| 1 | அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள். | அப் 11:22-24 அப் 14:26 அப் 14:27 |
| 2 | அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார். | அப் 6:4 உபா 10:8 1சாமு 2:11 1நாளா 16:4 1நாளா 16:37-43 ரோம 15:16 கொலோ 4:17 2தீமோ 1:11 2தீமோ 4:5 2தீமோ 4:11 |
| 3 | அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள். | அப் 13:2 அப் 6:6 அப் 8:15-17 அப் 9:17 அப் 14:23 எண் 27:23 1தீமோ 4:14 1தீமோ 5:22 2தீமோ 1:6 2தீமோ 2:2 |
| 4 | அப்படியே அவர்கள் பரிசுத்த ஆவியினால் அனுப்பப்பட்டுச் செலூக்கியா பட்டணத்துக்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புரு தீவுக்குப் போனார்கள். | அப் 20:23 |
| 5 | சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெப ஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான். | அப் 13:14 அப் 13:46 அப் 14:1 அப் 17:1-3 அப் 17:17-3 அப் 18:4 அப் 19:8 |
| 6 | அவர்கள் பாப்போ பட்டணம் வரைக்கும் தீவைக் கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பேர்கொண்ட மாயவித்தைக்காரனும் கள்ளத்தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைக் கண்டார்கள். | அப் 8:9-11 அப் 19:18 அப் 19:19 யாத் 22:18 லேவி 20:6 உபா 18:10-12 1நாளா 10:13 ஏசா 8:19 ஏசா 8:20 |
| 7 | அவன் விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனேகூட இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைப்பித்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான். | அப் 13:12 அப் 18:12 அப் 19:38 |
| 8 | மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பேரையுடைய அந்த எலிமா என்பவன் அதிபதியை விசுவாசத்தினின்று திருப்பும்படி வகைதேடி, அவர்களோடு எதிர்த்துநின்றான். | அப் 13:6 அப் 9:36 யோவா 1:41 |
| 9 | அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய் அவனை உற்றுப்பார்த்து: | அப் 2:4 அப் 4:8 அப் 4:31 அப் 7:55 மீகா 3:8 |
| 10 | எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ? | அப் 8:20-23 பிரச 9:3 மத் 3:7 மத் 15:19 மத் 23:25-33 லூக் 11:39 2கொரி 11:3 |
| 11 | இதோ, இப்பொழுதே, கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, சிலகாலம் சூரியனைக் காணாமல் நீ குருடனாயிருப்பாய் என்றான். உடனே மந்தாரமும் இருளும் அவன்மேல் விழுந்தது; அவன் தடுமாறி, கைலாகு கொடுக்கிறவர்களைத் தேடினான். | யாத் 9:3 1சாமு 5:6 1சாமு 5:9 1சாமு 5:11 யோபு 19:21 சங் 32:4 சங் 38:2 சங் 39:10 சங் 39:11 |
| 12 | அப்பொழுது அதிபதி சம்பவித்ததைக் கண்டு, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான். | அப் 13:7 அப் 28:7 |
| 13 | பின்பு பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் பாப்போ பட்டணத்தைவிட்டுக் கப்பல் ஏறிப் பம்பிலியாவிலிருக்கும் பெர்கே பட்டணத்துக்கு வந்தார்கள். யோவான் அவர்களை விட்டுப் பிரிந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போனான். | அப் 13:6 அப் 27:13 |
| 14 | அவர்கள் பெர்கே பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவுக்கு வந்து, ஓய்வு நாளிலே ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, உட்கார்ந்தார்கள். | அப் 14:19 அப் 14:21-24 |
| 15 | நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனஆகமமும் வாசித்துமுடிந்தபின்பு: சகோதரரே, நீங்கள் ஜனங்களுக்குப் புத்தி சொல்ல விரும்பினால் சொல்லுங்கள் என்று சொல்லும்படி ஜெப ஆலயத்தலைவர்கள் அவர்களிடத்தில் ஆள் அனுப்பினார்கள். | அப் 13:27 அப் 15:21 லூக் 4:16-18 |
| 16 | அப்பொழுது பவுல் எழுந்திருந்து, கையமர்த்தி: இஸ்ரவேலரே, தேவனுக்குப் பயந்து நடக்கிற சகல ஜனங்களே, கேளுங்கள். | அப் 12:17 அப் 19:33 அப் 21:40 |
| 17 | இஸ்ரவேலராகிய இந்த ஜனத்தினுடைய தேவன் நம்முடைய பிதாக்களைத் தெரிந்துகொண்டு எகிப்து தேசத்தில் அவர்கள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்தபோது ஜனங்களை உயர்த்தி, தமது புயபலத்தினாலே அதிலிருந்து அவர்களைப் புறப்படப்பண்ணி, | அப் 7:2-53 ஆதி 12:1-3 ஆதி 17:7 ஆதி 17:8 உபா 4:37 உபா 7:6-8 உபா 9:5 உபா 14:2 நெகே 9:7 நெகே 9:8 சங் 105:6-12 சங் 105:42-12 சங் 105:43-12 சங் 135:4 ஏசா 41:8 ஏசா 41:9 ஏசா 44:1 எரே 33:24-26 1பேது 2:9 |
| 18 | நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்தில் அவர்களை ஆதரித்து, | அப் 7:36 அப் 7:39-43 யாத் 16:2 யாத் 16:35 எண் 14:22 எண் 14:33 எண் 14:34 உபா 9:7 உபா 9:21-24 நெகே 9:16-21 சங் 78:17-42 சங் 95:8-11 சங் 106:13-29 எசே 20:10-17 ஆமோ 5:25 ஆமோ 5:26 1கொரி 10:1-10 எபிரெ 3:7-10 எபிரெ 3:16-19 |
| 19 | கானான் தேசத்தில் ஏழு ஜாதிகளை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டுக் கொடுத்து, | அப் 7:45 உபா 7:1 யோசு 24:11 நெகே 9:24 சங் 78:55 |
| 20 | பின்பு ஏறக்குறைய நானூற்றைம்பது வருஷகாலமாய் சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை ஏற்படுத்திவந்தார். | நியா 2:16 நியா 3:10 ரூத் 1:1 1சாமு 12:11 2சாமு 7:11 2இரா 23:22 1நாளா 17:6 |
| 21 | அதுமுதல் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்; அப்படியே தேவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய கீசுடைய குமாரனான சவுலை நாற்பதுவருஷகாலமாய் அவர்களுக்குக் கொடுத்தார். | 1சாமு 8:5-22 1சாமு 12:12-19 |
| 22 | பின்பு அவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியும் கொடுத்தார். | 1சாமு 12:25 1சாமு 13:13 1சாமு 15:11 1சாமு 15:23 1சாமு 15:26 1சாமு 15:28 1சாமு 16:1 1சாமு 28:16 1சாமு 31:6 2சாமு 7:15 1நாளா 10:13 ஓசி 13:10 ஓசி 13:11 |
| 23 | அவனுடைய சந்ததியிலே தேவன் தமது வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலுக்கு இரட்சகராக இயேசுவை எழும்பப்பண்ணினார். | அப் 2:30 2சாமு 7:12 சங் 89:35-37 சங் 132:11 ஏசா 7:13 ஏசா 11:1 ஏசா 11:10 எரே 23:5 எரே 23:6 எரே 33:15-17 ஆமோ 9:11 மத் 1:1 மத் 21:9 மத் 22:42 லூக் 1:31-33 லூக் 1:69-33 யோவா 7:42 ரோம 1:3 வெளிப் 22:16 |
| 24 | இவர் வெளிப்படுவதற்குமுன்னே மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்து யோவான் இஸ்ரவேலர் யாவருக்கும் பிரசங்கித்தான். | அப் 1:22 அப் 10:37 அப் 19:3 அப் 19:4 மத் 3:1-11 மாற் 1:2-8 லூக் 1:76 லூக் 3:2 லூக் 3:3-20 யோவா 1:6-8 யோவா 1:15-18 யோவா 3:25-36 யோவா 5:33-36 |
| 25 | யோவான் தன் பணிவிடை ஓட்டத்தை நிறைவேற்றுகிறபோது: நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள், நான் அவர் அல்ல, இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சையை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல என்றான். | அப் 13:36 அப் 20:24 மாற் 6:16-28 யோவா 4:34 யோவா 19:28-30 2தீமோ 4:7 வெளிப் 11:7 |
| 26 | சகோதரரே, ஆபிரகாமின் சந்ததியில் பிறந்தவர்களே, தேவனுக்குப் பயந்து நடக்கிறவர்களே, இந்த இரட்சிப்பின் வசனம் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. | அப் 13:15 அப் 13:17 அப் 13:46 அப் 3:26 2நாளா 20:7 சங் 105:6 சங் 147:19 சங் 147:20 ஏசா 41:8 ஏசா 48:1 ஏசா 51:1 ஏசா 51:2 மத் 3:9 மத் 10:6 லூக் 24:47 |
| 27 | எருசலேமில் குடியிருக்கிறவர்களும் அவர்கள் அதிகாரிகளும் அவரை அறியாமலும், ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களை அறியாமலும், அவரை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்ததினால் அந்த வாக்கியங்களை நிறைவேற்றினார்கள். | அப் 3:17 லூக் 22:34 யோவா 8:28 யோவா 15:21 யோவா 16:3 ரோம 11:8-10 ரோம 11:25-10 1கொரி 2:8 2கொரி 3:14 2கொரி 4:4 1தீமோ 1:13 |
| 28 | மரணத்திற்கு ஏதுவானதொன்றும் அவரிடத்தில் காணாதிருந்தும், அவரைக் கொலைசெய்யும்படிக்குப் பிலாத்துவை வேண்டிக்கொண்டார்கள். | அப் 3:13 அப் 3:14 மத் 27:19 மத் 27:22-25 மாற் 15:13-15 லூக் 23:4 லூக் 23:5 லூக் 23:14-16 லூக் 23:21-25 யோவா 18:38 யோவா 19:4 யோவா 19:12-16 |
| 29 | அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் யாவையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள். | அப் 13:27 அப் 2:23 அப் 4:28 லூக் 18:31-33 லூக் 24:44 யோவா 19:28 யோவா 19:30 யோவா 19:36 யோவா 19:37 |
| 30 | தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார். | அப் 2:24 அப் 2:32 அப் 3:13 அப் 3:15 அப் 3:26 அப் 4:10 அப் 5:30 அப் 5:31 அப் 10:40 அப் 17:31 மத் 28:6 யோவா 2:19 யோவா 10:17 எபிரெ 13:20 |
| 31 | தம்முடனேகூடக் கலிலேயாவிலிருந்து எருசலேமுக்குப் போனவர்களுக்கு அவர் அநேகநாள் தரிசனமானார்; அவர்களே ஜனங்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறார்கள். | அப் 1:3 அப் 1:11 அப் 10:41 மத் 28:16 மாற் 16:12-14 லூக் 24:36-42 யோவா 20:19-29 யோவா 21:1-14 1கொரி 15:5-7 |
| 32 | நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே, | அப் 13:38 ஏசா 40:9 ஏசா 41:27 ஏசா 52:7 ஏசா 61:1 லூக் 1:19 லூக் 2:10 ரோம 10:15 |
| 33 | இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம். | சங் 2:7 எபிரெ 1:5 எபிரெ 1:6 எபிரெ 5:5 |
| 34 | இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம் பற்றினார். | ரோம 6:9 |
| 35 | அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது. | அப் 2:27-31 சங் 16:10 |
| 36 | தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான். | அப் 13:22 1நாளா 11:2 1நாளா 13:2-4 1நாளா 15:12-16 1நாளா 15:25-29 1நாளா 18:14 1நாளா 22:1-29 சங் 78:71 சங் 78:72 |
| 37 | தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை. | அப் 13:30 அப் 2:24 |
| 38 | ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும், | அப் 2:14 அப் 4:10 அப் 28:28 எசே 36:32 தானி 3:18 |
| 39 | மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது. | ஏசா 53:11 ஆபகூ 2:4 லூக் 18:14 யோவா 5:24 ரோம 3:24-30 ரோம 4:5-8 ரோம 4:24-8 ரோம 5:1 ரோம 5:9 ரோம 8:1 ரோம 8:3 ரோம 8:30-34 ரோம 10:10 1கொரி 6:11 கலா 2:16 கலா 3:8 |
| 40 | அன்றியும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்திலே: | மல்கி 3:2 மல்கி 4:1 மத் 3:9-12 எபிரெ 2:3 எபிரெ 3:12 எபிரெ 12:25 |
| 41 | அசட்டைக்காரரே, பாருங்கள், பிரமித்து அழிந்துபோங்கள்! உங்கள் நாட்களில் ஒரு கிரியையை நான் நடப்பிப்பேன், ஒருவன் அதை உங்களுக்கு விவரித்துச் சொன்னாலும் நீங்கள் விசுவாசிக்கமாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறபடி, உங்களுக்கு நேரிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றான். | நீதி 1:24-32 நீதி 5:12 ஏசா 5:24 ஏசா 28:14-22 லூக் 16:14 லூக் 23:35 எபிரெ 10:28-30 |
| 42 | அவர்கள் யூதருடைய ஜெப ஆலயத்திலிருந்து புறப்படுகையில், அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று புறஜாதியார் வேண்டிக்கொண்டார்கள். | அப் 10:33 அப் 28:28 எசே 3:6 மத் 11:21 மத் 19:30 |
| 43 | ஜெப ஆலயத்தில் கூடின சபை கலைந்துபோனபின்பு, யூதரிலும் யூதமார்க்கத்தமைந்த பக்தியுள்ளவர்களிலும் அநேகர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். அவர்களுடனே இவர்கள் பேசி, தேவனுடைய கிருபையிலே நிலைகொண்டிருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொன்னார்கள். | அப் 2:10 அப் 6:5 |
| 44 | அடுத்த ஓய்வுநாளிலே கொஞ்சங்குறையப் பட்டணத்தாரனைவரும் தேவவசனத்தைக் கேட்கும்படி கூடிவந்தார்கள். | ஆதி 49:10 சங் 110:3 ஏசா 11:10 ஏசா 60:8 |
| 45 | யூதர்கள் ஜனக்கூட்டங்களைக் கண்டபோது பொறாமையினால் நிறைந்து, பவுலினால் சொல்லப்பட்டவைகளுக்கு எதிரிடையாய்ப் பேசி, விரோதித்துத் தூஷித்தார்கள். | அப் 5:17 அப் 17:5 ஆதி 37:11 எண் 11:29 பிரச 4:4 ஏசா 26:11 மத் 27:18 லூக் 15:25-30 ரோம 1:29 1கொரி 3:3 கலா 5:21 யாக் 3:14-16 யாக் 4:5 |
| 46 | அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்திய ஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக்கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம். | அப் 4:13 அப் 4:29-31 நீதி 28:1 ரோம 10:20 எபே 6:19 எபே 6:20 பிலிப் 1:14 எபிரெ 11:34 |
| 47 | நீர் பூமியின் கடைசிபரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவைத்தேன் என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறபடியினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள். | அப் 1:8 அப் 9:15 அப் 22:21 அப் 26:17 அப் 26:18 மத் 28:19 மாற் 16:15 லூக் 24:47 |
| 48 | புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள். | அப் 13:42 அப் 2:41 அப் 8:8 அப் 15:31 லூக் 2:10-11 ரோம 15:9-12 |
| 49 | கர்த்தருடைய வசனம் அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று. | அப் 6:7 அப் 9:42 அப் 12:24 அப் 19:10 அப் 19:26 பிலிப் 1:13 பிலிப் 1:14 |
| 50 | யூதர்கள் பக்தியும் கனமுமுள்ள ஸ்திரீகளையும் பட்டணத்து முதலாளிகளையும் எடுத்துவிட்டு, பவுலையும் பர்னபாவையும் துன்பப்படுத்தும்படி செய்து, தங்கள் எல்லைகளுக்குப் புறம்பாக அவர்களைத் துரத்திவிட்டார்கள். | அப் 13:45 அப் 6:12 அப் 14:2 அப் 14:19 அப் 17:13 அப் 21:27 1இரா 21:25 |
| 51 | இவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்துக்குப் போனார்கள். | அப் 18:6 மத் 10:14 மாற் 6:11 லூக் 9:5 |
| 52 | சீஷர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டார்கள். | அப் 2:46 அப் 5:41 மத் 5:12 லூக் 6:22 லூக் 6:23 யோவா 16:22 யோவா 16:23 ரோம 5:3 ரோம 14:17 ரோம 15:13 2கொரி 8:2 1தெச 1:6 யாக் 1:2 1பேது 1:6-8 1பேது 4:13 |