| 1 | அத்தருணத்திலே அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில், அவர் முதலாவது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். | லூக் 5:1 லூக் 5:15 லூக் 6:17 அப் 21:20 |
| 2 | வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை. | லூக் 8:17 பிரச 12:14 மத் 10:26 மாற் 4:22 ரோம 2:16 1கொரி 4:5 2கொரி 5:10 வெளிப் 20:11 வெளிப் 20:12 |
| 3 | ஆதலால், நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, அது வீடுகளின்மேல் கூறப்படும். | யோபு 24:14 யோபு 24:15 பிரச 10:12 பிரச 10:13 பிரச 10:20 மத் 12:36 யூதா 1:14 யூதா 1:15 |
| 4 | என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள். | உன்ன 5:1 உன்ன 5:16 ஏசா 41:8 யோவா 15:14 யாக் 2:23 |
| 5 | நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலேதள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். | மாற் 13:23 1தெச 4:6 |
| 6 | இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுவதில்லை. | மத் 10:29 |
| 7 | உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும், நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். | லூக் 21:18 1சாமு 14:45 2சாமு 14:11 மத் 10:30 அப் 27:34 |
| 8 | அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர் முன்பாக என்னை அறிக்கைப்பண்ணுகிறவன் எவனோ, அவனை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார். | 1சாமு 2:30 சங் 119:46 மத் 10:32 மத் 10:33 ரோம 10:9 ரோம 10:10 2தீமோ 2:12 1யோவா 2:23 வெளிப் 2:10 வெளிப் 2:13 வெளிப் 3:4 வெளிப் 3:5 |
| 9 | மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான். | லூக் 9:26 மத் 10:33 மாற் 8:38 அப் 3:13 அப் 3:14 2தீமோ 2:12 வெளிப் 3:8 |
| 10 | எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான விசேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவிக்கு விரோதமாய்த் தூஷணஞ்சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை. | லூக் 23:34 மத் 12:31 மத் 12:32 மாற் 3:28 மாற் 3:29 1தீமோ 1:13 எபிரெ 6:4-8 எபிரெ 10:26-31 1யோவா 5:16 |
| 11 | அன்றியும், ஜெப ஆலயத்தலைவர்களுக்கும் துரைத்தனத்தார்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களைக் கொண்டுபோய்விடும்போது: எப்படி, என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும், எதைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள். | லூக் 21:12-14 மத் 10:17-20 மத் 23:34 மாற் 13:9-11 அப் 4:5-7 அப் 5:27-32 அப் 6:9-15 |
| 12 | நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார். | லூக் 21:15 யாத் 4:11 அப் 4:8 அப் 6:10 அப் 7:2-53 அப் 7:55-53 அப் 26:1-32 |
| 13 | அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத்தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். | லூக் 6:45 சங் 17:14 எசே 33:31 அப் 8:18 அப் 8:19 1தீமோ 6:5 |
| 14 | அதற்கு அவர்: மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார். | லூக் 5:20 லூக் 22:58 ரோம 2:1 ரோம 2:3 ரோம 9:20 |
| 15 | பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். | லூக் 8:14 லூக் 16:14 லூக் 21:34 யோசு 7:21 யோபு 31:24 யோபு 31:25 சங் 10:3 சங் 62:10 சங் 119:36 சங் 119:37 நீதி 23:4 நீதி 23:5 நீதி 28:16 எரே 6:13 எரே 22:17 எரே 22:18 மீகா 2:2 ஆபகூ 2:9 மாற் 7:22 1கொரி 5:10 1கொரி 5:11 1கொரி 6:10 எபே 5:3-5 கொலோ 3:5 1தீமோ 6:7-10 2தீமோ 3:2 எபிரெ 13:5 2பேது 2:3 2பேது 2:14 |
| 16 | அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. | ஆதி 26:12-14 ஆதி 41:47-49 யோபு 12:6 சங் 73:3 சங் 73:12 ஓசி 2:8 மத் 5:45 அப் 14:17 |
| 17 | அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்துவைக்கிறதற்கு இடமில்லையே; | லூக் 12:22 லூக் 12:29 லூக் 10:25 லூக் 16:3 அப் 2:37 அப் 16:30 |
| 18 | நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, | லூக் 12:21 லூக் 18:4 லூக் 18:6 சங் 17:14 யாக் 3:15 யாக் 4:15 |
| 19 | பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். | உபா 6:11 உபா 6:12 உபா 8:12-14 யோபு 31:24 யோபு 31:25 சங் 49:5-13 சங் 49:18-13 சங் 52:5-7 சங் 62:10 நீதி 18:11 நீதி 23:5 ஏசா 5:8 ஓசி 12:8 ஆபகூ 1:16 மத் 6:19-21 1தீமோ 6:17 யாக் 5:1-3 |
| 20 | தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். | லூக் 16:22 லூக் 16:23 யாத் 16:9 யாத் 16:10 1சாமு 25:36-38 2சாமு 13:28 2சாமு 13:29 1இரா 16:9 1இரா 16:10 யோபு 20:20-23 யோபு 27:8 சங் 73:19 சங் 78:30 தானி 5:1-6 தானி 5:25-30 நாகூ 1:10 மத் 24:48-51 1தெச 5:3 |
| 21 | தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார். | லூக் 12:33 லூக் 6:24 ஓசி 10:1 ஆபகூ 2:9 மத் 6:19 மத் 6:20 ரோம 2:5 1தீமோ 6:19 யாக் 5:1-3 |
| 22 | பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். | லூக் 12:29 மத் 6:25-34 1கொரி 7:32 பிலிப் 4:6 எபிரெ 13:5 |
| 23 | ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாயிருக்கிறது. | ஆதி 19:17 யோபு 1:12 யோபு 2:4 யோபு 2:6 நீதி 13:8 அப் 27:18 அப் 27:19 அப் 27:38 |
| 24 | காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். | 1இரா 17:1-6 யோபு 38:41 சங் 145:15 சங் 145:16 சங் 147:9 மாற் 6:26 |
| 25 | கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான். | லூக் 19:3 மத் 5:36 மத் 6:27 |
| 26 | மிகவும் அற்பமான காரியமுதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன? | லூக் 12:29 சங் 39:6 பிரச 7:13 1பேது 5:7 |
| 27 | காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். | லூக் 12:24 மத் 6:28-30 யாக் 1:10 யாக் 1:11 |
| 28 | இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? | ஏசா 40:6 1பேது 1:24 |
| 29 | ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள். | லூக் 12:22 லூக் 10:7 லூக் 10:8 லூக் 22:35 மத் 6:31 |
| 30 | இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார். | மத் 5:47 மத் 6:32 எபே 4:17 1தெச 4:5 1பேது 4:2-4 |
| 31 | தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். | லூக் 10:42 1இரா 3:11-13 சங் 34:9 சங் 37:3 சங் 37:19 சங் 37:25 சங் 84:11 ஏசா 33:16 மத் 6:33 யோவா 6:27 ரோம 8:31 1தீமோ 4:8 எபிரெ 13:5 |
| 32 | பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார். | உன்ன 1:7 உன்ன 1:8 ஏசா 40:11 ஏசா 41:14 ஏசா 53:6 மத் 7:15 மத் 18:12-14 மத் 20:16 யோவா 10:26-30 |
| 33 | உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை. | லூக் 18:22 மத் 19:21 அப் 2:45 அப் 4:34 அப் 4:35 2கொரி 8:2 |
| 34 | உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். | மத் 6:21 பிலிப் 3:20 கொலோ 3:1-3 |
| 35 | உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும், | 1இரா 18:46 நீதி 31:17 ஏசா 5:27 ஏசா 11:5 எபே 6:14 1பேது 1:13 |
| 36 | தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள். | லூக் 2:25-30 ஆதி 49:18 ஏசா 64:4 புலம் 3:25 புலம் 3:26 மத் 24:42-44 மாற் 13:34-37 யாக் 5:7 யாக் 5:8 2பேது 1:13-15 யூதா 1:20 யூதா 1:21 |
| 37 | எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரைகட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். | லூக் 12:43 லூக் 21:36 மத் 24:45-47 மத் 25:20-23 பிலிப் 1:21 பிலிப் 1:23 2தீமோ 4:7 2தீமோ 4:8 1பேது 5:1-4 2பேது 1:11 2பேது 3:14 வெளிப் 14:13 |
| 38 | அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள். | மத் 25:6 1தெச 5:4 1தெச 5:5 |
| 39 | திருடன் இன்னநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள். | மத் 24:43 மத் 24:44 1தெச 5:2 1தெச 5:3 2பேது 3:10 வெளிப் 3:3 வெளிப் 16:15 |
| 40 | அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார். | லூக் 21:34-36 மத் 24:42 மத் 24:44 மத் 25:13 மாற் 13:33-36 ரோம 13:11 ரோம 13:14 1தெச 5:6 2பேது 3:12-14 வெளிப் 19:7 |
| 41 | அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்கு மாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான். | மாற் 13:37 மாற் 14:37 1பேது 4:7 1பேது 5:8 |
| 42 | அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரருக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யாவன்? | லூக் 19:15-19 மத் 24:45 மத் 24:46 மத் 25:20-23 1கொரி 4:1 1கொரி 4:2 தீத் 1:7 |
| 43 | எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாய்க் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான். |
| 44 | தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். | லூக் 19:17-19 லூக் 22:29 லூக் 22:30 தானி 12:2 தானி 12:3 மத் 24:47 வெளிப் 3:18 |
| 45 | அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்பட்டால், | எசே 12:22 எசே 12:27 எசே 12:28 மத் 24:48-50 2பேது 2:3 2பேது 2:4 |
| 46 | அவன் நினையாத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான். | லூக் 12:19 லூக் 12:20 லூக் 12:40 வெளிப் 16:15 |
| 47 | தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும் அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான். | லூக் 10:12-15 எண் 15:30 எண் 15:31 மத் 11:22-24 யோவா 9:41 யோவா 12:48 யோவா 15:22-24 யோவா 19:11 அப் 17:30 2கொரி 2:15 2கொரி 2:16 யாக் 4:17 |
| 48 | அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங்கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங்கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள். | லேவி 5:17 அப் 17:30 ரோம 2:12-16 1தீமோ 1:13 |
| 49 | பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரியவேண்டுமென்று விரும்புகிறேன். | லூக் 12:51 லூக் 12:52 ஏசா 11:4 யோவே 2:30 யோவே 2:31 மல்கி 3:2 மல்கி 3:3 மல்கி 4:1 மத் 3:10-12 |
| 50 | ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன். | மத் 20:17-22 மாற் 10:32-38 |
| 51 | நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். | லூக் 12:49 சகரி 11:7 சகரி 11:8 சகரி 11:10 சகரி 11:11 சகரி 11:14 மத் 10:34-36 மத் 24:7-10 |
| 52 | எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள். | சங் 41:9 மீகா 7:5 மீகா 7:6 யோவா 7:41-43 யோவா 9:16 யோவா 10:19-21 யோவா 15:18-21 யோவா 16:2 அப் 13:43-46 அப் 14:1-4 அப் 28:24 |
| 53 | தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார். | மீகா 7:6 சகரி 13:2-6 மத் 10:21 மத் 10:22 மத் 24:10 |
| 54 | பின்பு அவர் ஜனங்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அந்தப்படியுமாகும். | 1இரா 18:44 1இரா 18:45 மத் 16:2-4 |
| 55 | தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது உஷ்ணம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அந்தப் படியுமாகும். | யோபு 37:17 |
| 56 | மாயக்காரரே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நிதானியாமற்போகிறதென்ன? | 1நாளா 12:32 மத் 11:25 மத் 16:3 மத் 24:32 மத் 24:33 |
| 57 | நியாயம் இன்னதென்று நீங்களே தீர்மானியாமலிருக்கிறதென்ன? | உபா 32:29 மத் 15:10-14 மத் 21:21 மத் 21:32 அப் 2:40 அப் 13:26-38 1கொரி 11:14 |
| 58 | உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுப்பான், சேவகன் உன்னைச் சிறைசாலையில் போடுவான். | நீதி 25:8 நீதி 25:9 மத் 5:23-26 |
| 59 | நீ கடைசிக்காசைக் கொடுத்துத் தீர்க்குமட்டும், அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். | லூக் 16:26 மத் 18:34 மத் 25:41 மத் 25:46 2தெச 1:3 |