| 1 | யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம்பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது, | லூக் 1:76 லூக் 2:11 லூக் 19:31 லூக் 19:34 அப் 10:36 1கொரி 2:8 1கொரி 15:47 2கொரி 4:5 யாக் 2:1 வெளிப் 19:16 |
| 2 | யூதேயாவைவிட்டு மறுபடியுங்கலிலேயாவுக்குப் போனார். | அப் 10:48 1கொரி 1:13-17 |
| 3 | இயேசு தாமே ஞானஸ்நானங்கொடுக்கவில்லை, அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள். | யோவா 3:32 யோவா 10:40 யோவா 11:54 மத் 10:23 மாற் 3:7 |
| 4 | அவர் சமாரியா நாட்டின் வழியாய்ப் போகவேண்டியதாயிருந்தபடியால், | மத் 10:5 மத் 10:6 லூக் 2:49 லூக் 9:51 லூக் 9:52 லூக் 17:11 |
| 5 | யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார். | ஆதி 33:19 ஆதி 48:22 யோசு 24:32 |
| 6 | அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார்; அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி வேளையாயிருந்தது. | மத் 4:2 மத் 8:24 எபிரெ 2:17 எபிரெ 4:15 |
| 7 | அவருடைய சீஷர்கள் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள். | யோவா 4:10 யோவா 19:28 ஆதி 24:43 2சாமு 23:15-17 1இரா 17:10 மத் 10:42 |
| 8 | அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத் தா என்றார். | யோவா 6:5-7 லூக் 9:13 |
| 9 | யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத் தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள். | யோவா 4:27 யோவா 8:48 லூக் 10:33 லூக் 17:16-19 |
| 10 | இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். | யோவா 3:16 ஏசா 9:6 ஏசா 42:6 ஏசா 49:6-8 லூக் 11:13 ரோம 8:32 1கொரி 1:30 2கொரி 9:15 எபே 2:8 |
| 11 | அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும். | யோவா 3:4 1கொரி 2:14 |
| 12 | இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப்பார்க்கிலும் நீர் பெரியவரோ? அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருகஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே என்றாள். | யோவா 8:53 ஏசா 53:2 ஏசா 53:3 மத் 12:42 எபிரெ 3:3 |
| 13 | இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். | யோவா 6:27 யோவா 6:49 ஏசா 65:13 ஏசா 65:14 லூக் 16:24 |
| 14 | நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார். | யோவா 6:35 யோவா 6:58 யோவா 11:26 யோவா 17:2 யோவா 17:3 ஏசா 49:10 ரோம 6:23 வெளிப் 7:16 |
| 15 | அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள். | யோவா 6:26 யோவா 6:34 யோவா 17:2 யோவா 17:3 சங் 4:6 ரோம 6:23 ரோம 8:5 1கொரி 2:14 1யோவா 5:20 யாக் 4:3 |
| 16 | இயேசு அவளை நோக்கி: நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா என்றார். | யோவா 4:18 யோவா 1:42 யோவா 1:47 யோவா 1:48 யோவா 2:24 யோவா 2:25 யோவா 21:17 எபிரெ 4:13 வெளிப் 2:23 |
| 17 | அதற்கு அந்த ஸ்திரீ: எனக்குப் புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான். |
| 18 | எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய் என்றார். | ஆதி 20:3 ஆதி 34:2 ஆதி 34:7 ஆதி 34:8 ஆதி 34:31 எண் 5:29 ரூத் 4:10 எரே 3:20 எசே 16:32 மாற் 10:12 ரோம 7:3 1கொரி 7:10 1கொரி 7:11 எபிரெ 13:4 |
| 19 | அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். | யோவா 4:29 யோவா 1:48 யோவா 1:49 2இரா 5:26 2இரா 6:12 லூக் 7:39 1கொரி 14:24 1கொரி 14:25 |
| 20 | எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள். | ஆதி 12:6 ஆதி 12:7 ஆதி 33:18-20 உபா 27:12 யோசு 8:33-35 நியா 9:6 நியா 9:7 2இரா 17:26-33 |
| 21 | அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது. | எசே 14:3 எசே 20:3 |
| 22 | நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. | 2இரா 17:27-29 2இரா 17:41-29 எஸ்றா 4:2 அப் 17:23 அப் 17:30 |
| 23 | உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். | யோவா 5:25 யோவா 12:23 |
| 24 | தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். | 2கொரி 3:17 1தீமோ 1:17 |
| 25 | அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். | யோவா 4:42 யோவா 1:41 யோவா 1:42 யோவா 1:49 தானி 9:24-26 |
| 26 | அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார். | யோவா 9:37 மத் 16:20 மத் 20:15 மத் 26:63 மத் 26:64 மாற் 14:61 மாற் 14:62 லூக் 13:30 ரோம 10:20 ரோம 10:21 |
| 27 | அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள் வந்து, அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப்பற்றி ஆச்சரியப்பட்டார்கள். ஆகிலும் என்ன தேடுகிறீரென்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீரென்றாவது, ஒருவனும் கேட்கவில்லை. | யோவா 4:9 லூக் 7:39 |
| 28 | அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளே போய், ஜனங்களை நோக்கி: | யோவா 4:7 மத் 28:8 மாற் 16:8-10 லூக் 24:9 லூக் 24:33 |
| 29 | நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள். | யோவா 4:17 யோவா 4:18 யோவா 4:25 யோவா 1:41-49 1கொரி 14:24 1கொரி 14:25 வெளிப் 22:17 |
| 30 | அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள். | ஏசா 60:8 மத் 2:1-3 மத் 8:11 மத் 8:12 மத் 11:20-24 மத் 12:40-42 மத் 20:16 லூக் 17:16-18 அப் 8:5-8 அப் 10:33 அப் 13:42 அப் 28:28 ரோம 5:20 |
| 31 | இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள். | ஆதி 24:33 அப் 16:30-34 |
| 32 | அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார். | யோவா 4:34 யோபு 23:12 சங் 63:5 சங் 119:103 நீதி 18:20 ஏசா 53:11 எரே 15:16 அப் 20:35 |
| 33 | அப்பொழுது சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்குப் போஜனம் கொண்டுவந்திருப்பானோ என்றார்கள். | மத் 16:6-11 லூக் 9:45 |
| 34 | இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. | யோவா 4:32 யோவா 6:33 யோவா 6:38 யோபு 23:12 சங் 40:8 ஏசா 61:1-3 லூக் 15:4-6 லூக் 15:10-6 லூக் 19:10 அப் 20:35 |
| 35 | அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். | யோவா 4:30 மத் 9:37 மத் 9:38 லூக் 10:3 |
| 36 | விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். | நீதி 11:30 தானி 12:3 ரோம 1:13 ரோம 6:22 1கொரி 9:19-23 பிலிப் 2:15 பிலிப் 2:16 1தெச 2:19 1தீமோ 4:16 2தீமோ 4:7 2தீமோ 4:8 யாக் 5:19 யாக் 5:20 |
| 37 | விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற மெய்யான வழக்கச்சொல் இதினாலே விளங்குகிறது. | நியா 6:3 மீகா 6:15 லூக் 19:21 |
| 38 | நீங்கள் பிரயாசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார். | அப் 2:41 அப் 4:4 அப் 4:32 அப் 5:14 அப் 6:7 அப் 8:4-8 அப் 8:14-17 |
| 39 | நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள். | யோவா 10:41 யோவா 10:42 யோவா 11:45 |
| 40 | சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டு நாள் அங்கே தங்கினார். | ஆதி 32:26 நீதி 4:13 உன்ன 3:4 எரே 14:8 லூக் 8:38 லூக் 10:39 லூக் 24:29 அப் 16:15 |
| 41 | அப்பொழுது அவருடைய உபதேசத்தினிமித்தம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து, | ஆதி 49:10 அப் 1:8 அப் 8:12 அப் 8:25 அப் 15:3 |
| 42 | அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். | யோவா 1:45-49 யோவா 17:8 அப் 17:11 அப் 17:12 |
| 43 | இரண்டுநாளைக்குப்பின்பு அவர் அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, கலிலேயாவுக்குப் போனார். | மத் 15:21-24 மாற் 7:27 மாற் 7:28 ரோம 15:8 |
| 44 | ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே கனமில்லையென்று இயேசு தாமே சொல்லியிருந்தார். | மத் 13:57 மாற் 6:4 லூக் 4:24 |
| 45 | அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த கலிலேயர் அவரை ஏற்றுக்கொண்டார்கள்; அவர்களும் பண்டிகைக்குப் போயிருந்தார்கள். | மத் 4:23 மத் 4:24 லூக் 8:40 |
| 46 | பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியாதியாயிருந்தான். | யோவா 2:1-11 யோவா 21:2 யோசு 19:28 |
| 47 | இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப் போய், தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான். | மாற் 2:1-3 மாற் 6:55 மாற் 6:56 மாற் 10:47 |
| 48 | அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார். | யோவா 4:41 யோவா 4:42 யோவா 2:18 யோவா 12:37 யோவா 15:24 யோவா 20:29 எண் 14:11 மத் 16:1 மத் 27:42 லூக் 10:18 லூக் 16:31 அப் 2:22 1கொரி 1:22 |
| 49 | அதற்கு ராஜாவின் மனுஷன்: ஆண்டவரே, என் பிள்ளை சாகிறதற்குமுன்னே வரவேண்டும் என்றான். | சங் 40:17 சங் 88:10-12 மாற் 5:23 மாற் 5:35 மாற் 5:36 |
| 50 | இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான். | யோவா 11:40 1இரா 17:13-15 மத் 8:13 மாற் 7:29 மாற் 7:30 மாற் 9:23 மாற் 9:24 லூக் 17:14 அப் 14:9 அப் 14:10 ரோம 4:20 ரோம 4:21 எபிரெ 11:19 |
| 51 | அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டுவந்து, உம்முடைய குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள். | யோவா 4:50 யோவா 4:53 1இரா 17:23 |
| 52 | அப்பொழுது: எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தான் அவர்கள்: நேற்று ஏழாமணிநேரத்தில் ஜூரம் அவனை விட்டது என்றார்கள். |
| 53 | உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்னமணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள். | சங் 33:9 சங் 107:20 மத் 8:8 மத் 8:9 மத் 8:13 |
| 54 | இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குத் திரும்பிவந்தபின்பு, இது அவர் செய்த இரண்டாம் அற்புதம். | யோவா 2:1-11 |