| 1 | அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகஸ்துராயனால் கட்டளை பிறந்தது. | லூக் 3:1 அப் 11:28 அப் 25:11 அப் 25:21 பிலிப் 4:22 |
| 2 | சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. | அப் 5:37 |
| 3 | அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். |
| 4 | அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, | லூக் 1:26 லூக் 1:27 லூக் 3:23 |
| 5 | கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். | உபா 22:22-27 மத் 1:18 மத் 1:19 |
| 6 | அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. | சங் 33:11 நீதி 19:21 மீகா 5:2 |
| 7 | அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். | ஏசா 7:14 மத் 1:25 கலா 4:4 |
| 8 | அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். | ஆதி 31:39 ஆதி 31:40 யாத் 3:1 யாத் 3:2 1சாமு 17:34 1சாமு 17:35 சங் 78:70 சங் 78:71 எசே 34:8 யோவா 10:8-12 |
| 9 | அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். | லூக் 1:11 லூக் 1:28 நியா 6:11 நியா 6:12 மத் 1:20 அப் 27:23 1தீமோ 3:16 |
| 10 | தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். | லூக் 1:13 லூக் 1:30 தானி 10:11 தானி 10:12 தானி 10:19 மத் 28:5 வெளிப் 1:17 வெளிப் 1:18 |
| 11 | இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். | லூக் 1:69 ஏசா 9:6 மத் 1:21 கலா 4:4 கலா 4:5 2தீமோ 1:9 2தீமோ 1:10 தீத் 2:10-14 தீத் 3:4-7 1யோவா 4:14 |
| 12 | பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். | யாத் 3:12 1சாமு 10:2-7 சங் 22:6 ஏசா 53:1 ஏசா 53:2 |
| 13 | அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: | ஆதி 28:12 ஆதி 32:1 ஆதி 32:2 1இரா 22:19 யோபு 38:7 சங் 68:17 சங் 103:20 சங் 103:21 சங் 148:2 ஏசா 6:2 ஏசா 6:3 எசே 3:12 தானி 7:10 லூக் 15:10 எபே 3:10 எபிரெ 1:14 1பேது 1:12 வெளிப் 5:11 |
| 14 | உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். | லூக் 19:38 சங் 69:34 சங் 69:35 சங் 85:9-12 சங் 96:11-13 ஏசா 44:23 ஏசா 49:13 யோவா 17:4 எபே 1:6 எபே 3:20 எபே 3:21 பிலிப் 2:11 வெளிப் 5:13 |
| 15 | தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, | லூக் 24:51 2இரா 2:1 2இரா 2:11 1பேது 3:22 |
| 16 | தீவிரமாய் வந்து, மரியாளையும் யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். | லூக் 1:39 பிரச 9:10 |
| 17 | கண்டு, அந்தப் பிள்ளையைக்குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள். | லூக் 2:38 லூக் 8:39 சங் 16:9 சங் 16:10 சங் 66:16 சங் 71:17 சங் 71:18 மல்கி 3:16 யோவா 1:41-46 யோவா 4:28 யோவா 4:29 |
| 18 | மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். | லூக் 2:33 லூக் 2:47 லூக் 1:65 லூக் 1:66 லூக் 4:36 லூக் 5:9 லூக் 5:10 ஏசா 8:18 |
| 19 | மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள். | லூக் 2:51 லூக் 1:66 லூக் 9:43 லூக் 9:44 ஆதி 37:11 1சாமு 21:12 நீதி 4:4 ஓசி 14:9 |
| 20 | மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். | லூக் 18:43 லூக் 19:37 லூக் 19:38 1நாளா 29:10-12 சங் 72:17-19 சங் 106:48 சங் 107:8 சங் 107:15 சங் 107:21 ஏசா 29:19 அப் 2:46 அப் 2:47 அப் 11:18 |
| 21 | பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள். | லூக் 1:59 ஆதி 17:12 லேவி 12:3 மத் 3:15 கலா 4:4 கலா 4:5 பிலிப் 2:8 |
| 22 | மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபோது, | லேவி 12:2-6 |
| 23 | முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும், | யாத் 13:2 யாத் 13:12-15 யாத் 22:29 யாத் 34:19 எண் 3:13 எண் 8:16 எண் 8:17 எண் 18:15 |
| 24 | கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள். | லேவி 12:2 லேவி 12:6-8 2கொரி 8:9 |
| 25 | அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்தஆவி இருந்தார். | லூக் 1:6 ஆதி 6:9 யோபு 1:1 யோபு 1:8 தானி 6:22 தானி 6:23 மீகா 6:8 அப் 10:2 அப் 10:22 அப் 24:16 தீத் 2:11-14 |
| 26 | கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது. | சங் 25:14 ஆமோ 3:7 |
| 27 | அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாணமுறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டுவருகையில், | லூக் 4:1 மத் 4:1 அப் 8:29 அப் 10:19 அப் 11:12 அப் 16:7 வெளிப் 1:10 வெளிப் 17:3 |
| 28 | அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து: | மாற் 9:36 மாற் 10:16 |
| 29 | ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; | ஆதி 15:15 ஆதி 46:30 சங் 37:37 ஏசா 57:1 ஏசா 57:2 பிலிப் 1:23 வெளிப் 14:13 |
| 30 | புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், | லூக் 2:10 லூக் 2:11 லூக் 3:6 ஆதி 49:18 2சாமு 23:1-5 ஏசா 49:6 அப் 4:10-12 |
| 31 | தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின. | சங் 96:1-3 சங் 96:10-13 சங் 97:6-8 சங் 98:2 சங் 98:3 ஏசா 42:1-4 ஏசா 42:10-12 ஏசா 45:21-25 ஏசா 62:1 ஏசா 62:2 |
| 32 | உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான். | ஏசா 9:2 ஏசா 42:6 ஏசா 42:7 ஏசா 49:6 ஏசா 60:1-3 ஏசா 60:19-3 மத் 4:16 அப் 13:47 அப் 13:48 அப் 28:28 ரோம 15:8 ரோம 15:9 |
| 33 | அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள். | லூக் 2:48 லூக் 1:65 லூக் 1:66 ஏசா 8:18 |
| 34 | பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். | ஆதி 14:19 ஆதி 47:7 யாத் 39:43 லேவி 9:22 லேவி 9:23 எபிரெ 7:1 எபிரெ 7:7 |
| 35 | உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான். | சங் 42:10 யோவா 19:25 |
| 36 | ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள். | யாத் 15:20 நியா 4:4 2இரா 22:14 அப் 2:18 அப் 21:9 1கொரி 12:1 |
| 37 | ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தைவிட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள். | யாத் 38:8 1சாமு 2:2 சங் 23:6 சங் 27:4 சங் 84:4 சங் 84:10 சங் 92:13 சங் 135:1 சங் 135:2 வெளிப் 3:12 |
| 38 | அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள். | லூக் 2:28-32 லூக் 1:46-56 லூக் 1:64-66 2கொரி 9:15 எபே 1:3 |
| 39 | கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்துமுடித்தபின்பு, கலிலேயா நாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள். | லூக் 2:21-24 லூக் 1:6 உபா 12:32 மத் 3:15 கலா 4:4 கலா 4:5 |
| 40 | பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது. | லூக் 2:52 நியா 13:24 1சாமு 2:18 1சாமு 2:26 1சாமு 3:19 சங் 22:9 ஏசா 53:1 ஏசா 53:2 |
| 41 | அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போவார்கள். | யாத் 23:14-17 யாத் 34:23 உபா 12:5-7 உபா 12:11-7 உபா 12:18-7 உபா 16:1-8 உபா 16:16-8 1சாமு 1:3 1சாமு 1:21 |
| 42 | அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகைமுறைமையின்படி எருசலேமுக்குப்போய், |
| 43 | பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது. | 2நாளா 30:21-23 2நாளா 25:17 |
| 44 | அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின் முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள். | சங் 42:4 சங் 122:1-4 ஏசா 2:3 |
| 45 | காணாததினாலே அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள். |
| 46 | மூன்றுநாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள். | லூக் 2:44 லூக் 2:45 1இரா 12:5 1இரா 12:12 மத் 12:40 மத் 16:21 மத் 27:63 மத் 27:64 |
| 47 | அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள். | லூக் 4:22 லூக் 4:32 சங் 119:99 மத் 7:28 மாற் 1:22 யோவா 7:15 யோவா 7:46 |
| 48 | தாய் தகப்பன்மாரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள். |
| 49 | அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டிதென்று அறியீர்களா என்றார். | லூக் 2:48 சங் 40:8 மல்கி 3:1 மத் 21:12 யோவா 2:16 யோவா 2:17 யோவா 4:34 யோவா 5:17 யோவா 6:38 யோவா 8:29 யோவா 9:4 |
| 50 | தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை. | லூக் 9:45 லூக் 18:34 |
| 51 | பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள். | மத் 3:15 மாற் 6:3 எபே 5:21 எபே 6:1 எபே 6:2 1பேது 2:21 |
| 52 | இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார். | லூக் 2:40 லூக் 1:80 1சாமு 2:26 |