| 1 | அந்த நாட்களிலே திரளான ஜனங்கள் கூடிவந்திருக்கையில், அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாதபோது, இயேசு தம்முடைய சீஷரை அழைத்து: | மத் 15:32-39 |
| 2 | ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடத்தில் தங்கியிருந்த மூன்றுநாளாய்ச் சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள். | மாற் 1:41 மாற் 5:19 மாற் 6:34 மாற் 9:22 சங் 103:13 சங் 145:8 சங் 145:15 மீகா 7:19 மத் 9:36 மத் 14:14 மத் 20:34 லூக் 7:13 லூக் 15:20 எபிரெ 2:17 எபிரெ 4:15 எபிரெ 5:2 |
| 3 | இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்தவர்களாகையால், நான் இவர்களைப் பட்டினியாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார். | நியா 8:4-6 1சாமு 14:28-31 1சாமு 30:10-12 ஏசா 40:31 |
| 4 | அதற்கு அவருடைய சீஷர்கள்: இந்த வனாந்தரத்திலே ஒருவன் எங்கேயிருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனைபேர்களைத் திருப்தியாக்கக்கூடும் என்றார்கள். | மாற் 6:36 மாற் 6:37 மாற் 6:52 எண் 11:21-23 2இரா 4:42-44 2இரா 7:2 சங் 78:19 சங் 78:20 மத் 15:33 யோவா 6:7-9 |
| 5 | அதற்கு அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்கள் உண்டு என்றார்கள். | மாற் 6:38 மத் 14:15-17 மத் 15:34 லூக் 9:13 |
| 6 | அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையிலே பந்தியிருக்கக் கட்டளையிட்டு, இந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்; அவர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள். | மாற் 6:39 மாற் 6:40 மத் 14:18 மத் 14:19 மத் 15:35 மத் 15:36 லூக் 9:14 லூக் 9:15 லூக் 12:37 யோவா 2:5 யோவா 6:10 |
| 7 | சில சிறுமீன்களும் அவர்களிடத்தில் இருந்தது; அவர் அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறும்படி சொன்னார். | லூக் 24:41 லூக் 24:42 யோவா 21:5 யோவா 21:8 யோவா 21:9 |
| 8 | அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழுகூடை நிறைய எடுத்தார்கள். | மாற் 8:19 மாற் 8:20 சங் 107:8 சங் 107:9 சங் 145:16 மத் 16:10 லூக் 1:53 யோவா 6:11-13 யோவா 6:27-13 யோவா 6:32-35 யோவா 6:47-58 வெளிப் 7:16 வெளிப் 7:17 |
| 9 | சாப்பிட்டவர்கள் ஏறக்குறைய நாலாயிரம்பேராயிருந்தார்கள். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார். |
| 10 | உடனே அவர் தம்முடைய சீஷரோடேகூடப் படவில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளில் வந்தார். | மத் 15:39 |
| 11 | அப்பொழுது பரிசேயர் வந்து அவரோடே தர்க்கிக்கத்தொடங்கி, அவரைச் சோதிக்கும்படி, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். | மாற் 2:16 மாற் 7:1 மாற் 7:2 மத் 12:38 மத் 16:1-4 மத் 19:3 மத் 21:23 மத் 22:15 மத் 22:18 மத் 22:23 மத் 22:34 மத் 22:35 லூக் 11:53 லூக் 11:54 யோவா 7:48 |
| 12 | அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார் அடையாளம் தேடுகிறதென்ன? இந்தச் சந்ததியாருக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, | மாற் 3:5 மாற் 7:34 மாற் 9:19 ஏசா 53:3 லூக் 19:41 யோவா 11:33-38 |
| 13 | அவர்களை விட்டு மறுபடியும் படவில் ஏறி, அக்கரைக்குப் போனார். | சங் 81:12 எரே 23:33 ஓசி 4:17 ஓசி 9:12 சகரி 11:8 சகரி 11:9 மத் 7:6 மத் 15:14 லூக் 8:37 யோவா 8:21 யோவா 12:36 அப் 13:45 அப் 13:46 அப் 18:6 |
| 14 | சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பம் மாத்திரம் இருந்தது. | மத் 16:5 |
| 15 | அவர் அவர்களை நோக்கி: நீங்கள் பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்று கற்பித்தார். | எண் 27:19-23 1நாளா 28:9 1நாளா 28:10 1நாளா 28:20 1தீமோ 5:21 1தீமோ 6:13 2தீமோ 2:14 |
| 16 | அதற்கு அவர்கள்: நம்மிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள். | மத் 16:7 மத் 16:8 லூக் 9:46 லூக் 20:5 |
| 17 | இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனைபண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா? | மாற் 2:8 யோவா 2:24 யோவா 2:25 யோவா 16:30 யோவா 21:17 எபிரெ 4:12 எபிரெ 4:13 வெளிப் 2:23 |
| 18 | உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவுகூராமலுமிருக்கிறீர்களா? | மாற் 4:12 உபா 29:4 சங் 69:23 சங் 115:5-8 ஏசா 6:9 ஏசா 6:10 ஏசா 42:18-20 ஏசா 44:18 எரே 5:21 மத் 13:14 மத் 13:15 யோவா 12:40 அப் 28:26 அப் 28:27 ரோம 11:8 |
| 19 | நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார், பன்னிரண்டு என்றார்கள். | மாற் 6:38-44 மத் 14:17-21 லூக் 9:12-17 யோவா 6:5-13 |
| 20 | நான் ஏழு அப்பங்களை நாலாயிரம்பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள். | மாற் 8:1-9 மத் 15:34-38 |
| 21 | அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார். | மாற் 8:12 மாற் 8:17 மாற் 6:52 மாற் 9:19 சங் 94:8 மத் 16:11 மத் 16:12 யோவா 14:9 1கொரி 6:5 1கொரி 15:34 |
| 22 | பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவனைத் தொடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். | மாற் 6:45 மத் 11:21 லூக் 9:10 லூக் 10:13 யோவா 1:44 யோவா 12:21 |
| 23 | அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து: எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார். | ஏசா 51:18 எரே 31:32 அப் 9:8 எபிரெ 8:9 |
| 24 | அவன் ஏறிட்டுப் பார்த்து: நடக்கிற மனுஷரை மரங்களைப்போலக் காண்கிறேன் என்றான். | நியா 9:36 ஏசா 29:18 ஏசா 32:3 1கொரி 13:9-12 |
| 25 | பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான். | நீதி 4:18 மத் 13:12 பிலிப் 1:6 1பேது 2:9 2பேது 3:18 |
| 26 | பின்பு அவர் அவனை நோக்கி: நீ கிராமத்தில் பிரவேசியாமலும், கிராமத்தில் இதை ஒருவருக்கும் சொல்லாமலும் இரு என்று சொல்லி, அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார். | மாற் 5:43 மாற் 7:36 மத் 8:4 மத் 9:30 மத் 12:16 |
| 27 | பின்பு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் புறப்பட்டு, பிலிப்பு செசரியா பட்டணத்தைச் சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். | மத் 16:13-20 |
| 28 | அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். | மாற் 6:14-16 மத் 14:2 மத் 16:14 லூக் 9:7-9 |
| 29 | அப்பொழுது, அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் கிறிஸ்து என்றான். | மாற் 4:11 மத் 16:15 லூக் 9:20 1பேது 2:7 |
| 30 | அப்பொழுது தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு அவர்களுக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார். | மாற் 8:26 மாற் 7:36 மாற் 9:9 மத் 16:20 லூக் 9:21 |
| 31 | அல்லாமலும், மனுஷகுமாரன் பலபாடுகள்பட்டு, மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றுநாளைக்குப்பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். | மாற் 9:31 மாற் 9:32 மாற் 10:33 மாற் 10:34 மத் 16:21 மத் 17:22 மத் 20:17-19 லூக் 9:22 லூக் 18:31-34 லூக் 24:6 லூக் 24:7 லூக் 24:26 லூக் 24:44 |
| 32 | இந்த வார்த்தையை அவர் தாராளமாகச் சொன்னார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான். | யோவா 16:25 யோவா 16:29 |
| 33 | அவர் திரும்பித் தம்முடைய சீஷரைப் பார்த்து, பேதுருவை நோக்கி: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி, அவனைக் கடிந்து கொண்டார். | மாற் 3:5 மாற் 3:34 லூக் 22:61 |
| 34 | பின்பு அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். | மாற் 7:14 லூக் 9:23 லூக் 20:45 |
| 35 | தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். | எஸ்தர் 4:11-16 எரே 26:20-24 மத் 10:39 மத் 16:25 லூக் 9:24 லூக் 17:33 யோவா 12:25 யோவா 12:26 அப் 20:24 அப் 21:13 2தீமோ 2:11-13 2தீமோ 4:6-8 எபிரெ 11:35 வெளிப் 2:10 வெளிப் 7:14 வெளிப் 12:11 |
| 36 | மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? | யோபு 2:4 சங் 49:17 சங் 73:18-20 மத் 4:8-10 மத் 16:26 லூக் 9:25 லூக் 12:19 லூக் 12:20 லூக் 16:19-23 பிலிப் 3:7-9 வெளிப் 18:7 வெளிப் 18:8 |
| 37 | மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? | சங் 49:7 சங் 49:8 1பேது 1:18 1பேது 1:19 |
| 38 | ஆதலால் விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக் குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமைபொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார் என்றார். | மத் 10:32 மத் 10:33 லூக் 19:26 லூக் 12:8 லூக் 12:9 அப் 5:41 ரோம 1:16 கலா 6:14 2தீமோ 1:8 2தீமோ 1:12 2தீமோ 1:16 2தீமோ 2:12 2தீமோ 2:13 எபிரெ 11:26 எபிரெ 12:2 எபிரெ 12:3 எபிரெ 13:13 1யோவா 2:23 |