| 1 | சிலநாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டிலிருக்கிறாரென்று ஜனங்கள் கேள்விப்பட்டு; | மாற் 1:45 மத் 9:1 லூக் 5:18 |
| 2 | உடனே வாசலுக்கு முன்னும் நிற்க இடம்போதாதபடிக்கு அநேகர் கூடிவந்தார்கள்; அவர்களுக்கு வசனத்தைப் போதித்தார். | மாற் 2:13 மாற் 1:33 மாற் 1:37 மாற் 1:45 மாற் 4:1 மாற் 4:2 லூக் 5:17 லூக் 12:1 |
| 3 | அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்; | மத் 9:1 மத் 9:2-8 லூக் 5:18-26 |
| 4 | ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள். | உபா 22:8 லூக் 5:19 |
| 5 | இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். | ஆதி 22:12 யோவா 2:25 அப் 11:23 அப் 14:9 எபே 2:8 1தெச 1:3 1தெச 1:4 யாக் 2:18-22 |
| 6 | அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்: | மாற் 8:17 மத் 16:7 மத் 16:8 லூக் 5:21 லூக் 5:22 2கொரி 10:5 |
| 7 | இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். | மாற் 14:64 மத் 9:3 மத் 26:65 யோவா 10:33 யோவா 10:36 |
| 8 | அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன? | 1நாளா 29:17 மத் 9:4 லூக் 5:22 லூக் 6:8 லூக் 7:39 லூக் 7:40 யோவா 2:24 யோவா 2:25 யோவா 6:64 யோவா 21:17 எபிரெ 4:13 வெளிப் 2:23 |
| 9 | உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது? | மத் 9:5 லூக் 5:22-25 |
| 10 | பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: | தானி 7:13 தானி 7:14 மத் 9:6-8 மத் 16:13 யோவா 5:20-27 அப் 5:31 1தீமோ 1:13-16 |
| 11 | நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். | மாற் 1:41 யோவா 5:8-10 யோவா 6:63 |
| 12 | உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்கும் முன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு: நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். | மாற் 1:27 மத் 9:8 மத் 12:23 லூக் 7:16 |
| 13 | அவர் மறுபடியும் புறப்பட்டுக் கடலருகே போனார்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்குப் போதகம்பண்ணினார். | மத் 9:9 மத் 13:1 |
| 14 | அவர் நடந்துபோகையில், அல்பேயுவின் குமாரனாகிய லேவி ஆயத்துறையில் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான். | மாற் 3:18 மத் 9:9 லூக் 5:27 |
| 15 | அப்பொழுது, அவனுடைய வீட்டிலே அவர் போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் அவரோடுகூட வந்திருந்தபடியால், அவர்களும் இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள். | மத் 9:10 மத் 9:11 மத் 21:31 மத் 21:32 லூக் 5:29 லூக் 5:30 லூக் 6:17 லூக் 15:1 |
| 16 | அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதை வேதபாரகரும் பரிசேயரும் கண்டு, அவருடைய சீஷரை நோக்கி: அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். | மாற் 2:7 ஏசா 65:5 லூக் 15:2-7 லூக் 18:11 லூக் 19:7 லூக் 19:10 1கொரி 2:15 எபிரெ 12:3 |
| 17 | இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். | மத் 9:12 மத் 9:13 லூக் 5:31 லூக் 5:32 லூக் 15:7 லூக் 15:29 லூக் 16:15 யோவா 9:34 யோவா 9:40 |
| 18 | யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம்பண்ணிவந்தார்கள். அவர்கள் அவரிடத்தில் வந்து: யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசிக்கிறார்களே, உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள். | மத் 9:14-17 லூக் 5:33-39 |
| 19 | அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் உபவாசிப்பார்களா? மணவாளன் தங்களுடனே இருக்கும்வரைக்கும் உபவாசிக்கமாட்டார்களே. | ஆதி 29:22 நியா 14:10 நியா 14:11 சங் 45:14 உன்ன 6:8 மத் 25:1-10 |
| 20 | மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள். | சங் 45:11 உன்ன 3:11 ஏசா 54:5 ஏசா 62:5 யோவா 3:29 2கொரி 11:2 வெளிப் 19:7 வெளிப் 21:9 |
| 21 | ஒருவனும் கோடித்துண்டைப் பழையவஸ்திரத்தோடு இணைக்கமாட்டான், இணைத்தால், அதினோடே இணைத்த புதியதுண்டு பழையதை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும். | சங் 103:13-15 ஏசா 57:16 1கொரி 10:13 |
| 22 | ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால், புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போகும், துருத்திகளும் கெட்டுப்போகும்; புதுரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும் என்றார். | யோசு 9:4 யோசு 9:13 யோபு 32:19 சங் 119:80 சங் 119:83 மத் 9:17 லூக் 5:37 லூக் 5:38 |
| 23 | பின்பு, அவர் ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் கூட நடந்துபோகையில், கதிர்களைக் கொய்யத் தொடங்கினார்கள். | மத் 12:1-8 லூக் 6:1-5 |
| 24 | பரிசேயர் அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்றார்கள். | மாற் 2:7 மாற் 2:16 மத் 7:3-5 மத் 15:2 மத் 15:3 மத் 23:23 மத் 23:24 எபிரெ 12:3 |
| 25 | அதற்கு அவர்: தாவீதுக்கு உண்டான ஆபத்தில், தானும் தன்னோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது, | மாற் 12:20 மாற் 12:26 மத் 19:4 மத் 21:16 மத் 21:42 மத் 22:31 லூக் 10:26 |
| 26 | அவன் அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில் செய்ததை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தெய்வசமுகத்து அப்பங்களைத் தானும் புசித்துத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்றார். | 1சாமு 22:20-22 1சாமு 23:6 1சாமு 23:9 2சாமு 8:17 2சாமு 15:24 2சாமு 15:29 2சாமு 15:35 2சாமு 20:25 1இரா 1:7 1இரா 2:22 1இரா 2:26 1இரா 2:27 1இரா 4:4 |
| 27 | பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது; | யாத் 23:12 உபா 5:14 நெகே 9:13 நெகே 9:14 ஏசா 58:13 எசே 20:12 எசே 20:20 லூக் 6:9 யோவா 7:23 1கொரி 3:21 1கொரி 3:22 2கொரி 4:15 கொலோ 2:16 |
| 28 | ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார். | மாற் 3:4 மத் 12:8 லூக் 6:5 லூக் 13:15 லூக் 13:16 யோவா 5:9-11 யோவா 5:17-11 யோவா 9:5-11 யோவா 9:14-11 யோவா 9:16-11 எபே 1:22 வெளிப் 1:10 |