| 1 | எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், வேதபாரகரில் சிலரும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். | மாற் 3:22 மத் 15:1 லூக் 5:17 லூக் 11:53 லூக் 11:54 |
| 2 | அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர் கழுவாத அசுத்த கைகளாலே போஜனம்பண்ணுகிறதை அவர்கள் கண்டு குற்றம்பிடித்தார்கள். | அப் 10:14 அப் 10:15 அப் 10:28 |
| 3 | ஏனெனில் பரிசேயர் முதலிய யூதர் அனைவரும் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கைக்கொண்டு, அடிக்கடி கைகழுவினாலொழியச் சாப்பிடமாட்டார்கள்; | மாற் 7:7-10 மாற் 7:13-10 மத் 15:2-6 கலா 1:14 கொலோ 2:8 கொலோ 2:21-23 1பேது 1:18 |
| 4 | கடையிலிருந்து வரும்போதும் ஸ்நானம்பண்ணாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும், கிண்ணங்களையும், செப்புக்குடங்களையும், மணைகளையும் கழுவுகிறதுமல்லாமல், வேறு அநேக ஆசாரங்களையும் கைக்கொண்டுவருவார்கள். | யோபு 9:30 யோபு 9:31 சங் 26:6 ஏசா 1:16 எரே 4:14 மத் 27:24 லூக் 11:38 லூக் 11:39 யோவா 2:6 யோவா 3:25 எபிரெ 9:10 யாக் 4:8 1யோவா 1:7 |
| 5 | அப்பொழுது, அந்தப் பரிசேயரும் வேதபாரகரும் அவரை நோக்கி: உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன் கை கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள். | மாற் 2:16-18 மத் 15:2 அப் 21:21 அப் 21:24 ரோம 4:12 2தெச 3:6 2தெச 3:11 |
| 6 | அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்றும், | ஏசா 29:13 மத் 15:7-9 அப் 28:25 |
| 7 | மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான். | 1சாமு 12:21 மல்கி 3:14 மத் 6:7 மத் 15:9 1கொரி 15:14 1கொரி 15:58 தீத் 3:9 யாக் 1:26 யாக் 2:20 |
| 8 | நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்துவருகிறீர்கள் என்றார். | ஏசா 1:12 |
| 9 | பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்கு தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது. | 2இரா 16:10-16 ஏசா 24:5 ஏசா 29:13 எரே 44:16 எரே 44:17 தானி 7:25 தானி 11:36 மத் 15:3-6 2தெச 2:4 |
| 10 | எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே. | மாற் 10:19 யாத் 20:12 உபா 5:16 |
| 11 | நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி, | மத் 15:5 மத் 23:18 1தீமோ 5:4-8 |
| 12 | அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல்; |
| 13 | நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார். | மாற் 7:9 ஏசா 8:20 எரே 8:8 எரே 8:9 ஓசி 8:12 மத் 5:17-20 மத் 15:6 தீத் 1:14 |
| 14 | பின்பு அவர் ஜனங்களெல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: நீங்கள் எல்லாரும் எனக்குச் செவிகொடுத்து உணருங்கள். | 1இரா 18:21 1இரா 22:28 சங் 49:1 சங் 49:2 சங் 94:8 மத் 15:10 லூக் 12:1 லூக் 12:54-57 லூக் 20:45-47 |
| 15 | மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும். | மாற் 7:18-20 லேவி 11:42-47 அப் 10:14-16 அப் 10:28-16 அப் 11:8-10 அப் 15:20 அப் 15:21 ரோம 14:17 1கொரி 10:25 1தீமோ 4:3-5 தீத் 1:15 எபிரெ 9:10 எபிரெ 13:9 |
| 16 | கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார். | மாற் 4:9 மாற் 4:23 மத் 11:15 வெளிப் 2:7 வெளிப் 2:11 வெளிப் 2:17 வெளிப் 2:29 வெளிப் 3:6 வெளிப் 3:13 வெளிப் 3:22 |
| 17 | அவர் ஜனங்களைவிட்டு வீட்டுக்குள் பிரவேசித்தபோது, அவருடைய சீஷர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள். | மாற் 4:10 மாற் 4:34 மத் 13:10 மத் 13:36 மத் 15:15 |
| 18 | அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா? | மாற் 4:13 ஏசா 28:9 ஏசா 28:10 எரே 5:4 எரே 5:5 மத் 15:16 மத் 15:17 மத் 16:11 லூக் 24:25 யோவா 3:10 1கொரி 3:2 எபிரெ 5:11 |
| 19 | அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப்போகும். | மத் 15:17 1கொரி 6:13 கொலோ 2:21 கொலோ 2:22 |
| 20 | மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். | மாற் 7:15 சங் 41:6 எபிரெ 7:6 மீகா 2:1 மத் 12:34-37 யாக் 1:14 யாக் 1:15 யாக் 3:6 யாக் 4:1 |
| 21 | எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாதசிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், | ஆதி 6:5 ஆதி 8:21 யோபு 14:4 யோபு 15:14-16 யோபு 25:4 சங் 14:1 சங் 14:3 சங் 53:1 சங் 53:3 சங் 58:2 சங் 58:3 நீதி 4:23 எரே 4:14 எரே 17:9 மத் 15:19 மத் 23:25-28 லூக் 16:15 அப் 5:4 அப் 8:22 ரோம 7:5 ரோம 7:8 ரோம 8:7 ரோம 8:8 கலா 5:19-21 தீத் 3:3 யாக் 1:14 யாக் 1:15 யாக் 4:1-3 1பேது 4:2 1பேது 4:3 |
| 22 | களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். | உபா 15:9 உபா 28:54 உபா 28:56 1சாமு 18:8 1சாமு 18:9 நீதி 23:6 நீதி 28:22 மத் 20:15 |
| 23 | பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். | மாற் 7:15 மாற் 7:18 1கொரி 3:17 தீத் 1:15 யூதா 1:8 |
| 24 | பின்பு, அவர் எழுந்து அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில் போய், ஒரு வீட்டுக்குள் பிரவேசித்து, ஒருவரும் அதை அறியாதிருக்க விரும்பியும், அவர் மறைவாயிருக்கக் கூடாமற்போயிற்று. | மத் 15:21-28 |
| 25 | அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறு பெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள். | மத் 15:22 |
| 26 | அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டாள். | ஏசா 49:12 கலா 3:28 கொலோ 3:11 |
| 27 | இயேசு அவளை நோக்கி: முந்திப்பிள்ளைகள் திருப்தியடையட்டும்; பிள்ளகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். | மத் 7:6 மத் 10:5 மத் 15:23-28 அப் 22:21 ரோம 15:8 எபே 2:12 |
| 28 | அதற்கு அவள்: மெய்தான், ஆண்டவரே, ஆகிலும், மேஜையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். | சங் 145:16 ஏசா 45:22 ஏசா 49:6 மத் 5:45 லூக் 7:6-8 லூக் 15:30-32 அப் 11:17 அப் 11:18 ரோம 3:29 ரோம 10:12 ரோம 15:8 ரோம 15:9 எபே 2:12-14 எபே 3:8 |
| 29 | அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம், பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்றார். | ஏசா 57:15 ஏசா 57:16 ஏசா 66:2 மத் 5:3 மத் 8:9-13 1யோவா 3:8 |
| 30 | அவள் தன் வீட்டுக்கு வந்தபொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள். | யோவா 4:50-52 |
| 31 | மறுபடியும், அவர் தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளை விட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின் வழியாய்க் கலிலேயாக் கடலருகே வந்தார். | மாற் 7:24 மத் 15:29-31 |
| 32 | அங்கே கொன்னைவாயுடைய ஒரு செவிடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவர் தமது கையை அவன்மேல் வைக்கும்படி வேண்டிக்கொண்டார்கள். | மத் 9:32 மத் 9:33 லூக் 11:14 |
| 33 | அப்பொழுது, அவர் அவனை ஜனக்கூட்டத்தை விட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாவைத் தொட்டு; | மாற் 5:40 மாற் 8:23 1இரா 17:19-22 2இரா 4:4-6 2இரா 4:33-6 2இரா 4:34-6 யோவா 9:6 யோவா 9:7 |
| 34 | வானத்தை அண்ணாந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம். | மாற் 6:41 யோவா 11:41 யோவா 17:1 |
| 35 | உடனே அவனுடைய செவிகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாவின் கட்டும் அவிழ்ந்து, அவன் செவ்வையாய்ப் பேசினான். | மாற் 2:12 சங் 33:9 ஏசா 32:3 ஏசா 32:4 ஏசா 35:5 ஏசா 35:6 மத் 11:5 |
| 36 | அதை ஒருவருக்கும் சொல்லவேண்டாமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்; ஆகிலும் எவ்வளவு அதிகமாய் அவர்களுக்குக் கட்டளையிட்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் அதைப் பிரசித்தம்பண்ணி, | மாற் 1:44 மாற் 1:45 மாற் 3:12 மாற் 5:43 மாற் 8:26 |
| 37 | எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்; செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும்பண்ணுகிறார் என்று சொல்லி, மேன்மேலும் ஆச்சரியப்பட்டார்கள். | மாற் 1:27 மாற் 2:12 மாற் 4:41 மாற் 5:42 மாற் 6:51 சங் 139:14 அப் 2:7-12 அப் 3:10-13 அப் 14:11 |