| 1 | நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். | ஏசா 66:5 எசே 16:52-56 லூக் 6:37 ரோம 2:1 ரோம 2:2 ரோம 14:3 ரோம 14:4 ரோம 14:10-13 1கொரி 4:3-5 யாக் 3:1 யாக் 4:11 யாக் 4:12 |
| 2 | ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். | நியா 1:7 சங் 18:25 சங் 18:26 சங் 137:7 சங் 137:8 எரே 51:24 ஒபதி 1:15 மாற் 4:24 லூக் 6:38 2கொரி 9:6 2தெச 1:6 2தெச 1:7 யாக் 2:13 வெளிப் 18:6 |
| 3 | நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? | லூக் 6:41 லூக் 6:42 லூக் 18:11 |
| 4 | இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? |
| 5 | மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய். | மத் 22:18 மத் 23:14-28 லூக் 12:56 லூக் 13:15 |
| 6 | பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும். | மத் 10:14 மத் 10:15 மத் 15:26 நீதி 9:7 நீதி 9:8 நீதி 23:9 நீதி 26:11 அப் 13:45-47 பிலிப் 3:2 எபிரெ 6:6 எபிரெ 10:29 2பேது 2:22 |
| 7 | கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; | மத் 7:11 மத் 21:22 1இரா 3:5 சங் 10:17 சங் 50:15 சங் 86:5 சங் 145:18 சங் 145:19 ஏசா 55:6 ஏசா 55:7 எரே 29:12 எரே 29:13 எரே 33:3 மாற் 11:24 லூக் 11:9 லூக் 11:10 லூக் 11:13 லூக் 18:1 யோவா 4:10 யோவா 14:13 யோவா 14:14 யோவா 15:7 யோவா 15:16 யோவா 16:23 யோவா 16:24 யாக் 1:5 யாக் 1:6 யாக் 5:15 1யோவா 3:22 1யோவா 5:14 1யோவா 5:15 வெளிப் 3:17 வெளிப் 3:18 |
| 8 | ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். | மத் 15:22-28 2நாளா 33:1 2நாளா 33:2 2நாளா 33:19 சங் 81:10 சங் 81:16 யோவா 2:2 யோவா 3:8-10 லூக் 23:42 லூக் 23:43 அப் 9:11 |
| 9 | உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? | லூக் 11:11-13 |
| 10 | மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? |
| 11 | ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? | ஆதி 6:5 ஆதி 8:21 யோபு 15:16 எரே 17:9 ரோம 3:9 ரோம 3:19 கலா 3:22 எபே 2:1-3 தீத் 3:3 |
| 12 | ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிராணமும் தீர்க்கதரிசனங்களுமாம். | லூக் 6:31 |
| 13 | இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். | மத் 3:2 மத் 3:8 மத் 18:2 மத் 18:3 மத் 23:13 நீதி 9:6 ஏசா 55:7 எசே 18:27-32 லூக் 9:33 லூக் 13:24 லூக் 13:25 லூக் 14:33 யோவா 10:9 யோவா 14:6 அப் 2:38-40 அப் 3:19 2கொரி 6:17 கலா 5:24 |
| 14 | ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். | மத் 16:24 மத் 16:25 நீதி 4:26 நீதி 4:27 நீதி 8:20 ஏசா 30:21 ஏசா 35:8 ஏசா 57:14 எரே 6:16 மாற் 8:34 யோவா 15:18-20 யோவா 16:2 யோவா 16:33 அப் 14:22 1தெச 3:2-5 |
| 15 | கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். | மத் 10:17 மத் 16:6 மத் 16:11 மாற் 12:38 லூக் 12:15 அப் 13:40 பிலிப் 3:2 கொலோ 2:8 2பேது 3:17 |
| 16 | அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? | மத் 7:20 மத் 12:33 2பேது 2:10-18 யூதா 1:10-19 |
| 17 | அப்படியே நல்லமரமெல்லாம் நல்லகனிகளைக் கொடுக்கும்; கெட்டமரமோ கெட்டகனிகளைக் கொடுக்கும். | சங் 1:3 சங் 92:13 சங் 92:14 ஏசா 5:3-5 ஏசா 61:3 எரே 11:19 எரே 17:8 லூக் 13:6-9 கலா 5:22-24 எபே 5:9 பிலிப் 1:11 கொலோ 1:10 யாக் 3:17 யாக் 3:18 |
| 18 | நல்லமரம் கெட்டகனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்டமரம் நல்லகனிகளைக் கொடுக்கமாட்டாது. | கலா 5:17 1யோவா 3:9 1யோவா 3:10 |
| 19 | நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும். | மத் 3:10 மத் 21:19 மத் 21:20 ஏசா 5:5-7 ஏசா 27:11 எசே 15:2-7 லூக் 3:9 லூக் 13:6-9 யோவா 15:2-6 எபிரெ 6:8 யூதா 1:12 |
| 20 | ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். | மத் 7:16 அப் 5:38 |
| 21 | பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. | மத் 25:11 மத் 25:12 ஓசி 8:2 ஓசி 8:3 லூக் 6:46 லூக் 13:25 அப் 19:13-20 ரோம 2:13 தீத் 1:16 யாக் 1:22 யாக் 2:20-26 |
| 22 | அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். | மத் 7:21 மத் 24:36 ஏசா 2:11 ஏசா 2:17 மல்கி 3:17 மல்கி 3:18 லூக் 10:12 1தெச 5:4 2தெச 1:10 2தீமோ 1:12 2தீமோ 1:18 2தீமோ 4:8 |
| 23 | அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். | மத் 25:12 யோவா 10:14 யோவா 10:27-30 2தீமோ 2:19 |
| 24 | ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். | மத் 7:7 மத் 7:8 மத் 7:13 மத் 7:14 மத் 5:3-12 மத் 5:28-32 மத் 6:14 மத் 6:15 மத் 6:19-21 மத் 12:50 லூக் 6:47-49 லூக் 11:28 யோவா 13:17 யோவா 14:15 யோவா 14:22-24 யோவா 15:10 யோவா 15:14 ரோம 2:6-9 கலா 5:6 கலா 5:7 கலா 6:7 கலா 6:8 யாக் 1:21-27 யாக் 2:17-26 1யோவா 2:3 1யோவா 3:22-24 1யோவா 5:3-5 வெளிப் 22:14 வெளிப் 22:15 |
| 25 | பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. | எசே 13:11-16 மல்கி 3:3 அப் 14:22 1கொரி 3:13-15 யாக் 1:12 1பேது 1:7 |
| 26 | நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். | 1சாமு 2:30 நீதி 14:1 எரே 8:9 லூக் 6:49 யாக் 2:20 |
| 27 | பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். | மத் 12:43-45 மத் 13:19-22 எசே 13:10-16 1கொரி 3:13 எபிரெ 10:26-31 2பேது 2:20-22 |
| 28 | இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால், | மத் 13:54 சங் 45:2 மாற் 1:22 மாற் 6:2 லூக் 4:22 லூக் 4:32 லூக் 19:48 யோவா 7:15 யோவா 7:46 |
| 29 | ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். | மத் 5:20 மத் 5:28 மத் 5:32 மத் 5:44 மத் 21:23-27 மத் 28:18 உபா 18:18 உபா 18:19 பிரச 8:4 ஏசா 50:4 எரே 23:28 எரே 23:29 மீகா 3:8 லூக் 21:15 அப் 3:22 அப் 3:23 அப் 6:10 எபிரெ 4:12 எபிரெ 4:13 |