| 1 | இவைகளுக்குப்பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினபடியால், அவர் யூதேயாவிலே சஞ்சரிக்கமனதில்லாமல் கலிலேயாவிலே சஞ்சரித்து வந்தார். | யோவா 4:3 யோவா 4:54 யோவா 10:39 யோவா 10:40 யோவா 11:54 லூக் 13:31-33 அப் 10:38 |
| 2 | யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது. | யாத் 23:16 யாத் 23:17 லேவி 23:34-43 எண் 29:12-38 உபா 16:13-16 1இரா 8:2 1இரா 8:65 2நாளா 7:9 2நாளா 7:10 எஸ்றா 3:4 நெகே 8:14-18 சகரி 14:16-19 |
| 3 | அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப்போம். | யோவா 7:5 மத் 12:46 மத் 12:47 மாற் 3:31 லூக் 8:19 அப் 2:14 |
| 4 | பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். | நீதி 18:1 நீதி 18:2 மத் 6:1 மத் 6:2 மத் 6:5 மத் 6:16 மத் 23:5 லூக் 6:45 |
| 5 | அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள். | யோவா 1:11-13 மீகா 7:5 மீகா 7:6 மாற் 3:21 |
| 6 | இயேசு அவர்களை நோக்கி: என் வேளை இன்னும் வரவில்லை, உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது. | யோவா 7:8 யோவா 7:30 யோவா 2:4 யோவா 8:20 யோவா 13:1 யோவா 17:1 சங் 102:13 பிரச 3:1-15 அப் 1:7 |
| 7 | உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது. | யோவா 15:19 லூக் 6:26 யாக் 4:4 1யோவா 4:5 |
| 8 | நீங்கள் இந்தப் பண்டிகைக்குப் போங்கள்; என் வேளை இன்னும் வராதபடியால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார். | யோவா 7:6 யோவா 7:30 யோவா 8:20 யோவா 8:30 யோவா 11:6 யோவா 11:7 1கொரி 2:15 1கொரி 2:16 |
| 9 | இவைகளை அவர்களுடனே சொல்லி, பின்னுங் கலிலேயாவிலே தங்கினார். |
| 10 | அவருடைய சகோதரர் போனபின்பு, அவர் வெளியரங்கமாய்ப் போகாமல் அந்தரங்கமாய்ப் பண்டிகைக்குப் போனார். | சங் 26:8 சங் 40:8 மத் 3:15 கலா 4:4 |
| 11 | பண்டிகையிலே யூதர்கள் அவரைத்தேடி: அவர் எங்கேயிருக்கிறார் என்றார்கள். | யோவா 11:56 |
| 12 | ஜனங்களுக்குள்ளே அவரைக்குறித்து முறுமுறுப்புண்டாயிற்று. சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படியல்ல, அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள். | யோவா 7:32 யோவா 9:16 பிலிப் 2:14 |
| 13 | ஆனாலும் யூதருக்குப் பயந்திருந்ததினாலே, ஒருவனும் அவரைக்குறித்துத் தாராளமாய்ப் பேசவில்லை. | யோவா 3:2 யோவா 9:22 யோவா 9:34 யோவா 12:42 யோவா 12:43 யோவா 19:38 யோவா 20:19 நீதி 29:25 கலா 2:12 கலா 2:13 2தீமோ 2:9-13 வெளிப் 2:13 |
| 14 | பாதிப்பண்டிகையானபோது, இயேசு தேவாலயத்துக்குப்போய், உபதேசம்பண்ணினார். | யோவா 7:2 யோவா 7:37 எண் 29:12 எண் 29:13 எண் 29:17 எண் 29:20 எண் 29:23-40 |
| 15 | அப்பொழுது யூதர்கள்: இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள். | யோவா 7:46 மத் 7:28 மத் 7:29 மத் 22:22 மத் 22:33 லூக் 2:47 |
| 16 | இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. | யோவா 3:11 யோவா 3:31 யோவா 8:28 யோவா 12:49 யோவா 12:50 யோவா 14:10 யோவா 14:24 யோவா 17:8 யோவா 17:14 வெளிப் 1:1 |
| 17 | அவருடைய சித்தத்தின்படி செய்யமனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான். | யோவா 1:46-49 யோவா 8:31 யோவா 8:32 யோவா 8:43 யோவா 8:47 சங் 25:8 சங் 25:9 சங் 25:12 சங் 119:10 சங் 119:101 சங் 119:102 ஏசா 35:8 எரே 31:33 எரே 31:34 ஓசி 6:3 மீகா 4:2 மல்கி 4:2 மத் 6:22 லூக் 8:15 அப் 10:1-6 அப் 11:13 அப் 11:14 அப் 17:11 பிலிப் 3:15 பிலிப் 3:16 |
| 18 | சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை. | யோவா 5:41 யோவா 8:49 யோவா 8:50 1கொரி 10:31-33 கலா 6:12-14 பிலிப் 2:3-5 1தெச 2:6 1பேது 4:11 |
| 19 | மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை; நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள் என்றார். | யோவா 1:17 யோவா 5:45 யோவா 9:28 யோவா 9:29 யாத் 24:2 யாத் 24:3 உபா 33:4 உபா 1:17 அப் 7:38 கலா 3:19 எபிரெ 3:3-5 |
| 20 | ஜனங்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நீ பிசாசுபிடித்தவன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள். | யோவா 8:48 யோவா 8:52 யோவா 10:20 மத் 10:25 மத் 11:18 மத் 11:19 மத் 12:24 மாற் 3:21 மாற் 3:22 மாற் 3:30 அப் 26:24 |
| 21 | இயேசு அவர்களை நோக்கி: ஒரே கிரியையைச் செய்தேன், அதைக்குறித்து எல்லாரும் ஆச்சரியப்படுகிறீர்கள். | யோவா 5:9-11 |
| 22 | விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், பிதாக்களால் உண்டாயிற்று; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனுஷனை விருத்தசேதனம்பண்ணுகிறீர்கள். | ஆதி 17:10-14 லேவி 12:3 ரோம 4:9-11 கலா 3:17 |
| 23 | மோசேயின் நியாயப்பிரமாணம் மீறப்படாதபடிக்கு ஓய்வுநாளில் மனுஷன் விருத்தசேதனம் பெறலாமென்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனுஷனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா? | மத் 12:5 |
| 24 | தோற்றத்தின்படி தீர்ப்புச்செய்யாமல், நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள் என்றார். | யோவா 8:15 உபா 1:16 உபா 1:17 உபா 16:18 உபா 16:19 சங் 58:1 சங் 58:2 சங் 82:2 சங் 94:20 சங் 94:21 நீதி 17:15 நீதி 24:23 ஏசா 5:23 ஏசா 11:3 ஏசா 11:4 யாக் 2:1 யாக் 2:4 யாக் 2:9 |
| 25 | அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர்: இவனையல்லவா கொலைசெய்யத் தேடுகிறார்கள்? | யோவா 7:10 யோவா 7:11 |
| 26 | இதோ, இவன் தாராளமாய்ப் பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, மெய்யாய் இவன் கிறிஸ்துதான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ? | சங் 40:9 சங் 40:10 சங் 71:15 சங் 71:16 நீதி 28:1 ஏசா 42:4 ஏசா 50:7 ஏசா 50:8 மத் 22:16 அப் 4:13 எபே 6:19 எபே 6:20 பிலிப் 1:14 2தீமோ 1:7 2தீமோ 1:8 |
| 27 | இவன் இன்ன இடத்திலிருந்து வந்தவனென்று நாம் அறிந்திருக்கிறோம், கிறிஸ்து வரும்போதோ, அவர் இன்ன இடத்திலிருந்து வருகிறவரென்று ஒருவனும் அறியமாட்டானே என்றார்கள். | யோவா 7:15 யோவா 6:42 மத் 13:54-57 மாற் 6:3 லூக் 4:22 |
| 28 | அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். | யோவா 1:46 யோவா 8:14 மத் 2:23 லூக் 2:4 லூக் 2:11 லூக் 2:39 லூக் 2:51 |
| 29 | நான் அவரால் வந்திருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிறபடியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார். | யோவா 1:18 யோவா 8:55 யோவா 10:15 யோவா 17:25 யோவா 17:26 |
| 30 | அப்பொழுது அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை. | யோவா 7:19 யோவா 7:32 யோவா 8:37 யோவா 8:59 யோவா 10:31 யோவா 10:39 யோவா 11:57 மாற் 11:18 லூக் 19:47 லூக் 19:48 லூக் 20:19 |
| 31 | ஜனங்களில் அநேகர் அவரை விசுவாசித்து: கிறிஸ்து வரும்போது, இவர் செய்கிற அற்புதங்களைப்பார்க்கிலும் அதிகம் செய்வாரோ என்றார்கள். | யோவா 2:23 யோவா 2:24 யோவா 4:39 யோவா 6:14 யோவா 6:15 யோவா 8:30-32 யோவா 12:42 மத் 12:23 லூக் 8:13 அப் 8:13 யாக் 2:26 |
| 32 | ஜனங்கள் அவரைக்குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயரும் பிரதான ஆசாரியரும் சேவகரை அனுப்பினார்கள். | யோவா 7:47-53 யோவா 11:47 யோவா 11:48 யோவா 12:19 மத் 12:23 மத் 12:24 மத் 23:13 |
| 33 | அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: இன்னுங்கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன். | யோவா 12:35 யோவா 12:36 யோவா 13:1 யோவா 13:3 யோவா 13:33 யோவா 16:5 யோவா 16:16-22 யோவா 17:11 யோவா 17:13 மாற் 16:19 |
| 34 | நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரவுங்கூடாது என்றார். | யோவா 8:21-24 யோவா 13:33-36 யோவா 14:3 யோவா 14:6 யோவா 17:24 நீதி 1:24-31 ஓசி 5:6 மத் 23:39 லூக் 13:24 லூக் 13:25 லூக் 13:34 லூக் 13:35 லூக் 17:22 லூக் 17:23 |
| 35 | அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் காணாதபடிக்கு எங்கே போவார், கிரேக்கருக்குள்ளே சிதறியிருக்கிறவர்களிடத்திற்குப் போய், கிரேக்கருக்கு உபதேசம்பண்ணுவாரோ? | ஏசா 11:12 ஏசா 27:12 ஏசா 27:13 செப் 3:10 அப் 21:21 யாக் 1:1 1பேது 1:1 |
| 36 | நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்றும், இவர் சொன்ன வார்த்தையின் கருத்து என்னவென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். | யோவா 3:4 யோவா 3:9 யோவா 6:41 யோவா 6:52 யோவா 6:60 யோவா 12:34 யோவா 16:17 யோவா 16:18 |
| 37 | பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். | லேவி 23:36 லேவி 23:39 எண் 29:35 1இரா 8:65 1இரா 8:66 |
| 38 | வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். | உபா 18:15 |
| 39 | தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை. | யோவா 14:16 யோவா 14:17 யோவா 14:26 நீதி 1:23 ஏசா 12:3 ஏசா 32:15 ஏசா 44:3 யோவே 2:28 லூக் 3:16 லூக் 24:49 அப் 1:4-8 அப் 2:4 அப் 2:17 அப் 2:38 அப் 4:31 ரோம 8:9 எபே 1:13 எபே 1:14 எபே 4:30 |
| 40 | ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள். |
| 41 | வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்? | யோவா 7:31 யோவா 1:41 யோவா 1:49 யோவா 4:25 யோவா 4:29 யோவா 4:42 யோவா 6:69 மத் 16:14-16 |
| 42 | தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள். | யோவா 7:27 சங் 132:11 ஏசா 11:1 எரே 23:5 மீகா 5:2 மத் 2:5 லூக் 2:4 லூக் 2:11 |
| 43 | இவ்விதமாக அவரைக்குறித்து ஜனங்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று. | யோவா 7:12 யோவா 9:16 யோவா 10:19 மத் 10:35 லூக் 12:51 அப் 14:4 அப் 23:7-10 |
| 44 | அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க மனதாயிருந்தார்கள்; ஆகிலும் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை. | யோவா 7:30 யோவா 8:20 யோவா 18:5 யோவா 18:6 அப் 18:10 அப் 23:11 அப் 27:23-25 |
| 45 | பின்பு அந்தச் சேவகர் பிரதான ஆசாரியரிடத்திற்கும் பரிசேயரிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களை நோக்கி: நீங்கள் அவனை ஏன் கொண்டுவரவில்லை என்று கேட்டார்கள். | யோவா 7:32 அப் 5:21-27 |
| 46 | சேவகர் பிரதியுத்தரமாக: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள். | யோவா 7:26 மத் 7:29 லூக் 4:22 |
| 47 | அப்பொழுது பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா? | யோவா 7:12 யோவா 9:27-34 2இரா 18:29 2இரா 18:32 2நாளா 32:15 மத் 27:63 2கொரி 6:8 |
| 48 | அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா? | யோவா 7:26 யோவா 7:50 யோவா 12:42 எரே 5:4 எரே 5:5 மத் 11:25 அப் 6:7 1கொரி 1:20 1கொரி 1:22-28 1கொரி 2:8 |
| 49 | வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள். | யோவா 9:34 யோவா 9:40 ஏசா 5:21 ஏசா 28:14 ஏசா 29:14-19 ஏசா 65:5 1கொரி 1:20 1கொரி 1:21 1கொரி 3:18-20 யாக் 3:13-18 |
| 50 | இராத்திரியிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களிலொருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களை நோக்கி: | யோவா 3:1 யோவா 3:2 யோவா 19:39 |
| 51 | ஒரு மனுஷன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான். | உபா 1:17 உபா 17:8-11 உபா 19:15-19 நீதி 18:13 |
| 52 | அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும் என்றார்கள். | யோவா 9:34 ஆதி 19:9 யாத் 2:14 1இரா 22:24 நீதி 9:7 நீதி 9:8 |
| 53 | பின்பு அவரவர் தங்கள் தங்கள் வீட்டுக்குப் போனார்கள். | யோபு 5:12 யோபு 5:13 சங் 33:10 சங் 76:5 சங் 76:10 |