| 1 | அக்காலத்திலே ஏரோது ராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி; | அப் 4:30 அப் 9:31 லூக் 22:53 |
| 2 | யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான். | மத் 4:21 மத் 4:22 மத் 20:23 மாற் 10:35 மாற் 10:38 |
| 3 | அது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று அவன் கண்டு, பேதுருவையும் பிடிக்கத்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாயிருந்தது. | அப் 24:27 அப் 25:9 யோவா 12:43 கலா 1:10 1தெச 2:4 |
| 4 | அவனைப் பிடித்துச் சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப் பின்பு ஜனங்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாமென்று எண்ணி, அவனைக் காக்கும்படி வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான். | அப் 4:3 அப் 5:18 அப் 8:3 மத் 24:9 லூக் 21:12 லூக் 22:33 யோவா 13:36-38 யோவா 21:18 |
| 5 | அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள். | அப் 12:12 ஏசா 62:6 ஏசா 62:7 மத் 18:19 லூக் 18:1 1கொரி 12:26 2கொரி 1:11 எபே 6:18-20 1தெச 5:17 எபிரெ 13:3 யாக் 5:16 |
| 6 | ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே நித்திரை பண்ணிக்கொண்டிருந்தான்; காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். | ஆதி 22:14 உபா 32:26 1சாமு 23:26 1சாமு 23:27 சங் 3:5 சங் 3:6 சங் 4:8 ஏசா 26:3 ஏசா 26:4 பிலிப் 4:6 பிலிப் 4:7 எபிரெ 13:6 |
| 7 | அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்துநின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது. | அப் 12:23 அப் 5:19 அப் 10:30 அப் 27:23 அப் 27:24 1இரா 19:5 1இரா 19:7 சங் 34:7 சங் 37:32 சங் 37:33 ஏசா 37:30 தானி 6:22 எபிரெ 1:14 |
| 8 | தூதன் அவனை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக்கொள் என்றான். அவன் அந்தப்படியே செய்தான். தூதன் பின்னும் அவனை நோக்கி: உன் வஸ்திரத்தைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான். |
| 9 | அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்சென்று, தூதனால் செய்யப்பட்டது மெய்யென்று அறியாமல், தான் ஒரு தரிசனங்காண்கிறதாக நினைத்தான். | அப் 26:19 ஆதி 6:22 யோவா 2:5 எபிரெ 11:8 |
| 10 | அவர்கள் முதலாங்காவலையும் இரண்டாங்காவலையும் கடந்து, நகரத்திற்குப்போகிற இருப்புக்கதவண்டையிலே வந்தபோது அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது; அதின் வழியாய் அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி நெடுக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனை விட்டுப்போய்விட்டான். | அப் 12:4 ஆதி 40:3 ஆதி 42:17 எண் 15:34 ஏசா 21:8 |
| 11 | பேதுருவுக்குத் தெளிவு வந்தபோது: ஏரோதின் கைக்கும் யூதஜனங்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படிக்குக் கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது மெய்யாய் அறிந்திருக்கிறேன் என்றான். | லூக் 15:17 |
| 12 | அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள். | அப் 4:23 அப் 16:40 |
| 13 | பேதுரு வாசற்கதவைத் தட்டினபோது ரோதை என்னும் பேர்கொண்ட ஒரு பெண் ஒற்றுக்கேட்க வந்தாள். | அப் 12:16 லூக் 13:25 |
| 14 | அவள் பேதுருவின் சத்தத்தை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறவாமல், உள்ளேயோடி, பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று அறிவித்தாள். | மத் 28:8 லூக் 24:41 |
| 15 | அவர்கள்: நீ பிதற்றுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தானென்று உறுதியாய்ச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அவருடைய தூதனாயிருக்கலாம் என்றார்கள். | அப் 26:24 யோபு 9:16 மாற் 16:11 மாற் 16:14 லூக் 24:11 |
| 16 | பேதுரு பின்னும் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் திறந்தபோது அவனைக் கண்டு பிரமித்தார்கள். |
| 17 | அவர்கள் பேசாமலிருக்கும்படி அவன் கையமர்த்தி, கர்த்தர் தன்னைக் காவலிலிருந்து விடுதலையாக்கின விதத்தை அவர்களுக்கு விவரித்து, இந்தச் செய்தியை யாக்கோபுக்கும் சகோதரருக்கும் அறிவியுங்கள் என்று சொல்லி; புறப்பட்டு, வேறொரு இடத்திற்குப் போனான். | அப் 13:16 அப் 19:33 அப் 21:40 லூக் 1:22 யோவா 13:24 |
| 18 | பொழுது விடிந்தபின்பு பேதுருவைக்குறித்துச் சேவகருக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல. | அப் 5:22-25 அப் 16:27 அப் 19:23 |
| 19 | ஏரோது அவனைத் தேடிக் காணாமற்போனபோது, காவற்காரரை விசாரணைசெய்து, அவர்களைக் கொலைசெய்யும்படி கட்டளையிட்டு, பின்பு யூதேயாதேசத்தைவிட்டுச் செசரியா பட்டணத்துக்குப்போய், அங்கே வாசம்பண்ணினான். | 1சாமு 23:14 சங் 37:32 சங் 37:33 எரே 36:26 மத் 2:13 |
| 20 | அக்காலத்திலே ஏரோது தீரியர்பேரிலும் சீதோனியர்பேரிலும் மிகவும் கோபமாயிருந்தான். தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால், அவர்கள் ஒருமனப்பட்டு, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரணைக்காரனாகிய பிலாஸ்துவைத் தங்கள் வசமாக்கிச் சமாதனம் கேட்டுக்கொண்டார்கள். | ஆதி 10:15 ஆதி 10:19 யோசு 19:29 ஏசா 23:1-4 மத் 11:21 மத் 11:22 |
| 21 | குறித்தநாளிலே: ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான். |
| 22 | அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள். | அப் 14:10-13 சங் 12:2 தானி 6:7 யூதா 1:16 வெளிப் 13:4 |
| 23 | அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான். | யாத் 12:12 யாத் 12:23 யாத் 12:29 1சாமு 25:38 2சாமு 24:17 1நாளா 21:14-18 2நாளா 32:21 |
| 24 | தேவவசனம் வளர்ந்து பெருகிற்று. | அப் 5:39 அப் 6:7 அப் 11:21 அப் 19:20 நீதி 28:28 ஏசா 41:10-13 ஏசா 54:14-17 ஏசா 55:10 தானி 2:24 தானி 2:44 மத் 16:18 கொலோ 1:6 2தெச 3:1 |
| 25 | பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள். | அப் 11:29 அப் 11:30 அப் 13:1-3 |