| 1 | அவர் அப்புறம் போகையில் பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். |
| 2 | அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். | யோவா 9:34 மத் 16:14 |
| 3 | இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான். | யோபு 1:8-12 யோபு 2:3-6 யோபு 21:27 யோபு 22:5-30 யோபு 32:3 யோபு 42:7 பிரச 9:1 பிரச 9:2 லூக் 13:2-5 அப் 28:4 |
| 4 | பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது. | யோவா 4:34 யோவா 5:19 யோவா 5:36 யோவா 10:32 யோவா 10:37 யோவா 17:4 லூக் 13:32-34 அப் 4:20 |
| 5 | நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார். | யோவா 1:4-9 யோவா 3:19-21 யோவா 8:12 யோவா 12:35 யோவா 12:36 யோவா 12:46 ஏசா 42:6 ஏசா 42:7 ஏசா 49:6 ஏசா 60:1-3 மல்கி 4:2 மத் 4:16 லூக் 2:32 அப் 13:47 அப் 26:18 அப் 26:23 எபே 5:14 வெளிப் 21:23 |
| 6 | இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி: | மாற் 7:33 மாற் 8:23 வெளிப் 3:18 |
| 7 | நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான். | 2இரா 5:10-14 |
| 8 | அப்பொழுது அயலகத்தாரும், அவன் குருடனாயிருக்கையில் அவனைக் கண்டிருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றார்கள். | ரூத் 1:19 1சாமு 21:11 |
| 9 | சிலர்: அவன்தான் என்றார்கள். வேறு சிலர்: அவனுடைய சாயலாயிருக்கிறான் என்றார்கள். அவனோ: நான்தான் அவன் என்றான். |
| 10 | அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள். | யோவா 9:15 யோவா 9:21 யோவா 9:26 யோவா 3:9 பிரச 11:5 மாற் 4:27 1கொரி 15:35 |
| 11 | அவன் பிரதியுத்தரமாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வையடைந்தேன் என்றான். | யோவா 9:6 யோவா 9:7 யோவா 9:27 எரே 36:17 |
| 12 | அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான். | யோவா 5:11-13 யோவா 7:11 யாத் 2:18-20 |
| 13 | குருடனாயிருந்த அவனைப் பரிசேயரிடத்திற்குக் கொண்டுபோனார்கள். | யோவா 8:3-8 யோவா 11:46 யோவா 11:47 யோவா 11:57 யோவா 12:19 யோவா 12:42 |
| 14 | இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைத் திறந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது. | யோவா 5:9 யோவா 5:16 யோவா 7:21-23 மத் 12:1-14 மாற் 2:23-28 மாற் 3:1-6 லூக் 6:1-11 லூக் 13:10-17 லூக் 14:1 |
| 15 | ஆகையால் பரிசேயரும் அவனை நோக்கி: நீ எப்படிப் பார்வையடைந்தாய் என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கு அவன்: அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், காண்கிறேன் என்றான். | யோவா 9:10 யோவா 9:11 யோவா 9:26 யோவா 9:27 |
| 16 | அப்பொழுது பரிசேயரில் சிலர்: அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல என்றார்கள். வேறுசிலர்: பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இவ்விதமாய் அவர்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று. | யோவா 9:24 யோவா 9:30-33 யோவா 3:2 யோவா 5:36 யோவா 14:11 யோவா 15:24 |
| 17 | மறுபடியும் அவர்கள் குருடனை நோக்கி: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான். | யோவா 4:19 யோவா 6:14 லூக் 24:19 அப் 2:22 அப் 3:22-26 அப் 10:38 |
| 18 | அவன் குருடனாயிருந்து பார்வையடைந்ததை யூதர்கள் நம்பாமல், பார்வையடைந்தவனுடைய தாய்தகப்பன்மாரை அழைப்பித்து, | யோவா 5:44 யோவா 12:37-40 ஆதி 19:14 ஏசா 26:11 ஏசா 53:1 லூக் 16:31 எபிரெ 3:15-19 எபிரெ 4:11 |
| 19 | அவர்களை நோக்கி: உங்கள் குமாரன் குருடனாய்ப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள். | யோவா 9:8 யோவா 9:9 அப் 3:10 அப் 4:14 |
| 20 | தாய்தகப்பன்மார் பிரதியுத்தரமாக; இவன் எங்கள் குமாரன்தான் என்றும், குருடனாய்ப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும். |
| 21 | இப்பொழுது இவன் பார்வையடைந்த வகை எங்களுக்குத் தெரியாது; இவன் கண்களைத் திறந்தவன் இன்னான் என்பதும் எங்களுக்குத் தெரியாது; இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனைக் கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள். |
| 22 | அவனுடைய தாய்தகப்பன்மார் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கைபண்ணினால் அவனை ஜெப ஆலயத்துக்குப் புறம்பாக்கவேண்டுமென்று யூதர்கள் அதற்குமுன்னமே கட்டுப்பாடு செய்திருந்தார்கள். | யோவா 7:13 யோவா 12:42 யோவா 12:43 யோவா 19:38 யோவா 20:19 சங் 27:1 சங் 27:2 நீதி 29:25 ஏசா 51:7 ஏசா 51:12 ஏசா 57:11 லூக் 12:4-9 லூக் 22:56-61 அப் 5:13 கலா 2:11-13 வெளிப் 21:8 |
| 23 | அதினிமித்தம்: இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனையே கேளுங்கள் என்று அவன் தாய்தகப்பன்மார் சொன்னார்கள். |
| 24 | ஆதலால் அவர்கள் குருடனாயிருந்த மனுஷனை இரண்டாந்தரம் அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனுஷன் பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள். | யோவா 5:23 யோவா 8:49 யோவா 16:2 யோசு 7:19 1சாமு 6:5-9 சங் 50:14 சங் 50:15 ஏசா 66:5 ரோம 10:2-4 |
| 25 | அவன் பிரதியுத்தரமாக: அவர் பாவியென்று எனக்குத் தெரியாது; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான். | யோவா 9:30 யோவா 5:11 1யோவா 5:10 |
| 26 | அவர்கள் மறுபடியும் அவனை நோக்கி: உனக்கு என்னசெய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள். |
| 27 | அவன் பிரதியுத்தரமாக: முன்னமே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேளாமற்போனீர்கள்; மறுபடியும் கேட்கவேண்டியதென்ன? அவருக்குச் சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ என்றான். | யோவா 9:10-15 லூக் 22:67 |
| 28 | அப்பொழுது அவர்கள் அவனை வைது: நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர். | யோவா 9:34 யோவா 7:47-52 ஏசா 51:7 மத் 5:11 மத் 27:39 1கொரி 4:12 1கொரி 6:10 1பேது 2:23 |
| 29 | மோசேயுடனே தேவன் பேசினாரென்று அறிவோம், இவன் எங்கேயிருந்து வந்தவனென்று அறியோம் என்றார்கள். | யோவா 1:17 எண் 12:2-7 எண் 16:28 உபா 34:10 சங் 103:7 சங் 105:26 சங் 106:16 மல்கி 4:4 அப் 7:35 அப் 26:22 எபிரெ 3:2-5 |
| 30 | அதற்கு அந்த மனுஷன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம். | யோவா 3:10 யோவா 12:37 ஏசா 29:14 மாற் 6:6 |
| 31 | பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார். | யோபு 27:8 யோபு 27:9 யோபு 35:12 யோபு 42:8 சங் 18:41 சங் 34:15 சங் 66:18-20 நீதி 1:28 நீதி 1:29 நீதி 15:29 நீதி 21:13 நீதி 28:9 ஏசா 1:15 ஏசா 58:9 எரே 11:11 எரே 14:12 எசே 8:18 மீகா 3:4 சகரி 7:13 |
| 32 | பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானது முதல் கேள்விப்பட்டதில்லையே. | யோபு 20:4 ஏசா 64:4 லூக் 1:70 வெளிப் 16:18 |
| 33 | அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான். | யோவா 9:16 யோவா 3:2 அப் 5:38 அப் 5:39 |
| 34 | அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் புறம்பே தள்ளிவிட்டார்கள். | யோவா 9:2 யோவா 8:41 யோபு 14:4 யோபு 15:14-16 யோபு 25:4 சங் 51:5 கலா 2:15 எபே 2:3 |
| 35 | அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்றார். | யோவா 5:14 சங் 27:10 ரோம 10:20 |
| 36 | அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார் என்றான். | யோவா 1:38 நீதி 30:3 நீதி 30:4 உன்ன 5:9 மத் 11:3 |
| 37 | இயேசு அவனை நோக்கி: நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே, பேசுகிறவர் அவர்தான் என்றார். | யோவா 4:26 யோவா 7:17 யோவா 14:21-23 சங் 25:8 சங் 25:9 சங் 25:14 மத் 11:25 மத் 13:11 மத் 13:12 அப் 10:31-33 |
| 38 | உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான். | யோவா 20:28 சங் 2:12 சங் 45:11 மத் 14:33 மத் 28:9 மத் 28:17 லூக் 24:52 வெளிப் 5:9-14 |
| 39 | அப்பொழுது இயேசு: காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார். | யோவா 3:17 யோவா 5:22-27 யோவா 8:15 எரே 1:9 எரே 1:10 லூக் 2:34 லூக் 13:30 2கொரி 2:16 |
| 40 | அவருடனேகூட இருந்த பரிசேயரில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள். | யோவா 9:34 யோவா 7:47-52 மத் 15:12-14 மத் 23:16-28 லூக் 11:39-54 ரோம 2:19-22 வெளிப் 3:17 |
| 41 | இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார். | யோவா 15:22-24 நீதி 26:12 ஏசா 5:21 எரே 2:35 லூக் 12:47 லூக் 18:14 எபிரெ 10:26 1யோவா 1:8-10 |