| 1 | பின்பு அவர் உவமைகளாய் அவர்களுக்குச் சொல்லத்தொடங்கினதாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, இரசத்தொட்டியை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறத்தேசத்துக்குப் போயிருந்தான். | மாற் 4:2 மாற் 4:11-13 மாற் 4:33-13 மாற் 4:34-13 எசே 20:49 மத் 13:10-15 மத் 13:34-15 மத் 13:35-15 மத் 21:28-33 மத் 22:1-14 லூக் 8:10 லூக் 22:9 |
| 2 | தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்துக் கனிகளில் தன் பாகத்தை வாங்கிக்கொண்டுவரும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். | சங் 1:3 மத் 21:34 லூக் 20:10 |
| 3 | அவர்கள் அவனைப் பிடித்து, அடித்து, வெறுமையாய் அனுப்பிவிட்டார்கள். | 1இரா 18:4 1இரா 18:13 1இரா 19:10 1இரா 19:14 1இரா 22:27 2நாளா 16:10 2நாளா 24:19-21 2நாளா 36:16 நெகே 9:26 எரே 2:30 எரே 20:2 எரே 26:20-24 எரே 29:26 எரே 37:15 எரே 37:16 எரே 38:4-6 மத் 23:34-37 லூக் 11:47-51 லூக் 13:33 லூக் 13:34 அப் 7:52 1தெச 2:15 எபிரெ 11:36 எபிரெ 11:37 |
| 4 | பின்பு வேறொரு ஊழியக்காரனை அவர்களிடத்தில் அனுப்பினான்; அவர்கள் அவன்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள். |
| 5 | மறுபடியும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்றுபோட்டார்கள். | மாற் 9:13 நெகே 9:30 எரே 7:25-28 மத் 5:12 மத் 21:35 மத் 21:36 மத் 22:6 மத் 23:37 லூக் 6:22 லூக் 6:23 லூக் 6:36 |
| 6 | அவனுக்குப் பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனுக்கு அஞ்சுவார்களென்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடத்தில் அனுப்பினான். | சங் 2:7 மத் 1:23 மத் 11:27 மத் 26:63 யோவா 1:14 யோவா 1:18 யோவா 1:34 யோவா 1:49 யோவா 3:16-18 1யோவா 4:9 1யோவா 5:11 1யோவா 5:12 |
| 7 | தோட்டக்காரரோ: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சுதந்தரம் நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; | மாற் 12:12 ஆதி 3:15 ஆதி 37:20 சங் 2:2 சங் 2:3 சங் 22:12-15 ஏசா 49:7 ஏசா 53:7 ஏசா 53:8 மத் 2:3-13 மத் 2:16-13 யோவா 11:47-50 அப் 2:23 அப் 5:28 அப் 7:52 அப் 13:27 அப் 13:28 |
| 8 | அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள். | மத் 21:33 மத் 21:39 லூக் 20:15 எபிரெ 13:11-13 |
| 9 | அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா? | மத் 21:40 மத் 21:41 |
| 10 | வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று; | மாற் 12:26 மாற் 2:25 மாற் 13:14 மத் 12:3 மத் 19:4 மத் 21:16 மத் 22:31 லூக் 6:3 |
| 11 | அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று எழுதியிருக்கிற வாக்கியத்தை நீங்கள் வாசிக்கவில்லையா என்றார். | எண் 23:23 ஆபகூ 1:5 அப் 2:12 அப் 2:32-36 அப் 3:12-16 அப் 13:40 அப் 13:41 எபே 3:8-11 கொலோ 1:27 1தீமோ 3:16 |
| 12 | இந்த உவமையைத் தங்களைக்குறித்துச் சொன்னாரென்று அவர்கள் அறிந்து, அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் ஜனத்துக்குப் பயந்து, அவரை விட்டுப் போய்விட்டார்கள். | மாற் 11:18 மாற் 11:32 மத் 21:26 மத் 21:45 மத் 21:46 லூக் 20:6 லூக் 20:19 யோவா 7:25 யோவா 7:30 யோவா 7:44 |
| 13 | அவர்கள், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படிக்கு, பரிசேயரிலும் ஏரோதியரிலும் சிலரை அவரிடத்தில் அனுப்பினார்கள். | சங் 38:12 சங் 56:5 சங் 56:6 சங் 140:5 ஏசா 29:21 எரே 18:18 மத் 22:15 மத் 22:16 லூக் 11:54 லூக் 20:20-26 |
| 14 | அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராய் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீர், இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ? நாம் கொடுக்கலாமோ, கொடுக்கக்கூடாதோ? என்று கேட்டார்கள். | மாற் 14:45 சங் 12:2-4 சங் 55:21 சங் 120:2 நீதி 26:23-26 எரே 42:2 எரே 42:3 எரே 42:20 |
| 15 | அவர்களுடைய மாயத்தை அவர் அறிந்து: நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? நான் பார்க்கும்படிக்கு ஒரு பணத்தை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். | மத் 22:18 லூக் 20:23 யோவா 2:24 யோவா 2:25 யோவா 21:17 எபிரெ 4:13 வெளிப் 2:23 |
| 16 | அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்; இராயனுடையது என்றார்கள். | மத் 22:19-22 லூக் 20:24-26 2தீமோ 2:19 வெளிப் 3:12 |
| 17 | அதற்கு இயேசு: இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். | நீதி 24:21 மத் 17:25-27 ரோம 13:7 1பேது 2:17 |
| 18 | உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயர் அவரிடத்தில் வந்து: | மத் 22:23-33 லூக் 20:27-40 |
| 19 | போதகரே, ஒருவனுடைய சகோதரன் சந்தானமில்லாமல் தன் மனைவியை விட்டு இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டுமென்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே. | ஆதி 38:8 உபா 25:5-10 ரூத் 4:5 |
| 20 | இப்படியிருக்க, ஏழுபேர் சகோதரர் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனான். | மத் 22:25-28 லூக் 20:29-33 |
| 21 | இரண்டாம் சகோதரன் அவளை விவாகம்பண்ணி, அவனும் சந்தானமில்லாமல் இறந்துபோனான். மூன்றாம் சகோதரனும் அப்படியேயானான். |
| 22 | ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள். |
| 23 | ஆகையால், உயிர்த்தெழுதலில், அவர்கள் எழுந்திருக்கும்போது, அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? ஏழுபேரும் அவளை மனைவியாகக் கொண்டிருந்தார்களே என்று கேட்டார்கள். |
| 24 | இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலல்லவா தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்? | ஏசா 8:20 எரே 8:7-9 ஓசி 6:6 ஓசி 8:12 மத் 22:29 யோவா 5:39 யோவா 20:9 அப் 17:11 ரோம 15:4 2தீமோ 3:15-17 |
| 25 | மரித்தோர் உயிரோடெழுந்திருக்கும்போது கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் இருக்கிற தேவதூதரைப்போலிருப்பார்கள். | மத் 22:30 லூக் 20:35 லூக் 20:36 1கொரி 15:42-54 எபிரெ 12:22 எபிரெ 12:23 1யோவா 3:2 |
| 26 | மரித்தோர் எழுந்திருப்பதைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாய் இருக்கிறேன் என்று, தேவன் முட்செடியைக்குறித்துச் சொல்லிய இடத்தில், மோசேயின் ஆகமத்தில் அவனுக்குச் சொன்னதை, நீங்கள் வாசிக்கவில்லையா? | மாற் 12:10 மத் 22:31 மத் 22:32 |
| 27 | அவர் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார்; ஆகையால் நீங்கள் மிகவும் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள் என்றார். | ரோம 4:17 ரோம 14:9 எபிரெ 11:13-16 |
| 28 | வேதபாரகரில் ஒருவன் அவர்கள் தர்க்கம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்து, அவரிடத்தில் வந்து: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான். | மத் 22:34-40 |
| 29 | இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். | மாற் 12:32 மாற் 12:33 உபா 6:4 உபா 10:12 உபா 30:6 நீதி 23:26 மத் 10:37 லூக் 10:27 1தீமோ 1:5 |
| 30 | உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. |
| 31 | இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார். | லேவி 19:13 மத் 7:12 மத் 19:18 மத் 19:19 மத் 22:39 லூக் 10:27 லூக் 10:36 லூக் 10:37 ரோம 13:8 ரோம 13:9 1கொரி 13:4-8 கலா 5:14 யாக் 2:8-13 1யோவா 3:17-19 1யோவா 4:7 1யோவா 4:8 1யோவா 4:21 |
| 32 | அதற்கு வேதபாரகன்: சரிதான், போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை. | உபா 4:39 உபா 5:7 உபா 6:4 ஏசா 44:8 ஏசா 45:5 ஏசா 45:6 ஏசா 45:14 ஏசா 45:18 ஏசா 45:21 ஏசா 45:22 ஏசா 46:9 எரே 10:10-12 |
| 33 | முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்புகூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்க தகனம் முதலிய பலிகளைப் பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான். | 1சாமு 15:22 சங் 50:8-15 சங் 50:23-15 நீதி 21:3 ஏசா 1:11-17 ஏசா 58:5-7 எரே 7:21-23 ஓசி 6:6 ஆமோ 5:21-24 மீகா 6:6-8 மத் 9:13 மத் 12:7 1கொரி 13:1-3 |
| 34 | அவன் விவேகமாய் உத்தரவுசொன்னதை இயேசு கண்டு: நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல என்றார். அதன்பின்பு ஒருவரும் அவரிடத்தில் யாதொரு கேள்வியுங்கேட்கத் துணியவில்லை. | மத் 12:20 ரோம 3:20 ரோம 7:9 கலா 2:19 |
| 35 | இயேசு தேவாலயத்திலே உபதேசம்பண்ணுகையில், அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று வேதபாரகர் எப்படிச் சொல்லுகிறார்கள்? | மாற் 11:27 லூக் 19:47 லூக் 20:1 லூக் 21:37 யோவா 18:20 |
| 36 | நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்லியிருக்கிறானே. | 2சாமு 23:2 நெகே 9:30 மத் 22:43-45 அப் 1:16 அப் 28:25 2தீமோ 3:16 எபிரெ 3:7 எபிரெ 3:8 எபிரெ 4:7 1பேது 1:11 2பேது 1:21 |
| 37 | தாவீதுதானே அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். அநேக ஜனங்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடே கேட்டார்கள். | மத் 1:23 ரோம 1:3 ரோம 1:4 ரோம 9:5 1தீமோ 3:16 வெளிப் 22:16 |
| 38 | பின்னும் அவர் உபதேசம்பண்ணுகையில் அவர்களை நோக்கி: நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வந்தனங்களை அடையவும், | மாற் 4:2 |
| 39 | ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி, | யாக் 2:2 யாக் 2:3 |
| 40 | விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார். | எசே 22:25 மீகா 2:2 மீகா 3:1-4 மத் 23:14 லூக் 20:47 2தீமோ 3:6 |
| 41 | இயேசு காணிக்கைப்பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, ஜனங்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்; ஐசுவரியவான்கள் அநேகர் அதிகமாய்ப் போட்டார்கள். | மத் 27:6 லூக் 21:2-4 யோவா 8:20 |
| 42 | ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு துட்டுக்குச் சரியான இரண்டுகாசைப் போட்டாள். |
| 43 | அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து, காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப்பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்; | யாத் 35:21-29 மத் 10:42 அப் 11:29 2கொரி 8:2 2கொரி 8:12 2கொரி 9:6-8 |
| 44 | அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துப் போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார். | மாற் 14:8 1நாளா 29:2-17 2நாளா 24:10-14 2நாளா 31:5-10 2நாளா 35:7 2நாளா 35:8 எஸ்றா 2:68 எஸ்றா 2:69 நெகே 7:70-72 2கொரி 8:2 2கொரி 8:3 பிலிப் 4:10-17 |