| 1 | அவர்களுடைய கூட்டத்தாரெல்லாரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்: | லூக் 22:66 மத் 27:1 மத் 27:2 மத் 27:11-14 மாற் 15:1-5 யோவா 18:28-38 |
| 2 | இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டுவதில்லையென்றும் சொல்லி, ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கினார்கள். | சகரி 11:8 மாற் 15:3-5 யோவா 18:30 |
| 3 | பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்குப் பிரதியுத்தரமாக; நீர் சொல்லுகிறபடிதான் என்றார். | மத் 27:11 மாற் 15:2 யோவா 18:33-37 1தீமோ 6:13 |
| 4 | அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான். | லூக் 23:14 லூக் 23:15 மத் 27:19 மத் 27:24 மாற் 15:14 யோவா 18:38 யோவா 19:4-6 எபிரெ 7:26 1பேது 1:19 1பேது 2:22 1பேது 3:18 |
| 5 | அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடுதொடங்கி இவ்விடம்வரைக்கும் யூதேயாதேசமெங்கும் உபதேசம்பண்ணி, ஜனங்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத்தோடே சொன்னார்கள். | லூக் 23:23 லூக் 11:53 சங் 22:12 சங் 22:13 சங் 22:16 சங் 57:4 சங் 69:4 மத் 27:24 யோவா 19:15 அப் 5:33 அப் 7:54 அப் 7:57 அப் 23:10 |
| 6 | கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனுஷன் கலிலேயனா என்று விசாரித்து, | லூக் 13:1 அப் 5:37 |
| 7 | அவர் ஏரோதின் அதிகாரத்துக்குள்ளானவர் என்றறிந்து, அந்நாட்களில் எருசலேமிலே வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு அவரை அனுப்பினான். | லூக் 3:1 லூக் 13:31 |
| 8 | ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைக் கண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு, | லூக் 9:7-9 மத் 14:1 மாற் 6:14 |
| 9 | அநேக காரியங்களைக்குறித்து, அவரிடத்தில் வினாவினான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை. | லூக் 13:32 சங் 38:13 சங் 38:14 சங் 39:1 சங் 39:2 சங் 39:9 ஏசா 53:7 மத் 7:6 மத் 27:14 அப் 8:32 1பேது 2:23 |
| 10 | பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவர்மேல் பிடிவாதமாய்க் குற்றஞ்சாட்டிக்கொண்டே நின்றார்கள். | லூக் 23:2 லூக் 23:5 லூக் 23:14 லூக் 23:15 லூக் 11:53 அப் 24:5 |
| 11 | அப்பொழுது ஏரோது தன் போர்ச்சேவகரோடுகூட அவரை நிந்தித்துப் பரியாசம்பண்ணி, மினுக்கான வஸ்திரத்தை அவருக்கு உடுத்தி, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான். | அப் 4:27 அப் 4:28 |
| 12 | முன்னே ஒருவருக்கொருவர் பகைவராயிருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையத்தினம் சிநேகிதரானார்கள். | சங் 83:4-6 அப் 4:27 மத் 16:1 வெளிப் 17:13 வெளிப் 17:14 |
| 13 | பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்து, | மத் 27:21-23 மாற் 15:14 யோவா 18:38 யோவா 19:4 |
| 14 | அவர்களை நோக்கி: ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டு வந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை. | லூக் 23:1 லூக் 23:2 லூக் 23:5 |
| 15 | உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்துக்கேதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே. |
| 16 | ஆனபடியால் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான். | ஏசா 53:5 மத் 27:26 மாற் 15:15 யோவா 19:1-4 அப் 5:40 அப் 5:41 |
| 17 | பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது அவசியமாயிருந்தபடியால் அப்படிச் சொன்னான். | மத் 27:15 மாற் 15:6 யோவா 18:39 |
| 18 | ஜனங்களெல்லாரும் அதைக் கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக்கேட்டார்கள். | மத் 27:16-23 மாற் 15:7-14 யோவா 18:40 அப் 3:14 |
| 19 | அந்தப் பரபாசென்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலகத்தினிமித்தமும் கொலை பாதகத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான். | லூக் 23:2 லூக் 23:5 அப் 3:14 |
| 20 | பிலாத்து இயேசுவை விடுதலையாக்க மனதாய், மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான். | மத் 14:8 மத் 14:9 மத் 27:19 மாற் 15:15 யோவா 19:12 |
| 21 | அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள். | லூக் 23:23 மத் 27:22-25 மாற் 15:13 யோவா 19:15 |
| 22 | அவன் மூன்றாந்தரம் அவர்களை நோக்கி: ஏன், இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான். | லூக் 23:14 லூக் 23:20 1பேது 1:19 1பேது 3:18 |
| 23 | அப்படியிருந்தும் அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியரும் இட்ட சத்தம் மேற்கொண்டது. | லூக் 23:5 சங் 22:12 சங் 22:13 சங் 57:4 சகரி 11:8 |
| 24 | அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து, | மத் 27:26 மாற் 15:15 யோவா 19:1 |
| 25 | கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத்தான். | லூக் 23:2 லூக் 23:5 மாற் 15:7 யோவா 18:40 |
| 26 | அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள். | மத் 27:32-44 மாற் 15:21-32 யோவா 19:16 |
| 27 | திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள். | லூக் 23:55 லூக் 8:2 மத் 27:55 மாற் 15:40 |
| 28 | இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். | உன்ன 1:5 உன்ன 2:7 உன்ன 3:5 உன்ன 3:10 உன்ன 5:8 உன்ன 5:16 உன்ன 8:4 |
| 29 | இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும். | லூக் 21:23 லூக் 21:24 மத் 24:19 மாற் 13:17-19 |
| 30 | அப்பொழுது மலைகளை நோக்கி: எங்களின்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள். | ஏசா 2:19 ஓசி 10:8 வெளிப் 6:16 வெளிப் 9:6 |
| 31 | பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார். | நீதி 11:31 எரே 25:29 எசே 15:2-7 எசே 20:47 எசே 20:48 எசே 21:3 எசே 21:4 தானி 9:26 மத் 3:12 யோவா 15:6 எபிரெ 6:8 1பேது 4:17 1பேது 4:18 யூதா 1:12 |
| 32 | குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டு போகப்பட்டார்கள். | லூக் 22:37 ஏசா 53:12 மத் 27:38 மாற் 15:27 மாற் 15:28 யோவா 19:18 எபிரெ 12:2 |
| 33 | கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். | மத் 27:33 மத் 27:34 மாற் 15:22 மாற் 15:23 யோவா 19:17 யோவா 19:18 எபிரெ 13:12 எபிரெ 13:13 |
| 34 | அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். | லூக் 23:47 லூக் 23:48 லூக் 6:27 லூக் 6:28 ஆதி 50:17 சங் 106:16-23 மத் 5:44 அப் 7:60 ரோம 12:14 1கொரி 4:12 1பேது 2:20-23 1பேது 3:9 |
| 35 | ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடனேகூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள். | சங் 22:12 சங் 22:13 சங் 22:17 சகரி 12:10 மத் 27:38-43 மாற் 15:29-32 |
| 36 | போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து: | லூக் 23:11 சங் 69:21 மத் 27:29 மத் 27:30 மத் 27:34 மத் 27:48 மாற் 15:19 மாற் 15:20 மாற் 15:36 யோவா 19:28-30 |
| 37 | நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள். |
| 38 | இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு, லத்தீன், எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது. | லூக் 23:3 மத் 27:11 மத் 27:37 மாற் 15:18 மாற் 15:26 மாற் 15:32 யோவா 19:3 யோவா 19:19-22 |
| 39 | அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான். | லூக் 17:34-36 மத் 27:44 மாற் 15:32 |
| 40 | மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? | லேவி 19:17 எபே 5:11 |
| 41 | நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, | லூக் 15:18 லூக் 15:19 லேவி 26:40 லேவி 26:41 யோசு 7:19 யோசு 7:20 2நாளா 33:12 எஸ்றா 9:13 நெகே 9:3 தானி 9:4 யாக் 4:7 1யோவா 1:8 1யோவா 1:9 |
| 42 | இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். | லூக் 18:13 சங் 106:4 சங் 106:5 யோவா 20:28 அப் 16:31 அப் 20:21 ரோம 10:9-14 1கொரி 6:10 1கொரி 6:11 1பேது 2:6 1பேது 2:7 1யோவா 5:1 1யோவா 5:11-13 |
| 43 | இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். | லூக் 15:4 லூக் 15:5 லூக் 15:20-24 லூக் 19:10 யோபு 33:27-30 சங் 32:5 சங் 50:15 ஏசா 1:18 ஏசா 1:19 ஏசா 53:11 ஏசா 55:6-9 ஏசா 65:24 மீகா 7:18 மத் 20:15 மத் 20:16 ரோம 5:20 ரோம 5:21 1தீமோ 1:15 1தீமோ 1:16 எபிரெ 7:25 |
| 44 | அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று. | மத் 27:45 மாற் 15:33 |
| 45 | சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது. | யாத் 26:31 லேவி 16:12-16 2நாளா 3:14 மத் 27:51 மாற் 15:38 எபே 2:14-18 எபிரெ 6:19 எபிரெ 9:3-8 எபிரெ 10:19-22 |
| 46 | இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார். | மத் 27:46-49 மாற் 15:34-36 |
| 47 | நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான். | லூக் 23:41 மத் 27:54 மாற் 15:39 யோவா 19:7 |
| 48 | இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். | லூக் 18:13 எரே 31:19 அப் 2:37 |
| 49 | அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். | யோபு 19:13 சங் 38:11 சங் 88:18 சங் 142:4 |
| 50 | யோசேப்பு என்னும் பேர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான். | மத் 27:57 மத் 27:58 மாற் 15:42-45 யோவா 19:38 |
| 51 | அவன் யூதருடைய பட்டணங்களிலொன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்துக்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதியாதவனுமாயிருந்தான். | ஆதி 37:21 ஆதி 37:22 ஆதி 42:21 ஆதி 42:22 யாத் 23:2 நீதி 1:10 ஏசா 8:12 |
| 52 | அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு, | யோவா 19:38-42 |
| 53 | அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான். | ஏசா 53:9 மத் 27:59 மத் 27:60 மாற் 15:46 |
| 54 | அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று. | மத் 27:62 யோவா 19:14 யோவா 19:31 யோவா 19:42 |
| 55 | கலிலேயாவிலிருந்து அவருடனேகூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து, | லூக் 23:49 லூக் 8:2 மத் 27:61 மாற் 15:47 |
| 56 | திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள். | லூக் 24:1 2நாளா 16:14 மாற் 16:1 |