| 1 | ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார். | லூக் 7:34-36 லூக் 11:37 1கொரி 9:19-22 |
| 2 | அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள். |
| 3 | இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஓய்வு நாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார். | லூக் 11:44 லூக் 11:45 |
| 4 | அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டு, | மத் 21:25-27 மத் 22:46 |
| 5 | அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார். | லூக் 13:15 யாத் 23:4 யாத் 23:5 தானி 4:24 மத் 12:11 மத் 12:12 |
| 6 | அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று. | லூக் 13:17 லூக் 20:26 லூக் 20:40 லூக் 21:15 அப் 6:10 |
| 7 | விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: | நியா 14:12 நீதி 8:1 எசே 17:2 மத் 13:34 |
| 8 | ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான். | நீதி 25:6 நீதி 25:7 |
| 9 | அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும். | எஸ்தர் 6:6-12 நீதி 3:35 நீதி 11:2 நீதி 16:18 எசே 28:2-10 தானி 4:30-34 |
| 10 | நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனேகூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும். | 1சாமு 15:17 நீதி 15:33 நீதி 25:6 நீதி 25:7 |
| 11 | தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். | லூக் 1:51 லூக் 18:14 1சாமு 15:17 யோபு 22:29 யோபு 40:10-12 சங் 18:27 சங் 138:6 நீதி 15:33 நீதி 18:12 நீதி 29:23 ஏசா 2:11 ஏசா 2:17 ஏசா 57:15 மத் 23:12 யாக் 4:6 1பேது 5:5 |
| 12 | அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவதுபண்ணும்போது, உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும். | லூக் 1:53 நீதி 14:20 நீதி 22:16 யாக் 2:1-6 |
| 13 | நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக. | லூக் 14:21 லூக் 11:41 உபா 14:29 உபா 16:11 உபா 16:14 உபா 26:12 உபா 26:13 2சாமு 6:19 2நாளா 30:24 நெகே 8:10 நெகே 8:12 யோபு 29:13 யோபு 29:15 யோபு 29:16 யோபு 31:16-20 நீதி 3:9 நீதி 3:10 நீதி 14:31 நீதி 31:6 நீதி 31:7 ஏசா 58:7 ஏசா 58:10 மத் 14:14-21 மத் 15:32-39 மத் 22:10 அப் 2:44 அப் 2:45 அப் 4:34 அப் 4:35 அப் 9:39 ரோம 12:13-16 1தீமோ 3:2 1தீமோ 5:10 தீத் 1:8 பிலேமோ 1:7 எபிரெ 13:2 |
| 14 | அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார். | நீதி 19:17 மத் 6:4 மத் 10:41 மத் 10:42 மத் 25:34-40 பிலிப் 4:18 பிலிப் 4:19 |
| 15 | அவரோடேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணுகிறவன் பாக்கியவான் என்றான். | லூக் 12:37 லூக் 13:29 லூக் 22:30 மத் 8:11 மத் 25:10 யோவா 6:27-59 வெளிப் 19:9 |
| 16 | அதற்கு அவர்: ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான். | நீதி 9:1 நீதி 9:2 ஏசா 25:6 ஏசா 25:7 எரே 31:12-14 சகரி 10:7 மத் 22:2-14 |
| 17 | விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான். | லூக் 3:4-6 லூக் 9:1-5 லூக் 10:1-12 நீதி 9:1-5 மத் 3:1-12 மத் 10:1-4 அப் 2:38 அப் 2:39 அப் 3:24-26 அப் 13:26 அப் 13:38 அப் 13:39 |
| 18 | அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். | லூக் 20:4 லூக் 20:5 ஏசா 28:12 ஏசா 28:13 ஏசா 29:11 ஏசா 29:12 எரே 5:4 எரே 5:5 எரே 6:10 எரே 6:16 எரே 6:17 மத் 22:5 மத் 22:6 யோவா 1:11 யோவா 5:40 அப் 13:45 அப் 13:46 அப் 18:5 அப் 18:6 அப் 28:25-27 |
| 19 | வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். |
| 20 | வேறொருவன்: பெண்ணை விவாகம்பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான். | லூக் 14:26-28 லூக் 18:29 லூக் 18:30 1கொரி 7:29-31 1கொரி 7:33-31 |
| 21 | அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான். | லூக் 9:10 1சாமு 25:12 மத் 15:12 மத் 18:31 எபிரெ 13:17 |
| 22 | ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான். | அப் 1:1-9 |
| 23 | அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா; | சங் 98:3 ஏசா 11:10 ஏசா 19:24 ஏசா 19:25 ஏசா 27:13 ஏசா 49:5 ஏசா 49:6 ஏசா 66:19 ஏசா 66:20 சகரி 14:8 சகரி 14:9 மல்கி 1:11 மத் 21:43 மத் 22:9 மத் 22:10 மத் 28:19 மத் 28:20 அப் 9:15 அப் 10:44-48 அப் 11:18-21 அப் 13:47 அப் 13:48 அப் 18:6 அப் 22:21 அப் 22:22 அப் 26:18-20 அப் 28:28 ரோம 10:18 ரோம 15:9-12 எபே 2:11-22 கொலோ 1:23 |
| 24 | அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார். | நீதி 1:24-32 மத் 21:43 மத் 22:8 மத் 23:38 மத் 23:39 யோவா 3:19 யோவா 3:36 யோவா 8:21 யோவா 8:24 அப் 13:46 எபிரெ 12:25 எபிரெ 12:26 |
| 25 | பின்பு அநேக ஜனங்கள் அவரோடேகூடப் பிரயாணமாய்ப் போகையில், அவர்களிடமாய் அவர் திரும்பிப்பார்த்து: | லூக் 12:1 யோவா 6:24-27 |
| 26 | யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். | உபா 13:6-8 உபா 33:9 சங் 73:25 சங் 73:26 மத் 10:37 பிலிப் 3:8 |
| 27 | தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். | லூக் 9:23-25 மத் 10:38 மத் 16:24-26 மாற் 8:34-37 மாற் 10:21 மாற் 15:21 யோவா 19:17 2தீமோ 3:12 |
| 28 | உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து, | ஆதி 11:4-9 நீதி 24:27 |
| 29 | அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்: |
| 30 | இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம்பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப்பாராமலிருப்பானோ? | மத் 7:27 மத் 27:3-8 அப் 1:18 அப் 1:19 1கொரி 3:11-14 எபிரெ 6:4-8 எபிரெ 6:11-8 எபிரெ 10:38 2பேது 2:19-22 2யோவா 1:8 |
| 31 | அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப்போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக்கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ? | 1இரா 20:11 2இரா 18:20-22 நீதி 20:18 நீதி 25:8 |
| 32 | கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாதிபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே. | லூக் 12:58 1இரா 20:31-34 2இரா 10:4 2இரா 10:5 யோபு 40:9 மத் 5:25 அப் 12:20 யாக் 4:6-10 |
| 33 | அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். | லூக் 14:26 லூக் 5:11 லூக் 5:28 லூக் 18:22 லூக் 18:23 லூக் 18:28-30 அப் 5:1-5 அப் 8:19-22 பிலிப் 3:7 பிலிப் 3:8 2தீமோ 4:10 1யோவா 2:15 1யோவா 2:16 |
| 34 | உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்? | மத் 5:13 மாற் 9:49 மாற் 9:50 கொலோ 4:6 எபிரெ 2:4-8 |
| 35 | அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார். | யோவா 15:6 |