவனை அத்தேனே பட்டணம்வரைக்கும் அழைத்துக்கொண்டுபோய்; அங்கே சீலாவும் தீமோத்தேயும் அதிசீக்கிரமாகத் தன்னிடத்திற்கு வரும்படி அவர்களுக்குச் சொல்லக் கட்டளை பெற்றுக்கொண்டு புறப்பட்டுப்போனார்கள். | அப் 18:1 1தெச 3:1 |
| 16 | அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து, | யாத் 32:19 யாத் 32:20 எண் 25:6-11 1இரா 19:10 1இரா 19:14 யோபு 32:2 யோபு 32:3 யோபு 32:18-20 சங் 69:9 சங் 119:136 சங் 119:158 எரே 20:9 மீகா 3:8 மாற் 3:5 யோவா 2:13 2பேது 2:7 |
| 17 | ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான். | அப் 17:2-4 அப் 14:1-4 |
| 18 | அப்பொழுது எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில் சிலர் அவனுடனே வாக்குவாதம் பண்ணினார்கள். சிலர்: இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள். சிலர்: இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனாகக் காண்கிறது என்றார்கள். அவன் இயேசுவையும் உயிர்தெழுதலையும் அவர்களுக்குப் பிரசங்கித்தபடியினாலே அப்படிச் சொன்னார்கள். | ரோம 1:22 1கொரி 1:20 1கொரி 1:21 கொலோ 2:8 |
| 19 | அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா? | அப் 17:22 |
| 20 | நூதனமான காரியங்களை எங்கள் காதுகள் கேட்கப்பண்ணுகிறாய்; அவைகளின் கருத்து இன்னதென்று அறியமனதாயிருக்கிறோம் என்றார்கள். | ஓசி 8:12 மத் 19:23-25 மாற் 10:24-26 யோவா 6:60 யோவா 7:35 யோவா 7:36 1கொரி 1:18 1கொரி 1:23 1கொரி 2:14 எபிரெ 5:11 1பேது 4:4 |
| 21 | அந்த அத்தேனே பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற அந்நியரும், நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை. | எபே 5:16 கொலோ 4:5 2தெச 3:11 2தெச 3:12 1தீமோ 5:13 2தீமோ 2:16 2தீமோ 2:17 |
| 22 | அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன். | அப் 17:16 அப் 19:35 அப் 25:19 எரே 10:2 எரே 10:3 எரே 50:38 |
| 23 | எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். | ரோம 1:23-25 1கொரி 8:5 2தெச 2:4 |
| 24 | உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை. | அப் 17:26-28 அப் 4:24 அப் 14:15 சங் 146:5 ஏசா 40:12 ஏசா 40:28 ஏசா 45:18 எரே 10:11 எரே 32:17 சகரி 12:1 யோவா 1:1 எபிரெ 1:2 எபிரெ 3:4 |
| 25 | எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை. | யோபு 22:2 யோபு 35:6 யோபு 35:7 சங் 16:2 சங் 50:8-13 எரே 7:20-23 ஆமோ 5:21-23 மத் 9:13 |
| 26 | மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; | ஆதி 3:20 ஆதி 9:19 மல்கி 2:10 ரோம 5:12-19 1கொரி 15:22 1கொரி 15:47 |
| 27 | கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. | அப் 15:17 சங் 19:1-6 ரோம 1:20 ரோம 2:4 |
| 28 | ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள். | 1சாமு 25:29 யோபு 12:10 சங் 36:9 சங் 66:9 லூக் 20:38 யோவா 5:26 யோவா 11:25 கொலோ 1:17 எபிரெ 1:3 |
| 29 | நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது. | சங் 94:7-9 சங் 106:20 சங் 115:4-8 ஏசா 40:12-18 ஏசா 44:9-20 ஆபகூ 2:19 ஆபகூ 2:20 ரோம 1:20-23 |
| 30 | அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். | அப் 14:16 சங் 50:21 ரோம 1:28 ரோம 3:23 ரோம 3:25 |
| 31 | மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான். | அப் 10:42 மத் 25:31-46 யோவா 5:22 யோவா 5:23 ரோம 2:5 ரோம 2:16 ரோம 14:9 ரோம 14:10 1கொரி 4:5 2கொரி 5:10 2தீமோ 4:1 2பேது 3:7 யூதா 1:14 யூதா 1:15 |
| 32 | மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து அவர்கள் கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை இன்னொருவேளை கேட்போம் என்றார்கள். | அப் 17:18 அப் 2:13 அப் 13:41 அப் 25:19 அப் 26:8 அப் 26:24 அப் 26:25 ஆதி 19:14 2நாளா 30:9-11 2நாளா 36:16 லூக் 22:63 லூக் 23:11 லூக் 23:36 1கொரி 1:23 1கொரி 4:10 எபிரெ 11:36 எபிரெ 13:13 |
| 33 | இப்படியிருக்க, பவுல் அவர்களைவிட்டுப் போய்விட்டான். |
| 34 | சிலர் அவனைப் பற்றிக்கொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ் மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயும், இவர்களுடனே வேறு சிலரும் இருந்தார்கள். | அப் 17:4 அப் 13:48 ஏசா 55:10-11 மத் 20:16 ரோம 11:5 ரோம 11:6 |