| 1 | இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு, | மத் 4:1-11 |
| 2 | நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று. | யாத் 24:18 யாத் 34:28 உபா 9:9 உபா 9:18 உபா 9:25 1இரா 19:8 மத் 4:2 |
| 3 | அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான். | லூக் 3:22 மத் 4:3 |
| 4 | அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். | லூக் 4:8 லூக் 4:10 ஏசா 8:20 யோவா 10:34 யோவா 10:35 எபே 6:17 |
| 5 | பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து: | மாற் 4:8 மாற் 4:9 1கொரி 7:31 எபே 2:2 எபே 6:12 1யோவா 2:15 1யோவா 2:16 |
| 6 | இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன். | யோவா 8:44 2கொரி 11:14 வெளிப் 12:9 வெளிப் 20:2 வெளிப் 20:3 |
| 7 | நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான். | லூக் 8:28 லூக் 17:16 சங் 72:11 ஏசா 45:14 ஏசா 46:6 மத் 2:11 வெளிப் 4:10 வெளிப் 5:8 வெளிப் 22:8 |
| 8 | இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். | மத் 4:10 மத் 16:23 யாக் 4:7 1பேது 5:9 |
| 9 | அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும். | யோபு 2:6 மத் 4:5 |
| 10 | ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும், | லூக் 4:3 லூக் 4:8 2கொரி 11:14 |
| 11 | உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான். |
| 12 | அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார். | உபா 6:16 சங் 95:9 சங் 106:14 மல்கி 3:15 மத் 4:7 1கொரி 10:9 எபிரெ 3:8 எபிரெ 3:9 |
| 13 | பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான். | மத் 4:11 யோவா 14:30 எபிரெ 4:15 யாக் 4:7 |
| 14 | பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று. | மத் 4:12 மாற் 1:14 யோவா 4:43 அப் 10:37 |
| 15 | அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லாராலும் புகழப்பட்டார். | லூக் 4:16 லூக் 13:10 மத் 4:23 மத் 9:35 மத் 13:54 மாற் 1:39 |
| 16 | தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார். | லூக் 1:26 லூக் 1:27 லூக் 2:39 லூக் 2:51 மத் 2:23 மத் 13:54 மாற் 6:1 |
| 17 | அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது: | லூக் 20:42 அப் 7:42 அப் 13:15 அப் 13:27 |
| 18 | கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், | சங் 45:7 ஏசா 11:2-5 ஏசா 42:1-4 ஏசா 50:4 ஏசா 59:21 |
| 19 | கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு, | லூக் 19:42 லேவி 25:8-13 லேவி 25:50-54 எண் 36:4 ஏசா 61:2 ஏசா 63:4 2கொரி 6:1 |
| 20 | வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெப ஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது. | லூக் 4:17 மத் 20:26-28 |
| 21 | அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார். | லூக் 10:23 லூக் 10:24 மத் 13:14 யோவா 4:25 யோவா 4:26 யோவா 5:39 அப் 2:16-18 அப் 2:29-33 அப் 3:18 |
| 22 | எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள். | லூக் 2:47 லூக் 21:15 சங் 45:2 சங் 45:4 நீதி 10:32 நீதி 16:21 நீதி 25:11 பிரச 12:10 பிரச 12:11 உன்ன 5:16 ஏசா 50:4 மத் 13:54 மாற் 6:2 யோவா 7:46 அப் 6:10 தீத் 2:8 |
| 23 | அவர் அவர்களை நோக்கி: வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமூரில் உன்னால் செய்யப்பட்ட கிரியைகள் எவைகளோ அவைகளை உன் ஊராகிய இவ்விடத்திலும் செய் என்று நீங்கள் என்னுடன் சொல்லுவீர்கள் என்பது நிச்சயம். | லூக் 6:42 ரோம 2:21 ரோம 2:22 |
| 24 | ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். | மத் 13:57 மாற் 6:4 மாற் 6:5 யோவா 4:41 யோவா 4:44 அப் 22:3 அப் 22:18-22 |
| 25 | அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள். | லூக் 10:21 ஏசா 55:8 மத் 20:15 மாற் 7:26-29 ரோம 9:15 ரோம 9:20 எபே 1:9 எபே 1:11 |
| 26 | ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. | 1இரா 17:9-24 |
| 27 | அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்; ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். | 1இரா 19:19-21 |
| 28 | ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும், இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு, | லூக் 6:11 லூக் 11:53 லூக் 11:54 2நாளா 16:10 2நாளா 24:20 2நாளா 24:21 எரே 37:15 எரே 37:16 எரே 38:6 அப் 5:33 அப் 7:54 அப் 22:21-23 1தெச 2:15 1தெச 2:16 |
| 29 | எழுந்திருந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டு போனார்கள். | யோவா 8:37 யோவா 8:40 யோவா 8:59 யோவா 15:24 யோவா 15:25 அப் 7:57 அப் 7:58 அப் 16:23 அப் 16:24 அப் 21:28-32 |
| 30 | அவரோ அவர்கள் நடுவினின்று கடந்துபோய்விட்டார். | யோவா 8:59 யோவா 10:39 யோவா 18:6 யோவா 18:7 அப் 12:18 |
| 31 | பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வு நாட்களில் ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார். | மத் 4:13 மாற் 1:21 |
| 32 | அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். | லூக் 4:36 எரே 23:28 எரே 23:29 மத் 7:28 மத் 7:29 மாற் 1:22 யோவா 6:63 1கொரி 2:4 1கொரி 2:5 1கொரி 14:24 1கொரி 14:25 2கொரி 4:2 2கொரி 10:4 2கொரி 10:5 1தெச 1:5 தீத் 2:15 எபிரெ 4:12 எபிரெ 4:13 |
| 33 | ஜெப ஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான். | மாற் 1:23 |
| 34 | அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்த சத்தமிட்டான். | லூக் 8:37 அப் 16:39 |
| 35 | அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை ஜனங்களின் நடுவே விழத்தள்ளி, அவனுக்கு ஒரு சேதமுஞ்செய்யாமல், அவனை விட்டுப் போய்விட்டது. | லூக் 4:39 லூக் 4:41 சங் 50:16 சகரி 3:2 மத் 8:26 மத் 17:18 மாற் 3:11 மாற் 3:12 அப் 16:17 அப் 16:18 |
| 36 | எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப் போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். | மத் 9:33 மத் 12:22 மத் 12:23 மாற் 1:27 மாற் 7:37 |
| 37 | அவருடைய கீர்த்தி சுற்றிலுமிருந்த நாடுகளிலுள்ள இடங்களிலெல்லாம் பிரசித்தமாயிற்று. | லூக் 4:14 ஏசா 52:13 மத் 4:23-25 மத் 9:26 மாற் 1:28 மாற் 1:45 மாற் 6:14 |
| 38 | பின்பு அவர் ஜெப ஆலயத்தை விட்டுப்புறப்பட்டு, சீமோன் வீட்டில் பிரவேசித்தார், சீமோனுடைய மாமி கடும் ஜூரமாய்க் கிடந்தாள். அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள். | மத் 8:14 மத் 8:15 மாற் 1:29-31 1கொரி 9:5 |
| 39 | அவர் அவளிடத்தில் குனிந்து நின்று, ஜூரம் நீங்கும்படி கட்டளையிட்டார், அது அவளை விட்டு நீங்கிற்று; உடனே அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள். | லூக் 4:35 லூக் 8:24 |
| 40 | சூரியன் அஸ்தமித்தபோது, ஜனங்களெல்லாரும் தங்களுக்குள்ளே பலபல வியாதிகளால் வருத்தப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து, அவர்களைச் சொஸ்தமாக்கினார். | மத் 8:16 மத் 8:17 மாற் 1:32-34 |
| 41 | பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு, அநேகரைவிட்டுப் புறப்பட்டது. அவரைக் கிறிஸ்து என்று பிசாசுகள் அறிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவொட்டாமல் அதட்டினார். | லூக் 4:34 லூக் 4:35 மாற் 1:25 மாற் 1:34 மாற் 3:11 |
| 42 | உதயமானபோது, அவர் புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப் போனார். திரளான ஜனங்கள் அவரைத் தேடி, அவரிடத்தில் வந்து, தங்களை விட்டுப் போகாதபடிக்கு அவரை நிறுத்திக்கொண்டார்கள். | லூக் 6:12 மாற் 1:35 யோவா 4:34 |
| 43 | அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார். | மாற் 1:14 மாற் 1:15 மாற் 1:38 மாற் 1:39 யோவா 9:4 அப் 10:38 2தீமோ 4:2 |
| 44 | அந்தப்படியே கலிலேயா நாட்டிலுள்ள ஜெபஆலயங்களில் பிரசங்கம்பண்ணிக்கொண்டுவந்தார். | லூக் 4:15 மத் 4:23 மாற் 1:39 |