| 1 | இவைகளுக்குப்பின்பு யூதருடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார். | யோவா 2:13 யாத் 23:14-17 யாத் 34:23 லேவி 23:2-4 உபா 16:16 மத் 3:15 கலா 4:4 |
| 2 | எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு. | நெகே 3:1 நெகே 12:39 |
| 3 | அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். | மத் 15:30 லூக் 7:22 |
| 4 | ஏனெனில் சில சமயங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான். | சங் 119:60 நீதி 6:4 நீதி 8:17 பிரச 9:10 ஓசி 13:13 மத் 6:33 மத் 11:12 லூக் 13:24-28 லூக் 16:16 |
| 5 | முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான். | யோவா 5:14 யோவா 9:1 யோவா 9:21 மாற் 9:21 லூக் 8:43 லூக் 13:16 அப் 3:2 அப் 4:22 அப் 9:33 அப் 14:8 |
| 6 | படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார். | யோவா 21:17 சங் 142:3 எபிரெ 4:13 எபிரெ 4:15 |
| 7 | அதற்கு வியாதிஸ்தன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய்விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான். | உபா 32:36 சங் 72:12 சங் 142:4 ரோம 5:6 2கொரி 1:8-10 |
| 8 | இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். | மத் 9:6 மாற் 2:11 லூக் 5:24 அப் 9:34 |
| 9 | உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது. | யோவா 5:14 மாற் 1:31 மாற் 1:42 மாற் 5:29 மாற் 5:41 மாற் 5:42 மாற் 10:52 அப் 3:7 அப் 3:8 |
| 10 | ஆதலால் யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டுபோகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள். | யாத் 20:8-11 யாத் 31:12-17 நெகே 13:15-21 ஏசா 58:13 எரே 17:21 எரே 17:27 மத் 12:2-8 மாற் 2:24 மாற் 3:4 லூக் 6:2 லூக் 13:14 லூக் 23:56 |
| 11 | அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைச் சொஸ்தமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான். | யோவா 9:16 மாற் 2:9-11 |
| 12 | அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள். | நியா 6:29 1சாமு 14:38 மத் 21:23 ரோம 10:2 |
| 13 | சொஸ்தமாக்கப்பட்டவன் அவர் இன்னாரென்று அறியவில்லை; அவ்விடத்தில் ஜனங்கள் கூட்டமாயிருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார். | யோவா 14:9 |
| 14 | அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார். | லேவி 7:12 சங் 9:13 சங் 27:6 சங் 66:13-15 சங் 107:20-22 சங் 116:12-19 சங் 118:18 ஏசா 38:20 ஏசா 38:22 |
| 15 | அந்த மனுஷன் போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான். | யோவா 4:29 யோவா 9:11 யோவா 9:12 மாற் 1:45 |
| 16 | இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்தி, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள். | யோவா 15:20 அப் 9:4 அப் 9:5 |
| 17 | இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்து வருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன் என்றார். | யோவா 9:4 யோவா 14:10 ஆதி 2:1 ஆதி 2:2 சங் 65:6 ஏசா 40:26 மத் 10:29 அப் 14:17 அப் 17:28 1கொரி 12:6 கொலோ 1:16 எபிரெ 1:3 |
| 18 | அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ் சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள். | யோவா 7:19 |
| 19 | அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். | யோவா 5:24 யோவா 5:25 யோவா 3:3 |
| 20 | பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார். | யோவா 3:35 யோவா 17:26 மத் 3:17 மத் 17:5 2பேது 1:17 |
| 21 | பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். | உபா 32:39 1இரா 17:21 2இரா 4:32-35 2இரா 5:7 அப் 26:8 ரோம 4:17-19 |
| 22 | அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். | யோவா 5:27 யோவா 3:35 யோவா 17:2 சங் 9:7 சங் 9:8 சங் 50:3-6 சங் 96:13 சங் 98:9 பிரச 11:9 பிரச 12:14 மத் 11:27 மத் 16:27 மத் 25:31-46 மத் 28:18 அப் 10:42 அப் 17:31 ரோம 2:16 ரோம 14:10-12 2கொரி 5:10 2தெச 1:7-10 2தீமோ 4:1 1பேது 4:5 வெளிப் 20:11 வெளிப் 20:12 |
| 23 | குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான். | யோவா 14:1 சங் 146:3-5 எரே 17:5-7 மத் 12:21 ரோம 15:12 2கொரி 1:9 எபே 1:12 எபே 1:13 2தீமோ 1:12 சங் 2:12 ஏசா 42:8 ஏசா 43:10 ஏசா 44:6 மத் 28:19 ரோம 1:7 1கொரி 1:3 2கொரி 13:14 1தெச 3:11-13 2தெச 2:16 2தெச 2:17 எபிரெ 1:6 2பேது 3:18 வெளிப் 5:8-14 மத் 10:37 மத் 22:37 மத் 22:38 1கொரி 16:22 எபே 6:24 லூக் 12:8 லூக் 12:9 ரோம 6:22 ரோம 14:7-9 1கொரி 6:19 1கொரி 10:31 2கொரி 5:14 2கொரி 5:19 தீத் 2:14 ஏசா 43:11 ஏசா 45:15 ஏசா 45:21 சகரி 9:9 தீத் 2:13 தீத் 3:4-6 2பேது 1:1 |
| 24 | என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். | யோவா 3:16 யோவா 3:18 யோவா 3:36 யோவா 6:40 யோவா 6:47 யோவா 8:51 யோவா 11:26 யோவா 12:44 யோவா 20:31 மாற் 16:16 ரோம 10:11-13 1பேது 1:21 1யோவா 5:1 1யோவா 5:11-13 |
| 25 | மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். | யோவா 4:23 யோவா 13:1 யோவா 17:1 |
| 26 | ஏனெனில் பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார். | யாத் 3:14 சங் 36:9 சங் 90:2 எரே 10:10 அப் 17:25 1தீமோ 1:17 1தீமோ 6:16 |
| 27 | அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். | யோவா 5:22 சங் 2:6-9 சங் 110:1 சங் 110:2 சங் 110:6 அப் 10:42 அப் 17:31 1கொரி 15:25 எபே 1:20-23 1பேது 3:22 |
| 28 | இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்; | யோவா 5:20 யோவா 3:7 அப் 3:12 |
| 29 | அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். | தானி 12:2 தானி 12:3 மத் 25:31-46 அப் 24:15 |
| 30 | நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. | யோவா 5:19 யோவா 8:28 யோவா 8:42 யோவா 14:10 |
| 31 | என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது. | யோவா 8:13 யோவா 8:14 யோவா 8:54 நீதி 27:2 வெளிப் 3:14 |
| 32 | என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன். | யோவா 5:36 யோவா 5:37 யோவா 1:33 யோவா 8:17 யோவா 8:18 யோவா 12:28-30 மத் 3:17 மத் 17:5 மாற் 1:11 லூக் 3:22 1யோவா 5:6-9 |
| 33 | நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்கு சாட்சிகொடுத்தான். | யோவா 1:19-27 |
| 34 | நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனுஷருடைய சாட்சியல்ல, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன். | யோவா 5:41 யோவா 8:54 |
| 35 | அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள். | யோவா 1:7 யோவா 1:8 மத் 11:11 லூக் 1:15-17 லூக் 1:76-17 லூக் 1:77-17 லூக் 7:28 2பேது 1:19 |
| 36 | யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது. | யோவா 5:32 1யோவா 5:9 1யோவா 5:11 1யோவா 5:12 |
| 37 | என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சிகொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை. | யோவா 6:27 யோவா 8:18 மத் 3:17 மத் 17:5 மத் 17:32 |
| 38 | அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை. | யோவா 5:42 யோவா 5:46 யோவா 5:47 யோவா 8:37 யோவா 8:46 யோவா 8:47 யோவா 15:7 உபா 6:6-9 யோசு 1:8 சங் 119:11 நீதி 2:1 நீதி 2:2 நீதி 7:1 நீதி 7:2 கொலோ 3:16 யாக் 1:21 யாக் 1:22 1யோவா 2:14 |
| 39 | வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. | யோவா 5:46 யோவா 7:52 உபா 11:18-20 உபா 17:18 உபா 17:19 யோசு 1:8 சங் 1:2 சங் 119:11 சங் 119:97-99 நீதி 6:23 நீதி 8:33 நீதி 8:34 ஏசா 8:20 ஏசா 34:16 எரே 8:9 மத் 22:29 மாற் 12:10 லூக் 16:29 லூக் 16:31 அப் 8:32-35 அப் 17:11 ரோம 3:2 கொலோ 3:16 2தீமோ 3:14-17 2பேது 1:19-21 |
| 40 | அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை. | யோவா 5:44 யோவா 1:11 யோவா 3:19 யோவா 8:45 யோவா 8:46 யோவா 12:37-41 சங் 81:11 ஏசா 49:7 ஏசா 50:2 ஏசா 53:1-3 மத் 22:3 மத் 23:37 வெளிப் 22:17 |
| 41 | நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. | யோவா 5:34 யோவா 6:15 யோவா 7:18 யோவா 8:50 யோவா 8:54 1தெச 2:6 1பேது 2:21 2பேது 1:17 |
| 42 | உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன். | யோவா 1:47-49 யோவா 2:25 யோவா 21:17 லூக் 16:15 எபிரெ 4:12 எபிரெ 4:13 வெளிப் 2:23 |
| 43 | நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்ளுவீர்கள். | யோவா 3:16 யோவா 6:38 யோவா 8:28 யோவா 8:29 யோவா 10:25 யோவா 12:28 யோவா 17:4-6 எசே 23:21 எபிரெ 5:4 எபிரெ 5:5 |
| 44 | தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? | யோவா 3:20 யோவா 8:43 யோவா 12:43 எரே 13:23 ரோம 8:7 ரோம 8:8 எபிரெ 3:12 |
| 45 | பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள்; நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான். | யோவா 7:19 யோவா 8:5 யோவா 8:9 ரோம 2:12 ரோம 2:17-29 ரோம 3:19 ரோம 3:20 ரோம 7:9-14 2கொரி 3:7-11 கலா 3:10 |
| 46 | நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே. | கலா 2:19 கலா 3:10 கலா 3:13 கலா 3:24 கலா 4:21-31 |
| 47 | அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமலிருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார். | லூக் 16:29 லூக் 16:31 |