| 1 | நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர். | யோவா 1:9 யோவா 1:17 யோவா 6:32 யோவா 6:55 1யோவா 2:8 |
| 2 | என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். | யோவா 17:12 மத் 3:10 மத் 15:13 மத் 21:19 லூக் 8:13 லூக் 13:7-9 1கொரி 13:1 எபிரெ 6:7 எபிரெ 6:8 1யோவா 2:19 |
| 3 | நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள். | யோவா 13:10 யோவா 17:17 எபே 5:26 1பேது 1:22 |
| 4 | என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். | யோவா 6:68 யோவா 6:69 யோவா 8:31 உன்ன 8:5 லூக் 8:15 அப் 11:23 அப் 14:22 கலா 2:20 கொலோ 1:23 கொலோ 2:6 1தெச 3:5 எபிரெ 10:39 1யோவா 2:6 1யோவா 2:24-28 2யோவா 1:9 யூதா 1:20 யூதா 1:21 |
| 5 | நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. | ரோம 12:5 1கொரி 10:16 1கொரி 12:12 1கொரி 12:27 1பேது 2:4 |
| 6 | ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்துபோவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும். | யோபு 15:30 சங் 80:15 ஏசா 14:19 ஏசா 27:10 எசே 15:3-7 எசே 17:9 எசே 19:12-14 மத் 3:10 மத் 7:19 மத் 13:41 மத் 27:5 எபிரெ 6:7 எபிரெ 6:8 எபிரெ 10:27 2பேது 2:20 1யோவா 2:19 யூதா 1:12 யூதா 1:13 வெளிப் 20:15 வெளிப் 21:8 |
| 7 | நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். | யோவா 8:37 உபா 6:6 யோபு 23:12 சங் 119:11 நீதி 4:4 எரே 15:16 கொலோ 3:16 1யோவா 2:14 1யோவா 2:27 2யோவா 1:1 2யோவா 1:2 |
| 8 | நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள். | சங் 92:12-15 ஏசா 60:21 ஏசா 61:3 ஆகா 1:8 மத் 5:16 1கொரி 6:20 1கொரி 10:31 2கொரி 9:10-15 பிலிப் 1:11 தீத் 2:5 தீத் 2:10 1பேது 2:12 1பேது 4:11 |
| 9 | பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். | யோவா 15:13 யோவா 17:23 யோவா 17:26 எபே 3:18 வெளிப் 1:5 |
| 10 | நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள். | யோவா 14:15 யோவா 14:21 1கொரி 7:19 1தெச 4:1 2பேது 2:21 1யோவா 2:5 1யோவா 3:21-24 1யோவா 5:3 வெளிப் 22:14 |
| 11 | என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன். | ஏசா 53:11 ஏசா 62:4 எரே 32:41 எரே 33:9 செப் 3:17 லூக் 15:5 லூக் 15:9 லூக் 15:23 லூக் 15:32 1யோவா 1:4 |
| 12 | நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. | யோவா 13:34 ரோம 12:10 எபே 5:2 1தெச 3:12 1தெச 4:9 2தெச 1:3 1பேது 1:22 1பேது 3:8 1பேது 4:8 1யோவா 2:7-10 1யோவா 3:11-18 1யோவா 3:23-18 1யோவா 4:21 |
| 13 | ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. | யோவா 10:11 யோவா 10:15 ரோம 5:6-8 எபே 5:2 1யோவா 4:7-11 |
| 14 | நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள். | யோவா 14:15 யோவா 14:28 2நாளா 20:7 உன்ன 5:1 ஏசா 41:8 மத் 12:50 லூக் 12:4 யாக் 2:23 |
| 15 | இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன். | யோவா 15:20 யோவா 12:26 யோவா 13:16 யோவா 20:17 கலா 4:6 பிலேமோ 1:16 யாக் 1:1 2பேது 1:1 யூதா 1:1 வெளிப் 1:1 |
| 16 | நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுகொள்ளுவது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன். | யோவா 15:19 யோவா 6:70 யோவா 13:18 லூக் 6:13 அப் 1:24 அப் 9:15 அப் 10:41 அப் 22:14 ரோம 9:11-16 ரோம 9:21-16 1யோவா 4:10 1யோவா 4:19 |
| 17 | நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன். | யோவா 15:12 1பேது 2:17 1யோவா 3:14-17 |
| 18 | உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். | யோவா 15:23-25 யோவா 3:20 யோவா 7:7 1இரா 22:8 ஏசா 49:7 ஏசா 53:3 சகரி 11:8 மத் 5:11 மத் 10:22 மத் 24:9 மாற் 13:13 லூக் 6:22 எபிரெ 12:2 யாக் 4:4 1யோவா 3:1 1யோவா 3:3 1யோவா 3:13 |
| 19 | நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. | லூக் 6:32 1யோவா 4:4 1யோவா 4:5 |
| 20 | ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள். | யோவா 5:16 யோவா 7:32 யோவா 8:59 யோவா 10:31 யோவா 11:57 யோவா 13:16 மத் 10:24 லூக் 2:34 லூக் 6:40 அப் 4:27-30 அப் 7:52-60 1தெச 2:15 |
| 21 | அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள். | யோவா 16:3 சங் 69:7 ஏசா 66:5 மத் 5:11 மத் 10:18 மத் 10:22 மத் 10:39 மத் 24:9 லூக் 6:22 அப் 9:16 1பேது 4:13 |
| 22 | நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை. | யோவா 3:18-21 யோவா 9:41 யோவா 12:48 யோவா 19:11 எசே 2:5 எசே 33:31-33 லூக் 12:46 அப் 17:30 2கொரி 2:14-16 எபிரெ 6:4-8 யாக் 4:17 |
| 23 | என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான். | யோவா 8:40-42 1யோவா 2:23 2யோவா 1:9 |
| 24 | வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள். | யோவா 3:2 யோவா 5:36 யோவா 7:31 யோவா 9:32 யோவா 10:32 யோவா 10:37 யோவா 11:47-50 யோவா 12:10 யோவா 12:37-40 மத் 9:33 மத் 11:5 மத் 11:20-24 மாற் 2:12 லூக் 10:12-16 லூக் 19:37-40 லூக் 24:19 அப் 2:22 அப் 10:38 எபிரெ 2:3 எபிரெ 2:4 |
| 25 | முகாந்தரமில்லாமல் என்னைப்பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று. | யோவா 10:34 யோவா 19:36 லூக் 24:44 ரோம 3:19 |
| 26 | பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார். | யோவா 14:16 யோவா 14:17 யோவா 14:26 யோவா 16:7 யோவா 16:13 யோவா 16:14 லூக் 24:49 அப் 2:33 |
| 27 | நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள். | யோவா 21:24 லூக் 24:48 அப் 1:8 அப் 1:21 அப் 1:22 அப் 3:15 அப் 4:20 அப் 4:33 அப் 10:39-42 அப் 13:31 அப் 18:5 அப் 23:11 1பேது 5:1 1பேது 5:12 2பேது 1:16-18 வெளிப் 1:2 வெளிப் 1:9 |