| 1 | மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை, | யோவா 20:31 அப் 1:1-3 1தீமோ 3:16 2பேது 1:16-19 |
| 2 | ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால், | லூக் 24:48 மாற் 1:1 யோவா 15:27 அப் 1:3 அப் 1:8 அப் 1:21 அப் 1:22 அப் 4:20 அப் 10:39-41 எபிரெ 2:3 1பேது 5:1 1யோவா 1:1-3 |
| 3 | ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று, | அப் 15:19 அப் 15:25 அப் 15:28 1கொரி 7:40 1கொரி 16:12 |
| 4 | அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று. | யோவா 20:31 2பேது 1:15 2பேது 1:16 |
| 5 | யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து. | மத் 2:1 |
| 6 | அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள். | லூக் 16:15 ஆதி 6:9 ஆதி 7:1 ஆதி 17:1 யோபு 1:1 யோபு 1:8 யோபு 9:2 ரோம 3:9-25 பிலிப் 3:6-9 தீத் 3:3-7 |
| 7 | எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தார்கள். | ஆதி 15:2 ஆதி 15:3 ஆதி 16:1 ஆதி 16:2 ஆதி 25:21 ஆதி 30:1 நியா 13:2 நியா 13:3 1சாமு 1:2 1சாமு 1:5-8 |
| 8 | அப்படியிருக்க, அவன் தன் ஆசாரியவகுப்பின் முறைப்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில், | யாத் 28:1 யாத் 28:41 யாத் 29:1 யாத் 29:9 யாத் 29:44 யாத் 30:30 எண் 18:7 1நாளா 24:2 2நாளா 11:14 |
| 9 | ஆசாரிய ஊழிய முறைமையின்படி அவன் தேவாலயத்துக்குள் பிரவேசித்துத் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான். | யாத் 30:7 யாத் 30:8 யாத் 37:25-29 எண் 16:40 1சாமு 2:28 1நாளா 6:49 1நாளா 23:13 2நாளா 26:16 2நாளா 29:11 எபிரெ 9:6 |
| 10 | தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். | லேவி 16:17 எபிரெ 4:14 எபிரெ 9:24 வெளிப் 8:3 |
| 11 | அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான். | லூக் 1:19 லூக் 1:28 லூக் 2:10 நியா 13:3 நியா 13:9 அப் 10:3 அப் 10:4 எபிரெ 1:14 |
| 12 | சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான். | லூக் 1:29 லூக் 2:9 லூக் 2:10 நியா 6:22 நியா 13:22 யோபு 4:14 யோபு 4:15 தானி 10:7 மாற் 16:5 அப் 10:4 வெளிப் 1:17 |
| 13 | தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. | லூக் 24:36-40 நியா 6:23 தானி 10:12 மத் 28:5 மாற் 16:6 |
| 14 | உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள். | லூக் 1:58 ஆதி 21:6 நீதி 15:20 நீதி 23:15 நீதி 23:24 |
| 15 | அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். | லூக் 7:28 ஆதி 12:2 ஆதி 48:19 யோசு 3:7 யோசு 4:14 1நாளா 17:8 1நாளா 29:12 மத் 11:9-19 யோவா 5:35 |
| 16 | அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான். | லூக் 1:76 ஏசா 40:3-5 ஏசா 49:6 தானி 12:3 மல்கி 3:1 மத் 3:1-6 மத் 21:32 |
| 17 | பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான். | லூக் 1:16 யோவா 1:13 யோவா 1:23-30 யோவா 1:34-30 யோவா 3:28 |
| 18 | அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான். | லூக் 1:34 ஆதி 15:8 ஆதி 17:17 ஆதி 18:12 நியா 6:36-40 ஏசா 38:22 |
| 19 | தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்; | லூக் 1:26 தானி 8:16 தானி 9:21-23 மத் 18:10 எபிரெ 4:14 |
| 20 | இதோ, தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான். | லூக் 1:22 லூக் 1:62 லூக் 1:63 யாத் 4:11 எசே 3:26 எசே 24:27 |
| 21 | ஜனங்கள் சகரியாவுக்குக் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள். | எண் 6:23-27 |
| 22 | அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான்; அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சைகைகாட்டி ஊமையாயிருந்தான். | யோவா 13:24 அப் 12:17 அப் 19:33 அப் 21:40 |
| 23 | அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டுக்குப்போனான். | 2இரா 11:5-7 1நாளா 9:25 |
| 24 | அந்நாட்களுக்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பவதியாகி: ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்து, |
| 25 | எனக்கு இப்படிச் செய்தருளினார் என்று சொல்லி, ஐந்து மாதம் வெளிப்படாதிருந்தாள். | லூக் 1:13 ஆதி 21:1 ஆதி 21:2 ஆதி 25:21 ஆதி 30:22 1சாமு 1:19 1சாமு 1:20 1சாமு 2:21 1சாமு 2:22 எபிரெ 11:11 |
| 26 | ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், | லூக் 2:4 மத் 2:23 யோவா 1:45 யோவா 1:46 யோவா 7:41 |
| 27 | தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள். | லூக் 2:4 லூக் 2:5 ஆதி 3:15 ஏசா 7:14 எரே 31:22 மத் 1:18 மத் 1:21 மத் 1:23 |
| 28 | அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். | தானி 9:21-23 தானி 10:19 |
| 29 | அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள். | லூக் 1:12 மாற் 6:49 மாற் 6:50 மாற் 16:5 மாற் 16:6 அப் 10:4 |
| 30 | தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். | லூக் 1:13 லூக் 12:32 ஏசா 41:10 ஏசா 41:14 ஏசா 43:1-4 ஏசா 44:2 மத் 28:5 அப் 18:9 அப் 18:10 அப் 27:24 ரோம 8:31 எபிரெ 13:6 |
| 31 | இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. | லூக் 1:27 ஏசா 7:14 மத் 1:23 கலா 4:4 |
| 32 | அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். | லூக் 1:15 லூக் 3:16 மத் 3:11 மத் 12:42 பிலிப் 2:9-11 |
| 33 | அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான். | சங் 45:6 சங் 89:35-37 தானி 2:44 தானி 7:13 தானி 7:14 தானி 7:27 ஒபதி 1:21 மீகா 4:7 1கொரி 15:24 1கொரி 15:25 எபிரெ 1:8 வெளிப் 11:15 வெளிப் 20:4-6 வெளிப் 22:3-5 |
| 34 | அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள். | நியா 13:8-12 அப் 9:6 |
| 35 | தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக; பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். | லூக் 1:27 லூக் 1:31 மத் 1:20 |
| 36 | இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம். |
| 37 | தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான். | லூக் 18:27 ஆதி 18:14 எண் 11:23 யோபு 13:2 எரே 32:17 எரே 32:27 சகரி 8:6 மத் 19:26 மாற் 10:27 பிலிப் 3:21 |
| 38 | அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான். | 2சாமு 7:25-29 சங் 116:16 ரோம 4:20 ரோம 4:21 |
| 39 | அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய், | யோசு 10:40 யோசு 15:48-59 யோசு 21:9-11 |
| 40 | சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள். |
| 41 | எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, | லூக் 1:15 லூக் 1:44 ஆதி 25:22 சங் 22:10 |
| 42 | உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. | லூக் 1:28 லூக் 1:48 நியா 5:24 |
| 43 | என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது. | லூக் 7:7 ரூத் 2:10 1சாமு 25:41 மத் 3:14 யோவா 13:5-8 பிலிப் 2:3 |
| 44 | இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று. |
| 45 | விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள். | லூக் 1:20 லூக் 11:27 லூக் 11:28 2நாளா 20:20 யோவா 11:40 யோவா 20:29 |
| 46 | அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. | 1சாமு 2:1 சங் 34:2 சங் 34:3 சங் 35:9 சங் 103:1 சங் 103:2 ஏசா 24:15 ஏசா 24:16 ஏசா 45:25 ஏசா 61:10 ஆபகூ 3:17 ஆபகூ 3:18 ரோம 5:11 1கொரி 1:31 2கொரி 2:14 பிலிப் 3:3 பிலிப் 4:4 1பேது 1:8 |
| 47 | என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. | லூக் 2:11 ஏசா 12:2 ஏசா 12:3 ஏசா 45:21 ஏசா 45:22 செப் 3:14-17 சகரி 9:9 1தீமோ 1:1 தீத் 2:10 தீத் 2:13 தீத் 3:4-6 |
| 48 | அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். | 1சாமு 1:11 1சாமு 2:8 2சாமு 7:8 2சாமு 7:18 2சாமு 7:19 சங் 102:17 சங் 113:7 சங் 113:8 சங் 136:23 சங் 138:6 ஏசா 66:2 1கொரி 1:26-28 யாக் 2:5 யாக் 2:6 |
| 49 | வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. | ஆதி 17:1 சங் 24:8 ஏசா 1:24 ஏசா 63:1 எரே 10:6 எரே 20:11 |
| 50 | அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது. | ஆதி 17:7 யாத் 20:6 யாத் 34:6 யாத் 34:7 சங் 31:19 சங் 85:9 சங் 103:11 சங் 103:17 சங் 103:18 சங் 115:13 சங் 118:4 சங் 145:19 சங் 147:11 மல்கி 3:16-18 வெளிப் 19:5 |
| 51 | தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். | யாத் 15:6 யாத் 15:7 யாத் 15:12 யாத் 15:13 உபா 4:34 சங் 52:9 சங் 63:5 சங் 89:13 சங் 98:1 சங் 118:15 ஏசா 40:10 ஏசா 51:9 ஏசா 52:10 ஏசா 63:12 வெளிப் 18:8 |
| 52 | பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். | லூக் 18:14 1சாமு 2:4 1சாமு 2:6-8 யோபு 5:11-13 யோபு 34:24-28 சங் 107:40 சங் 107:41 சங் 113:6-8 பிரச 4:14 எசே 17:24 ஆமோ 9:11 மாற் 6:3 யாக் 1:9 யாக் 1:10 யாக் 4:10 |
| 53 | பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார். | லூக் 6:21 1சாமு 2:5 சங் 34:10 சங் 107:8 சங் 107:9 சங் 146:7 எசே 34:29 மத் 5:6 யோவா 6:11-13 யோவா 6:35-13 யாக் 2:5 வெளிப் 7:16 வெளிப் 7:17 |
| 54 | நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து, | லூக் 1:70-75 சங் 98:3 ஏசா 44:21 ஏசா 46:3 ஏசா 46:4 ஏசா 49:14-16 ஏசா 54:6-10 ஏசா 63:7-16 எரே 31:3 எரே 31:20 எரே 33:24-26 மீகா 7:20 செப் 3:14-20 சகரி 9:9-11 |
| 55 | தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள். | ஆதி 12:3 ஆதி 17:19 ஆதி 22:18 ஆதி 26:4 ஆதி 28:14 சங் 105:6-10 சங் 132:11-17 ரோம 11:28 ரோம 11:29 கலா 3:16 கலா 3:17 |
| 56 | மரியாள் ஏறக்குறைய மூன்றுமாதம் அவளுடனே இருந்து, தன் வீட்டுக்குத் திரும்பிப்போனாள். |
| 57 | எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள். | லூக் 1:13 லூக் 2:6 லூக் 2:7 ஆதி 21:2 ஆதி 21:3 எண் 23:19 |
| 58 | கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனேகூடச் சந்தோஷப்பட்டார்கள். | லூக் 1:25 ரூத் 4:14-17 சங் 113:9 |
| 59 | எட்டாம்நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம்பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள். | லூக் 2:21 ஆதி 17:12 ஆதி 21:3 ஆதி 21:4 லேவி 12:3 அப் 7:8 பிலிப் 3:5 |
| 60 | அப்பொழுது அதின் தாய்: அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிடவேண்டும் என்றாள். | லூக் 1:13 2சாமு 12:25 ஏசா 8:3 மத் 1:25 |
| 61 | அதற்கு அவர்கள்: உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ள வன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி, |
| 62 | அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள். |
| 63 | அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். | நீதி 3:3 ஏசா 30:8 எரே 17:1 ஆபகூ 2:2 |
| 64 | உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான். | லூக் 1:20 யாத் 4:15 யாத் 4:16 சங் 51:15 எரே 1:9 எசே 3:27 எசே 29:21 எசே 33:22 மத் 9:33 மாற் 7:32-37 |
| 65 | அதினால் அவர்களைச்சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல்லிக்கொள்ளப்பட்டது. | லூக் 7:16 அப் 2:43 அப் 5:5 அப் 5:11 அப் 19:17 வெளிப் 11:11 |
| 66 | அவைகளைக் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டு, இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது. | லூக் 2:19 லூக் 2:51 லூக் 9:44 ஆதி 37:11 சங் 119:11 |
| 67 | அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக: | லூக் 1:15 லூக் 1:41 எண் 11:25 2சாமு 23:2 யோவே 2:28 2பேது 1:21 |
| 68 | இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. | ஆதி 9:26 ஆதி 14:20 1இரா 1:48 1நாளா 29:10 1நாளா 29:20 சங் 41:13 சங் 72:17-19 சங் 106:48 எபே 1:3 1பேது 1:3 |
| 69 | அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்; | 1சாமு 2:10 2சாமு 22:3 சங் 18:2 சங் 132:17 சங் 132:18 எசே 29:21 |
| 70 | தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: | 2சாமு 23:2 எரே 30:10 மாற் 12:36 அப் 28:25 எபிரெ 3:7 2பேது 1:21 வெளிப் 19:10 |
| 71 | உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று, | லூக் 1:74 உபா 33:29 சங் 106:10 சங் 106:47 ஏசா 14:1-3 ஏசா 44:24-26 ஏசா 54:7-17 எரே 23:6 எரே 30:9-11 எரே 32:37 எசே 28:26 எசே 34:25 எசே 34:28 எசே 38:8 செப் 3:15-20 சகரி 9:9 சகரி 9:10 1யோவா 3:8 |
| 72 | அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்; | லூக் 1:54 லூக் 1:55 ஆதி 12:3 ஆதி 22:18 ஆதி 26:4 ஆதி 28:14 சங் 98:3 அப் 3:25 அப் 3:26 ரோம 11:28 எபிரெ 6:13-18 |
| 73 | ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே, | ஆதி 22:16 ஆதி 22:17 ஆதி 24:7 ஆதி 26:3 உபா 7:8 உபா 7:12 சங் 105:9 எரே 11:5 எபிரெ 6:16 எபிரெ 6:17 |
| 74 | தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும்படிக்கு, | லூக் 1:71 ஏசா 35:9 ஏசா 35:10 ஏசா 45:17 ஏசா 54:13 ஏசா 54:14 ஏசா 65:21-25 எசே 34:25-28 எசே 39:28 எசே 39:29 செப் 3:15-17 சகரி 9:8-10 ரோம 6:22 ரோம 8:15 2தீமோ 1:7 எபிரெ 2:15 எபிரெ 9:14 வெளிப் 2:10 |
| 75 | தம்முடைய தாசனாகிய தாவீதின்வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார். | உபா 6:2 சங் 105:44 சங் 105:45 எரே 31:33 எரே 31:34 எரே 32:39 எரே 32:40 எசே 36:24-27 மத் 1:21 எபே 1:4 எபே 2:10 எபே 4:24 1தெச 4:1 1தெச 4:7 2தெச 2:13 2தீமோ 1:9 தீத் 2:11-14 1பேது 1:14-16 2பேது 1:4-8 |
| 76 | நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும், | லூக் 7:28 மத் 14:5 மத் 21:26 மாற் 11:32 |
| 77 | நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னாக நடந்துபோவாய். | லூக் 3:3 லூக் 3:6 மாற் 1:3 மாற் 1:4 யோவா 1:7-9 யோவா 1:15-17 யோவா 1:29-17 யோவா 1:34-17 யோவா 3:27-36 அப் 19:4 |
| 78 | அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், | சங் 25:6 ஏசா 63:7 ஏசா 63:15 யோவா 3:16 எபே 2:4 எபே 2:5 பிலிப் 1:8 பிலிப் 2:1 கொலோ 3:12 1யோவா 3:17 1யோவா 4:9 1யோவா 4:10 |
| 79 | நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான். | லூக் 2:32 ஏசா 9:2 ஏசா 42:7 ஏசா 42:16 ஏசா 49:6 ஏசா 49:9 ஏசா 60:1-3 மத் 4:16 யோவா 1:9 யோவா 8:12 யோவா 9:5 யோவா 12:46 அப் 26:18 எபே 5:8 1தெச 5:4 1தெச 5:5 1யோவா 1:5-7 |
| 80 | அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான். | லூக் 1:15 லூக் 2:40 லூக் 2:52 நியா 13:24 நியா 13:25 1சாமு 3:19 1சாமு 3:20 |