| 1 | உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். | யோவா 14:27 யோவா 14:28 யோவா 11:33 யோவா 12:27 யோவா 16:3 யோவா 16:6 யோவா 16:22 யோவா 16:23 யோபு 21:4-6 யோபு 23:15 யோபு 23:16 சங் 42:5 சங் 42:6 சங் 42:8-11 சங் 43:5 சங் 77:2 சங் 77:3 சங் 77:10 ஏசா 43:1 ஏசா 43:2 எரே 8:18 புலம் 3:17-23 2கொரி 2:7 2கொரி 4:8-10 2கொரி 12:9 2கொரி 12:10 1தெச 3:3 1தெச 3:4 2தெச 2:2 எபிரெ 12:12 எபிரெ 12:13 |
| 2 | என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். | 2கொரி 5:1 எபிரெ 11:10 எபிரெ 11:14-16 எபிரெ 13:14 வெளிப் 3:12 வெளிப் 3:21 வெளிப் 21:10-27 |
| 3 | நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். | யோவா 14:18-23 யோவா 14:28-23 யோவா 12:26 யோவா 17:24 மத் 25:32-34 அப் 1:11 அப் 7:59 அப் 7:60 ரோம 8:17 2கொரி 5:6-8 பிலிப் 1:23 1தெச 4:16 1தெச 4:17 2தெச 1:12 2தெச 2:1 2தீமோ 2:12 எபிரெ 9:28 1யோவா 3:2 1யோவா 3:3 வெளிப் 3:21 வெளிப் 21:22 வெளிப் 21:23 வெளிப் 22:3-5 |
| 4 | நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார். | யோவா 14:2 யோவா 14:28 யோவா 13:3 யோவா 16:28 லூக் 24:26 |
| 5 | தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான். | யோவா 20:25-28 |
| 6 | அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். | யோவா 10:9 ஏசா 35:8 ஏசா 35:9 மத் 11:27 அப் 4:12 ரோம 5:2 எபே 2:18 எபிரெ 7:25 எபிரெ 9:8 எபிரெ 10:19-22 1பேது 1:21 |
| 7 | என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார். | யோவா 14:9 யோவா 14:10 யோவா 14:20 யோவா 1:18 யோவா 8:19 யோவா 15:24 யோவா 16:3 யோவா 17:3 யோவா 17:21 யோவா 17:23 மத் 11:27 லூக் 10:22 2கொரி 4:6 கொலோ 1:15-17 கொலோ 2:2 கொலோ 2:3 எபிரெ 1:3 |
| 8 | பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். | யோவா 1:43-46 யோவா 6:5-7 யோவா 12:21 யோவா 12:22 |
| 9 | அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? | மாற் 9:19 |
| 10 | நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். | யோவா 14:20 யோவா 1:1-3 யோவா 10:30 யோவா 10:38 யோவா 11:26 யோவா 17:21-23 1யோவா 5:7 |
| 11 | நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். | யோவா 5:36 யோவா 10:25 யோவா 10:32 யோவா 10:38 யோவா 12:38-40 மத் 11:4 மத் 11:5 லூக் 7:21-23 அப் 2:22 எபிரெ 2:4 |
| 12 | மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். | மத் 21:21 மாற் 11:13 மாற் 16:17 லூக் 10:17-19 அப் 3:6-8 அப் 4:9-12 அப் 4:16-12 அப் 4:33-12 அப் 8:7 அப் 9:34 அப் 9:40 அப் 16:18 1கொரி 12:10 1கொரி 12:11 |
| 13 | நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். | யோவா 15:7 யோவா 15:16 யோவா 16:23 யோவா 16:26 மத் 7:7 மத் 21:22 மாற் 11:24 லூக் 11:9 எபே 3:20 யாக் 1:5 யாக் 5:16 1யோவா 3:22 1யோவா 5:14 |
| 14 | என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன். |
| 15 | நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். | யோவா 14:21-24 யோவா 8:42 யோவா 15:10-14 யோவா 21:15-17 மத் 10:37 மத் 25:34-40 1கொரி 16:22 2கொரி 5:14 2கொரி 5:15 2கொரி 8:8 2கொரி 8:9 கலா 5:6 எபே 3:16-18 எபே 6:24 பிலிப் 1:20-23 பிலிப் 3:7-11 1பேது 1:8 1யோவா 2:3-5 1யோவா 4:19 1யோவா 4:20 1யோவா 5:2 1யோவா 5:3 |
| 16 | நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். | யோவா 14:14 யோவா 16:26 யோவா 16:27 யோவா 17:9-11 யோவா 17:15-11 யோவா 17:20-11 ரோம 8:34 எபிரெ 7:25 1யோவா 2:1 |
| 17 | உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். | யோவா 15:26 யோவா 16:13 1யோவா 2:27 1யோவா 4:6 |
| 18 | நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன். | யோவா 14:16 யோவா 14:27 யோவா 16:33 சங் 23:4 ஏசா 43:1 ஏசா 51:12 ஏசா 66:11-13 2கொரி 1:2-6 2தெச 2:16 எபிரெ 2:18 |
| 19 | இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள். | யோவா 7:33 யோவா 8:21 யோவா 12:35 யோவா 13:33 யோவா 16:16 யோவா 16:22 |
| 20 | நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள். | யோவா 14:10 யோவா 10:38 யோவா 17:7 யோவா 17:11 யோவா 17:21-23 யோவா 17:26-23 2கொரி 5:19 கொலோ 1:19 கொலோ 2:9 |
| 21 | என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். | யோவா 14:15 யோவா 14:23 யோவா 14:24 யோவா 15:14 ஆதி 26:3-5 உபா 10:12 உபா 10:13 உபா 11:13 உபா 30:6-8 சங் 119:4-6 எரே 31:31 எரே 31:33 எரே 31:34 எசே 36:25-27 லூக் 11:28 2கொரி 5:14 2கொரி 5:15 யாக் 2:23 யாக் 2:24 1யோவா 2:5 1யோவா 3:18-24 1யோவா 5:3 2யோவா 1:6 வெளிப் 22:14 |
| 22 | ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன என்றான். | மத் 10:3 |
| 23 | இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். | யோவா 14:15 யோவா 14:21 |
| 24 | என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது. | யோவா 14:15 யோவா 14:21-23 மத் 19:21 மத் 25:41-46 2கொரி 8:8 2கொரி 8:9 1யோவா 3:16-20 |
| 25 | நான் உங்களுடனே தங்கியிருக்கையில் இவைகளை உங்களுக்குச் சொன்னேன். | யோவா 14:29 யோவா 13:19 யோவா 15:11 யோவா 16:1-4 யோவா 16:12-4 யோவா 17:6-8 |
| 26 | என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். | யோவா 7:39 யோவா 20:22 சங் 51:11 ஏசா 63:10 மத் 1:18 மத் 1:20 மத் 3:11 மத் 28:19 மாற் 12:36 மாற் 13:11 லூக் 1:15 லூக் 1:35 லூக் 1:41 லூக் 1:67 லூக் 2:25 லூக் 3:22 லூக் 11:13 அப் 1:2 அப் 1:8 அப் 2:4 அப் 5:3 அப் 7:51 அப் 7:55 அப் 13:2 அப் 13:4 அப் 15:8 அப் 15:28 அப் 16:6 அப் 20:28 அப் 28:25 ரோம 5:5 ரோம 14:17 ரோம 15:13 ரோம 15:16 1கொரி 2:13 1கொரி 6:19 1கொரி 12:3 2கொரி 6:6 2கொரி 13:14 எபே 1:13 எபே 4:30 1தெச 1:5 1தெச 1:6 1தெச 4:8 2தீமோ 1:14 தீத் 3:5 எபிரெ 2:4 எபிரெ 3:7 எபிரெ 9:8 எபிரெ 10:15 1பேது 1:12 2பேது 1:21 1யோவா 5:7 யூதா 1:20 |
| 27 | சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக. | யோவா 16:33 யோவா 20:19 யோவா 20:21 யோவா 20:26 எண் 6:26 சங் 29:11 சங் 72:2 சங் 72:7 சங் 85:10 ஏசா 9:6 ஏசா 32:15-17 ஏசா 54:7-10 ஏசா 54:13-10 ஏசா 55:12 ஏசா 57:19 சகரி 6:13 லூக் 1:79 லூக் 2:14 லூக் 10:5 அப் 10:36 ரோம 1:7 ரோம 5:1 ரோம 5:10 ரோம 8:6 ரோம 15:13 1கொரி 1:3 2கொரி 5:18-21 கலா 1:3 கலா 5:22 கலா 6:16 எபே 2:14-17 பிலிப் 4:7 கொலோ 1:2 கொலோ 1:20 கொலோ 3:15 2தெச 1:2 2தெச 3:16 எபிரெ 7:2 எபிரெ 13:20 வெளிப் 1:4 |
| 28 | நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார். | யோவா 14:3 யோவா 14:18 யோவா 16:16-22 |
| 29 | இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன். | யோவா 13:19 யோவா 16:4-30 யோவா 16:31-30 மத் 24:24 மத் 24:25 |
| 30 | இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை. | யோவா 16:12 லூக் 24:44-49 அப் 1:3 |
| 31 | நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார். | யோவா 4:34 யோவா 10:18 யோவா 12:27 யோவா 15:9 யோவா 18:11 சங் 40:8 மத் 26:39 பிலிப் 2:8 எபிரெ 5:7 எபிரெ 5:8 எபிரெ 10:5-9 எபிரெ 12:2 எபிரெ 12:3 |