| 1 | மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். | யோவா 3:3 |
| 2 | வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான். | யோவா 10:7 யோவா 10:9 அப் 20:28 1தீமோ 3:2-7 1தீமோ 4:14 தீத் 1:5 வெளிப் 1:20 வெளிப் 2:1 |
| 3 | வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டு போகிறான். | ஏசா 53:10-12 1கொரி 16:9 கொலோ 4:3 1பேது 1:12 வெளிப் 3:7 வெளிப் 3:8 வெளிப் 3:20 |
| 4 | அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. | யோவா 12:26 யோவா 13:15 யோவா 14:2 யோவா 14:3 உபா 1:30 மீகா 2:12 மீகா 2:13 மத் 16:24 1கொரி 11:1 எபே 5:1 பிலிப் 2:5-11 எபிரெ 6:20 எபிரெ 12:2 1பேது 2:21 1பேது 4:1 1பேது 5:3 |
| 5 | அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போகும் என்றார். | 1இரா 22:7 நீதி 19:27 மாற் 4:24 லூக் 8:18 எபே 4:11-15 கொலோ 2:6-10 2தீமோ 3:5-7 2தீமோ 4:3 1பேது 2:1-3 1யோவா 2:19 1யோவா 2:21 1யோவா 4:5 1யோவா 4:6 வெளிப் 2:2 |
| 6 | இந்த உவமையை இயேசு அவர்களுடனே சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை. | யோவா 6:52 யோவா 6:60 யோவா 7:36 யோவா 8:27 யோவா 8:43 சங் 82:5 சங் 106:7 நீதி 28:5 ஏசா 6:9 ஏசா 6:10 ஏசா 56:11 தானி 12:10 மத் 13:13 மத் 13:14 மத் 13:51 1கொரி 2:14 1யோவா 5:20 |
| 7 | ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். | யோவா 10:1 யோவா 10:9 யோவா 14:6 எபே 2:18 எபிரெ 10:19-22 |
| 8 | எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. | யோவா 10:1 ஏசா 56:10-12 எசே 22:25-28 எசே 34:2 செப் 3:3 சகரி 11:4-9 சகரி 11:16-9 அப் 5:36 |
| 9 | நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். | யோவா 10:1 யோவா 10:7 யோவா 14:6 ரோம 5:1 ரோம 5:2 எபே 2:18 எபிரெ 10:19-22 |
| 10 | திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். | யோவா 10:1 யோவா 12:6 ஏசா 56:11 எசே 34:2-4 ஓசி 7:1 மத் 21:13 மத் 23:14 மாற் 11:17 ரோம 2:21 2பேது 2:1-3 |
| 11 | நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். | யோவா 10:14 சங் 23:1 சங் 80:1 ஏசா 40:11 எசே 34:12 எசே 34:23 எசே 37:24 மீகா 5:4 சகரி 13:7 எபிரெ 13:20 1பேது 2:25 1பேது 5:4 |
| 12 | மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். | யோவா 10:3 ஏசா 56:10-12 எசே 34:2-6 சகரி 11:16 சகரி 11:17 1தீமோ 3:3 1தீமோ 3:8 2தீமோ 4:10 தீத் 1:7 1பேது 5:2 2பேது 2:3 |
| 13 | கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான். | யோவா 12:6 அப் 18:17 பிலிப் 2:20 |
| 14 | நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், | யோவா 10:27 சங் 1:6 2தீமோ 2:19 வெளிப் 2:2 வெளிப் 2:9 வெளிப் 2:13 வெளிப் 2:19 வெளிப் 3:1 வெளிப் 3:8 வெளிப் 3:15 |
| 15 | நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். | யோவா 1:18 யோவா 6:46 யோவா 8:55 யோவா 17:25 மத் 11:27 லூக் 10:21 வெளிப் 5:2-9 |
| 16 | இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். | யோவா 11:52 ஆதி 49:10 சங் 22:26-31 சங் 72:17-19 சங் 86:9 சங் 98:2 சங் 98:3 ஏசா 11:10 ஏசா 24:13-16 ஏசா 42:10-12 ஏசா 43:6 ஏசா 49:6 ஏசா 52:10 ஏசா 56:8 ஓசி 1:10 சகரி 2:11 சகரி 8:20-23 அப் 18:10 ரோம 9:23 ரோம 9:24 ரோம 15:9-13 எபே 2:14 1பேது 2:10 |
| 17 | நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக்கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். | யோவா 3:25 யோவா 15:9 யோவா 15:10 யோவா 17:4 யோவா 17:5 யோவா 17:24-26 ஏசா 42:1 ஏசா 42:21 ஏசா 53:7-12 எபிரெ 2:9 |
| 18 | ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார். | யோவா 18:5 யோவா 18:6 யோவா 19:11 மத் 26:53-56 |
| 19 | இந்த வசனங்களினிமித்தம் யூதருக்குள்ளே மறுபடியும் பிரிவினையுண்டாயிற்று. | யோவா 7:40-43 யோவா 9:16 மத் 10:34 மத் 10:35 லூக் 12:51-53 அப் 14:4 அப் 23:7-10 1கொரி 3:3 1கொரி 11:18 |
| 20 | அவர்களில் அநேகர்: இவன் பிசாசு பிடித்தவன், பயித்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவிகொடுக்கிறீர்கள் என்றார்கள். | யோவா 7:20 யோவா 8:48 யோவா 8:52 மத் 9:34 மத் 10:25 மாற் 3:21 அப் 26:24 |
| 21 | வேறே சிலர்: இவைகள் பிசாசு பிடித்தவனுடைய வசனங்களல்லவே. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள். | யோவா 9:6 யோவா 9:32 யாத் 4:11 யாத் 8:19 சங் 94:9 சங் 146:8 நீதி 20:12 ஏசா 35:5 ஏசா 35:6 மத் 11:5 |
| 22 | பின்பு எருசலேமிலே தேவாலயப்பிரதிஷ்டைபண்டிகை வந்தது; மாரிகாலமுமாயிருந்தது. |
| 23 | இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார். | அப் 3:11 அப் 5:12 |
| 24 | அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள். | 1இரா 18:21 மத் 11:3 லூக் 3:15 |
| 25 | இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது. | யோவா 5:17-43 யோவா 8:12 யோவா 8:24 யோவா 8:58 |
| 26 | ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள். | யோவா 10:4 யோவா 10:27 யோவா 6:37 யோவா 6:44 யோவா 6:45 யோவா 6:65 யோவா 8:47 யோவா 12:37-40 ரோம 11:7 ரோம 11:8 2கொரி 4:3 2கொரி 4:4 1யோவா 4:6 |
| 27 | என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. | யோவா 10:4 யோவா 10:8 யோவா 10:16 யோவா 5:25 யோவா 8:43 மத் 17:5 அப் 3:23 எபிரெ 3:7 வெளிப் 3:20 |
| 28 | நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதுமில்லை. | யோவா 3:16 யோவா 3:36 யோவா 5:39 யோவா 5:40 யோவா 6:27 யோவா 6:40 யோவா 6:47 யோவா 6:68 யோவா 11:25 யோவா 17:2 ரோம 5:21 ரோம 6:23 1தீமோ 1:16 1யோவா 2:25 1யோவா 5:13-20 யூதா 1:21 |
| 29 | அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. | யோவா 6:37 யோவா 17:2 யோவா 17:6 யோவா 17:9 யோவா 17:11 |
| 30 | நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். | யோவா 1:1 யோவா 1:2 யோவா 5:17 யோவா 5:23 யோவா 8:58 யோவா 14:9 யோவா 14:23 யோவா 16:15 யோவா 17:10 யோவா 17:21 மத் 11:27 மத் 28:19 1தீமோ 3:16 தீத் 2:13 1யோவா 5:7 1யோவா 5:20 |
| 31 | அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். | யோவா 5:18 யோவா 8:59 யோவா 11:8 யாத் 17:4 1சாமு 30:6 மத் 21:35 மத் 23:35 அப் 7:52 அப் 7:58 அப் 7:59 |
| 32 | இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார். | யோவா 10:25 யோவா 10:37 யோவா 5:19 யோவா 5:20 யோவா 5:36 மத் 11:5 அப் 2:22 அப் 10:38 |
| 33 | யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இவ்விதமாக தேவதூஷணஞ்சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். | லேவி 24:14 1இரா 21:10 |
| 34 | இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? | யோவா 12:34 யோவா 15:25 ரோம 3:10-19 |
| 35 | தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, | ஆதி 15:1 உபா 18:15 உபா 18:18-20 1சாமு 14:36 1சாமு 14:37 1சாமு 15:1 1சாமு 23:9-11 1சாமு 28:6 1சாமு 30:8 2சாமு 7:5 1நாளா 22:8 2நாளா 11:2 2நாளா 11:3 2நாளா 19:2 ரோம 13:1 |
| 36 | பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ்சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா? | யோவா 3:34 யோவா 6:27 சங் 2:2 சங் 2:6-12 ஏசா 11:2-5 ஏசா 42:1 ஏசா 42:3 ஏசா 49:1-3 ஏசா 49:6-8 ஏசா 55:4 ஏசா 61:1-3 எரே 1:5 |
| 37 | என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை. | யோவா 10:25 யோவா 10:32 யோவா 5:31 யோவா 12:37-40 யோவா 14:10 யோவா 15:24 மத் 11:20-24 |
| 38 | செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார். | யோவா 3:2 யோவா 5:36 அப் 2:22 அப் 4:8-12 |
| 39 | இதினிமித்தம் அவர்கள் மறுபடியும் அவரைப் பிடிக்கத் தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி, | யோவா 10:31 யோவா 7:30 யோவா 7:44 யோவா 8:59 லூக் 4:29 லூக் 4:30 |
| 40 | யோர்தானுக்கு அக்கரையிலே முன்னே யோவான் ஞானஸ்நானங்கொடுத்துக்கொண்டிருந்த இடத்துக்குத் திரும்பிப்போய், அங்கே தங்கினார். | யோவா 1:28 யோவா 3:26 |
| 41 | அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை; ஆகிலும் இவரைக்குறித்து யோவான் சொன்னதெல்லாம் மெய்யாயிருக்கிறது என்றார்கள். | யோவா 3:26 மத் 4:23-25 மாற் 1:37 லூக் 5:1 லூக் 12:1 |
| 42 | அவ்விடத்திலே அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள். | யோவா 2:23 யோவா 4:39 யோவா 4:41 யோவா 8:30 யோவா 11:45 யோவா 12:42 |