| 1 | அவர் மலையிலிருந்து இறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள். | மத் 5:1 |
| 2 | அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான். | மாற் 1:40-45 லூக் 5:12 |
| 3 | இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான். | 2இரா 5:11 |
| 4 | இயேசு அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார். | மத் 6:1 மத் 9:30 மத் 12:16-19 மத் 16:20 மத் 17:9 மாற் 1:43 மாற் 1:44 மாற் 5:43 மாற் 7:36 லூக் 5:14 யோவா 5:41 யோவா 7:18 யோவா 8:50 |
| 5 | இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் வந்து: | மத் 4:13 மத் 9:1 மத் 11:23 மாற் 2:1 லூக் 7:1 |
| 6 | ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான். | யோபு 31:13 யோபு 31:14 அப் 10:7 கொலோ 3:11 கொலோ 4:1 1தீமோ 6:2 பிலேமோ 1:16 |
| 7 | அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார். | மத் 9:18 மத் 9:19 மாற் 5:23 மாற் 5:24 லூக் 7:6 |
| 8 | நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும்; அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். | மத் 3:11 மத் 3:14 மத் 15:26 மத் 15:27 ஆதி 32:10 சங் 10:17 லூக் 5:8 லூக் 7:6 லூக் 7:7 லூக் 15:19 லூக் 15:21 யோவா 1:27 யோவா 13:6-8 |
| 9 | நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான். | யோபு 38:34 யோபு 38:35 சங் 107:25-29 சங் 119:91 சங் 148:8 எரே 47:6 எரே 47:7 எசே 14:17-21 மாற் 4:39-41 லூக் 4:35 லூக் 4:36 லூக் 4:39 லூக் 7:8 |
| 10 | இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின்செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். | மாற் 6:6 லூக் 7:9 |
| 11 | அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள். | மத் 24:31 ஆதி 12:3 ஆதி 22:18 ஆதி 28:14 ஆதி 49:10 சங் 22:27 சங் 98:3 ஏசா 2:2 ஏசா 2:3 ஏசா 11:10 ஏசா 49:6 ஏசா 52:10 ஏசா 60:1-6 எரே 16:19 தானி 2:44 மீகா 4:1 மீகா 4:2 சகரி 8:20-23 மல்கி 1:11 லூக் 13:29 லூக் 14:23 லூக் 14:24 அப் 10:45 அப் 11:18 அப் 14:27 ரோம 15:9-13 கலா 3:28 கலா 3:29 எபே 2:11-14 எபே 3:6 கொலோ 3:11 வெளிப் 7:6 |
| 12 | ராஜ்யத்தின் புத்திரரோ, புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். | மத் 3:9 மத் 3:10 மத் 7:22 மத் 7:23 மத் 21:43 அப் 3:25 ரோம 9:4 |
| 13 | பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான். | மத் 8:4 பிரச 9:7 மாற் 7:29 யோவா 4:50 |
| 14 | இயேசு பேதுருவின் வீட்டிலே வந்து, அவன் மாமி ஜூரமாய்க் கிடக்கிறதைக் கண்டார். | மத் 8:20 மத் 17:25 மாற் 1:29-31 லூக் 4:38 லூக் 4:39 |
| 15 | அவர் அவள் கையைத் தொட்டவுடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கிற்று; அவள் எழுந்திருந்து, அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள். | மத் 8:3 மத் 9:20 மத் 9:29 மத் 14:36 மத் 20:34 2இரா 13:21 ஏசா 6:7 மாற் 1:41 லூக் 8:54 அப் 19:11-13 |
| 16 | அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார். | மாற் 1:32-34 லூக் 4:40 |
| 17 | அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. | மத் 1:22 மத் 2:15 மத் 2:23 |
| 18 | பின்பு, திரளான ஜனங்கள் தம்மைச் சூழ்ந்திருக்கிறதை இயேசு கண்டு, அக்கரைக்குப் போகக் கட்டளையிட்டார். | மத் 8:1 மாற் 1:35-38 லூக் 4:42 லூக் 4:43 யோவா 6:15 |
| 19 | அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். | எஸ்றா 7:6 மாற் 12:32-34 லூக் 9:57 லூக் 9:58 1கொரி 1:20 |
| 20 | அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார். | சங் 84:3 சங் 104:17 |
| 21 | அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். | லூக் 9:59-62 |
| 22 | அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார். | மத் 4:18-22 மத் 9:9 யோவா 1:43 |
| 23 | அவர் படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள். | மத் 9:1 மாற் 4:36 லூக் 7:22 |
| 24 | அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று. அவரோ நித்திரையாயிருந்தார். | சங் 107:23-27 ஏசா 54:11 யோனா 1:4 யோனா 1:5 மாற் 4:37 மாற் 4:38 அப் 27:14-38 2கொரி 11:25 2கொரி 11:26 |
| 25 | அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள். | சங் 10:1 சங் 44:22 சங் 44:23 ஏசா 51:9 ஏசா 51:10 மாற் 4:38 மாற் 4:39 லூக் 8:24 |
| 26 | அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று. | மத் 6:30 மத் 14:30 மத் 14:31 மத் 16:8 ஏசா 41:10-14 மாற் 4:40 லூக் 8:25 ரோம 4:20 |
| 27 | அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள். | மத் 14:33 மத் 15:31 மாற் 1:27 மாற் 6:51 மாற் 7:37 |
| 28 | அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது, பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியராயிருந்தபடியால், அந்த வழியாக ஒருவனும் நடக்கக்கூடாதிருந்தது. | மாற் 5:1-20 லூக் 8:26-39 அப் 10:38 |
| 29 | அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள். | 2சாமு 16:10 2சாமு 19:22 யோவே 3:4 மாற் 1:24 மாற் 5:7 லூக் 4:34 லூக் 8:28 யோவா 2:4 |
| 30 | அவர்களுக்குக் கொஞ்சதூரத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன. | லேவி 11:7 உபா 14:8 ஏசா 65:3 ஏசா 65:4 ஏசா 66:3 மாற் 5:11 லூக் 8:32 லூக் 15:15 லூக் 15:16 |
| 31 | அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிக்கூட்டத்தில் போகும்படி உத்தரவுகொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன. | மாற் 5:7 மாற் 5:12 லூக் 8:30-33 வெளிப் 12:12 வெளிப் 20:1 வெளிப் 20:2 |
| 32 | அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு, பன்றிக்கூட்டத்தில் போயின; அப்பொழுது, பன்றிக்கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து ஜலத்தில் மாண்டுபோயின. | 1இரா 22:22 யோபு 1:10-12 யோபு 2:3-6 அப் 2:23 அப் 4:28 வெளிப் 20:7 |
| 33 | அவைகளை மேய்த்தவர்கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் சங்கதிகள் எல்லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்குச் சம்பவித்தவைகளையும் அறிவித்தார்கள். | மாற் 5:14-16 லூக் 8:34-36 அப் 19:15-17 |
| 34 | அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் யாவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டுவந்து, அவரைக் கண்டு, தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். | மத் 8:29 உபா 5:25 1சாமு 16:4 1இரா 17:18 1இரா 18:17 யோபு 21:14 யோபு 22:17 மாற் 5:17 மாற் 5:18 லூக் 5:8 லூக் 8:28 லூக் 8:37-39 அப் 16:39 |