| 1 | பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை சமீபமாயிற்று. | யாத் 12:6-23 லேவி 23:5 லேவி 23:6 மத் 26:2 மாற் 14:1 மாற் 14:2 மாற் 14:12 யோவா 11:55-57 1கொரி 5:7 1கொரி 5:8 |
| 2 | அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, ஜனங்களுக்குப் பயப்பட்டபடியினால், எவ்விதமாய் அப்படிச்செய்யலாமென்று வகைதேடினார்கள். | லூக் 19:47 லூக் 19:48 லூக் 20:19 சங் 2:1-5 மத் 21:38 மத் 21:45 மத் 21:46 மத் 26:3-5 யோவா 11:47-53 யோவா 11:57-53 அப் 4:27 |
| 3 | அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான். | மத் 26:14 மாற் 14:10 மாற் 14:11 யோவா 6:70 யோவா 6:71 யோவா 12:6 யோவா 13:2 யோவா 13:27 அப் 5:3 |
| 4 | அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் சேனைத்தலைவர்களிடத்திலும் போய், அவரைக் காட்டிக்கொடுக்கும் வகையைக்குறித்து அவர்களோடே ஆலோசனைபண்ணினான். | மத் 26:14 மாற் 14:10 மாற் 14:11 |
| 5 | அவர்கள் சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுக்க உடன்பட்டார்கள். | சகரி 11:12 சகரி 11:13 மத் 26:15-16 மத் 27:3-5 அப் 1:18 அப் 8:20 1தீமோ 6:9 1தீமோ 6:10 2பேது 2:3 2பேது 2:15 யூதா 1:11 |
| 6 | அதற்கு அவன் சம்மதித்து, ஜனக்கூட்டமில்லாத வேளையில் அவரை அவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும்படி சமயந்தேடினான். | மத் 26:5 மாற் 14:2 |
| 7 | பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது. | லூக் 22:1 யாத் 12:6 யாத் 12:18 மத் 26:17 மாற் 14:12 |
| 8 | அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம்பண்ணுங்கள் என்றார். | மாற் 14:13-16 |
| 9 | அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண்ணும்படி சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள். |
| 10 | அதற்கு அவர்: நீங்கள் நகரத்தில் பிரவேசிக்கும்போது, தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான்; நீங்கள் அவனுக்குப் பின்சென்று, அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும் போய், | லூக் 19:29-40 1சாமு 10:2-7 மத் 26:18 மத் 26:19 யோவா 16:4 அப் 8:26-29 |
| 11 | அந்த வீட்டெஜமானை நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச்சொன்னார் என்று சொல்லுங்கள். | லூக் 19:31 லூக் 19:34 மத் 21:3 யோவா 11:28 |
| 12 | அவன் கம்பளமுதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒரு பெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார். | யோவா 2:25 யோவா 21:17 அப் 16:14 அப் 16:15 |
| 13 | அவர்கள் போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள். | லூக் 21:33 யோவா 2:5 யோவா 11:40 எபிரெ 11:8 |
| 14 | வேளைவந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலரும் பந்தியிருந்தார்கள். | உபா 16:6 உபா 16:7 மத் 26:20 மாற் 14:17 |
| 15 | அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன். | லூக் 12:50 யோவா 4:34 யோவா 13:1 யோவா 17:1 |
| 16 | தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறுமளவும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, | லூக் 22:30 லூக் 12:37 லூக் 14:15 யோவா 6:27 யோவா 6:50-58 அப் 10:41 1கொரி 5:7 1கொரி 5:8 எபிரெ 10:1-10 வெளிப் 19:9 |
| 17 | அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி: நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்; | சங் 23:5 சங் 116:13 எரே 16:7 |
| 18 | தேவனுடைய ராஜ்யம் வருமளவும் நான் திராட்சப்பழரசத்தைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். | லூக் 22:16 மத் 26:29 மாற் 14:23 மாற் 15:23 |
| 19 | பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். | மத் 26:26-28 மாற் 14:22-24 1கொரி 10:16 1கொரி 11:23-29 |
| 20 | போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார். | யாத் 24:8 சகரி 9:11 1கொரி 10:16-21 1கொரி 11:25 எபிரெ 8:6-13 எபிரெ 9:17 எபிரெ 12:24 எபிரெ 13:20 |
| 21 | பின்பு: இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுடைய கை என்னுடனேகூடப் பந்தியிலிருக்கிறது. | யோபு 19:19 சங் 41:9 மீகா 7:5 மீகா 7:6 மத் 26:21-23 மாற் 14:18 யோவா 13:18 யோவா 13:19 யோவா 13:21 யோவா 13:26 |
| 22 | தீர்மானிக்கப்பட்டபடியே மனுஷகுமாரன் போகிறார், ஆனாலும் அவரைக் காட்டிக்கொடுக்கிற மனுஷனுக்கு ஐயோ என்றார். | லூக் 24:25-27 லூக் 24:46-27 ஆதி 3:15 சங் 22:1-31 சங் 69:1-36 ஏசா 53:1-12 தானி 9:24-26 சகரி 13:7 மத் 26:24 மத் 26:53 மத் 26:54 மாற் 14:21 அப் 2:23 அப் 4:25-28 அப் 13:27 அப் 13:28 அப் 26:22 அப் 26:23 1கொரி 15:3 1கொரி 15:4 1பேது 1:11 |
| 23 | அப்பொழுது அவர்கள் நம்மில் யார் அப்படிச் செய்வான் என்று தங்களுக்குள்ளே விசாரிக்கத் தொடங்கினார்கள். | மத் 26:22 மாற் 14:19 யோவா 13:22-25 |
| 24 | அன்றியும் தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று. | லூக் 9:46 மத் 20:20-24 மாற் 9:34 மாற் 10:37-41 ரோம 12:10 1கொரி 13:4 பிலிப் 2:3-5 யாக் 4:5 யாக் 4:6 1பேது 5:5 1பேது 5:6 |
| 25 | அவர் அவர்களை நோக்கி: புறஜாதியாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் உபகாரிகள் என்னப்படுகிறார்கள். | மத் 20:25-28 மாற் 10:41-45 |
| 26 | உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன். | லூக் 9:48 மத் 18:3-5 மத் 23:8-12 ரோம 12:2 1பேது 5:3 3யோவா 1:9 3யோவா 1:10 |
| 27 | பந்தியிருக்கிறவனோ, பணிவிடைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன். | லூக் 12:37 லூக் 17:7-9 மத் 20:28 யோவா 13:5-16 2கொரி 8:9 பிலிப் 2:7 பிலிப் 2:8 |
| 28 | மேலும் எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. | மத் 19:28 மத் 19:29 மத் 24:13 யோவா 6:67 யோவா 6:68 யோவா 8:31 அப் 1:25 எபிரெ 2:18 எபிரெ 4:15 |
| 29 | ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். | லூக் 12:32 லூக் 19:17 மத் 24:47 மத் 25:34 1கொரி 9:25 2கொரி 1:7 2தீமோ 2:12 யாக் 2:5 1பேது 5:4 வெளிப் 21:14 |
| 30 | நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள் என்றார். | லூக் 22:16-18 லூக் 12:37 லூக் 14:15 2சாமு 9:9 2சாமு 9:10 2சாமு 19:28 மத் 8:11 வெளிப் 19:9 |
| 31 | பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். | லூக் 10:41 அப் 9:4 |
| 32 | நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார். | சகரி 3:2-4 யோவா 14:19 யோவா 17:9-11 யோவா 17:15-21 ரோம 5:9 ரோம 5:10 ரோம 8:32 ரோம 8:34 எபிரெ 7:25 1பேது 1:5 1யோவா 2:1 1யோவா 2:2 |
| 33 | அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன் என்றான். | 2இரா 8:12 2இரா 8:13 நீதி 28:26 எரே 10:23 எரே 17:9 மத் 20:22 மத் 26:33-35 மத் 26:40-35 மத் 26:41-35 மாற் 14:29 மாற் 14:31 மாற் 14:37 மாற் 14:38 யோவா 13:36 யோவா 13:37 அப் 20:23 அப் 20:24 அப் 21:13 |
| 34 | அவர் அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். | மத் 26:34 மத் 26:74 மாற் 14:30 மாற் 14:71 மாற் 14:72 யோவா 13:38 யோவா 18:27 |
| 35 | பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள். | லூக் 9:3 லூக் 10:4 மத் 10:9 மத் 10:10 மாற் 6:8 மாற் 6:9 |
| 36 | அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன். | மத் 10:22-25 யோவா 15:20 யோவா 16:33 1தெச 2:14 1தெச 2:15 1தெச 3:4 1பேது 4:1 |
| 37 | அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவு பெறுங்காலம் வந்திருக்கிறது என்றார். | லூக் 22:22 லூக் 18:31 லூக் 24:44-46 மத் 26:54-56 யோவா 10:35 யோவா 19:28-30 அப் 13:27-29 |
| 38 | அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார். | மத் 26:52-54 யோவா 18:36 2கொரி 10:3 2கொரி 10:4 எபே 6:10-18 1தெச 5:8 1பேது 5:9 |
| 39 | பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீஷரும் அவரோடேகூடப்போனார்கள். | மத் 26:36-38 மாற் 14:32-34 யோவா 18:1 யோவா 18:2 |
| 40 | அவ்விடத்தில் சேர்ந்தபொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுங்கள் என்று சொல்லி, | லூக் 22:46 லூக் 11:4 1நாளா 4:10 சங் 17:5 சங் 19:13 சங் 119:116 சங் 119:117 சங் 119:133 நீதி 30:8 நீதி 30:9 மத் 6:13 மத் 26:41 மாற் 14:38 2கொரி 12:7-10 எபே 6:18 எபே 6:19 1பேது 4:7 1பேது 5:8 1பேது 5:9 வெளிப் 3:10 |
| 41 | அவர்களை விட்டுக் கல்லெறி தூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு: | மத் 26:39 மாற் 14:35 |
| 42 | பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். | மத் 26:42 மத் 26:44 மாற் 14:36 யோவா 12:27 யோவா 12:28 |
| 43 | அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான். | லூக் 4:10 லூக் 4:11 சங் 91:11 சங் 91:12 மத் 4:6 மத் 4:11 மத் 26:53 1தீமோ 3:16 எபிரெ 1:6 எபிரெ 1:14 |
| 44 | அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது. | ஆதி 32:24-28 சங் 22:1 சங் 22:2 சங் 22:12-21 சங் 40:1-3 சங் 69:14-18 சங் 88:1-18 சங் 130:1 சங் 130:2 சங் 143:6 சங் 143:7 புலம் 1:12 புலம் 3:53-56 யோனா 2:2 யோனா 2:3 யோவா 12:27 எபிரெ 5:7 |
| 45 | அவர் ஜெபம்பண்ணி முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீஷரிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே நித்திரைபண்ணுகிறதைக் கண்டு: | மத் 26:40 மத் 26:43 மாற் 14:37 மாற் 14:40 மாற் 14:41 |
| 46 | நீங்கள் நித்திரைபண்ணுகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்றார். | லூக் 22:40 லூக் 21:34-36 நீதி 6:4-11 யோனா 1:6 |
| 47 | அவர் அப்படிப் பேசுகையில் ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான். | மத் 26:45-47 மாற் 14:41-43 யோவா 18:2-9 |
| 48 | இயேசு அவனை நோக்கி: யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார். | 2சாமு 20:9 2சாமு 20:10 சங் 55:21 நீதி 27:6 மத் 26:48-50 மாற் 14:44-46 |
| 49 | அவரைச் சூழநின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள். |
| 50 | அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான். | மத் 26:51-54 மாற் 14:47 யோவா 18:10 யோவா 18:11 ரோம 12:19 2கொரி 10:4 |
| 51 | அப்பொழுது இயேசு: இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார். | யோவா 17:12 யோவா 18:8 யோவா 18:9 |
| 52 | பின்பு இயேசு தமக்கு விரோதமாய் வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்துச் சேனைத்தலைவர்களையும் மூப்பர்களையும் நோக்கி: ஒரு கள்ளனைப்பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்தீர்களே. | மத் 26:55 மாற் 14:48 மாற் 14:49 |
| 53 | நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களுடனேகூட இருக்கையில் நீங்கள் என்னைப் பிடிக்கக் கைநீட்டவில்லை; இதுவோ உங்களுடைய வேளையும் அந்தகாரத்தின் அதிகாரமுமாயிருக்கிறது என்றார். | லூக் 21:37 லூக் 21:38 மத் 21:12-15 மத் 21:23-15 மத் 21:45-15 மத் 21:46-15 யோவா 7:25 யோவா 7:26 யோவா 7:30 யோவா 7:45 |
| 54 | அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய்விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்சென்றான். | மத் 26:57 மத் 26:58 மாற் 14:53 மாற் 14:54 யோவா 18:12-17 யோவா 18:24-17 |
| 55 | அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான். | லூக் 22:44 மத் 26:69 மாற் 14:66 யோவா 18:17 யோவா 18:18 |
| 56 | அப்பொழுது ஒரு வேலைக்காரி அவன் நெருப்பண்டையிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடிருந்தான் என்றாள். | மத் 26:69 மாற் 14:6 மாற் 14:17 மாற் 14:66-68 யோவா 18:17 |
| 57 | அதற்கு அவன்: ஸ்திரீயே, அவனை அறியேன் என்று மறுதலித்தான். | லூக் 22:33 லூக் 22:34 லூக் 12:9 மத் 10:33 மத் 26:70 யோவா 18:25 யோவா 18:27 அப் 3:13 அப் 3:14 அப் 3:19 2தீமோ 2:10-12 1யோவா 1:9 |
| 58 | சற்றுநேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைக் கண்டு: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நான் அல்ல என்றான். | மத் 26:71 மத் 26:72 மாற் 14:69 மாற் 14:70 யோவா 18:25 |
| 59 | ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் கலிலேயன்தான் என்று சாதித்தான். | மத் 26:73 மத் 26:74 மாற் 14:69 மாற் 14:70 யோவா 18:26 யோவா 18:27 |
| 60 | அதற்குப் பேதுரு: மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று. | லூக் 22:34 மத் 26:74 மத் 26:75 மாற் 14:71 மாற் 14:72 யோவா 18:27 |
| 61 | அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப் பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து, | லூக் 10:41 மாற் 5:30 |
| 62 | வெளியே போய், மனங்கசந்து அழுதான். | சங் 38:18 சங் 126:5 சங் 126:6 சங் 130:1-4 சங் 143:1-4 எரே 31:18 எசே 7:16 சகரி 12:10 மத் 5:4 மத் 26:75 மாற் 14:72 1கொரி 10:12 2கொரி 7:9-11 |
| 63 | இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனுஷர் அவரைப் பரியாசம்பண்ணி, அடித்து, | மத் 26:59-68 மாற் 14:55-65 யோவா 18:22 |
| 64 | அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை ஞானதிருஷ்டியினால் சொல் என்று அவரைக் கேட்டதுமன்றி, | நியா 16:21 நியா 16:25 |
| 65 | மற்றும் அநேக தூஷணவார்த்தைகளையும் அவருக்கு விரோதமாகச் சொன்னார்கள். | லூக் 12:10 மத் 12:31 மத் 12:32 அப் 26:11 1தீமோ 1:13 1தீமோ 1:14 |
| 66 | விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி: | மத் 27:1 மாற் 15:1 |
| 67 | நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள். | மத் 11:3-5 மத் 26:63-68 மாற் 14:61-66 யோவா 10:24 |
| 68 | நான் உங்களிடத்தில் வினாவினாலும் எனக்கு மாறுத்தரம் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலைபண்ணவுமாட்டீர்கள். | லூக் 20:3-7 லூக் 20:41-44 |
| 69 | இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார் என்றார். | மத் 26:64 மாற் 14:62 |
| 70 | அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார். | லூக் 4:41 சங் 2:7 சங் 2:12 மத் 3:17 மத் 27:43 மத் 27:54 யோவா 1:34 யோவா 1:49 யோவா 10:30 யோவா 10:36 யோவா 19:7 |
| 71 | அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள். | மத் 26:65 மத் 26:66 மாற் 14:63 மாற் 14:64 |