| 1 | யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். | யோவா 3:10 யோவா 7:47-49 |
| 2 | அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான். | யோவா 7:50 யோவா 7:51 யோவா 12:42 யோவா 12:43 யோவா 19:38 யோவா 19:39 நியா 6:27 ஏசா 51:7 பிலிப் 1:14 |
| 3 | இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். | யோவா 1:51 மத் 5:18 2கொரி 1:19 2கொரி 1:20 வெளிப் 3:14 |
| 4 | அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான். | யோவா 3:3 யோவா 4:11 யோவா 4:12 யோவா 6:53 யோவா 6:60 1கொரி 1:18 1கொரி 2:14 |
| 5 | இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்திலே பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். | யோவா 3:3 ஏசா 44:3 ஏசா 44:4 எசே 36:25-27 மத் 3:11 மாற் 16:16 அப் 2:38 எபே 5:26 தீத் 3:4-7 1பேது 1:2 1பேது 3:21 1யோவா 5:6-8 |
| 6 | மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். | ஆதி 5:3 ஆதி 6:5 ஆதி 6:12 யோபு 14:4 யோபு 15:14-16 யோபு 25:4 சங் 51:10 ரோம 7:5 ரோம 7:18 ரோம 7:25 ரோம 8:1 ரோம 8:4 ரோம 8:5-9 ரோம 8:13-9 1கொரி 15:47-49 2கொரி 5:17 கலா 5:16-21 கலா 5:24-21 எபே 2:3 கொலோ 2:11 |
| 7 | நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக்குறித்து அதிசயப்படவேண்டாம்; | யோவா 3:12 யோவா 5:28 யோவா 6:61-63 |
| 8 | காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார். | யோபு 37:10-13 யோபு 37:16-13 யோபு 37:17-13 யோபு 37:21-23 சங் 107:25 சங் 107:29 பிரச 11:4 பிரச 11:5 எசே 37:9 அப் 2:2 அப் 4:31 1கொரி 2:11 1கொரி 12:11 |
| 9 | அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான். | யோவா 3:4 யோவா 6:52 யோவா 6:60 நீதி 4:18 ஏசா 42:16 மாற் 8:24 மாற் 8:25 லூக் 1:34 |
| 10 | இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா? | ஏசா 9:16 ஏசா 29:10-12 ஏசா 56:10 எரே 8:8 எரே 8:9 மத் 11:25 மத் 15:14 மத் 22:29 |
| 11 | மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம்; நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுகொள்ளுவதில்லை. | யோவா 3:3 யோவா 3:5 |
| 12 | பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? | யோவா 3:3 யோவா 3:5 யோவா 3:8 1கொரி 3:1 1கொரி 3:2 எபிரெ 5:11 1பேது 2:1-3 |
| 13 | பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. | யோவா 1:18 யோவா 6:46 உபா 30:12 நீதி 30:4 அப் 2:34 ரோம 10:6 எபே 4:9 |
| 14 | சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், | எண் 21:7-9 2இரா 18:4 |
| 15 | தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். | யோவா 3:16 யோவா 3:36 யோவா 1:12 யோவா 6:40 யோவா 6:47 யோவா 11:25 யோவா 11:26 யோவா 12:44-46 யோவா 20:31 ஏசா 45:22 மாற் 16:16 அப் 8:37 அப் 16:30 அப் 16:31 ரோம 5:1 ரோம 5:2 ரோம 10:9-14 கலா 2:16 கலா 2:20 எபிரெ 7:25 எபிரெ 10:39 1யோவா 5:1 1யோவா 5:11-13 |
| 16 | தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். | லூக் 2:14 ரோம 5:8 2கொரி 5:19-21 தீத் 3:4 1யோவா 4:9 1யோவா 4:10 1யோவா 4:19 |
| 17 | உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். | யோவா 5:45 யோவா 8:15 யோவா 8:16 யோவா 12:47 யோவா 12:48 லூக் 9:56 |
| 18 | அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. | யோவா 3:36 யோவா 5:24 யோவா 6:40 யோவா 6:47 யோவா 20:31 ரோம 5:1 ரோம 8:1 ரோம 8:34 1யோவா 5:12 |
| 19 | ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. | யோவா 1:4 யோவா 1:9-11 யோவா 8:12 யோவா 9:39-41 யோவா 15:22-25 மத் 11:20-24 லூக் 10:11-16 லூக் 12:47 ரோம 1:32 2கொரி 2:15 2கொரி 2:16 2தெச 2:12 எபிரெ 3:12 எபிரெ 3:13 |
| 20 | பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். | யோவா 7:7 1இரா 22:8 யோபு 24:13-17 சங் 50:17 நீதி 1:29 நீதி 4:18 நீதி 5:12 நீதி 15:12 ஆமோ 5:10 ஆமோ 5:11 லூக் 11:45 யாக் 1:23-25 |
| 21 | சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார். | யோவா 1:47 யோவா 5:39 சங் 1:1-3 சங் 119:80 சங் 119:105 சங் 139:23 சங் 139:24 ஏசா 8:20 அப் 17:11 அப் 17:12 1யோவா 1:6 |
| 22 | இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங்கொடுத்துவந்தார். | யோவா 2:13 யோவா 4:3 யோவா 7:3 |
| 23 | சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள். | ஆதி 33:18 |
| 24 | அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை. | மத் 4:12 மத் 14:3 மாற் 6:17 லூக் 3:19 லூக் 3:20 லூக் 9:7-9 |
| 25 | அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதமுண்டாயிற்று. | யோவா 2:6 மத் 3:11 மாற் 7:2-5 மாற் 7:8-5 எபிரெ 6:2 எபிரெ 9:10 எபிரெ 9:13 எபிரெ 9:14 எபிரெ 9:23 1பேது 3:21 |
| 26 | அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சி கொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள். | எண் 11:26-29 பிரச 4:4 1கொரி 3:3-5 கலா 5:20 கலா 5:21 கலா 6:12 கலா 6:13 யாக் 3:14-18 யாக் 4:5 யாக் 4:6 |
| 27 | யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான். | எண் 16:9-11 எண் 17:5 1நாளா 28:4 1நாளா 28:5 எரே 1:5 எரே 17:16 ஆமோ 7:15 மத் 25:15 மாற் 13:34 ரோம 1:5 ரோம 12:6 1கொரி 1:1 1கொரி 2:12-14 1கொரி 3:5 1கொரி 4:7 1கொரி 12:11 1கொரி 15:10 கலா 1:1 எபே 1:1 எபே 3:7 எபே 3:8 1தீமோ 2:7 யாக் 1:17 1பேது 4:10 1பேது 4:11 |
| 28 | நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள். | யோவா 1:20 யோவா 1:25 யோவா 1:27 |
| 29 | மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று. | சங் 45:9-17 உன்ன 3:11 உன்ன 4:8-12 ஏசா 54:5 ஏசா 62:4 ஏசா 62:5 எரே 2:2 எசே 16:8 ஓசி 2:19 மத் 22:2 2கொரி 11:2 எபே 5:25-27 வெளிப் 19:7-9 வெளிப் 21:9 |
| 30 | அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். | சங் 72:17-19 ஏசா 9:7 ஏசா 53:2 ஏசா 53:3 ஏசா 53:12 தானி 2:34 தானி 2:35 தானி 2:44 தானி 2:45 மத் 13:31-33 வெளிப் 11:15 |
| 31 | உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர். | யோவா 3:13 யோவா 6:33 யோவா 8:23 எபே 1:20 எபே 1:21 எபே 4:8-10 |
| 32 | தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. | யோவா 3:11 யோவா 5:20 யோவா 8:26 யோவா 15:15 |
| 33 | அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான். | ரோம 3:3 ரோம 3:4 ரோம 4:18-21 2கொரி 1:18 தீத் 1:1 தீத் 1:2 எபிரெ 6:17 1யோவா 5:9 1யோவா 5:10 |
| 34 | தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். | யோவா 7:16 யோவா 8:26-28 யோவா 8:40-28 யோவா 8:47-28 |
| 35 | பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். | யோவா 5:20 யோவா 5:22 யோவா 15:9 யோவா 17:23 யோவா 17:26 நீதி 8:30 ஏசா 42:1 மத் 3:17 மத் 17:5 |
| 36 | குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். | யோவா 3:15 யோவா 3:16 யோவா 1:12 யோவா 5:24 யோவா 6:47-54 யோவா 10:28 ஆபகூ 2:4 ரோம 1:17 ரோம 8:1 1யோவா 3:14 1யோவா 3:15 1யோவா 5:10-13 |