| 1 | அவர் தேவாலயத்தை விட்டுப் புறப்படும்போது, அவருடைய சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, இதோ, இந்தக் கல்லுகள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான். | மத் 24:1 மத் 24:2 லூக் 21:5-7 |
| 2 | இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பெரிய கட்டடங்களைக் காண்கிறாயே, ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார். | 1இரா 9:7 1இரா 9:8 2நாளா 7:20 2நாளா 7:21 எரே 26:18 மீகா 3:12 மத் 24:2 லூக் 19:41-44 லூக் 21:6 அப் 6:14 வெளிப் 11:2 |
| 3 | பின்பு, அவர் தேவாலயத்துக்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடத்தில் தனித்துவந்து: | மத் 24:3 |
| 4 | இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறுங்காலத்துக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். | தானி 12:6 தானி 12:8 மத் 24:3 லூக் 21:7 யோவா 21:21 யோவா 21:22 அப் 1:6 அப் 1:7 |
| 5 | இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். | எரே 29:8 மத் 24:4 மத் 24:5 லூக் 21:8 1கொரி 15:33 எபே 5:6 கொலோ 2:8 2தெச 2:3 1யோவா 4:1 வெளிப் 20:7 வெளிப் 20:8 |
| 6 | ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தைக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். | மாற் 13:22 எரே 14:14 எரே 23:21-25 யோவா 5:43 1யோவா 4:1 |
| 7 | யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காதேயுங்கள்; இவைகள் சம்பவிக்கவேண்டியதே. ஆனாலும், முடிவு உடனே வராது. | சங் 27:3 சங் 46:1-3 சங் 112:7 நீதி 3:25 ஏசா 8:12 எரே 4:19-21 எரே 51:46 மத் 24:6 மத் 24:7 லூக் 21:9-11 யோவா 14:1 யோவா 14:27 |
| 8 | ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்; பஞ்சங்களும் கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம். | 2நாளா 15:6 ஏசா 19:2 எரே 25:32 ஆகா 2:22 சகரி 14:13 வெளிப் 6:4 |
| 9 | நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெபஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள்; என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் சாட்சியாக அவர்களுக்குமுன்பாக நிறுத்தப்படுவீர்கள். | மாற் 13:5 மத் 10:17 மத் 10:18 மத் 23:34-37 மத் 24:9 மத் 24:10 லூக் 21:16-18 யோவா 15:20 யோவா 16:2 அப் 4:1-21 அப் 5:17-40 அப் 6:11-15 அப் 7:54-60 அப் 8:1-3 அப் 9:1 அப் 9:2 அப் 9:13 அப் 9:14 அப் 9:16 அப் 12:1-3 அப் 16:20-24 அப் 21:11 அப் 21:31-40 அப் 22:19 அப் 22:20 அப் 23:1 அப் 23:2 அப் 24:1-9 அப் 25:1-26 1கொரி 4:9-13 2கொரி 11:23-27 பிலிப் 1:29 2தெச 1:5 வெளிப் 1:9 வெளிப் 2:10 வெளிப் 2:13 வெளிப் 6:9-11 |
| 10 | சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும். | மாற் 16:15 மத் 24:14 மத் 28:18 மத் 28:19 ரோம 1:8 ரோம 10:18 ரோம 15:19 கொலோ 1:6 கொலோ 1:23 வெளிப் 14:6 |
| 11 | அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் என்ன பேசுவோமென்று முன்னதாகக் கவலைப்படாமலும் சிந்தியாமலுமிருங்கள்; அந்நாழிகையிலே உங்களுக்கு எது அருள் செய்யப்படுமோ அதையே பேசுங்கள்; ஏனெனில் பேசுகிறவர்கள் நீங்களல்ல, பரிசுத்த ஆவியே பேசுகிறவர். | மாற் 13:9 மத் 10:17 மத் 10:21 அப் 3:13 |
| 12 | அன்றியும் சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்வார்கள். | எசே 38:21 மீகா 7:4-6 மத் 10:21 மத் 24:10 லூக் 12:52 லூக் 12:53 லூக் 21:16 |
| 13 | என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். | மத் 5:11 மத் 5:12 மத் 24:9 லூக் 6:22 லூக் 21:17 யோவா 15:18 யோவா 15:19 யோவா 17:14 1யோவா 3:13 |
| 14 | மேலும் பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்; அது நிற்கத்தகாத இடத்திலே நீங்கள் அதை நிற்க காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள். | தானி 8:13 தானி 9:27 தானி 12:11 மத் 24:15-28 லூக் 21:20-22 |
| 15 | வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டுக்குள் இறங்காமலும், தன் வீட்டில் எதையாகிலும் எடுத்துக்கொள்ள உள்ளேபோகாமலும் இருக்கக்கடவன். | ஆதி 19:15-17 ஆதி 19:22-17 ஆதி 19:26-17 யோபு 2:4 நீதி 6:4 நீதி 6:5 நீதி 22:3 மத் 24:16-18 லூக் 17:31-33 அப் 27:18 அப் 27:19 அப் 27:38 பிலிப் 3:7 பிலிப் 3:8 எபிரெ 11:7 |
| 16 | வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரத்தை எடுப்பதற்குப் பின்னிட்டுத் திரும்பாதிருக்கக்கடவன். |
| 17 | அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ! | உபா 28:56 உபா 28:57 புலம் 2:19 புலம் 2:20 புலம் 4:3 புலம் 4:4 புலம் 4:10 ஓசி 9:14 ஓசி 13:16 மத் 24:19-21 லூக் 21:23 லூக் 23:29 |
| 18 | நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலே சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். |
| 19 | ஏனெனில் தேவன் உலகத்தைச் சிருஷ்டித்ததுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான உபத்திரவம் அந்நாட்களில் உண்டாயிருக்கும். | உபா 28:59 உபா 29:22-28 ஏசா 65:12-15 புலம் 1:12 புலம் 2:13 புலம் 4:6 தானி 9:12 தானி 9:26 தானி 12:1 யோவே 2:2 மத் 24:21 லூக் 21:22-24 |
| 20 | கர்த்தர் அந்நாட்களைக் குறைத்திராவிட்டால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தமோ, அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார். | ஏசா 1:9 ஏசா 6:13 ஏசா 65:8 ஏசா 65:9 சகரி 13:8 சகரி 13:9 மத் 24:22 ரோம 11:5-7 ரோம 11:23-7 ரோம 11:24-7 ரோம 11:28-32 |
| 21 | அப்பொழுது: இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கேயிருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால், நம்பாதேயுங்கள். | உபா 13:1-3 மத் 24:5 மத் 24:23-25 லூக் 17:23 லூக் 17:24 லூக் 21:8 யோவா 5:43 |
| 22 | ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். | மாற் 13:6 மத் 24:24 யோவா 10:27 யோவா 10:28 2தெச 2:8-14 2தீமோ 2:19 1யோவா 2:19 1யோவா 2:26 வெளிப் 13:8 வெளிப் 13:13 வெளிப் 13:14 வெளிப் 17:8 |
| 23 | நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். | மாற் 13:5 மாற் 13:9 மாற் 13:33 மத் 7:15 லூக் 21:8 லூக் 21:34 2பேது 3:17 |
| 24 | அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப் பின்பு, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும்; | ஏசா 13:10 ஏசா 24:20-23 எரே 4:23-25 எரே 4:28-25 எசே 32:7 தானி 7:10 தானி 12:1 யோவே 2:30 யோவே 2:31 ஆமோ 5:20 செப் 1:14-18 மத் 24:29-31 லூக் 21:25-27 அப் 2:19 அப் 2:20 2பேது 3:10 2பேது 3:12 வெளிப் 6:12-14 வெளிப் 20:11 |
| 25 | வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும். |
| 26 | அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள். | மாற் 8:38 மாற் 14:62 தானி 7:9-14 மத் 16:17 மத் 16:27 மத் 24:30 மத் 25:31 அப் 1:11 1தெச 4:16 2தெச 1:7-10 வெளிப் 1:7 |
| 27 | அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைமுனை முதற்கொண்டு, வானத்தின் கடைமுனைமட்டுமுள்ள நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார். | மத் 13:41 மத் 13:49 மத் 24:31 லூக் 16:22 வெளிப் 7:1-3 வெளிப் 15:6 வெளிப் 15:7 |
| 28 | அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளைதோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். | மத் 24:32 மத் 24:33 லூக் 21:29-31 |
| 29 | அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். | எசே 7:10-12 எசே 12:25-28 எபிரெ 10:25-37 யாக் 5:9 1பேது 4:17 1பேது 4:18 |
| 30 | இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். | மத் 16:28 மத் 23:36 மத் 24:34 லூக் 21:32 |
| 31 | வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. | சங் 102:25-27 ஏசா 51:6 மத் 5:18 மத் 24:35 எபிரெ 1:10-12 2பேது 3:10-12 வெளிப் 20:11 |
| 32 | அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். | மாற் 13:26 மாற் 13:27 மத் 24:36-42 மத் 25:6 மத் 25:13 மத் 25:19 அப் 1:7 1தெச 5:2 2பேது 3:10 வெளிப் 3:3 |
| 33 | அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். | மாற் 13:23 மாற் 13:35-37 மாற் 14:37 மாற் 14:38 மத் 24:42-44 மத் 25:13 மத் 26:40 மத் 26:41 லூக் 12:40 லூக் 21:34-36 ரோம 13:11 ரோம 13:12 ரோம 13:14 1கொரி 16:13 எபே 6:18 1தெச 5:5-8 எபிரெ 12:15 1பேது 4:7 1பேது 5:8 வெளிப் 3:2 வெளிப் 16:15 |
| 34 | ஒரு மனுஷன் தன் வீட்டைவிட்டு, புறத்தேசத்துக்குப் பிரயாணம்போக எத்தனிக்கும்போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, அவனவனுக்குத் தன்தன் வேலைகளையும், நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காக்கிறவனுக்குக் கற்பிப்பான். | மத் 24:45 மத் 25:14-30 லூக் 19:12-17 |
| 35 | அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள். | மாற் 13:33 மத் 24:42 மத் 24:44 |
| 36 | நீங்கள் நினையாதவேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள். | மாற் 14:37 மாற் 14:40 நீதி 6:9-11 நீதி 24:33 நீதி 24:34 உன்ன 3:1 உன்ன 5:2 ஏசா 56:10 மத் 24:48-51 மத் 25:5 லூக் 21:34 லூக் 22:45 ரோம 13:11-14 எபே 5:14 1தெச 5:6 1தெச 5:7 |
| 37 | நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார். | மாற் 13:33 மாற் 13:35 லூக் 12:41-46 |