| 1 | புறஜாதியாரும் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டார்களென்று யூதேயாவிலிருக்கிற அப்போஸ்தலரும் சகோதரரும் கேள்விப்பட்டார்கள். | அப் 8:14 அப் 8:15 கலா 1:17-22 |
| 2 | பேதுரு எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது, விருத்தசேதனமுள்ளவர்கள் அவனை நோக்கி: | அப் 10:9 அப் 10:45 அப் 15:1 அப் 15:5 அப் 21:20-23 கலா 2:12-14 |
| 3 | விருத்தசேதனமில்லாத மனுஷரிடத்தில் நீர் போய், அவர்களோடே போஜனம்பண்ணினீர் என்று, அவனோடே வாக்குவாதம்பண்ணினார்கள். | அப் 10:23 அப் 10:28 அப் 10:48 லூக் 15:2 1கொரி 5:11 2யோவா 1:10 |
| 4 | அதற்குப் பேதுரு காரியத்தை முதலிலிருந்து வரிசையாய் அவர்களுக்கு விவரிக்கத் தொடங்கி: | அப் 14:27 யோசு 22:21-31 நீதி 15:1 லூக் 1:3 |
| 5 | நான் யோப்பா பட்டணத்தில் ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தபோது ஞானதிருஷ்டியடைந்து, ஒரு தரிசனத்தைக் கண்டேன்; அதென்னவென்றால், நாலு முனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒரு கூடு வானத்திலிருந்து என்னிடத்தில் இறங்கிவந்தது. | அப் 10:9-18 |
| 6 | அதிலே நான் உற்றுப்பார்த்துக் கவனிக்கிறபோது, பூமியிலுள்ள நாலுகால் ஜீவன்களையும், காட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப் பறவைகளையும் கண்டேன். | அப் 3:4 லூக் 4:20 |
| 7 | அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று என்னுடனே சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன். |
| 8 | அதற்கு நான்: ஆண்டவரே, அப்படியல்ல, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றும் ஒருக்காலும் என் வாய்க்குள்ளே போனதில்லை என்றேன். | மாற் 7:2 ரோம 14:14 |
| 9 | இரண்டாந்தரமும் வானத்திலிருந்து சத்தம் உண்டாகி: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதேயென்று மறுமொழி சொல்லிற்று. | அப் 10:28 அப் 10:34 அப் 10:35 அப் 15:9 1தீமோ 4:5 எபிரெ 9:13 எபிரெ 9:14 |
| 10 | இப்படி மூன்றுதரம் சம்பவித்தபின்பு, எல்லாம் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டது. | எண் 24:10 யோவா 13:38 யோவா 21:17 2கொரி 12:8 |
| 11 | உடனே செசரியாவிலிருந்து என்னிடத்திற்கு அனுப்பப்பட்ட மூன்று மனுஷர் நான் இருந்த வீட்டுக்குமுன்னே வந்துநின்றார்கள். | அப் 9:10-12 அப் 10:17 அப் 10:18 யாத் 4:14 யாத் 4:27 |
| 12 | நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடேகூடப் போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார். சகோதரராகிய இந்த ஆறுபேரும் என்னோடேகூட வந்தார்கள்; அந்த மனுஷனுடைய வீட்டுக்குள் பிரவேசித்தோம். | அப் 8:29 அப் 10:19 அப் 10:20 அப் 13:2 அப் 13:4 அப் 15:7 அப் 16:6 அப் 16:7 யோவா 16:13 2தெச 2:2 வெளிப் 22:17 |
| 13 | அவனோ தன் வீட்டிலே ஒரு தேவதூதன் நிற்கிறதைக் கண்டதாகவும், யோப்பா பட்டணத்திலிருக்கிற பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைக்கும்படிக்கு மனுஷரை அவ்விடத்திற்கு அனுப்பு; | அப் 10:3-6 அப் 10:22-6 அப் 10:30-32 அப் 12:11 எபிரெ 1:14 |
| 14 | நீயும் உன் வீட்டாரனைவரும் இரட்சிக்கப்படுவதற்கேதுவான வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான் என்று அந்தத் தூதன் தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்கு அறிவித்தான். | அப் 10:6 அப் 10:22 அப் 10:32 அப் 10:33 அப் 10:43 அப் 16:31 சங் 19:7-11 மாற் 16:16 யோவா 6:63 யோவா 6:68 யோவா 12:50 யோவா 20:31 ரோம 1:16 ரோம 1:17 ரோம 10:9 ரோம 10:10 1யோவா 5:9-13 |
| 15 | நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே நம்மேல் இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார். | அப் 10:34-44 |
| 16 | யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான், நீங்களோ பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை அப்பொழுது நினைவுகூர்ந்தேன். | அப் 20:35 லூக் 24:8 யோவா 14:26 யோவா 16:4 2பேது 3:1 |
| 17 | ஆதலால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்திருக்கிற நமக்கு தேவன் வரத்தை அநுக்கிரகம்பண்ணினதுபோல அவர்களுக்கும் அந்த வரத்தையே அநுக்கிரகம்பண்ணியிருக்கும்போது தேவனைத் தடுக்கிறதற்கு நான் எம்மாத்திரம் என்றான். | அப் 11:15 அப் 15:8 அப் 15:9 மத் 20:14 மத் 20:15 ரோம 9:15 ரோம 9:16 ரோம 9:23 ரோம 9:24 ரோம 11:34-36 |
| 18 | இவைகளை அவர்கள் கேட்டபொழுது அமர்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலை தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். | லேவி 10:19 லேவி 10:20 யோசு 22:30 |
| 19 | ஸ்தேவான் நிமித்தமாய் எழும்பின உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் சுவிசேஷ வசனத்தை யூதர்களுக்கேயன்றி மற்ற ஒருவருக்கும் அறிவியாமல், பெனிக்கேநாடு, சீப்புருதீவு, அந்தியோகியா பட்டணம்வரைக்கும் சுற்றித்திரிந்தார்கள். | அப் 8:1-4 |
| 20 | அவர்களில் சீப்புருதீவாரும் சிரேனே பட்டணத்தாருமாகிய சிலர் அந்தியோகியா பட்டணத்துக்கு வந்து, கிரேக்கருடனே பேசிக் கர்த்தராகிய இயேசுவைக்குறித்துப் பிரசங்கித்தார்கள். | அப் 2:10 அப் 6:9 அப் 13:1 மத் 27:32 |
| 21 | கர்த்தருடைய கரம் அவர்களோடே இருந்தது; அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். | 2நாளா 30:12 எஸ்றா 7:9 எஸ்றா 8:18 நெகே 2:8 நெகே 2:18 ஏசா 53:1 ஏசா 59:1 லூக் 1:66 |
| 22 | எருசலேமிலுள்ள சபையார் இந்தக் காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியாவரைக்கும் போகும்படிக்குப் பர்னபாவை அனுப்பினார்கள். | அப் 11:1 அப் 8:14 அப் 15:2 1தெச 3:6 |
| 23 | அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான். | மாற் 2:5 கொலோ 1:6 1தெச 1:3 1தெச 1:4 2தீமோ 1:4 2தீமோ 1:5 2பேது 1:4-9 3யோவா 1:4 |
| 24 | அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்; அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். | அப் 24:16 2சாமு 18:27 சங் 37:23 சங் 112:5 நீதி 12:2 நீதி 13:22 நீதி 14:14 மத் 12:35 மத் 19:17 லூக் 23:50 யோவா 7:12 ரோம 5:7 |
| 25 | பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவுக்குப் புறப்பட்டுப்போய், அவனைக்கண்டு, அந்தியோகியாவுக்கு அழைத்துக்கொண்டுவந்தான். | அப் 9:11 அப் 9:27 அப் 9:30 அப் 21:39 |
| 26 | அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று. | அப் 13:1 அப் 13:2 |
| 27 | அந்நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்க்கதரிசிகள் அந்தியோகியாவுக்கு வந்தார்கள். | அப் 2:17 அப் 13:1 அப் 15:32 அப் 21:4 அப் 21:9 மத் 23:34 1கொரி 12:28 1கொரி 14:32 எபே 4:11 |
| 28 | அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டாயிற்று. | அப் 21:10 |
| 29 | அப்பொழுது சீஷரில் அவரவர் தங்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாக யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாகப் பணஞ்சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள். | எஸ்றா 2:69 நெகே 5:8 1கொரி 16:2 2கொரி 8:2-4 2கொரி 8:12-14 1பேது 4:9-11 |
| 30 | அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா சவுல் என்பவர்களுடைய கையிலே கொடுத்து, மூப்பரிடத்திற்கு அனுப்பினார்கள். | அப் 14:23 அப் 15:4 அப் 15:6 அப் 15:23 அப் 16:4 அப் 20:17 1தீமோ 5:17 தீத் 1:5 யாக் 5:14 1பேது 5:1 |