| 1 | தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்டபின்பு, | லூக் 1:24 |
| 2 | அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங்குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டுபண்ணினேன். | அப் 1:9 மாற் 16:19 லூக் 9:51 லூக் 24:51 யோவா 6:62 யோவா 13:1 யோவா 13:3 யோவா 16:28 யோவா 17:13 யோவா 20:17 எபே 4:8-10 1தீமோ 3:16 எபிரெ 6:19 எபிரெ 6:20 எபிரெ 9:24 1பேது 3:22 |
| 3 | அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். | அப் 13:31 மத் 28:9 மத் 28:16 மாற் 16:10-14 லூக் 24:1-53 யோவா 20:1-21 1கொரி 15:5-7 1யோவா 1:1 |
| 4 | அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். | அப் 10:41 லூக் 24:41-43 |
| 5 | ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார். | அப் 11:15 அப் 19:4 மத் 3:11 லூக் 3:16 யோவா 1:31 1கொரி 12:13 தீத் 3:5 |
| 6 | அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா இராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள். | மத் 24:3 யோவா 21:21 |
| 7 | அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. | அப் 17:26 உபா 29:29 தானி 2:21 மத் 24:36 மாற் 13:32 லூக் 21:24 எபே 1:10 1தெச 5:1 1தெச 5:2 1தீமோ 6:15 2தீமோ 3:1 |
| 8 | பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். | அப் 2:1-4 அப் 6:8 அப் 8:19 மீகா 3:8 சகரி 4:6 லூக் 10:19 வெளிப் 11:3-6 |
| 9 | இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. | அப் 1:2 சங் 68:18 மாற் 16:19 லூக் 24:50 லூக் 24:51 யோவா 6:62 எபே 4:8-12 |
| 10 | அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்துபார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று: | 2இரா 2:11 2இரா 2:12 |
| 11 | கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். | அப் 2:7 அப் 13:31 மாற் 14:70 |
| 12 | அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வுநாள் பிரயாணதூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள். | சகரி 14:4 மத் 21:1 மத் 24:3 மத் 26:30 லூக் 21:37 லூக் 24:52 |
| 13 | அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள். | அப் 9:37-39 அப் 20:8 மாற் 14:15 லூக் 22:12 |
| 14 | அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள். | அப் 2:1 அப் 2:42 அப் 2:46 அப் 4:24-31 அப் 6:4 மத் 18:19 மத் 18:20 மத் 21:22 லூக் 11:13 லூக் 18:1 லூக் 24:53 எபே 6:18 |
| 15 | அந்நாட்களிலே, சீஷர்களில் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் நடுவிலே பேதுரு எழுந்து நின்று: | சங் 32:5 சங் 32:6 சங் 51:9-13 லூக் 22:32 யோவா 21:15-17 |
| 16 | சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது. | அப் 2:29 அப் 2:37 அப் 7:2 அப் 13:15 அப் 13:26 அப் 13:38 அப் 15:7 அப் 15:13 அப் 22:1 அப் 23:1 அப் 23:6 அப் 28:17 |
| 17 | அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்குபெற்றவனாயிருந்தான். | மத் 10:4 மாற் 3:19 லூக் 6:16 லூக் 22:47 யோவா 6:70 யோவா 6:71 யோவா 17:12 |
| 18 | அநீதத்தின் கூலியினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று. | மத் 27:3-10 |
| 19 | இது எருசலேமிலுள்ள குடிகள் யாவருக்கும் தெரிந்திருக்கிறது; அதினாலே அந்த நிலம் அவர்களுடைய பாஷையிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என்னப்பட்டிருக்கிறது. | அப் 2:22 மத் 28:15 |
| 20 | சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது. | அப் 13:33 லூக் 20:42 லூக் 24:44 |
| 21 | ஆதலால், யோவான் ஞானஸ்நானம்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும், | லூக் 10:1 லூக் 10:2 யோவா 15:27 |
| 22 | அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனேகூட இருந்த மனுஷர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான். | அப் 13:24 அப் 13:25 மத் 3:1-17 மாற் 1:1 மாற் 1:3-8 லூக் 3:1-18 யோவா 1:28-51 |
| 23 | அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பும் மத்தியாவும் ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி: | அப் 15:22 |
| 24 | எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்கு பெறுவதற்காக, | அப் 13:2 அப் 13:3 நீதி 3:5 நீதி 3:6 லூக் 6:12 லூக் 6:13 |
| 25 | இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி; | அப் 1:17 அப் 1:20 |
| 26 | பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான். | அப் 13:19 லேவி 16:8 யோசு 18:10 1சாமு 14:41 1சாமு 14:42 1நாளா 24:5 நீதி 16:22 யோனா 1:7 |