| 1 | ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள். | மாற் 16:1 மாற் 16:2 லூக் 23:56 லூக் 24:1 லூக் 24:22 யோவா 20:1-10 |
| 2 | அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். | மத் 27:51-53 அப் 16:26 வெளிப் 11:19 |
| 3 | அவனுடைய ரூபம் மின்னல்போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்தமழையைப்போல வெண்மையாகவும் இருந்தது. | மத் 17:2 சங் 104:4 எசே 1:4-14 தானி 10:5 தானி 10:6 வெளிப் 1:14-16 வெளிப் 10:1 வெளிப் 18:1 |
| 4 | காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள்போலானார்கள். | மத் 28:11 மத் 27:65 மத் 27:66 |
| 5 | தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். | ஏசா 35:4 ஏசா 41:10 ஏசா 41:14 தானி 10:12 தானி 10:19 மாற் 16:6 லூக் 1:12 லூக் 1:13 லூக் 1:30 எபிரெ 1:14 வெளிப் 1:17 வெளிப் 1:18 |
| 6 | அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்; | மத் 12:40 மத் 16:21 மத் 17:9 மத் 17:23 மத் 20:19 மத் 26:31 மத் 26:32 மத் 27:63 மாற் 8:31 லூக் 24:6-8 லூக் 24:23 லூக் 24:44 யோவா 2:19 யோவா 10:17 |
| 7 | சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்குமுன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான். | மத் 28:10 மாற் 16:7 மாற் 16:8 மாற் 16:10 மாற் 16:13 லூக் 24:9 லூக் 24:10 லூக் 24:22-24 லூக் 24:34-24 யோவா 20:17 யோவா 20:18 |
| 8 | அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள். | எஸ்றா 3:12 எஸ்றா 3:13 சங் 2:11 மாற் 16:8 லூக் 24:36-41 யோவா 16:20 யோவா 16:22 யோவா 20:20 யோவா 20:21 |
| 9 | அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப்போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரை பணிந்துகொண்டார்கள். | ஏசா 64:5 மாற் 16:9 மாற் 16:10 யோவா 20:14-16 |
| 10 | அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப்போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார். | மத் 28:5 மத் 14:27 லூக் 24:36-38 யோவா 6:20 |
| 11 | அவர்கள் போகையில், காவல்சேவகரில் சிலர் நகரத்துக்குள்ளே வந்து. நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள். | மத் 28:4 மத் 27:65 மத் 27:66 |
| 12 | இவர்கள் மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைப்பண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து: | மத் 26:3 மத் 26:4 மத் 27:1 மத் 27:2 மத் 27:62-64 சங் 2:1-7 யோவா 11:47 யோவா 12:10 யோவா 12:11 அப் 4:5-22 அப் 5:33 அப் 5:34 அப் 5:40 |
| 13 | நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய்விட்டார்கள் என்று சொல்லுங்கள். | மத் 26:64 |
| 14 | இது தேசாதிபதிக்குக் கேள்வியானால், நாங்கள் அவரைச் சம்மதப்படுத்தி, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள். | அப் 12:19 |
| 15 | அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள்வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது. | மத் 26:15 1தீமோ 6:10 |
| 16 | பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள். | மாற் 16:14 யோவா 6:70 அப் 1:13-26 1கொரி 15:15 |
| 17 | அங்கே அவர்கள் அவரைக் கண்டு, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள். | மத் 16:28 |
| 18 | அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. | மத் 11:27 மத் 16:28 சங் 2:6-9 சங் 89:19 சங் 89:27 சங் 110:1-3 ஏசா 9:6 ஏசா 9:7 தானி 7:14 லூக் 1:32 லூக் 1:33 லூக் 10:22 யோவா 3:35 யோவா 5:22-27 யோவா 13:3 யோவா 17:2 அப் 2:36 அப் 10:36 ரோம 14:9 1கொரி 15:27 எபே 1:20-22 பிலிப் 2:9-11 கொலோ 1:16-19 எபிரெ 1:2 எபிரெ 2:8 1பேது 3:22 வெளிப் 11:15 வெளிப் 17:14 வெளிப் 19:16 |
| 19 | ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, | சங் 22:27 சங் 22:28 சங் 98:2 சங் 98:3 ஏசா 42:1-4 ஏசா 49:6 ஏசா 52:10 ஏசா 66:18 ஏசா 66:19 மாற் 16:15 மாற் 16:16 லூக் 24:47 லூக் 24:48 அப் 1:8 அப் 13:46 அப் 13:47 அப் 28:28 ரோம 10:18 கொலோ 1:23 |
| 20 | நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். | மத் 7:24-27 உபா 5:32 உபா 12:32 அப் 2:42 அப் 20:20 அப் 20:21 அப் 20:27 1கொரி 11:2 1கொரி 11:23 1கொரி 14:37 எபே 4:11-17 எபே 4:20-32 கொலோ 1:28 1தெச 4:1 1தெச 4:2 2தெச 3:6-12 1தீமோ 6:1-4 தீத் 2:1-10 1பேது 2:10-19 2பேது 1:5-11 2பேது 3:2 1யோவா 2:3 1யோவா 2:4 1யோவா 3:19-24 வெளிப் 22:14 |