| 1 | ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, | மத் 1:25 லூக் 2:4-7 |
| 2 | யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ளவந்தோம் என்றார்கள். | மத் 21:5 சங் 2:6 ஏசா 9:6 ஏசா 9:7 ஏசா 32:1 ஏசா 32:2 எரே 23:5 சகரி 9:9 லூக் 2:11 லூக் 19:38 லூக் 23:3 லூக் 23:38 யோவா 1:49 யோவா 12:13 யோவா 18:37 யோவா 19:12-15 யோவா 19:19-15 |
| 3 | ஏரோது ராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுங்கூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். | மத் 8:29 மத் 23:37 1இரா 18:17 1இரா 18:18 யோவா 11:47 யோவா 11:48 அப் 4:2 அப் 4:24-27 அப் 5:24-28 அப் 16:20 அப் 16:21 அப் 17:6 அப் 17:7 |
| 4 | அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச்செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான். | மத் 21:15 மத் 21:23 மத் 26:3 மத் 26:47 மத் 27:1 1நாளா 24:4-19 2நாளா 36:14 எஸ்றா 10:5 நெகே 12:7 சங் 2:2 யோவா 7:32 யோவா 18:3 |
| 5 | அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்: | ஆதி 35:19 யோசு 19:15 ரூத் 1:1 ரூத் 1:19 ரூத் 2:4 ரூத் 4:11 1சாமு 16:1 |
| 6 | யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள். | மத் 2:1 மீகா 5:2 யோவா 7:42 |
| 7 | அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து: | மத் 26:3-5 யாத் 1:10 1சாமு 18:21 சங் 10:9 சங் 10:10 சங் 55:21 சங் 64:4-6 சங் 83:3 சங் 83:4 ஏசா 7:5-7 எசே 38:10 எசே 38:11 வெளிப் 12:1-5 வெளிப் 12:15-5 |
| 8 | நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான். | 1சாமு 23:22 1சாமு 23:23 2சாமு 17:14 1இரா 19:2 யோபு 5:12 யோபு 5:13 சங் 33:10 சங் 33:11 நீதி 21:30 புலம் 3:37 1கொரி 3:19 1கொரி 3:20 |
| 9 | ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. | மத் 2:2 சங் 25:12 நீதி 2:1-6 நீதி 8:17 2பேது 1:19 |
| 10 | அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். | உபா 32:13 சங் 67:4 சங் 105:3 லூக் 2:10 லூக் 2:20 அப் 13:46-48 ரோம 15:9-13 |
| 11 | அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். | லூக் 2:16 லூக் 2:26-32 லூக் 2:38-32 |
| 12 | பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். | மத் 2:22 மத் 1:20 மத் 27:19 ஆதி 20:6 ஆதி 20:7 ஆதி 31:24 யோபு 33:15-17 தானி 2:19 |
| 13 | அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். | மத் 2:19 மத் 1:20 அப் 5:19 அப் 10:7 அப் 10:22 அப் 12:11 எபிரெ 1:13 எபிரெ 1:14 |
| 14 | அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய், | மத் 2:20 மத் 2:21 மத் 1:24 அப் 26:21 |
| 15 | ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. | மத் 2:19 அப் 12:1-4 அப் 12:23-4 அப் 12:24-4 |
| 16 | அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான். | ஆதி 39:14 ஆதி 39:17 எண் 22:29 எண் 24:10 நியா 16:10 யோபு 12:4 |
| 17 | புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று, |
| 18 | எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று. | எரே 31:15 |
| 19 | ஏரோது இறந்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு: | சங் 76:10 ஏசா 51:12 தானி 8:25 தானி 11:45 |
| 20 | நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்துக்குப் போ; பிள்ளையின் பிராணனை வாங்கத்தேடினவர்கள் இறந்துபோனார்கள் என்றான். | மத் 2:13 நீதி 3:5 நீதி 3:6 |
| 21 | அவன் எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்கு வந்தான். | ஆதி 6:22 எபிரெ 11:8 |
| 22 | ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய், | ஆதி 19:17-21 1சாமு 16:2 அப் 9:13 அப் 9:14 |
| 23 | நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. | யோவா 18:5 யோவா 18:7 யோவா 19:19 அப் 2:22 |