| 1 | அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்தபோது, அவர் தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: | மத் 21:1-11 லூக் 19:29-40 யோவா 12:14-19 |
| 2 | உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். | மத் 21:2 மத் 21:3 லூக் 19:30 லூக் 19:31 |
| 3 | ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று ஒருவன் உங்களிடத்தில் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அதை இவ்விடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார். | சங் 24:1 அப் 10:36 அப் 17:25 2கொரி 8:9 எபிரெ 2:7-9 |
| 4 | அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்தார்கள். | மத் 21:6 மத் 21:7 மத் 26:19 லூக் 19:32-34 யோவா 2:5 எபிரெ 11:8 |
| 5 | அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் குட்டியை அவிழ்க்கிறது என்னவென்றார்கள். |
| 6 | இயேசு கற்பித்தபடியே அவர்களுக்கு உத்தரவு சொன்னார்கள். அப்பொழுது, அவர்களைப் போகவிட்டார்கள். |
| 7 | அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார். | சகரி 9:9 மத் 21:4 மத் 21:5 லூக் 19:35 |
| 8 | அநேகர் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். | லேவி 23:40 |
| 9 | முன்நடப்பாரும் பின்நடப்பாரும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; | சங் 118:25 சங் 118:26 மத் 21:9 மத் 23:39 லூக் 19:37 லூக் 19:38 யோவா 12:13 யோவா 19:15 |
| 10 | கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். | ஏசா 9:6 ஏசா 9:7 எரே 33:15-17 எரே 33:26-17 எசே 34:23 எசே 34:24 எசே 37:24 எசே 37:25 ஓசி 3:5 ஆமோ 9:11 ஆமோ 9:12 லூக் 1:31-33 |
| 11 | அப்பொழுது, இயேசு எருசலேமுக்கு வந்து, தேவாலயத்தில் பிரவேசித்து, எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து, சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூடப் பெத்தானியாவுக்குப் போனார். | மல்கி 3:1 மத் 21:10-16 லூக் 19:41-45 |
| 12 | மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டுவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று. | மத் 21:18-22 |
| 13 | அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக் காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது அதில் இலைகளையல்லாமல் வேறொன்றையும் காணவில்லை. | மத் 21:19 லூக் 13:6-9 |
| 14 | அப்பொழுது இயேசு அதைப்பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள். | மாற் 11:20 மாற் 11:21 ஏசா 5:5 ஏசா 5:6 மத் 3:10 மத் 7:19 மத் 12:33-35 மத் 21:19 மத் 21:33 மத் 21:44 யோவா 15:6 உபா 6:4-8 உபா 11:26-31 2பேது 2:20 வெளிப் 22:11 |
| 15 | அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து, | மத் 21:12-16 லூக் 19:45 யோவா 2:13-17 |
| 16 | ஒருவனும் தேவாலயத்தின் வழியாக யாதொரு பண்டத்தையும் கொண்டுபோகவிடாமல்: |
| 17 | என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார். | 1இரா 8:41-48 ஏசா 56:7 ஏசா 60:7 லூக் 19:46 |
| 18 | அதை வேதபாரகரும் பிரதான ஆசாரியரும் கேட்டு, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டபடியினாலே அவருக்குப் பயந்திருந்தார்கள். | மாற் 3:6 மாற் 12:12 மாற் 14:1 மாற் 14:2 ஏசா 49:7 மத் 21:15 மத் 21:38 மத் 21:39 மத் 21:45 மத் 21:46 மத் 26:3 மத் 26:4 லூக் 19:47 யோவா 11:53-57 |
| 19 | சாயங்காலமானபோது அவர் நகரத்திலிருந்து புறப்பட்டுப்போனார். | மாற் 11:11 லூக் 21:37 யோவா 12:36 |
| 20 | மறுநாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அந்த அத்திமரம் வேரோடே பட்டுப்போயிருக்கிறதைக் கண்டார்கள். | மாற் 11:14 யோபு 18:16 யோபு 18:17 யோபு 20:5-7 ஏசா 5:4 ஏசா 40:24 மத் 13:6 மத் 15:13 மத் 21:19 மத் 21:20 யோவா 15:6 எபிரெ 6:8 யூதா 1:12 |
| 21 | பேதுரு நினைவுகூர்ந்து, அவரை நோக்கி: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று என்றான். | நீதி 3:33 சகரி 5:3 சகரி 5:4 மத் 25:41 1கொரி 16:22 |
| 22 | இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். | மாற் 9:23 2நாளா 20:20 சங் 62:8 ஏசா 7:9 யோவா 14:1 தீத் 1:1 |
| 23 | எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். | மத் 17:20 மத் 21:21 லூக் 17:6 1கொரி 13:2 |
| 24 | ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். | மத் 7:7-11 மத் 18:19 மத் 21:22 லூக் 11:9-13 லூக் 18:1-8 யோவா 14:13 யோவா 15:7 யோவா 16:23-27 யாக் 1:5 யாக் 1:6 யாக் 5:15-18 1யோவா 3:22 1யோவா 5:14 1யோவா 5:15 |
| 25 | நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். | சகரி 3:1 லூக் 18:11 வெளிப் 11:4 |
| 26 | நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார். |
| 27 | அவர்கள் மறுபடியும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர் தேவாலயத்திலே உலாவிக்கொண்டிருக்கையில், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் வந்து: | மல்கி 3:1 மத் 21:23-27 லூக் 20:1-8 யோவா 10:23 யோவா 18:20 |
| 28 | நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் என்று கேட்டார்கள். | யாத் 2:14 எண் 16:3 எண் 16:13 அப் 7:27 அப் 7:28 அப் 7:38 அப் 7:39 அப் 7:51 |
| 29 | இயேசு பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், நீங்கள் எனக்கு உத்தரவு சொல்லுங்கள், அப்பொழுது நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன். | ஏசா 52:13 மத் 21:24 லூக் 20:3-8 |
| 30 | யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ, மனுஷரால் உண்டாயிற்றோ, எனக்கு உத்தரவு சொல்லுங்கள் என்றார். | மாற் 1:1-11 மாற் 9:13 மத் 3:1-17 லூக் 3:1-20 யோவா 1:6-8 யோவா 1:15-36 யோவா 3:25-36 |
| 31 | அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லையென்று கேட்பார். | மத் 11:7-14 மத் 21:25-27 மத் 21:31-27 மத் 21:32-27 யோவா 1:15 யோவா 1:29 யோவா 1:34 யோவா 1:36 யோவா 3:29-36 |
| 32 | மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படவேண்டியதாயிருக்கும்; எல்லாரும் யோவானை மெய்யாகத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி; | மாற் 6:20 மாற் 12:12 மத் 14:5 மத் 21:46 லூக் 20:19 லூக் 22:2 அப் 5:26 |
| 33 | இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லேன் என்றார். | ஏசா 1:3 ஏசா 6:9 ஏசா 6:10 ஏசா 29:9-14 ஏசா 42:19 ஏசா 42:20 ஏசா 56:10 எரே 8:7-9 ஓசி 4:6 மல்கி 2:7 மல்கி 2:8 மத் 15:14 மத் 23:16-26 யோவா 3:10 ரோம 1:18-22 ரோம 1:28-22 2கொரி 3:15 2கொரி 4:3 2கொரி 4:4 2தெச 2:10-12 |