| 1 | பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச் செய்தியை அவருக்கு அறிவித்தார்கள். | அப் 5:37 |
| 2 | இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப்பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? | லூக் 13:4 யோபு 22:5-16 யோவா 9:2 அப் 28:4 |
| 3 | அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள். | லூக் 13:5 லூக் 24:47 மத் 3:2 மத் 3:10-12 அப் 2:38-40 அப் 3:19 வெளிப் 2:21 வெளிப் 2:22 |
| 4 | சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? | நெகே 3:15 யோவா 9:7 யோவா 9:11 |
| 5 | அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார். | லூக் 13:3 ஏசா 28:10-13 எசே 18:30 |
| 6 | அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங்காணவில்லை. | சங் 80:8-13 ஏசா 5:1-4 எரே 2:21 மத் 21:19 மத் 21:20 மாற் 11:12-14 |
| 7 | அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங்காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். | லேவி 19:23 லேவி 25:21 ரோம 2:4 ரோம 2:5 |
| 8 | அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங்கொத்தி, எருப்போடுவேன், | யாத் 32:11-13 யாத் 32:30-32 யாத் 34:9 எண் 14:11-20 யோசு 7:7-9 சங் 106:23 எரே 14:7-9 எரே 14:13-18 எரே 15:1 எரே 18:20 யோவே 2:17 ரோம 10:1 ரோம 11:14 2பேது 3:9 |
| 9 | கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார். | எஸ்றா 9:14 எஸ்றா 9:15 சங் 69:22-28 தானி 9:5-8 யோவா 15:2 1தெச 2:15 எபிரெ 6:8 வெளிப் 15:3 வெளிப் 15:4 வெளிப் 16:5-7 |
| 10 | ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார். | லூக் 4:15 லூக் 4:16 லூக் 4:44 |
| 11 | அப்பொழுது பதினெட்டுவருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள். | லூக் 13:16 லூக் 8:2 யோபு 2:7 சங் 6:2 மத் 9:32 மத் 9:33 |
| 12 | இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி, | லூக் 6:8-10 சங் 107:20 ஏசா 65:1 மத் 8:16 |
| 13 | அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள். | லூக் 4:40 மாற் 6:5 மாற் 8:25 மாற் 16:18 அப் 9:17 |
| 14 | இயேசு ஓய்வுநாளிலே சொஸ்தமாக்கினபடியால், ஜெபஆலயத்தலைவன் கோபமடைந்து, ஜனங்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறுநாள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சொஸ்தமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான். | லூக் 8:41 அப் 13:15 அப் 18:8 அப் 18:17 |
| 15 | கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா? | லூக் 6:42 லூக் 12:1 யோபு 34:30 நீதி 11:9 ஏசா 29:20 மத் 7:5 மத் 15:7 மத் 15:14 மத் 23:13 மத் 23:28 அப் 8:20-23 அப் 13:9 அப் 13:10 |
| 16 | இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார். | லூக் 3:8 லூக் 16:24 லூக் 19:9 அப் 13:26 ரோம 4:12-16 |
| 17 | அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள். | லூக் 14:6 லூக் 20:40 சங் 40:14 சங் 109:29 சங் 132:18 ஏசா 45:24 2தீமோ 3:9 1பேது 3:16 |
| 18 | அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாயிருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்? | லூக் 13:20 லூக் 7:31 புலம் 2:13 மத் 13:31 |
| 19 | அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து, பெரிய மரமாயிற்று; ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார். | மத் 13:31 மத் 13:32 மத் 17:20 மாற் 4:31 மாற் 4:32 |
| 20 | மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்? |
| 21 | அது புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடிமாவிலே அடக்கிவைத்தாள் என்றார். | மத் 13:33 |
| 22 | அவர் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகும்போது, பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம்பண்ணிக்கொண்டுபோனார். | லூக் 4:43 லூக் 4:44 மத் 9:35 மாற் 6:6 அப் 10:38 |
| 23 | அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்: | மத் 7:14 மத் 19:25 மத் 20:16 மத் 22:14 |
| 24 | இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். | லூக் 21:36 ஆதி 32:25 ஆதி 32:26 மத் 11:12 யோவா 6:27 1கொரி 9:24-27 பிலிப் 2:12 பிலிப் 2:13 கொலோ 1:29 எபிரெ 4:11 2பேது 1:10 |
| 25 | வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார். | சங் 32:6 ஏசா 55:6 2கொரி 6:2 எபிரெ 3:7 எபிரெ 3:8 எபிரெ 12:17 |
| 26 | அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். | ஏசா 58:2 2தீமோ 3:5 தீத் 1:16 |
| 27 | ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். | லூக் 13:25 சங் 1:6 மத் 7:22 மத் 7:23 மத் 25:12 மத் 25:41 1கொரி 8:3 கலா 4:9 2தீமோ 2:19 |
| 28 | நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும். | சங் 112:10 மத் 8:12 மத் 13:42 மத் 13:50 மத் 22:13 மத் 24:51 மத் 25:30 |
| 29 | கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்த ஜனங்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள. | ஆதி 28:14 ஏசா 43:6 ஏசா 49:6 ஏசா 54:2 ஏசா 54:3 ஏசா 66:18-20 மல்கி 1:11 மாற் 13:27 அப் 28:28 எபே 3:6-8 கொலோ 1:6 கொலோ 1:23 வெளிப் 7:9 வெளிப் 7:10 |
| 30 | அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார். | மத் 3:9 மத் 3:10 மத் 8:11 மத் 8:12 மத் 19:30 மத் 20:16 மத் 21:28-31 மாற் 10:31 |
| 31 | அந்த நாளிலே சில பரிசேயர் அவரிடத்தில் வந்து: நீர் இவ்விடத்தை விட்டுப் போய்விடும்; ஏரோது உம்மைக் கொலைசெய்ய மனதாய் இருக்கிறான் என்றார்கள். | நெகே 6:9-11 சங் 11:1 சங் 11:2 ஆமோ 7:12 ஆமோ 7:13 |
| 32 | அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்கி, மூன்றாம் நாளில் நிறைவடைவேன். | லூக் 3:19 லூக் 3:20 லூக் 9:7-9 லூக் 23:8-11 எசே 13:4 மீகா 3:1-3 செப் 3:3 மாற் 6:26-28 |
| 33 | இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்குப் புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள். | யோவா 4:34 யோவா 9:4 யோவா 11:54 யோவா 12:35 அப் 10:38 |
| 34 | எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. | லூக் 19:41 லூக் 19:42 மத் 23:37-39 |
| 35 | இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்; கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுங்காலம் வருமளவும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். | லூக் 21:5 லூக் 21:6 லூக் 21:24 லேவி 26:31 லேவி 26:32 சங் 69:25 ஏசா 1:7 ஏசா 1:8 ஏசா 5:5 ஏசா 5:6 ஏசா 64:10 ஏசா 64:11 தானி 9:26 தானி 9:27 மீகா 3:12 சகரி 11:1 சகரி 11:2 சகரி 14:2 அப் 6:13 அப் 6:14 |