| 1 | கலகம் அமர்ந்தபின்பு, பவுல் சீஷரைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, வினவிக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப் போகப்புறப்பட்டான். | அப் 19:23-41 |
| 2 | அவன் அந்தத் திசைகளிலே சுற்றி நடந்து, சீஷர்களுக்கு வெகுவாய்ப் புத்தி சொல்லி, கிரேக்கு தேசத்திலே சேர்ந்தான். | அப் 20:6 அப் 16:12 அப் 17:1 அப் 17:10 |
| 3 | அங்கே மூன்றுமாதம் சஞ்சரித்த பின்பு, அவன் கப்பல் ஏறி, சீரியா தேசத்துக்குப்போக மனதாயிருந்தபோது, யூதர்கள் அவனுக்குத் தீமைசெய்யும்படி இரகசியமான யோசனை கொண்டிருந்தபடியால், மக்கெதோனியா தேசத்தின் வழியாய்த் திரும்பிப்போகத் தீர்மானம்பண்ணினான். | அப் 20:19 அப் 9:23 அப் 9:24 அப் 23:12-15 அப் 25:3 எஸ்றா 8:31 நீதி 1:11 எரே 5:26 2கொரி 7:5 2கொரி 11:26 |
| 4 | பெரோயா ஊரானாகிய சோபத்தரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தர்க்கும், செக்குந்தும், தெர்பையானாகிய காயுவும், தீமோத்தேயும், ஆசியா நாட்டாராகிய தீகிக்கும் துரோப்பீமும், ஆசியா நாடுவரைக்கும் அவனுக்கு வழித்துணையாய் வந்தார்கள். | ரோம 16:21 |
| 5 | இவர்கள் முன்னாகப்போய், துரோவாபட்டணத்திலே எங்களுக்காகக் காத்திருந்தார்கள். | அப் 16:8 அப் 16:11 2கொரி 2:12 2தீமோ 4:13 |
| 6 | புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு நாங்கள் கப்பல் ஏறிப் பிலிப்பி பட்டணத்தை விட்டு ஐந்து நாளைக்குள்ளே துரோவாபட்டணத்துக்கு அவர்களிடத்தில் வந்து, அங்கே ஏழுநாள் தங்கியிருந்தோம். | அப் 16:12 பிலிப் 1:1 1தெச 2:2 |
| 7 | வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான். | யோவா 20:1 யோவா 20:19 யோவா 20:26 1கொரி 16:2 வெளிப் 1:10 |
| 8 | அவர்கள் கூடியிருந்த மேல்வீட்டிலே அநேக விளக்குகள் வைத்திருந்தது. | அப் 1:13 லூக் 22:12 |
| 9 | அப்பொழுது ஐத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம் பிரசங்கம்பண்ணிக்கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரை மயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான். | யோனா 1:5 யோனா 1:6 மத் 26:40 மத் 26:41 மாற் 13:36 |
| 10 | உடனே பவுல் இறங்கிப்போய், அவன்மேல் விழுந்து, அவனை அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான். | 1இரா 17:21 1இரா 17:22 2இரா 4:34 2இரா 4:35 |
| 11 | பின்பு ஏறிப்போய், அப்பம் பிட்டுப் புசித்து, விடியற்காலமளவும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான். | அப் 20:7 அப் 20:9 |
| 12 | அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டுவந்து, மிகுந்த ஆறுதலடைந்தார்கள். | ஏசா 40:1 2கொரி 1:4 எபே 6:22 1தெச 3:2 1தெச 4:18 1தெச 5:11 1தெச 5:14 2தெச 2:16 |
| 13 | பவுல் ஆசோபட்டணம் வரைக்கும் கரைவழியாய்ப் போக மனதாயிருந்தபடியால், அவன் திட்டம் பண்ணியிருந்தபடியே, நாங்கள் கப்பல் ஏறி, அந்தப் பட்டணத்தில் அவனை ஏற்றிக்கொள்ளும்படி முன்னாக அங்கே போயிருந்தோம். | மாற் 1:35 மாற் 6:31-33 மாற் 6:46-33 |
| 14 | அவன் ஆசோ பட்டணத்திலே எங்களைக் கண்டபோது, நாங்கள் அவனை ஏற்றிக்கொண்டு, மித்திலேனே பட்டணத்துக்கு வந்தோம். |
| 15 | அவ்விடம்விட்டு, மறுநாளிலே கீயுதீவுக்கு எதிராக வந்து, | அப் 20:17 2தீமோ 4:20 |
| 16 | பவுல் கூடுமானால் பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமிலிருக்க வேண்டுமென்று தீவிரப்பட்டதினிமித்தம், தான் ஆசியாவிலே காலம்போக்காதபடிக்கு, எபேசு பட்டணத்தைக் கடந்து போகவேண்டுமென்று தீர்மானித்ததினால், மறுநாளிலே சாமுதீவு பிடித்து, துரோகில்லியோன் ஊர்த்துறையிலே தங்கி, மறுநாள் மிலேத்து பட்டணத்துக்கு வந்தோம். | அப் 20:13 அப் 18:21 அப் 19:21 அப் 21:4 அப் 12:13 அப் 24:17 ரோம 15:24-28 |
| 17 | மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவுக்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பரை வரவழைத்தான். | அப் 20:28 அப் 11:30 அப் 14:23 அப் 15:4 அப் 15:6 அப் 15:23 அப் 16:4 1தீமோ 5:17 தீத் 1:5 யாக் 5:14 1பேது 5:1 2யோவா 1:1 3யோவா 1:1 |
| 18 | அவர்கள் தன்னிடத்தில் வந்துசேர்ந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: நான் ஆசியாநாட்டில் வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களுடனே இன்னவிதமாய் இருந்தேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். | அப் 18:19 அப் 19:1 அப் 19:10 |
| 19 | வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனையால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரைச் சேவித்தேன். | அப் 27:23 யோவா 12:26 ரோம 1:1 ரோம 1:9 ரோம 12:11 கலா 1:10 எபே 6:7 கொலோ 3:24 1தெச 1:9 2பேது 1:1 வெளிப் 7:15 |
| 20 | பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம்பண்ணி, | அப் 20:27 அப் 20:31 அப் 5:2 உபா 4:5 சங் 40:9 சங் 40:10 எசே 33:7-9 1கொரி 15:3 கொலோ 1:28 |
| 21 | தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன். | அப் 20:24 அப் 2:40 அப் 8:25 அப் 18:5 அப் 28:23 1யோவா 5:11-13 |
| 22 | இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன். | அப் 19:21 அப் 21:11-14 லூக் 9:51 லூக் 12:50 2கொரி 5:14 |
| 23 | கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன். | அப் 9:16 அப் 14:22 அப் 21:4 அப் 21:11 யோவா 16:33 1தெச 3:3 2தீமோ 2:12 |
| 24 | ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். | அப் 21:13 ரோம 8:35-39 1கொரி 15:58 2கொரி 4:1 2கொரி 4:8 2கொரி 4:9 2கொரி 4:16-18 2கொரி 6:4-10 2கொரி 7:4 2கொரி 12:10 எபே 3:13 1தெச 2:2 1தெச 3:3 2தீமோ 1:12 2தீமோ 3:11 2தீமோ 4:17 எபிரெ 10:34 எபிரெ 12:1-3 |
| 25 | இதோ, நான் உங்களுக்குள்ளே சஞ்சரித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்களெல்லாரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன். | அப் 20:38 ரோம 15:23 |
| 26 | தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, | யோபு 16:19 யோவா 12:17 யோவா 19:35 ரோம 10:2 2கொரி 1:23 2கொரி 8:3 1தெச 2:10-12 |
| 27 | எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையதினம் சாட்சிகளாக வைக்கிறேன். | அப் 20:20 அப் 20:35 அப் 26:22 அப் 26:23 2கொரி 4:2 கலா 1:7-10 கலா 4:16 1தெச 2:4 |
| 28 | ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். | 2நாளா 19:6 2நாளா 19:7 மாற் 13:9 லூக் 21:34 1கொரி 9:26 1கொரி 9:27 கொலோ 4:17 1தீமோ 4:16 எபிரெ 12:15 |
| 29 | நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். | செப் 3:3 மத் 7:15 மத் 10:16 லூக் 10:3 யோவா 10:12 2பேது 2:1 |
| 30 | உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன். | மத் 26:21-25 1தீமோ 1:19 1தீமோ 1:20 2தீமோ 2:17 2தீமோ 2:18 2தீமோ 4:3 2தீமோ 4:4 2பேது 2:1-3 1யோவா 2:19 2யோவா 1:7 யூதா 1:4-16 வெளிப் 2:6 |
| 31 | ஆனபடியால், நான் மூன்று வருஷகாலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்தி சொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள். | மத் 13:25 மாற் 13:34-37 லூக் 21:36 2தீமோ 4:5 எபிரெ 13:17 வெளிப் 16:15 |
| 32 | இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன். | அப் 14:23 அப் 14:26 அப் 15:40 ஆதி 50:24 எரே 49:11 யூதா 1:24 யூதா 1:25 |
| 33 | ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை. | எண் 16:15 1சாமு 12:3-5 1கொரி 9:12 1கொரி 9:15 1கொரி 9:18 2கொரி 7:2 2கொரி 11:9 2கொரி 12:14 2கொரி 12:17 1பேது 5:2 |
| 34 | நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூடி இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக்கைகளே வேலைசெய்தது. | அப் 18:3 1கொரி 4:12 1தெச 2:9 2தெச 3:8 2தெச 3:9 |
| 35 | இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான். | அப் 20:20 அப் 20:27 |
| 36 | இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்காற்படியிட்டு, அவர்களெல்லாரோடுங்கூட ஜெபம் பண்ணினான். | அப் 7:60 அப் 21:5 2நாளா 6:13 தானி 6:10 லூக் 22:41 எபே 3:14 பிலிப் 4:6 |
| 37 | அவர்களெல்லாரும் மிகவும் அழுது, என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்களென்று அவன் சொன்ன வார்த்தையைக்குறித்து அதிகமாய்த் துக்கப்பட்டு, | 1சாமு 20:41 2சாமு 15:30 2இரா 20:3 எஸ்றா 10:1 யோபு 2:12 சங் 126:5 2தீமோ 1:4 வெளிப் 7:17 வெளிப் 21:4 |
| 38 | பவுலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்து, கப்பல்வரைக்கும் அவனுடனே கூடப்போனார்கள். | அப் 15:3 அப் 21:5 அப் 21:16 1கொரி 16:11 |