| 1 | அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து: | லூக் 3:1 லூக் 3:2 |
| 2 | மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம்பண்ணினான். | மத் 4:17 மத் 11:20 மத் 12:41 மத் 21:29-32 1இரா 8:47 யோபு 42:6 எசே 18:30-32 எசே 33:11 மாற் 1:4 மாற் 1:15 மாற் 6:12 லூக் 13:3 லூக் 13:5 லூக் 15:7 லூக் 15:10 லூக் 16:30 லூக் 24:47 அப் 2:38 அப் 3:19 அப் 11:18 அப் 17:30 அப் 20:21 அப் 26:20 2கொரி 7:10 2தீமோ 2:25 எபிரெ 6:1 2பேது 3:9 வெளிப் 2:5 வெளிப் 2:21 |
| 3 | கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே. | ஏசா 40:3 மாற் 1:3 லூக் 3:3-6 யோவா 1:23 |
| 4 | இந்த யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் அவனுக்கு ஆகாரமாயிருந்தது. | மத் 11:8 2இரா 1:8 சகரி 13:4 மல்கி 4:5 மாற் 1:6 லூக் 1:17 வெளிப் 11:3 |
| 5 | அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் அவனிடத்திற்குப் போய், | மத் 4:25 மத் 11:7-12 மாற் 1:5 லூக் 3:7 லூக் 16:16 யோவா 3:23 யோவா 5:35 |
| 6 | தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். | மத் 3:11 மத் 3:13-16 எசே 36:25 மாற் 1:8 மாற் 1:9 லூக் 3:16 யோவா 1:25-28 யோவா 1:31-33 யோவா 3:23-25 அப் 1:5 அப் 2:38-41 அப் 10:36-38 அப் 11:16 அப் 19:4 அப் 19:5 அப் 19:18 1கொரி 10:2 கொலோ 2:12 தீத் 3:5 தீத் 3:6 எபிரெ 6:2 எபிரெ 9:10 1பேது 3:21 |
| 7 | பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: விரியன் பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்? | மத் 5:20 மத் 12:24 மத் 15:12 மத் 16:6 மத் 16:11 மத் 16:12 மத் 22:15 மத் 22:23 மத் 22:34 மத் 23:13-28 மாற் 7:3-5 மாற் 8:15 மாற் 12:13 மாற் 12:18 லூக் 7:30 லூக் 11:39-44 லூக் 16:14 லூக் 18:11 யோவா 1:24 யோவா 7:45-49 யோவா 9:40 அப் 4:1 அப் 4:2 அப் 5:17 அப் 15:5 அப் 23:6-9 அப் 26:5 |
| 8 | மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். | மத் 21:28-30 மத் 21:32-30 ஏசா 1:16 ஏசா 1:17 லூக் 3:8 லூக் 3:10-14 அப் 26:20 ரோம 2:4-7 2கொரி 7:10 2கொரி 7:11 2பேது 1:4-8 |
| 9 | ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். | மாற் 7:21 லூக் 3:8 லூக் 5:22 லூக் 7:39 லூக் 12:17 |
| 10 | இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால், நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். | மல்கி 3:1-3 மல்கி 4:1 எபிரெ 3:1-3 எபிரெ 10:28-31 எபிரெ 12:25 |
| 11 | மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். | மத் 3:6 மாற் 1:4 மாற் 1:8 லூக் 3:3 லூக் 3:16 யோவா 1:26 யோவா 1:33 அப் 1:5 அப் 11:16 அப் 13:24 அப் 19:4 |
| 12 | தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான். | ஏசா 30:24 ஏசா 41:16 எரே 4:11 எரே 15:7 எரே 51:2 லூக் 3:17 |
| 13 | அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். | மத் 2:22 மாற் 1:9 லூக் 3:21 |
| 14 | யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். | லூக் 1:43 யோவா 13:6-8 |
| 15 | இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். | யோவா 13:7-9 |
| 16 | இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். | மாற் 1:10 |
| 17 | அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. | யோவா 5:37 யோவா 12:28-30 வெளிப் 14:2 |