| 1 | வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள். | மத் 28:1 மாற் 16:1 மாற் 16:2 யோவா 20:1 யோவா 20:2 |
| 2 | கல்லறையை அடைத்திருந்த கல்புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டு, | மத் 27:60-66 மத் 28:2 மாற் 15:46 மாற் 15:47 மாற் 16:3 மாற் 16:4 யோவா 20:1 யோவா 20:2 |
| 3 | உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல், | லூக் 24:23 மத் 16:5 யோவா 20:6 யோவா 20:7 |
| 4 | அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள். | ஆதி 18:2 மத் 28:2-6 மாற் 16:5 யோவா 20:11 யோவா 20:12 அப் 1:10 |
| 5 | அந்த ஸ்திரீகள் பயப்பட்டு தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? | லூக் 1:12 லூக் 1:13 லூக் 1:29 தானி 8:17 தானி 8:18 தானி 10:7-12 தானி 10:16-12 தானி 10:19-12 மத் 28:3-5 மாற் 16:5 மாற் 16:6 அப் 10:3 அப் 10:4 |
| 6 | அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். | லூக் 24:44-46 லூக் 9:22 லூக் 18:31-33 மத் 12:40 மத் 16:21 மத் 17:22 மத் 17:23 மத் 20:18 மத் 20:19 மத் 27:63 மத் 28:6 மாற் 8:31 மாற் 9:9 மாற் 9:10 மாற் 9:31 மாற் 9:32 மாற் 10:33 மாற் 10:34 |
| 7 | மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம் நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள். |
| 8 | அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து, | யோவா 2:19-22 யோவா 12:16 யோவா 14:26 |
| 9 | கல்லறையை விட்டுத் திரும்பிப்போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள். | லூக் 24:22-24 மத் 28:7 மத் 28:8 மாற் 16:7 மாற் 16:8 மாற் 16:10 |
| 10 | இவைகளை அப்போஸ்தலருக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனேகூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே. | லூக் 8:2 லூக் 8:3 மாற் 15:40 மாற் 15:41 மாற் 16:9-11 யோவா 20:11-18 |
| 11 | இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை. | லூக் 24:25 ஆதி 19:14 2இரா 7:2 யோபு 9:16 சங் 126:1 அப் 12:9 |
| 12 | பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான். | யோவா 20:3-10 |
| 13 | அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள். | லூக் 24:18 மாற் 16:12 மாற் 16:13 |
| 14 | போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். | லூக் 6:45 உபா 6:7 மல்கி 3:6 |
| 15 | இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்து போனார். | லூக் 24:36 மத் 18:20 யோவா 14:18 யோவா 14:19 |
| 16 | ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது. | லூக் 24:31 2இரா 6:18-20 மாற் 16:12 யோவா 20:14 யோவா 21:4 |
| 17 | அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார். | எசே 9:4-6 யோவா 16:6 யோவா 16:20-22 |
| 18 | அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான். | யோவா 19:25 |
| 19 | அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார். | லூக் 7:16 மத் 21:11 யோவா 3:2 யோவா 4:19 யோவா 6:14 யோவா 7:40-42 யோவா 7:52-42 அப் 2:22 அப் 10:38 |
| 20 | நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரணஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள. | லூக் 22:66-71 லூக் 23:1-5 மத் 27:1 மத் 27:2 மத் 27:20 மாற் 15:1 அப் 3:13-15 அப் 4:8-10 அப் 4:27 அப் 4:28 அப் 5:30 அப் 5:31 அப் 13:27-29 |
| 21 | அவரே இஸ்ரவேலைமீட்டு இரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது. | லூக் 1:68 லூக் 2:38 சங் 130:8 ஏசா 59:20 அப் 1:6 1பேது 1:18 1பேது 1:19 வெளிப் 5:9 |
| 22 | ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்திரீகள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய், | லூக் 24:9-11 மத் 28:7 மத் 28:8 மாற் 16:9 மாற் 16:10 யோவா 20:1 யோவா 20:2 யோவா 20:18 |
| 23 | அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூதரைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களைப் பிரமிக்கப்பண்ணினார்கள். |
| 24 | அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப் போய், ஸ்திரீகள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள். | லூக் 24:12 யோவா 20:1-10 |
| 25 | அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, | மாற் 7:18 மாற் 8:17 மாற் 8:18 மாற் 9:19 மாற் 16:14 எபிரெ 5:11 எபிரெ 5:12 |
| 26 | கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, | லூக் 24:46 சங் 22:1-31 சங் 69:1-36 ஏசா 53:1-12 சகரி 13:7 அப் 17:3 1கொரி 15:3 1கொரி 15:4 எபிரெ 2:8-10 எபிரெ 9:22 எபிரெ 9:23 1பேது 1:3 1பேது 1:11 |
| 27 | மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். | லூக் 24:44 ஆதி 3:15 ஆதி 22:18 ஆதி 26:4 ஆதி 49:10 எண் 21:6-9 உபா 18:15 யோவா 5:39 யோவா 5:45-47 அப் 3:22 அப் 7:37 |
| 28 | அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்குச் சமீபமானார்கள். அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர்போலக் காண்பித்தார். | ஆதி 19:2 ஆதி 32:26 ஆதி 42:7 மாற் 6:48 |
| 29 | அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார். | லூக் 14:23 ஆதி 19:3 2இரா 4:8 அப் 16:14 |
| 30 | அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார். | லூக் 24:35 லூக் 9:16 லூக் 22:19 மத் 14:19 மத் 15:36 மத் 26:26 மாற் 6:41 மாற் 8:6 மாற் 14:22 யோவா 6:11 அப் 27:35 |
| 31 | அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார். | லூக் 24:16 யோவா 20:13-16 |
| 32 | அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு, | சங் 39:3 சங் 104:34 நீதி 27:9 நீதி 27:17 ஏசா 50:4 எரே 15:16 எரே 20:9 எரே 23:29 யோவா 6:63 எபிரெ 4:12 |
| 33 | அந்நேரமே எழுந்திருந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போய், பதினொருவரும் அவர்களோடிருந்தவர்களும் கூடியிருக்கக்கண்டு: | யோவா 20:19-26 |
| 34 | கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானார் என்று அவர்கள் சொல்லக்கேட்டு, | லூக் 22:54-62 மாற் 16:7 1கொரி 15:5 |
| 35 | வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கையில் தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள். | மாற் 16:12 மாற் 16:13 |
| 36 | இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். | மாற் 16:14 யோவா 20:19-23 1கொரி 15:5 |
| 37 | அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். | லூக் 16:30 1சாமு 28:13 யோபு 4:14-16 மத் 14:26 மத் 14:27 மாற் 6:49 மாற் 6:50 அப் 12:15 |
| 38 | அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? | எரே 4:14 தானி 4:5 தானி 4:19 மத் 16:8 எபிரெ 4:13 |
| 39 | நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, | யோவா 20:20 யோவா 20:25 யோவா 20:27 அப் 1:3 1யோவா 1:1 |
| 40 | தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். |
| 41 | ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். | ஆதி 45:26-28 யோபு 9:16 சங் 126:1 சங் 126:2 யோவா 16:22 |
| 42 | அப்பொழுது பொரித்த மீன் கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். |
| 43 | அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து, | அப் 10:41 |
| 44 | அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார். | லூக் 24:6 லூக் 24:7 லூக் 9:22 லூக் 18:31-33 மத் 16:21 மத் 17:22 மத் 17:23 மத் 20:18 மத் 20:19 மாற் 8:31 மாற் 8:32 மாற் 9:31 மாற் 10:33 மாற் 10:34 |
| 45 | அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி: | யாத் 4:11 யோபு 33:16 சங் 119:18 ஏசா 29:10-12 ஏசா 29:18-12 ஏசா 29:19-12 அப் 16:14 அப் 26:18 2கொரி 3:14-18 2கொரி 4:4-6 எபே 5:14 வெளிப் 3:7 |
| 46 | எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; | லூக் 24:26 லூக் 24:27 லூக் 24:44 சங் 22:1-31 ஏசா 50:6 ஏசா 53:2-12 அப் 4:12 அப் 17:3 1பேது 1:3 |
| 47 | அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. | தானி 9:24 மத் 3:2 மத் 9:13 அப் 2:38 அப் 3:19 அப் 5:31 அப் 11:18 அப் 13:38 அப் 13:39 அப் 13:46 அப் 17:30 அப் 17:31 அப் 20:21 அப் 26:20 1யோவா 2:12 |
| 48 | நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள். | யோவா 15:27 அப் 1:8 அப் 1:22 அப் 2:32 அப் 3:15 அப் 4:33 அப் 5:32 அப் 10:39 அப் 10:41 அப் 13:31 அப் 22:15 எபிரெ 2:3 எபிரெ 2:4 1யோவா 1:2 1யோவா 1:3 |
| 49 | என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார். | ஏசா 44:3 ஏசா 44:4 ஏசா 59:20 ஏசா 59:21 யோவே 2:28-32 யோவா 14:16 யோவா 14:17 யோவா 14:26 யோவா 15:26 யோவா 16:7-16 |
| 50 | பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி. அவர்களை ஆசீர்வதித்தார். | மாற் 11:1 அப் 1:12 |
| 51 | அவர்களை ஆசிர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். | 2இரா 2:11 மாற் 16:19 யோவா 20:17 அப் 1:9 எபே 4:8-10 எபிரெ 1:3 எபிரெ 4:14 |
| 52 | அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பிவந்து, | மத் 28:9 மத் 28:17 யோவா 20:28 |
| 53 | நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென். | அப் 2:46 அப் 2:47 அப் 5:41 அப் 5:42 |