| 1 | நீங்கள் இடறலடையாதபடிக்கு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். | யோவா 16:4 யோவா 15:11 மத் 11:6 மத் 13:21 மத் 13:57 மத் 24:10 மத் 26:31-33 ரோம 14:21 பிலிப் 1:10 1பேது 2:8 |
| 2 | அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங்காலம் வரும். | யோவா 9:22 யோவா 9:34 யோவா 12:42 லூக் 6:22 1கொரி 4:13 |
| 3 | அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள். | யோவா 8:19 யோவா 8:55 யோவா 15:21 யோவா 15:23 யோவா 17:3 யோவா 17:25 லூக் 10:22 1கொரி 2:8 2கொரி 4:3-6 2தெச 1:8 2தெச 2:10-12 1தீமோ 1:13 1யோவா 3:1 1யோவா 4:8 1யோவா 5:20 |
| 4 | அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேனென்று நீங்கள் நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; நான் உங்களுடனேகூட இருந்தபடியினால் ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை. | யோவா 13:19 யோவா 14:29 ஏசா 41:22 ஏசா 41:23 மத் 10:7 மத் 24:25 மாற் 13:23 லூக் 21:12 லூக் 21:13 அப் 9:16 அப் 20:23 அப் 20:24 2பேது 1:14 |
| 5 | இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன்; எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை. | யோவா 16:10 யோவா 16:16 யோவா 16:28 யோவா 6:62 யோவா 7:33 யோவா 13:3 யோவா 14:28 யோவா 17:4 யோவா 17:13 எபே 4:7-11 எபிரெ 1:3 எபிரெ 12:2 |
| 6 | ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது. | யோவா 16:20-22 யோவா 14:1 யோவா 14:27 யோவா 14:28 யோவா 20:11-15 லூக் 22:45 லூக் 24:17 |
| 7 | நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். | யோவா 8:45 யோவா 8:46 லூக் 4:25 லூக் 9:27 அப் 10:34 |
| 8 | அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். | சகரி 12:10 அப் 2:37 அப் 16:29 அப் 16:30 |
| 9 | அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும், | யோவா 3:18-21 யோவா 5:40-44 யோவா 8:23 யோவா 8:24 யோவா 8:42-47 யோவா 12:47 யோவா 12:48 யோவா 15:22-25 மாற் 16:16 அப் 2:22-38 அப் 3:14-19 அப் 7:51-54 அப் 26:9 அப் 26:10 ரோம 3:19 ரோம 3:20 ரோம 7:9 1தெச 2:15 1தெச 2:16 1தீமோ 1:13 எபிரெ 3:12 எபிரெ 10:28 எபிரெ 10:29 |
| 10 | நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும், | ஏசா 42:21 ஏசா 45:24 ஏசா 45:25 எரே 23:5 எரே 23:6 தானி 9:24 அப் 2:32 ரோம 1:17 ரோம 3:21-26 ரோம 5:17-21 ரோம 8:33 ரோம 8:34 ரோம 10:3 ரோம 10:4 1கொரி 1:30 1கொரி 15:14-20 2கொரி 5:21 கலா 5:5 பிலிப் 3:7-9 1தீமோ 3:16 எபிரெ 10:5-13 |
| 11 | இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார். | யோவா 5:22-27 மத் 12:18 மத் 12:36 அப் 10:42 அப் 17:30 அப் 17:31 அப் 24:25 அப் 26:18 ரோம 2:2-4 ரோம 2:16-4 ரோம 14:10-12 1கொரி 4:5 1கொரி 6:3 1கொரி 6:4 2கொரி 5:10 2கொரி 5:11 எபிரெ 6:2 எபிரெ 9:27 2பேது 2:4-9 2பேது 3:7 வெளிப் 1:7 வெளிப் 20:11-15 |
| 12 | இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். | யோவா 14:30 யோவா 15:15 அப் 1:3 |
| 13 | சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். | யோவா 14:17 யோவா 15:26 1யோவா 4:6 |
| 14 | அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். | யோவா 16:9 யோவா 16:10 அப் 2:32-36 அப் 4:10-12 1கொரி 12:3 1பேது 1:10-12 1பேது 2:7 1யோவா 4:1-3 1யோவா 4:13-3 1யோவா 4:14-3 1யோவா 5:6 |
| 15 | பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன். | யோவா 3:35 யோவா 10:29 யோவா 10:30 யோவா 13:3 யோவா 17:2 யோவா 17:10 மத் 11:27 மத் 28:18 லூக் 10:22 கொலோ 1:19 கொலோ 2:3 கொலோ 2:9 |
| 16 | நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார். | யோவா 20:19-29 யோவா 21:1-23 அப் 1:3 அப் 10:40 அப் 10:41 1கொரி 15:5-9 |
| 17 | அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர்: நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள் என்றும், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றும் அவர் நம்முடனே சொல்லுகிறதின் கருத்தென்ன என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டதுமன்றி: | யோவா 16:1 யோவா 16:5 யோவா 16:19 யோவா 12:16 யோவா 14:5 யோவா 14:22 மாற் 9:10 மாற் 9:32 லூக் 9:45 லூக் 18:34 |
| 18 | கொஞ்சக்காலம் என்கிறாரே, இதென்ன? அவர் சொல்லுகிறது இன்னதென்று நமக்கு விளங்கவில்லையே என்றார்கள். | மத் 16:9-11 லூக் 24:25 எபிரெ 5:12 |
| 19 | அதைக்குறித்துத் தம்மிடத்தில் கேட்கும்படி அவர்கள் விரும்புகிறதை இயேசு அறிந்து, அவர்களை நோக்கி: கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்று நான் சொன்னதைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே விசாரிக்கிறீர்களோ? | யோவா 16:30 யோவா 2:24 யோவா 2:25 யோவா 21:17 சங் 139:1-4 மத் 6:8 மத் 9:4 மாற் 9:33 மாற் 9:34 எபிரெ 4:13 வெளிப் 2:23 |
| 20 | மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். | யோவா 16:6 யோவா 16:33 யோவா 19:25-27 மாற் 14:72 மாற் 16:10 லூக் 22:45 லூக் 22:62 லூக் 23:47-49 லூக் 24:17 லூக் 24:21 |
| 21 | ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள். | ஆதி 3:16 ஏசா 26:16-18 எரே 30:6 எரே 30:7 ஓசி 13:13 ஓசி 13:14 மீகா 4:10 வெளிப் 12:2-5 |
| 22 | அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான். | யோவா 16:6 யோவா 16:20 |
| 23 | அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங்கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். | யோவா 16:19 யோவா 13:36 யோவா 13:37 யோவா 14:5 யோவா 14:22 யோவா 15:15 யோவா 21:20 யோவா 21:21 |
| 24 | இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்ளுவீர்கள். | ஆதி 32:9 1இரா 18:36 2இரா 19:15 மத் 6:9 எபே 1:16 எபே 1:17 1தெச 3:11-13 2தெச 1:2 2தெச 2:16 2தெச 2:17 |
| 25 | இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன். | யோவா 16:12 யோவா 16:16 யோவா 16:17 சங் 49:4 சங் 78:2 நீதி 1:6 மத் 13:10 மத் 13:11 மத் 13:34 மத் 13:35 மாற் 4:13 |
| 26 | அந்த நாளில் நீங்கள் என் நாமத்தினாலே வேண்டிக்கொள்ளுவீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக்கொள்ளுவேனென்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. | யோவா 14:16 யோவா 17:9 யோவா 17:19 யோவா 17:24 ரோம 8:34 |
| 27 | நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதாதாமே உங்களைச் சிநேகிக்கிறார். | யோவா 14:21 யோவா 14:23 யோவா 17:23 யோவா 17:26 செப் 3:17 எபிரெ 12:6 யூதா 1:20 யூதா 1:21 வெளிப் 3:9 வெளிப் 3:19 |
| 28 | நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார். | யோவா 8:14 யோவா 13:1 யோவா 13:3 |
| 29 | அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: இதோ, இப்பொழுது நீர் உவமையாய்ப் பேசாமல், வெளிப்படையாய்ப் பேசுகிறீர். |
| 30 | நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை வினாவவேண்டுவதில்லையென்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம்; இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீரென்று விசுவாசிக்கிறோம் என்றார்கள். | யோவா 16:17 யோவா 5:20 யோவா 21:17 எபிரெ 4:13 |
| 31 | இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். | யோவா 13:38 லூக் 9:44 லூக் 9:45 |
| 32 | இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார். | யோவா 4:21 யோவா 4:23 யோவா 5:25 யோவா 5:28 யோவா 12:23 |
| 33 | என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். | யோவா 14:27 சங் 85:8-11 ஏசா 9:6 ஏசா 9:7 மீகா 5:5 லூக் 2:14 லூக் 19:38 ரோம 5:1 ரோம 5:2 எபே 2:14-17 பிலிப் 4:7 கொலோ 1:20 2தெச 3:16 எபிரெ 7:2 எபிரெ 13:20 எபிரெ 13:21 |