| 1 | இரண்டு நாளைக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும், அவரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி வகைதேடினார்கள். | மத் 6:2 லூக் 22:1 லூக் 22:2 யோவா 11:53-57 யோவா 13:1 |
| 2 | ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகம் உண்டாகாதபடிக்கு, பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள். | நீதி 19:21 நீதி 21:30 புலம் 3:27 மத் 26:5 |
| 3 | அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். | மத் 26:6 மத் 26:7 யோவா 11:2 யோவா 12:1-3 |
| 4 | அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே விசனமடைந்து: இந்தத் தைலத்தை இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன்? | பிரச 4:4 மத் 26:8 மத் 26:9 யோவா 12:4 யோவா 12:5 |
| 5 | இதை முந்நூறு பணத்துக்கு அதிகமான கிரயத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைக்குறித்து முறுமுறுத்தார்கள். | மத் 18:28 யோவா 6:7 |
| 6 | இயேசு அவர்களை நோக்கி: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். | யோபு 42:7 யோபு 42:8 ஏசா 54:17 2கொரி 10:18 |
| 7 | தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள், உங்களுக்கு மனதுண்டாகும்போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யலாம், நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன். | உபா 15:11 மத் 25:35-45 மத் 26:11 யோவா 12:7 யோவா 12:8 2கொரி 9:13 2கொரி 9:14 பிலேமோ 1:7 யாக் 2:14-16 1யோவா 3:16-19 |
| 8 | இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள். | 1நாளா 28:2 1நாளா 28:3 1நாளா 29:1-17 2நாளா 31:20 2நாளா 31:21 2நாளா 34:19-33 சங் 110:3 2கொரி 8:1-3 2கொரி 8:12-3 |
| 9 | இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். | மாற் 16:15 மத் 26:12 மத் 26:13 |
| 10 | அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியருக்குக் காட்டிக்கொடுக்கும்படி அவர்களிடத்திற்குப்போனான். | மத் 26:14-16 லூக் 22:3-6 யோவா 13:2 யோவா 13:30 |
| 11 | அவர்கள் அதைக் கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுப்போம் என்று வாக்குத்தத்தம் பண்ணினார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குத் தகுந்த சமயம் பார்த்துக்கொண்டிருந்தான். | ஓசி 7:3 லூக் 22:5 |
| 12 | பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற முதலாம் நாளிலே, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே போய் ஆயத்தம்பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள். | யாத் 12:6 யாத் 12:8 யாத் 12:18 யாத் 13:3 லேவி 23:5 லேவி 23:6 எண் 28:16-18 உபா 16:1-4 மத் 26:17 லூக் 22:7 |
| 13 | அவர் தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள், அங்கே தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான், அவன் பின்னே போங்கள்; | மாற் 11:2 மாற் 11:3 மத் 8:9 மத் 26:18 மத் 26:19 லூக் 19:30-33 லூக் 22:10-13 யோவா 2:5 யோவா 15:14 எபிரெ 4:13 எபிரெ 5:9 |
| 14 | அவன் எந்த வீட்டிற்குள் பிரவேசிக்கிறானோ அந்த வீட்டு எஜமானை நீங்கள் நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கேயென்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள். | மாற் 10:17 மாற் 11:3 யோவா 11:28 யோவா 13:13 |
| 15 | அவன் கம்பளம் முதலானவைகள் விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற விஸ்தாரமான மேல்வீட்டறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே நமக்காக ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார். | 2நாளா 6:30 சங் 110:3 நீதி 16:1 நீதி 21:1 நீதி 21:2 யோவா 2:24 யோவா 2:25 யோவா 21:17 2தீமோ 2:19 எபிரெ 4:13 |
| 16 | அப்படியே, அவருடைய சீஷர் புறப்பட்டு நகரத்தில் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள். | லூக் 22:13 லூக் 22:35 யோவா 16:4 |
| 17 | சாயங்காலமானபோது, அவர் பன்னிருவரோடுங்கூட அவ்விடத்திற்கு வந்தார். | மத் 26:20 லூக் 22:14 |
| 18 | அவர்கள் பந்தியமர்ந்து போஜனம்பண்ணுகையில், இயேசு அவர்களை நோக்கி: என்னுடனே புசிக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். | மத் 26:21 |
| 19 | அப்பொழுது அவர்கள் துக்கமடைந்து: நானோ? நானோ? என்று ஒவ்வொருவரும், அவரிடத்தில் கேட்கத் தொடங்கினார்கள். | மத் 26:22 லூக் 22:21-23 யோவா 13:22 |
| 20 | அவர் பிரதியுத்தரமாக: என்னுடனேகூடத் தாலத்தில் கையிடுகிறவனாகிய பன்னிருவரிலொருவனே அவன் என்று சொல்லி; | மாற் 14:43 மத் 26:47 லூக் 22:47 யோவா 6:71 |
| 21 | மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ! அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார். | மாற் 14:49 ஆதி 3:15 சங் 22:1-31 சங் 69:1-36 ஏசா 52:14 ஏசா 53:1-12 தானி 9:24 தானி 9:26 சகரி 13:7 மத் 26:24 மத் 26:54 மத் 26:56 லூக் 22:22 லூக் 24:26 லூக் 24:27 லூக் 24:44 யோவா 19:28 யோவா 19:36 யோவா 19:37 அப் 2:23 அப் 4:27 அப் 13:27-29 |
| 22 | அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். | மத் 26:26-29 லூக் 22:19 லூக் 22:20 1கொரி 10:16 1கொரி 10:17 1கொரி 11:23-29 |
| 23 | பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லாரும் அதிலே பானம்பண்ணினார்கள். | மாற் 14:22 லூக் 22:17 ரோம 14:6 1கொரி 10:16 |
| 24 | அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. | யாத் 24:8 சகரி 9:11 யோவா 6:53 1கொரி 10:16 1கொரி 11:25 எபிரெ 9:15-23 எபிரெ 13:20 எபிரெ 13:21 |
| 25 | நான் தேவனுடைய ராஜ்யத்தில் நவமான ரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரைக்கும் திராட்சப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். | சங் 104:15 மத் 26:29 லூக் 22:16-18 லூக் 22:29-18 லூக் 22:30-18 |
| 26 | அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள். | சங் 47:6 சங் 47:7 அப் 16:25 1கொரி 14:15 எபே 5:18-20 கொலோ 3:16 யாக் 5:13 வெளிப் 5:9 |
| 27 | அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும், என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்களெல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். | மத் 26:31 லூக் 22:31 லூக் 22:32 யோவா 16:1 யோவா 16:32 2தீமோ 4:16 |
| 28 | ஆகிலும் நான் உயிர்த்தெழுந்தபின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார். | மாற் 16:7 மத் 16:21 மத் 26:32 மத் 28:7 மத் 28:10 மத் 28:16 யோவா 21:1 1கொரி 15:4-6 |
| 29 | அதற்குப் பேதுரு: உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் இடறலடையேன் என்றான். | மத் 26:33-35 லூக் 22:33 லூக் 22:34 யோவா 13:36-38 யோவா 21:15 |
| 30 | இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்குமுன்னே, நீ மூன்றுதரம் என்னை மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். | ஆதி 1:5 ஆதி 1:8 ஆதி 1:13 ஆதி 1:19 ஆதி 1:23 |
| 31 | அதற்கு அவன்: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொன்னான்; எல்லாரும் அப்படியே சொன்னார்கள். | 2இரா 8:13 யோபு 40:4 யோபு 40:5 சங் 30:6 நீதி 16:18 நீதி 18:24 நீதி 29:23 எரே 10:23 எரே 17:9 |
| 32 | பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: நான் ஜெபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; | மத் 26:36-46 லூக் 22:39 யோவா 18:1-11 |
| 33 | பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார். | மாற் 1:16-19 மாற் 5:37 மாற் 9:2 |
| 34 | அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி, | ஏசா 53:3 ஏசா 53:4 ஏசா 53:12 புலம் 1:12 யோவா 12:27 |
| 35 | சற்று அப்புறம்போய், தரையிலே விழுந்து, அந்த வேளை தம்மைவிட்டு நீங்கிப்போகக்கூடுமானால் அது நீங்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டு: | ஆதி 17:3 உபா 9:18 1நாளா 21:15 1நாளா 21:16 2நாளா 7:3 மத் 26:39 லூக் 17:15 லூக் 17:16 அப் 10:25 அப் 10:26 எபிரெ 5:7 வெளிப் 4:10 வெளிப் 5:14 |
| 36 | அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார். | மத் 6:9 ரோம 8:15 ரோம 8:16 கலா 4:6 |
| 37 | பின்பு அவர் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரைபண்ணுகிறாயா? ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா? | மாற் 14:40 மாற் 14:41 லூக் 9:31 லூக் 9:32 லூக் 22:45 லூக் 22:46 |
| 38 | நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். | மாற் 14:34 மத் 24:42 மத் 25:13 மத் 26:41 லூக் 21:36 லூக் 22:40 லூக் 22:46 1கொரி 16:13 1பேது 5:8 வெளிப் 3:2 வெளிப் 3:3 வெளிப் 3:10 |
| 39 | அவர் மறுபடியும் போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார். | மத் 6:7 மத் 26:42-44 லூக் 18:1 2கொரி 12:8 |
| 40 | அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தபடியால், தாங்கள் மறுமொழியாக அவருக்குச் சொல்லுவது இன்னதென்று அறியாதிருந்தார்கள். | மாற் 9:33 மாற் 9:34 ஆதி 44:16 ரோம 3:19 |
| 41 | அவர் மூன்றாந்தரம் வந்து: இனி நித்திரைப்பண்ணி இளைப்பாறுங்கள்; போதும், வேளை வந்தது, இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார். | மாற் 7:9 நியா 10:14 1இரா 18:27 1இரா 22:15 2இரா 3:13 பிரச 11:9 எசே 20:39 மத் 26:45 மத் 26:46 |
| 42 | என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார். | மத் 26:46 யோவா 18:1 யோவா 18:2 |
| 43 | உடனே, அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடேகூடப் பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள், பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள். | மத் 26:47 லூக் 22:47 லூக் 22:48 யோவா 18:3-9 அப் 1:16 |
| 44 | அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன் தான், அவனைப் பிடித்துப் பத்திரமாய்க் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்குக் குறிப்புச் சொல்லியிருந்தான். | யாத் 12:13 யோசு 2:12 பிலிப் 1:28 2தெச 3:17 |
| 45 | அவன் வந்தவுடனே, அவரண்டையில் சேர்ந்து: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். | மாற் 12:14 ஏசா 1:3 மல்கி 1:6 மத் 23:8-10 லூக் 6:46 யோவா 13:13 யோவா 13:14 யோவா 20:16 |
| 46 | அப்பொழுது அவர்கள் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். | நியா 16:21 புலம் 4:20 யோவா 18:12 அப் 2:23 |
| 47 | அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதறவெட்டினான். | மத் 26:51-54 லூக் 22:49-51 யோவா 18:10 யோவா 18:11 |
| 48 | இயேசு அவர்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; | 1சாமு 24:14 1சாமு 24:15 1சாமு 26:18 மத் 26:55 லூக் 22:52 லூக் 22:53 |
| 49 | நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாயிருக்கிறது என்றார். | மாற் 11:15-18 மாற் 11:27-18 மாற் 12:35 மத் 21:23-27 லூக் 19:47 லூக் 19:48 லூக் 20:1 லூக் 20:2 லூக் 21:37 லூக் 21:38 யோவா 7:28-30 யோவா 7:37-30 யோவா 8:2 யோவா 8:12 யோவா 10:23 யோவா 18:20 |
| 50 | அப்பொழுது எல்லாரும் அவரை விட்டு ஓடிப்போனார்கள். | மாற் 14:27 யோபு 19:13 யோபு 19:14 சங் 38:11 சங் 88:7 சங் 88:8 சங் 88:18 ஏசா 63:3 யோவா 16:32 யோவா 18:8 2தீமோ 4:16 |
| 51 | ஒரு வாலிபன் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னே போனான்; அவனைப் பிடித்தார்கள். |
| 52 | அவன் தன் துப்பட்டியைப் போட்டுவிட்டு, நிர்வாணமாய் அவர்களை விட்டு ஓடிப்போனான். | மாற் 13:14-16 ஆதி 39:12 யோபு 2:4 |
| 53 | இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே ஆசாரியர் மூப்பர் வேதபாரகர் எல்லாரும் கூடிவந்திருந்தார்கள். | ஏசா 53:7 மத் 26:57-68 லூக் 22:54-62 யோவா 18:13 யோவா 18:14 யோவா 18:24 |
| 54 | பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் வந்து, சேவகரோடேகூட உட்கார்ந்து, நெருப்பண்டையிலே குளிர்க்காய்ந்துகொண்டிருந்தான். | மாற் 14:29-31 மாற் 14:38-31 1சாமு 13:7 மத் 26:58 |
| 55 | அப்பொழுது பிரதான ஆசாரியரும் ஆலோசனைசங்கத்தாரனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகச் சாட்சி தேடினார்கள்; அகப்படவில்லை. | 1இரா 21:10 1இரா 21:13 சங் 27:12 சங் 35:11 மத் 26:59 மத் 26:60 அப் 6:11-13 அப் 24:1-13 |
| 56 | அநேகர் அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒவ்வவில்லை. |
| 57 | அப்பொழுது சிலர் எழுந்து, கைவேலையாகிய இந்தத் தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைவேலையல்லாத வேறொன்றை மூன்று நாளைக்குள்ளே கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று, | மாற் 15:29 எரே 26:8 எரே 26:9 எரே 26:18 மத் 26:60 மத் 26:61 மத் 27:40 யோவா 2:18-21 அப் 6:13 அப் 6:14 |
| 58 | அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொன்னார்கள். | தானி 2:34 தானி 2:45 அப் 7:48 2கொரி 5:1 எபிரெ 9:11 எபிரெ 9:24 |
| 59 | அப்படிச் சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வாமற்போயிற்று. |
| 60 | அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான். | மாற் 15:3-5 மத் 26:62 மத் 26:63 யோவா 19:9 யோவா 19:10 |
| 61 | அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான். | சங் 39:1 சங் 39:2 சங் 39:9 ஏசா 53:7 மத் 27:12-14 அப் 8:32 1பேது 2:23 |
| 62 | அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார். | மாற் 15:2 மத் 26:64 மத் 27:11 லூக் 23:3 |
| 63 | பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? | ஏசா 36:22 ஏசா 37:1 எரே 36:23 எரே 36:24 அப் 14:13 அப் 14:14 |
| 64 | தேவதூஷணத்தைக் கேட்டீர்களே, உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான். அதற்கு அவர்களெல்லாரும்: இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள். | லேவி 24:16 1இரா 21:9-13 மத் 26:65 மத் 26:66 லூக் 22:71 யோவா 5:18 யோவா 8:58 யோவா 8:59 யோவா 10:31-33 யோவா 19:7 |
| 65 | அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரைக் குட்டவும், ஞானதிருஷ்டியினாலே பார்த்துச் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரரும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள். | மாற் 15:19 எண் 12:14 யோபு 30:10 ஏசா 50:6 ஏசா 52:14 ஏசா 53:3 மீகா 5:1 மத் 26:67 மத் 26:68 லூக் 22:63 லூக் 22:64 யோவா 18:22 யோவா 19:3 அப் 23:2 எபிரெ 12:2 |
| 66 | அத்தருணத்திலே பேதுரு கீழே அரமனை முற்றத்திலிருக்கையில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒருத்தி வந்து, | மாற் 14:54 மத் 26:58 மத் 26:69 மத் 26:70 லூக் 22:55-57 |
| 67 | குளிர்க்காய்ந்துகொண்டிருக்கிற பேதுருவைக் கண்டு, அவனை உற்றுப்பார்த்து: நீயும் நசரேயனாகிய இயேசுவோடே இருந்தாய் என்றாள். | மாற் 10:47 மத் 2:23 மத் 21:11 யோவா 1:45-49 யோவா 19:19 அப் 10:38 |
| 68 | அதற்கு அவன்: நான் அறியேன்; நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வெளியே வாசல் மண்டபத்துக்குப் போனான்; அப்பொழுது சேவல் கூவிற்று. | மாற் 14:29-31 யோவா 13:36-38 2தீமோ 2:12 2தீமோ 2:13 |
| 69 | வேலைக்காரி அவனை மறுபடியும் கண்டு: இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள். | யோவா 18:17 |
| 70 | அவன் மறுபடியும் மறுதலித்தான். சற்றுநேரத்துக்குப்பின்பு மறுபடியும் அருகே நிற்கிறவர்கள் பேதுருவைப் பார்த்து: மெய்யாகவே நீ அவர்களில் ஒருவன், நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்றார்கள். | மத் 26:73 மத் 26:74 லூக் 22:59 லூக் 22:60 யோவா 18:26 யோவா 18:27 |
| 71 | அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். | 2இரா 8:12-15 2இரா 10:32 எரே 17:9 1கொரி 10:12 |
| 72 | உடனே சேவல் இரண்டாந்தரம் கூவிற்று. சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைவுகூர்ந்து, மிகவும் அழுதான். | மாற் 14:30 மாற் 14:68 மத் 26:34 மத் 26:74 |