| 1 | அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். | மாற் 1:12 மாற் 1:13-15 லூக் 4:1-13 ரோம 8:14 |
| 2 | அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. | யாத் 24:18 யாத் 34:28 உபா 9:9 உபா 9:18 உபா 9:25 உபா 18:18 1இரா 19:8 லூக் 4:2 |
| 3 | அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். | யோபு 1:9-12 யோபு 2:4-7 லூக் 22:31 லூக் 22:32 1தெச 3:5 வெளிப் 2:10 வெளிப் 12:9-11 |
| 4 | அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். | மத் 4:7 மத் 4:10 லூக் 4:4 லூக் 4:8 லூக் 4:12 ரோம 15:4 எபே 6:17 |
| 5 | அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிக்கையின்மேல் அவரை நிறுத்தி: | லூக் 4:9 யோவா 19:11 |
| 6 | நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான். | மத் 4:4 2கொரி 11:14 |
| 7 | அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார். | மத் 4:4 மத் 4:10 மத் 21:16 மத் 21:42 மத் 22:31 மத் 22:32 ஏசா 8:20 |
| 8 | மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: | மத் 4:5 லூக் 4:5-7 |
| 9 | நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்; | மத் 26:15 யோவா 13:3 |
| 10 | அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். | மத் 16:23 யாக் 4:7 1பேது 5:9 |
| 11 | அப்பொழுது பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடைசெய்தார்கள். | லூக் 4:13 லூக் 22:53 யோவா 14:30 |
| 12 | யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் போய், | மாற் 1:14 மாற் 6:17 லூக் 3:20 லூக் 4:14 லூக் 4:31 யோவா 4:43 யோவா 4:54 |
| 13 | நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார். | லூக் 4:30 லூக் 4:31 |
| 14 | கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே, | மத் 1:22 மத் 2:15 மத் 2:23 மத் 8:17 மத் 12:17-21 மத் 26:54 மத் 26:56 லூக் 22:37 லூக் 24:44 யோவா 15:25 யோவா 19:28 யோவா 19:36 யோவா 19:37 |
| 15 | இருளில் இருக்கும் ஜனங்கள் பெரியவெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, | யோசு 20:7 யோசு 21:32 1இரா 9:11 2இரா 15:29 |
| 16 | ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. | சங் 107:10-14 ஏசா 42:6 ஏசா 42:7 ஏசா 60:1-3 மீகா 7:8 லூக் 1:78 லூக் 1:79 லூக் 2:32 |
| 17 | அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார். | மாற் 1:14 |
| 18 | இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுகொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு: | மத் 1:16-18 லூக் 5:2 |
| 19 | என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். | மத் 8:22 மத் 9:9 மத் 16:24 மத் 19:21 மாற் 2:14 லூக் 5:27 லூக் 9:59 யோவா 1:43 யோவா 12:26 யோவா 21:22 |
| 20 | உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். | மத் 10:37 மத் 19:27 1இரா 19:21 சங் 119:60 மாற் 10:28-31 லூக் 18:28-30 கலா 1:16 |
| 21 | அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபெதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபெதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக்கண்டு, அவர்களையும் அழைத்தார். | மத் 10:2 மத் 17:1 மத் 20:20 மத் 20:21 மத் 26:37 மாற் 1:19 மாற் 1:20 மாற் 3:17 மாற் 5:37 லூக் 5:10 லூக் 5:11 யோவா 21:2 அப் 12:2 |
| 22 | உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். | மத் 10:37 உபா 33:9 உபா 33:10 மாற் 1:20 லூக் 9:59 லூக் 9:60 லூக் 14:26 லூக் 14:33 2கொரி 5:16 |
| 23 | பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார். | மத் 9:35 மாற் 6:6 யோவா 7:1 அப் 10:38 |
| 24 | அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைச் சொஸ்தமாக்கினார். | மத் 9:26 மத் 9:31 மத் 14:1 யோசு 6:27 1இரா 4:31 1இரா 10:1 1நாளா 14:17 மாற் 1:28 லூக் 4:14 லூக் 5:15 |
| 25 | கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள். | மத் 5:1 மத் 8:1 மத் 12:15 மத் 19:2 மாற் 3:7 மாற் 6:2 லூக் 6:17 லூக் 6:19 |