| 1 | ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. | யோவா 1:2 ஆதி 1:1 நீதி 8:22-31 எபே 3:9 கொலோ 1:17 எபிரெ 1:10 எபிரெ 7:3 எபிரெ 13:8 வெளிப் 1:2 வெளிப் 1:8 வெளிப் 1:11 வெளிப் 2:8 வெளிப் 21:6 வெளிப் 22:13 |
| 2 | அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். |
| 3 | சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. | யோவா 1:10 யோவா 5:17-19 ஆதி 1:1 ஆதி 1:26 சங் 33:6 சங் 102:25 ஏசா 45:12 ஏசா 45:18 எபே 3:9 கொலோ 1:16 கொலோ 1:17 எபிரெ 1:2 எபிரெ 1:3 எபிரெ 1:10-12 எபிரெ 3:3 எபிரெ 3:4 வெளிப் 4:11 |
| 4 | அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. | யோவா 5:21 யோவா 5:26 யோவா 11:25 யோவா 14:6 1கொரி 15:45 கொலோ 3:4 1யோவா 1:2 1யோவா 5:11 வெளிப் 22:1 |
| 5 | அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை. | யோவா 1:10 யோவா 3:19 யோவா 3:20 யோவா 12:36-40 யோபு 24:13-17 நீதி 1:22 நீதி 1:29 நீதி 1:30 ரோம 1:28 1கொரி 2:14 |
| 6 | தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான். | யோவா 1:33 யோவா 3:28 ஏசா 40:3-5 மல்கி 3:1 மல்கி 4:5 மல்கி 4:6 மத் 3:1-11 மத் 11:10 மத் 21:25 மாற் 1:1-8 லூக் 1:15-17 லூக் 1:76-17 லூக் 3:2-20 அப் 13:24 |
| 7 | அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான். | யோவா 1:19 யோவா 1:26 யோவா 1:27 யோவா 1:32-34 யோவா 1:36-34 யோவா 3:26-36 யோவா 5:33-35 அப் 19:4 |
| 8 | அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான். | யோவா 1:20 யோவா 3:28 அப் 19:4 |
| 9 | உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. | யோவா 1:4 யோவா 6:32 யோவா 14:6 யோவா 15:1 ஏசா 49:6 மத் 6:23 1யோவா 1:8 1யோவா 2:8 1யோவா 5:20 |
| 10 | அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. | யோவா 1:18 யோவா 5:17 ஆதி 11:6-9 ஆதி 16:13 ஆதி 17:1 ஆதி 18:33 யாத் 3:4-6 அப் 14:17 அப் 17:24-27 எபிரெ 1:3 |
| 11 | அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. | மத் 15:24 அப் 3:25 அப் 3:26 அப் 13:26 அப் 13:26 அப் 13:46 ரோம 9:1 ரோம 9:5 ரோம 15:8 கலா 4:4 |
| 12 | அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். | மத் 10:40 மத் 18:5 கொலோ 2:6 |
| 13 | அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். | யோவா 3:3 யோவா 3:5 யாக் 1:18 1பேது 1:3 1பேது 1:23 1பேது 2:2 1யோவா 3:9 1யோவா 4:7 1யோவா 5:1 1யோவா 5:4 1யோவா 5:18 |
| 14 | அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. | யோவா 1:1 ஏசா 7:14 மத் 1:16 மத் 1:20-23 லூக் 1:31-35 லூக் 2:7 லூக் 2:11 ரோம 1:3 ரோம 1:4 ரோம 9:5 1கொரி 15:47 கலா 4:4 பிலிப் 2:6-8 1தீமோ 3:16 எபிரெ 2:11 எபிரெ 2:14-17 எபிரெ 10:5 1யோவா 4:2 1யோவா 4:3 2யோவா 1:7 |
| 15 | யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான். | யோவா 1:7 யோவா 1:8 யோவா 1:29-34 யோவா 3:26-36 யோவா 5:33-36 மத் 3:11 மத் 3:13-17 மாற் 1:7 லூக் 3:16 |
| 16 | அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம். | யோவா 3:34 யோவா 15:1-5 மத் 3:11 மத் 3:14 லூக் 21:15 அப் 3:12-16 ரோம 8:9 1கொரி 1:4 1கொரி 1:5 எபே 4:7-12 கொலோ 1:19 கொலோ 2:3 கொலோ 2:9 கொலோ 2:10 1பேது 1:11 |
| 17 | எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. | யோவா 5:45 யோவா 9:29 யாத் 20:1-17 உபா 4:44 உபா 5:1 உபா 33:4 அப் 7:38 அப் 28:23 ரோம 3:19 ரோம 3:20 ரோம 5:20 ரோம 5:21 2கொரி 3:7-10 கலா 3:10-13 கலா 3:17-13 எபிரெ 3:5 எபிரெ 3:6 எபிரெ 8:8-12 |
| 18 | தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். | யோவா 6:46 யாத் 33:20 உபா 4:12 மத் 11:27 லூக் 10:22 கொலோ 1:15 1தீமோ 1:17 1தீமோ 6:16 1யோவா 4:12 1யோவா 4:20 |
| 19 | எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, | யோவா 5:33-36 உபா 17:9-11 உபா 24:8 மத் 21:23-32 லூக் 3:15-18 |
| 20 | அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். | யோவா 3:28-36 மத் 3:11 மத் 3:12 மாற் 1:7 மாற் 1:8 லூக் 3:15-17 |
| 21 | அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான். | மல்கி 4:5 மத் 11:14 மத் 17:10-12 லூக் 1:17 |
| 22 | அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள். | 2சாமு 24:13 |
| 23 | அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான். | யோவா 3:28 மத் 3:3 மாற் 1:3 லூக் 1:16 லூக் 1:17 லூக் 1:76-79 லூக் 3:4-6 |
| 24 | அனுப்பப்பட்டவர்கள் பரிசேயராயிருந்தார்கள். | யோவா 3:1 யோவா 3:2 யோவா 7:47-49 மத் 23:13-15 மத் 23:26-15 லூக் 7:30 லூக் 11:39-44 லூக் 11:53-44 லூக் 16:14 அப் 23:8 அப் 26:5 பிலிப் 3:5 பிலிப் 3:6 |
| 25 | அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங்கொடுக்கிறீர் என்று கேட்டார்கள். | மத் 21:23 அப் 4:5-7 அப் 5:28 |
| 26 | யோவான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார். | மத் 3:11 மாற் 1:8 லூக் 3:16 அப் 1:5 அப் 11:16 |
| 27 | அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான். | யோவா 1:15 யோவா 1:30 அப் 19:4 |
| 28 | இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானங்கொடுத்த பெத்தாபராவிலே நடந்தன. | யோவா 10:40 நியா 7:24 |
| 29 | மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. | யோவா 1:36 ஆதி 22:7 ஆதி 22:8 யாத் 12:3-13 எண் 28:3-10 ஏசா 53:7 அப் 8:32 1பேது 1:19 வெளிப் 5:6 வெளிப் 5:8 வெளிப் 5:12 வெளிப் 5:13 வெளிப் 6:1 வெளிப் 6:16 வெளிப் 7:9 வெளிப் 7:10 வெளிப் 7:14 வெளிப் 7:17 வெளிப் 12:11 வெளிப் 13:8 வெளிப் 14:1 வெளிப் 14:4 வெளிப் 14:10 வெளிப் 15:3 வெளிப் 17:14 வெளிப் 19:7 வெளிப் 19:9 வெளிப் 21:9 வெளிப் 21:14 வெளிப் 21:22 வெளிப் 21:23 வெளிப் 21:27 வெளிப் 22:1-3 |
| 30 | எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான். | யோவா 1:15 யோவா 1:27 லூக் 3:16 |
| 31 | நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கவந்தேன் என்றான். | யோவா 1:33 லூக் 1:80 லூக் 2:39-42 |
| 32 | பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன். | யோவா 5:32 மத் 3:16 மாற் 1:10 லூக் 3:22 |
| 33 | நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார். | யோவா 1:31 மத் 3:13-15 |
| 34 | அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்துவருகிறேன் என்றான். | யோவா 1:18 யோவா 1:49 யோவா 3:16-18 யோவா 3:35-18 யோவா 3:36-18 யோவா 5:23-27 யோவா 6:69 யோவா 10:30 யோவா 10:36 யோவா 11:27 யோவா 19:7 யோவா 20:28 யோவா 20:31 சங் 2:7 சங் 89:26 சங் 89:27 மத் 3:17 மத் 4:3 மத் 4:6 மத் 8:29 மத் 11:27 மத் 16:16 மத் 17:5 மத் 26:63 மத் 27:40 மத் 27:43 மத் 27:54 மாற் 1:1 மாற் 1:11 லூக் 1:35 லூக் 3:22 ரோம 1:4 2கொரி 1:19 எபிரெ 1:1 எபிரெ 1:2 எபிரெ 1:5 எபிரெ 1:6 எபிரெ 7:3 1யோவா 2:23 1யோவா 3:8 1யோவா 4:9 1யோவா 4:14 1யோவா 4:15 1யோவா 5:9-13 1யோவா 5:20-13 2யோவா 1:9 வெளிப் 2:18 |
| 35 | மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும்போது, | யோவா 3:25 யோவா 3:26 மல்கி 3:16 |
| 36 | இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான். | யோவா 1:29 ஏசா 45:22 ஏசா 65:1 ஏசா 65:2 எபிரெ 12:2 1பேது 1:19 1பேது 1:20 |
| 37 | அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள். | யோவா 1:43 யோவா 4:39-42 நீதி 15:23 சகரி 8:21 ரோம 10:17 எபே 4:29 வெளிப் 22:17 |
| 38 | இயேசு திரும்பி, அவர்கள் பின் செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம். | லூக் 14:25 லூக் 15:20 லூக் 19:5 லூக் 22:61 |
| 39 | அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையதினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது. | யோவா 1:46 யோவா 6:37 யோவா 14:22 யோவா 14:23 நீதி 8:17 மத் 11:28-30 |
| 40 | யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். | யோவா 6:8 மத் 4:18 மத் 10:2 அப் 1:13 |
| 41 | அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். | யோவா 1:36 யோவா 1:37 யோவா 1:45 யோவா 4:28 யோவா 4:29 2இரா 7:9 ஏசா 2:3-5 லூக் 2:17 லூக் 2:38 அப் 13:32 அப் 13:33 1யோவா 1:3 |
| 42 | பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம். | யோவா 1:47 யோவா 1:48 யோவா 2:24 யோவா 2:25 யோவா 6:70 யோவா 6:71 யோவா 13:18 |
| 43 | மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக்கண்டு: நீ எனக்குப் பின்சென்று வா என்றார். | ஏசா 65:1 மத் 4:18-21 மத் 9:9 லூக் 19:10 பிலிப் 3:12 1யோவா 4:19 |
| 44 | பிலிப்பென்பவன் அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான். | யோவா 12:21 யோவா 14:8 யோவா 14:9 மத் 10:3 மாற் 3:18 லூக் 6:14 அப் 1:13 |
| 45 | பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான். | யோவா 21:2 |
| 46 | அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான். | யோவா 7:41 யோவா 7:42 யோவா 7:52 லூக் 4:28 லூக் 4:29 |
| 47 | இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார். | யோவா 8:31 யோவா 8:39 ரோம 2:28 ரோம 2:29 ரோம 9:6 பிலிப் 3:3 |
| 48 | அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார். | யோவா 2:25 ஆதி 32:24-30 சங் 139:1 சங் 139:2 ஏசா 65:24 மத் 6:6 1கொரி 4:5 1கொரி 14:25 வெளிப் 2:18 வெளிப் 2:19 |
| 49 | அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். | யோவா 1:18 யோவா 1:34 யோவா 20:28 யோவா 20:29 மத் 14:33 |
| 50 | இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். | யோவா 20:29 லூக் 1:45 லூக் 7:9 |
| 51 | பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். | யோவா 3:3 யோவா 3:5 யோவா 5:19 யோவா 5:24 யோவா 5:25 யோவா 6:26 யோவா 6:32 யோவா 6:47 யோவா 6:53 யோவா 8:34 யோவா 8:51 யோவா 8:58 யோவா 10:1 யோவா 10:7 யோவா 12:24 யோவா 13:16 யோவா 13:20 யோவா 13:21 யோவா 13:38 யோவா 14:12 யோவா 16:20 யோவா 16:23 யோவா 21:18 |