| 1 | அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான். | லூக் 6:12 லூக் 9:18 லூக் 9:28 லூக் 22:39-45 எபிரெ 5:7 |
| 2 | அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக; | பிரச 5:2 ஓசி 14:2 மத் 6:6-8 |
| 3 | எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்; | யாத் 16:15-22 நீதி 30:8 ஏசா 33:16 மத் 6:11 மத் 6:34 யோவா 6:27-33 |
| 4 | எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே; எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும், என்று சொல்லுங்கள் என்றார். | 1இரா 8:34 1இரா 8:36 சங் 25:11 சங் 25:18 சங் 32:1-5 சங் 51:1-3 சங் 130:3 சங் 130:4 ஏசா 43:25 ஏசா 43:26 தானி 9:19 ஓசி 14:2 மத் 6:12 1யோவா 1:8-10 |
| 5 | பின்னும் அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய்: சிநேகிதனே, | லூக் 18:1-8 |
| 6 | என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். |
| 7 | வீட்டுக்குள் இருக்கிறவன் பிரதியுத்தரமாக: என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னோடேகூடப் படுத்திருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்குத் தரக்கூடாது என்று சொன்னான். | லூக் 7:6 கலா 6:17 |
| 8 | பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். | லூக் 18:1-8 ஆதி 32:26 மத் 15:22-28 ரோம 15:30 2கொரி 12:8 கொலோ 2:1 கொலோ 4:12 |
| 9 | மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். | லூக் 13:24 மத் 6:29 மத் 21:31 மாற் 13:37 வெளிப் 2:24 |
| 10 | ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். | லூக் 18:1 சங் 31:22 புலம் 3:8 புலம் 3:18 புலம் 3:54-58 யோனா 2:2-8 யாக் 4:3 யாக் 5:11 |
| 11 | உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? | ஏசா 49:15 மத் 7:9 |
| 12 | அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? | லூக் 10:19 எசே 2:6 வெளிப் 9:10 |
| 13 | பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார். | ஆதி 6:5 ஆதி 6:6 ஆதி 8:21 யோபு 15:14-16 சங் 51:5 யோவா 3:5 யோவா 3:6 ரோம 7:18 தீத் 3:3 |
| 14 | பின்பு அவர் ஊமையாயிருந்த ஒரு பிசாசைத் துரத்தினார். பிசாசு புறப்பட்டுப்போனபின்பு ஊமையன் பேசினான்; ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள். | மத் 9:32 மத் 9:33 மத் 12:22 மத் 12:23 மாற் 7:32-37 |
| 15 | அவர்களில் சிலர்: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். | மத் 9:34 மத் 12:24-30 மாற் 3:22-30 யோவா 7:20 யோவா 8:48 யோவா 8:52 யோவா 10:20 |
| 16 | வேறு சிலர் அவரைச் சோதிக்கும்படி வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று அவரிடத்தில் கேட்டார்கள். | மத் 12:38 மத் 12:39 மத் 16:1-4 மாற் 8:11 மாற் 8:12 யோவா 6:30 1கொரி 1:22 |
| 17 | அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போகும்; தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த வீடும் விழுந்துபோகும். | மத் 9:4 மத் 12:25 மாற் 3:23-26 யோவா 2:25 வெளிப் 2:23 |
| 18 | சாத்தானும் தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? இப்படியிருக்க, பெயெல்செபூலைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே. | மத் 12:26 |
| 19 | நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள். | லூக் 9:49 மத் 12:27 மத் 12:28 |
| 20 | நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. | யாத் 8:19 மத் 12:28 |
| 21 | ஆயுதந்தரித்த பலவான் தன் அரமனையைக்காக்கிறபோது, அவனுடைய பொருள் பத்திரப்பட்டிருக்கும். | மத் 12:29 மாற் 3:27 |
| 22 | அவனிலும் அதிக பலவான் வந்து, அவனை மேற்கொள்வானேயாகில், அவன் நம்பியிருந்த சகல ஆயுதவர்க்கத்தையும் பறித்துக்கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருளைப் பங்கிடுவான். | ஆதி 3:15 ஏசா 27:1 ஏசா 49:24 ஏசா 49:25 ஏசா 53:12 ஏசா 63:1-4 கொலோ 2:15 1யோவா 3:8 1யோவா 4:4 வெளிப் 20:1-3 |
| 23 | என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான். | லூக் 9:50 மத் 12:30 வெளிப் 3:15 வெளிப் 3:16 |
| 24 | அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப்புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி, | மத் 12:43-45 |
| 25 | அதில் வரும்போது, அது பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் கண்டு, | 2நாளா 24:17-22 சங் 36:3 சங் 81:11 சங் 81:12 சங் 125:5 மத் 12:44 மத் 12:45 2தெச 2:9-12 2பேது 2:10-19 யூதா 1:8-13 |
| 26 | திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும் என்றார். | மத் 23:15 |
| 27 | அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள். | லூக் 1:28 லூக் 1:42 லூக் 1:48 |
| 28 | அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார். | லூக் 6:47 லூக் 6:48 லூக் 8:21 சங் 1:1-3 சங் 112:1 சங் 119:1-6 சங் 128:1 ஏசா 48:17 ஏசா 48:18 மத் 7:21-25 மத் 12:48-50 யோவா 13:17 யாக் 1:21-25 1யோவா 3:21-24 வெளிப் 22:14 |
| 29 | ஜனங்கள் திரளாய்க் கூடிவந்திருக்கிறபொழுது அவர்: இந்தச் சந்ததியார் பொல்லாதவர்களாயிருக்கிறார்கள், அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. | லூக் 12:1 லூக் 14:25 லூக் 14:26 |
| 30 | யோனா நினிவே பட்டணத்தாருக்கு அடையாளமாயிருந்ததுபோல, மனுஷகுமாரனும் இந்தச் சந்ததிக்கு அடையாளமாயிருப்பார். | லூக் 24:46 லூக் 24:47 யோனா 1:17 யோனா 2:10 யோனா 3:2-10 மத் 12:40-42 |
| 31 | தென்தேசத்து ராஜஸ்திரீ சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள்; இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். | 1இரா 10:1 1இரா 10:2-13 2நாளா 9:1 மத் 12:42 |
| 32 | யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள்; இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள். | யோனா 3:5-10 |
| 33 | ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, மறைவிடத்திலாவது, மரக்காலின் கீழேயாவது வைக்காமல், உள்ளே வருகிறவர்கள் வெளிச்சம்காணும்படி, அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான். | லூக் 8:16 லூக் 8:17 மத் 5:15 மாற் 4:21 மாற் 4:22 |
| 34 | கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும். | சங் 119:18 மத் 6:22 மத் 6:23 மாற் 8:18 அப் 26:18 எபே 1:17 |
| 35 | ஆகையால் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. | நீதி 16:25 நீதி 26:12 ஏசா 5:20 ஏசா 5:21 எரே 8:8 எரே 8:9 யோவா 7:48 யோவா 7:49 யோவா 9:39-41 ரோம 1:22 ரோம 2:19-23 1கொரி 1:19-21 1கொரி 3:18-20 யாக் 3:13-17 2பேது 1:9 2பேது 2:18 வெளிப் 3:17 |
| 36 | உன் சரீரம் ஒருபுறத்திலும் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும் என்றார். | சங் 119:97-105 நீதி 1:5 நீதி 2:1-11 நீதி 4:18 நீதி 4:19 நீதி 6:23 நீதி 20:27 ஏசா 8:20 ஏசா 42:16 ஓசி 6:3 மத் 13:11 மத் 13:12 மத் 13:52 மாற் 4:24 மாற் 4:25 2கொரி 4:6 எபே 4:14 கொலோ 3:16 2தீமோ 3:15-17 எபிரெ 5:14 யாக் 1:25 2பேது 3:18 |
| 37 | அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், பரிசேயன் ஒருவன் தன்னுடனேகூட அவர் பகற்போஜனம்பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் போய்ப் பந்தியிருந்தார். | லூக் 7:36 லூக் 14:1 1கொரி 9:19-23 |
| 38 | அவர் போஜனம்பண்ணுகிறதற்கு முன் கைகழுவாமலிருந்ததைப் பரிசேயன் கண்டு, ஆச்சரியப்பட்டான். | மத் 15:2 மத் 15:3 மாற் 7:2-5 யோவா 3:25 |
| 39 | கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயராகிய நீங்கள் போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்கள் உள்ளமோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது. | மத் 23:25 கலா 1:14 2தீமோ 3:5 தீத் 1:15 |
| 40 | மதிகேடரே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் உட்புறத்தையும் உண்டாக்கவில்லையோ? | லூக் 12:20 லூக் 24:25 சங் 14:1 சங் 75:4 சங் 75:5 சங் 94:8 நீதி 1:22 நீதி 8:5 எரே 5:21 மத் 23:17 மத் 23:26 1கொரி 15:36 |
| 41 | உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும். | லூக் 12:33 லூக் 14:12-14 லூக் 16:9 லூக் 18:22 லூக் 19:8 உபா 15:8-10 யோபு 13:16-20 சங் 41:1 சங் 112:9 நீதி 14:31 நீதி 19:17 பிரச 11:1 பிரச 11:2 ஏசா 58:7-11 தானி 4:27 மத் 5:42 மத் 6:1-4 மத் 25:34-40 மத் 26:11 அப் 9:36-39 அப் 10:31 அப் 10:32 அப் 11:29 அப் 24:17 2கொரி 8:7-9 2கொரி 8:12-9 2கொரி 9:6-15 எபே 4:28 எபிரெ 6:10 எபிரெ 13:16 யாக் 1:27 யாக் 2:14-16 1யோவா 3:16 1யோவா 3:17 |
| 42 | பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே. | மத் 23:13 மத் 23:23 மத் 23:27 |
| 43 | பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைகளில் வந்தனங்களையும் விரும்புகிறீர்கள். | லூக் 14:7-11 லூக் 20:46 நீதி 16:18 மத் 23:6 மாற் 12:38 மாற் 12:39 ரோம 12:10 பிலிப் 2:3 யாக் 2:2-4 3யோவா 1:9 |
| 44 | மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, மறைந்திருக்கிற பிரேதக்குழிகளைப்போலிருக்கிறீர்கள், அவைகள்மேல் நடக்கிற மனுஷருக்கு அவைகள் தெரியாதிருக்கிறது என்றார். | எண் 19:16 சங் 5:9 ஓசி 9:8 மத் 23:27 மத் 23:28 அப் 23:3 |
| 45 | அப்பொழுது நியாயசாஸ்திரிகளில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, நீர் இப்படிச் சொல்லுகிறதினால் எங்களையும் நிந்திக்கிறீரே என்றான். | 1இரா 22:8 எரே 6:10 எரே 20:8 ஆமோ 7:10-13 யோவா 7:7 யோவா 7:48 யோவா 9:40 |
| 46 | அதற்கு அவர்: நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, சுமக்க அரிதான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள். | ஏசா 10:1 மத் 23:2-4 கலா 6:13 |
| 47 | உங்களுக்கு ஐயோ, உங்கள் பிதாக்கள் கொலைசெய்த தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். | மத் 23:29-33 அப் 7:51 1தெச 2:15 |
| 48 | ஆகையால் உங்கள் பிதாக்களுடைய கிரியைகளுக்கு நீங்களும் உடன்பட்டவர்களென்று சாட்சியிடுகிறீர்கள்; எப்படியென்றால், உங்கள் பிதாக்கள் அவர்களைக் கொலைசெய்தார்கள், நீங்களோ அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். | யோசு 24:22 யோபு 15:6 சங் 64:8 எசே 18:19 |
| 49 | ஆதலால் தேவஞானமானது: நான் தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் அவர்களிடத்தில் அனுப்புவேன்; அவர்களில் சிலரைக் கொலைசெய்து, சிலரைத் துன்பப்படுத்துவார்கள்; | நீதி 1:2-6 நீதி 8:1-12 நீதி 9:1-3 1கொரி 1:30 கொலோ 2:3 |
| 50 | ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது. | ஆதி 9:5 ஆதி 9:6 எண் 35:33 2இரா 24:4 சங் 9:12 ஏசா 26:21 வெளிப் 18:20-24 |
| 51 | நிச்சயமாகவே இந்தச் சந்ததியினிடத்தில் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். | ஆதி 4:8-11 எபிரெ 11:4 எபிரெ 12:24 1யோவா 3:12 |
| 52 | நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக்கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார். | லூக் 19:39 லூக் 19:40 மல்கி 2:7 மத் 23:13 யோவா 7:47-52 யோவா 9:24-34 அப் 4:17 அப் 4:18 அப் 5:40 |
| 53 | இவைகளை அவர்களுக்கு அவர் சொல்லுகையில், வேதபாரகரும் பரிசேயரும் அவர்மேல் குற்றஞ்சாட்டும்பொருட்டு, அவர் வாய்மொழியில் ஏதாகிலும் பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்று உபாயம்பண்ணி அவரை மிகவும் நெருக்கவும், | சங் 22:12 சங் 22:13 ஏசா 9:12 |
| 54 | அநேக காரியங்களைக்குறித்துப் பேசும்படி அவரை ஏவவும் தொடங்கினார்கள். | சங் 37:32 சங் 37:33 சங் 56:5 சங் 56:6 மத் 22:15 மத் 22:18 மத் 22:35 மாற் 12:13 |