| 1 | இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து: | யோவா 11:41 சங் 121:1 சங் 121:2 சங் 123:1 ஏசா 38:14 லூக் 18:13 |
| 2 | பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். | யோவா 3:35 யோவா 5:21-29 சங் 2:6-12 சங் 110:1 தானி 7:14 மத் 11:27 மத் 28:18 1கொரி 15:25 எபே 1:20 பிலிப் 2:10 எபிரெ 1:2 எபிரெ 2:8 எபிரெ 2:9 1பேது 3:22 |
| 3 | ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். | யோவா 17:25 யோவா 8:19 யோவா 8:54 யோவா 8:55 1நாளா 28:9 சங் 9:10 ஏசா 53:11 எரே 9:23 எரே 9:24 எரே 31:33 எரே 31:34 ஓசி 6:3 1கொரி 15:34 2கொரி 4:6 2தெச 1:8 எபிரெ 8:11 எபிரெ 8:12 1யோவா 4:6 1யோவா 5:11 1யோவா 5:20 |
| 4 | பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன். | யோவா 12:28 யோவா 13:31 யோவா 13:32 யோவா 14:13 |
| 5 | பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினால் இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும். | யோவா 17:24 யோவா 1:18 யோவா 3:13 யோவா 10:30 யோவா 14:9 நீதி 8:22-31 பிலிப் 2:6 கொலோ 1:15-17 எபிரெ 1:3 எபிரெ 1:10 1யோவா 1:2 வெளிப் 5:9-14 |
| 6 | நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள். | யோவா 17:26 யோவா 1:18 யோவா 12:28 யாத் 3:13-15 யாத் 9:16 யாத் 34:5-7 சங் 22:22 சங் 71:17-19 மத் 11:25-27 லூக் 10:21 லூக் 10:22 2கொரி 4:6 எபிரெ 2:12 1யோவா 5:20 |
| 7 | நீர் எனக்குத் தந்தவைகளெல்லாம் உம்மாலே உண்டாயினவென்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள். | யோவா 7:16 யோவா 7:17 யோவா 14:7-10 யோவா 14:20-10 யோவா 16:27-30 |
| 8 | நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள். | யோவா 17:14 யோவா 6:68 யோவா 14:10 நீதி 1:23 மத் 13:11 எபே 3:2-8 எபே 4:11 எபே 4:12 |
| 9 | நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே. | யோவா 14:16 யோவா 16:26 யோவா 16:27 லூக் 22:32 லூக் 8:34 எபிரெ 7:25 எபிரெ 9:24 1யோவா 2:1 1யோவா 2:2 1யோவா 5:19 வெளிப் 12:9 வெளிப் 13:8 வெளிப் 20:15 |
| 10 | என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன். | யோவா 10:30 யோவா 16:14 யோவா 16:15 1கொரி 3:21-23 கொலோ 1:15-19 கொலோ 2:9 |
| 11 | நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும். | யோவா 17:13 யோவா 13:1 யோவா 13:3 யோவா 16:28 அப் 1:9-11 அப் 3:21 எபிரெ 1:3 எபிரெ 9:24 |
| 12 | நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை. | யோவா 6:37 யோவா 6:39 யோவா 6:40 யோவா 10:27 யோவா 10:28 எபிரெ 2:13 |
| 13 | இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாய் அடையும்படி உலகத்தில் இருக்கையில் இவைகளைச் சொல்லுகிறேன். | யோவா 17:1 யோவா 13:3 எபிரெ 12:2 |
| 14 | நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது. | யோவா 7:7 யோவா 15:18-21 ஆதி 3:15 நீதி 29:27 சகரி 11:8 மத் 10:24 மத் 10:25 1பேது 4:4 1பேது 4:5 1யோவா 3:12 |
| 15 | நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். | சங் 30:9 பிரச 9:10 ஏசா 38:18 ஏசா 38:19 ஏசா 57:1 லூக் 8:38 லூக் 8:39 பிலிப் 1:20-26 |
| 16 | நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல. |
| 17 | உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். | யோவா 17:19 யோவா 8:32 யோவா 15:3 சங் 19:7-9 சங் 119:9 சங் 119:11 சங் 119:104 லூக் 8:11 லூக் 8:15 அப் 15:9 2கொரி 3:18 எபே 5:26 2தெச 2:13 யாக் 1:21 1பேது 1:22 1பேது 1:23 |
| 18 | நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன். | யோவா 20:21 ஏசா 61:1-3 மத் 23:34 2கொரி 5:20 எபே 3:7 |
| 19 | அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன். | ஏசா 62:1 2கொரி 4:15 2கொரி 8:9 1தெச 4:7 2தீமோ 2:10 |
| 20 | நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும், வேண்டிக்கொள்ளுகிறேன். | யோவா 17:6-11 எபே 4:11 |
| 21 | அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். | யோவா 17:11 யோவா 17:22 யோவா 17:23 யோவா 10:16 எரே 32:39 எசே 37:16-19 எசே 37:22-25 செப் 3:9 சகரி 14:9 அப் 2:46 அப் 4:32 ரோம 12:5 1கொரி 1:10 1கொரி 12:12 1கொரி 12:25-27 கலா 3:28 எபே 4:3-6 பிலிப் 1:27 பிலிப் 2:1-5 கொலோ 3:11-14 1பேது 3:8 1பேது 3:9 |
| 22 | நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். | யோவா 1:16 யோவா 15:18 யோவா 15:19 யோவா 20:21-23 மாற் 6:7 மாற் 16:17-20 லூக் 22:30 அப் 5:41 ரோம 15:15-20 2கொரி 3:18 2கொரி 5:20 2கொரி 6:1 எபே 2:20 பிலிப் 1:29 கொலோ 1:24 2தெச 1:5-10 வெளிப் 21:14 |
| 23 | ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். | யோவா 6:56 யோவா 14:10 யோவா 14:23 ரோம 8:10 ரோம 8:11 1கொரி 1:30 2கொரி 5:21 கலா 3:28 1யோவா 1:3 1யோவா 4:12-16 |
| 24 | பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன். | யோவா 12:26 யோவா 14:3 மத் 25:21 மத் 25:23 மத் 26:29 லூக் 12:37 லூக் 22:28-30 லூக் 23:43 2கொரி 5:8 பிலிப் 1:23 1தெச 4:17 வெளிப் 3:21 வெளிப் 7:14-17 |
| 25 | நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள். | யோவா 17:11 ஏசா 45:21 ரோம 3:26 |
| 26 | நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார். | யோவா 17:6 யோவா 8:50 யோவா 15:15 சங் 22:22 எபிரெ 2:12 |