| 1 | விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி, | நியா 16:2 1சாமு 19:11 நீதி 4:16-18 மீகா 2:1 லூக் 22:66 அப் 5:21 |
| 2 | அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள். | ஆதி 22:9 யோவா 18:12 யோவா 18:24 அப் 9:2 அப் 12:6 அப் 21:33 அப் 22:25 அப் 22:29 அப் 24:27 அப் 28:20 2தீமோ 2:9 எபிரெ 13:3 |
| 3 | அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக்கொண்டுவந்து: | மத் 26:14-16 மத் 26:47-50 மாற் 14:10 மாற் 14:11 மாற் 14:43-46 லூக் 22:2-6 லூக் 22:47-6 லூக் 22:48-6 யோவா 13:2 யோவா 13:27 யோவா 18:3 |
| 4 | குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள். | ஆதி 42:21 ஆதி 42:22 யாத் 9:27 யாத் 10:16 யாத் 10:17 யாத் 12:31 1சாமு 15:24 1சாமு 15:30 1இரா 21:27 ரோம 3:19 |
| 5 | அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். | நியா 9:54 1சாமு 31:4 1சாமு 31:5 2சாமு 17:23 1இரா 16:18 யோபு 2:9 யோபு 7:15 சங் 55:23 அப் 1:18 அப் 1:19 |
| 6 | பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப் போடலாகாதென்று சொல்லி, | மத் 23:24 லூக் 6:7-9 யோவா 18:28 |
| 7 | ஆலோசனைபண்ணினபின்பு, அந்நியரை அடக்கம்பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள். |
| 8 | இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள்வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது. | அப் 1:19 |
| 9 | இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து, | சகரி 11:12 சகரி 11:13 |
| 10 | கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று. |
| 11 | இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். | மத் 10:18 மத் 10:25 மாற் 15:2 லூக் 23:3 யோவா 18:33-36 |
| 12 | பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ்சாட்டுகையில், அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. | மத் 27:14 மத் 26:63 சங் 38:13 சங் 38:14 ஏசா 53:7 மாற் 15:3-5 யோவா 19:9-11 அப் 8:32 1பேது 2:23 |
| 13 | அப்பொழுது, பிலாத்து அவரை நோக்கி: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான். | மத் 26:62 யோவா 18:35 அப் 22:24 |
| 14 | அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான். | சங் 71:7 ஏசா 8:18 சகரி 3:8 1கொரி 4:9 |
| 15 | காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்ளுவார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாயிருந்தது. | மத் 26:5 மாற் 15:6 மாற் 15:8 லூக் 23:16 லூக் 23:17 யோவா 18:38 யோவா 18:39 அப் 24:27 அப் 25:9 |
| 16 | அப்பொழுது காவல்பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான். | மாற் 15:7 லூக் 23:18 லூக் 23:19 லூக் 23:25 யோவா 18:40 அப் 3:14 ரோம 1:32 |
| 17 | பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து, | மத் 27:21 யோசு 24:15 1இரா 18:21 |
| 18 | அவர்கள் கூடியிருக்கையில், அவர்களை நோக்கி: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான். | ஆதி 37:11 1சாமு 18:7-11 சங் 106:16 நீதி 27:4 பிரச 4:4 ஏசா 26:11 மாற் 15:10 அப் 5:17 அப் 7:9 அப் 13:45 யாக் 4:5 |
| 19 | அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச்சொன்னாள். | ஆதி 20:3-6 ஆதி 31:24 ஆதி 31:29 யோபு 33:14-17 நீதி 29:1 |
| 20 | பரபாசை விட்டுவிடக் கேட்டுக்கொள்ளவும், இயேசுவைக் கொலைசெய்விக்கவும் பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களை ஏவிவிட்டார்கள். | மாற் 15:11 அப் 14:18 அப் 14:19 அப் 19:23-29 |
| 21 | தேசாதிபதி ஜனங்களை நோக்கி: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள். |
| 22 | பிலாத்து அவர்களை நோக்கி: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள். | மத் 27:17 யோபு 31:31 சங் 22:8 சங் 22:9 ஏசா 49:7 ஏசா 53:2 ஏசா 53:3 சகரி 11:8 மாற் 14:55 மாற் 15:12-14 லூக் 23:20-24 யோவா 19:14 யோவா 19:15 அப் 13:38 |
| 23 | தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள். | ஆதி 37:18 ஆதி 37:19 1சாமு 19:3-15 1சாமு 20:31-33 1சாமு 22:14-19 |
| 24 | கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான். | உபா 21:6 உபா 21:7 யோபு 9:30 யோபு 9:31 சங் 26:6 எரே 2:27 எரே 2:35 |
| 25 | அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள். | மத் 21:44 மத் 23:30-37 எண் 35:33 உபா 19:10 உபா 19:13 யோசு 2:19 2சாமு 1:16 2சாமு 3:28 2சாமு 3:29 1இரா 2:32 2இரா 24:3 2இரா 24:4 சங் 109:12-19 எசே 22:2-4 எசே 24:7-9 அப் 5:28 அப் 7:52 1தெச 2:15 1தெச 2:16 எபிரெ 10:28-30 |
| 26 | அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான். | மாற் 15:15 லூக் 23:25 |
| 27 | அப்பொழுது, தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவைத் தேசாதிபதியின் அரமனையிலே கொண்டுபோய், போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து, | மாற் 15:16 யோவா 18:28 யோவா 18:33 யோவா 19:8 யோவா 19:9 அப் 23:35 |
| 28 | அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, | மாற் 15:17 லூக் 23:11 யோவா 19:2-5 |
| 29 | முள்ளுகளால் ஒரு முடியைப்பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி, | மத் 20:19 சங் 35:15 சங் 35:16 சங் 69:7 சங் 69:19 சங் 69:20 ஏசா 49:7 ஏசா 53:3 எரே 20:7 எபிரெ 12:2 எபிரெ 12:3 |
| 30 | அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள். | மத் 26:67 யோபு 30:8-10 ஏசா 49:7 ஏசா 50:6 ஏசா 52:14 ஏசா 53:3 ஏசா 53:7 மீகா 5:1 மாற் 15:19 லூக் 18:32 லூக் 18:33 |
| 31 | அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள். | மத் 20:19 மத் 21:39 எண் 15:35 1இரா 21:10 1இரா 21:13 ஏசா 53:7 யோவா 19:16 யோவா 19:27 அப் 7:58 எபிரெ 13:12 |
| 32 | போகையில், சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷனை அவர்கள் கண்டு, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள். | லேவி 4:3 லேவி 4:12 லேவி 4:21 எண் 15:35 எண் 15:36 1இரா 21:10 1இரா 21:13 அப் 7:58 எபிரெ 13:11 எபிரெ 13:12 |
| 33 | கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்தபோது, | மாற் 15:22 லூக் 23:27-33 யோவா 19:17 |
| 34 | கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார். | மத் 27:48 சங் 69:21 மாற் 15:23 யோவா 19:28-30 |
| 35 | அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. | சங் 22:16 யோவா 20:20 யோவா 20:25 யோவா 20:27 அப் 4:10 |
| 36 | அவர்கள் அங்கே உட்கார்ந்து, அவரைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள். | மத் 27:54 மாற் 15:39 மாற் 15:44 |
| 37 | அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும்பொருட்டு, இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாகவைத்தார்கள். | மாற் 15:26 லூக் 23:38 யோவா 19:19-22 |
| 38 | அப்பொழுது, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர் அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டார்கள். | மத் 27:44 ஏசா 53:12 மாற் 15:27 மாற் 15:28 லூக் 22:37 லூக் 23:32 லூக் 23:33 லூக் 23:39-43 யோவா 19:18 யோவா 19:31-35 |
| 39 | அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: | சங் 22:6 சங் 22:7 சங் 22:17 சங் 31:11-13 சங் 35:15-21 சங் 69:7-12 சங் 69:20-12 சங் 109:2 சங் 109:25 புலம் 1:12 புலம் 2:15-17 மாற் 15:29 மாற் 15:30 லூக் 23:35-39 1பேது 2:22-24 |
| 40 | தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே இரட்தித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள். | ஆதி 37:19 ஆதி 37:20 வெளிப் 11:10 |
| 41 | அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம்பண்ணி: | யோபு 13:9 சங் 22:12 சங் 22:13 சங் 35:26 ஏசா 28:22 ஏசா 49:7 சகரி 11:8 மாற் 15:31 மாற் 15:32 லூக் 18:32 லூக் 22:52 லூக் 23:35 |
| 42 | மற்றவர்களை இரட்சித்தான்; தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம். | யோவா 9:24 யோவா 12:47 அப் 4:14 |
| 43 | தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள். | சங் 3:2 சங் 14:6 சங் 22:8 சங் 42:10 சங் 71:11 ஏசா 36:15 ஏசா 36:18 ஏசா 37:10 |
| 44 | அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள். | மத் 27:38 யோபு 30:7-9 சங் 35:15 மாற் 15:32 லூக் 23:39 லூக் 23:40 |
| 45 | ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. | மாற் 15:25 மாற் 15:33 மாற் 15:34 லூக் 23:44 லூக் 23:45 |
| 46 | ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். | மாற் 15:34 லூக் 23:46 யோவா 19:28-30 எபிரெ 5:7 |
| 47 | அங்கே நின்றவர்களில் சிலர் அதைக்கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். | மத் 11:14 மல்கி 4:5 மாற் 15:35 மாற் 15:36 |
| 48 | உடனே அவர்களில் ஒருவன் ஓடி. கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி. அவருக்குக் குடிக்கக் கொடுத்தான். | மத் 27:34 சங் 69:21 லூக் 23:36 யோவா 19:29 யோவா 19:30 |
| 49 | மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். |
| 50 | இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். | மாற் 15:37 லூக் 23:46 யோவா 19:30 |
| 51 | அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது. | யாத் 26:31-37 யாத் 40:21 லேவி 16:2 லேவி 16:12-15 லேவி 21:23 2நாளா 3:14 ஏசா 25:7 மாற் 15:38 லூக் 23:45 எபே 2:13-18 எபிரெ 6:19 எபிரெ 10:19-22 |
| 52 | கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. | ஏசா 25:8 ஏசா 26:19 ஓசி 13:14 யோவா 5:25-29 1கொரி 15:20 |
| 53 | அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள். | மத் 4:5 நெகே 11:1 ஏசா 48:2 தானி 9:24 வெளிப் 11:2 வெளிப் 21:2 வெளிப் 22:19 |
| 54 | நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிரிச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள். | மத் 27:36 மத் 8:5 அப் 10:1 அப் 21:32 அப் 23:17 அப் 23:23 அப் 27:1 அப் 27:43 |
| 55 | மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். | லூக் 23:27 லூக் 23:28 லூக் 23:48 லூக் 23:49 யோவா 19:25-27 |
| 56 | அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும், யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள. | மத் 27:61 மத் 28:1 மாற் 15:40 மாற் 15:41 மாற் 16:1 மாற் 16:9 லூக் 24:10 யோவா 20:1 யோவா 20:18 |
| 57 | சாயங்காலமானபோது, இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்த யோசேப்பு என்னும் பேர்கொண்ட அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனுஷன் வந்து, | மாற் 15:42 மாற் 15:43 லூக் 23:50 லூக் 23:51 யோவா 19:38-42 |
| 58 | பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரீரத்தைக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான். | மாற் 15:44-46 லூக் 23:52 லூக் 23:53 |
| 59 | யோசேப்பு அந்தச் சரீரத்தை எடுத்து, துய்யதான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, |
| 60 | தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப்போனான். | ஏசா 53:9 |
| 61 | அங்கே மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள். |
| 62 | ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிரதானஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து: | மத் 26:17 மாற் 15:42 லூக் 23:54-56 யோவா 19:14 யோவா 19:42 |
| 63 | ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாளைக்குப்பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது. | லூக் 23:2 யோவா 7:12 யோவா 7:47 2கொரி 6:8 |
| 64 | ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்றுநாள்வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிடவேண்டும் என்றார்கள். | மத் 28:13 |
| 65 | அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல் சேவகர் உண்டே; போய், உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் என்றான். | மத் 28:11-15 சங் 76:10 நீதி 21:30 |
| 66 | அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள். | தானி 6:17 2தீமோ 2:19 |