| 1 | அவர் மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் கடலிலே நின்ற ஒரு படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கடற்கரையில் நின்றார்கள். | மாற் 2:13 மத் 13:1 மத் 13:2-9 லூக் 8:4-8 |
| 2 | அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்; போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது: | மாற் 4:11 மாற் 4:34 மாற் 3:23 சங் 49:4 சங் 78:2 மத் 13:3 மத் 13:10 மத் 13:34 மத் 13:35 |
| 3 | கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். | மாற் 4:9 மாற் 4:23 மாற் 7:14 மாற் 7:16 உபா 4:1 சங் 34:11 சங் 45:10 நீதி 7:24 நீதி 8:32 ஏசா 46:3 ஏசா 46:12 ஏசா 55:1 ஏசா 55:2 அப் 2:14 எபிரெ 2:1-3 யாக் 2:5 வெளிப் 2:7 வெளிப் 2:11 வெளிப் 2:29 |
| 4 | அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. | மாற் 4:15 ஆதி 15:11 மத் 13:4 மத் 13:19 லூக் 8:5 லூக் 8:12 |
| 5 | சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது; அதற்கு ஆழமான மண்ணில்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது; | மாற் 4:16 மாற் 4:17 எசே 11:19 எசே 36:26 ஓசி 10:12 ஆமோ 6:12 மத் 13:5 மத் 13:6 மத் 13:20 லூக் 8:6 லூக் 8:13 |
| 6 | வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று. | உன்ன 1:6 ஏசா 25:4 யோனா 4:8 யாக் 1:11 வெளிப் 7:16 |
| 7 | சிலவிதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, அது பலன் கொடாதபடி, அதை நெருக்கிப்போட்டது. | மாற் 4:18 மாற் 4:19 ஆதி 3:17 ஆதி 3:18 எரே 4:3 மத் 13:7 மத் 13:22 லூக் 8:7 லூக் 8:14 லூக் 12:15 லூக் 21:34 1தீமோ 6:9 1தீமோ 6:10 1யோவா 2:15 1யோவா 2:16 |
| 8 | சிலவிதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது. | மாற் 4:20 ஏசா 58:1 எரே 23:29 மத் 13:8 மத் 13:23 லூக் 8:8 லூக் 8:15 யோவா 1:12 யோவா 1:13 யோவா 3:19-21 யோவா 7:17 யோவா 15:5 அப் 17:11 கொலோ 1:6 எபிரெ 4:1 எபிரெ 4:2 யாக் 1:19-22 1பேது 2:1-3 |
| 9 | கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று அவர்களுக்குச் சொன்னார். | மாற் 4:3 மாற் 4:23 மாற் 4:24 மாற் 7:14 மாற் 7:16 மத் 11:15 மத் 13:9 மத் 15:10 லூக் 8:18 வெளிப் 3:6 வெளிப் 3:13 வெளிப் 3:22 |
| 10 | அவர் தனித்திருக்கிறபோது, பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள். | மாற் 4:34 மாற் 7:17 நீதி 13:20 மத் 13:10-17 மத் 13:36-17 லூக் 8:9-15 |
| 11 | அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. | மத் 11:25 மத் 13:11 மத் 13:12 மத் 13:16 மத் 16:17 லூக் 8:10 லூக் 10:21-24 1கொரி 4:7 2கொரி 4:6 எபே 1:9 எபே 2:4-10 தீத் 3:3-7 யாக் 1:16-18 1யோவா 5:20 |
| 12 | அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார். | உபா 29:4 ஏசா 6:9 ஏசா 6:10 ஏசா 44:18 எரே 5:21 மத் 13:14 மத் 13:15 லூக் 8:10 யோவா 12:37-41 அப் 28:25-27 ரோம 11:8-10 |
| 13 | பின்பு அவர் அவர்களை நோக்கி: இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்? | மாற் 7:17 மாற் 7:18 மத் 13:51 மத் 13:52 மத் 15:15-17 மத் 16:8 மத் 16:9 லூக் 24:25 1கொரி 3:1 1கொரி 3:2 எபிரெ 5:11-14 வெளிப் 3:19 |
| 14 | விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான். | மாற் 4:3 ஏசா 32:20 மத் 13:19 மத் 13:37 லூக் 8:11 |
| 15 | வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வசனம் விதைக்கப்படுகிற வழியருகானவர்கள். | மாற் 4:4 ஆதி 19:14 ஏசா 53:1 மத் 22:5 லூக் 8:12 லூக் 14:18 லூக் 14:19 அப் 17:18-20 அப் 17:32-20 அப் 18:14-17 அப் 25:19 அப் 25:20 அப் 26:31 அப் 26:32 எபிரெ 2:1 எபிரெ 12:16 |
| 16 | அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும், | மாற் 6:20 மாற் 10:17-22 எசே 33:31 எசே 33:32 மத் 8:19 மத் 8:20 மத் 13:20 மத் 13:21 லூக் 8:13 யோவா 5:35 அப் 8:13 அப் 8:18-21 அப் 24:25 அப் 24:26 அப் 26:28 |
| 17 | தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள். | மாற் 4:5 மாற் 4:6 யோபு 19:28 யோபு 27:8-10 மத் 12:31 லூக் 12:10 யோவா 8:31 யோவா 15:2-7 2தீமோ 1:15 2தீமோ 2:17 2தீமோ 2:18 2தீமோ 4:10 1யோவா 2:19 |
| 18 | வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள். | மாற் 4:7 எரே 4:3 மத் 13:22 லூக் 8:14 |
| 19 | இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள். | லூக் 10:41 லூக் 12:17-21 லூக் 12:29-21 லூக் 12:30-21 லூக் 14:18-20 லூக் 21:34 பிலிப் 4:6 2தீமோ 4:10 |
| 20 | வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் என்றார். | மாற் 4:8 மத் 13:23 லூக் 8:15 யோவா 15:4 யோவா 15:5 ரோம 7:4 கலா 5:22 கலா 5:23 பிலிப் 1:11 கொலோ 1:10 1தெச 4:1 2பேது 1:8 |
| 21 | பின்னும் அவர் அவர்களை நோக்கி: விளக்கைத் தண்டின்மேல் வைக்கிறதற்கேயன்றி, மரக்காலின் கீழாகிலும், கட்டிலின் கீழாகிலும், வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா? | ஏசா 60:1-3 மத் 5:15 லூக் 8:16 லூக் 11:33 1கொரி 12:7 எபே 5:3-15 பிலிப் 2:15 பிலிப் 2:16 |
| 22 | வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்குவராத மறைபொருளுமில்லை. | சங் 40:9 சங் 40:10 சங் 78:2-4 பிரச 12:14 மத் 10:26 மத் 10:27 லூக் 8:17 லூக் 12:2 லூக் 12:3 அப் 4:20 அப் 20:27 1கொரி 4:5 1யோவா 1:1-3 |
| 23 | கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார். | மாற் 4:9 மத் 11:15 வெளிப் 2:7 வெளிப் 2:11 வெளிப் 2:17 வெளிப் 2:29 |
| 24 | பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள். எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்; கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும். | நீதி 19:27 லூக் 8:18 அப் 17:11 எபிரெ 2:1 1யோவா 4:1 1பேது 2:2 2பேது 2:1-3 |
| 25 | உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார். | மத் 13:12 மத் 25:28 மத் 25:29 லூக் 8:18 லூக் 16:9-12 லூக் 19:24-26 யோவா 15:2 |
| 26 | பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து; | மத் 3:2 மத் 4:17 மத் 13:11 மத் 13:31 மத் 13:33 லூக் 13:18 |
| 27 | இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது. | பிரச 8:17 பிரச 11:5 யோவா 3:7 யோவா 3:8 1கொரி 15:37 1கொரி 15:38 2தெச 1:3 2பேது 3:18 |
| 28 | எப்படியென்றால், நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாய்க் கொடுக்கும். | ஆதி 1:11 ஆதி 1:12 ஆதி 2:4 ஆதி 2:5 ஆதி 2:9 ஆதி 4:11 ஆதி 4:12 ஏசா 61:11 |
| 29 | பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார். | யோபு 5:26 2தீமோ 4:7 2தீமோ 4:8 |
| 30 | பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்? | புலம் 2:13 மத் 11:16 லூக் 13:18 லூக் 13:20 லூக் 13:21 |
| 31 | அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறியதாயிருக்கிறது; | மத் 13:31-33 லூக் 13:18 லூக் 13:19 |
| 32 | விதைக்கப்பட்ட பின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார். | நீதி 4:18 ஏசா 11:9 |
| 33 | அவர்கள் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார். | மத் 13:34 மத் 13:35 |
| 34 | உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார். | மாற் 4:10 மாற் 7:17-23 மத் 13:36-43 மத் 15:15-20 லூக் 8:9 லூக் 8:10 லூக் 24:27 லூக் 24:44-46 |
| 35 | அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார். | மத் 8:23 லூக் 8:22 |
| 36 | அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக்கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் அவரோடேகூட இருந்தது. | மாற் 4:1 மாற் 3:9 |
| 37 | அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று. | மத் 8:23 மத் 8:24 லூக் 8:22 லூக் 8:23 |
| 38 | கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையைவைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக்கவலையில்லையா என்றார்கள். | யோவா 4:6 எபிரெ 2:17 எபிரெ 4:15 |
| 39 | அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல்உண்டாயிற்று. | யாத் 14:16 யாத் 14:22 யாத் 14:28 யாத் 14:29 யோபு 38:11 சங் 29:10 சங் 93:3 சங் 93:4 சங் 104:7-9 சங் 107:29 சங் 148:8 நீதி 8:29 எரே 5:22 |
| 40 | அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார். | சங் 46:1-3 ஏசா 42:3 ஏசா 43:2 மத் 8:26 மத் 14:31 லூக் 8:25 யோவா 6:19 யோவா 6:20 |
| 41 | அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். | மாற் 5:33 1சாமு 12:18-20 1சாமு 12:24-20 சங் 89:7 யோனா 1:9 யோனா 1:10 யோனா 1:15 யோனா 1:16 மல்கி 2:5 எபிரெ 12:28 வெளிப் 15:4 |