| 1 | இயேசு இந்த வசனங்களைச் சொல்லிமுடித்தபின்பு, அவர் கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவின் எல்லைகளில் வந்தார். | மாற் 10:1 யோவா 10:40 |
| 2 | திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவ்விடத்தில் அவர்களைச் சொஸ்தமாக்கினார். | மத் 4:23-25 மத் 9:35 மத் 9:36 மத் 12:15 மத் 14:35 மத் 14:36 மத் 15:30 மத் 15:31 மாற் 6:55 மாற் 6:56 |
| 3 | அப்பொழுது, பரிசேயர் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள். | மத் 16:1 மத் 22:16-18 மத் 22:35-18 மாற் 10:2 மாற் 12:13 மாற் 12:15 லூக் 11:53 லூக் 11:54 யோவா 8:6 எபிரெ 3:9 |
| 4 | அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், | மத் 12:3 மத் 21:6 மத் 21:42 மத் 22:31 மாற் 2:25 மாற் 12:10 மாற் 12:26 லூக் 6:3 லூக் 10:26 |
| 5 | இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? | ஆதி 2:21-24 சங் 45:10 மாற் 10:5-9 எபே 5:31 |
| 6 | இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். | நீதி 2:17 மல்கி 2:14 மாற் 10:9 ரோம 7:2 1கொரி 7:10-14 எபே 5:28 எபிரெ 13:4 |
| 7 | அதற்கு அவர்கள்: அப்படியானால், தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள். | மத் 5:31 உபா 24:1-4 ஏசா 50:1 எரே 3:8 மாற் 10:4 |
| 8 | அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயகடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை. | சங் 95:8 சகரி 7:12 மல்கி 2:13 மல்கி 2:14 மாற் 10:5 |
| 9 | ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ் செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். | மத் 5:32 மாற் 10:11 மாற் 10:12 லூக் 16:18 1கொரி 7:10-13 1கொரி 7:39-13 |
| 10 | அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: மனைவியைப்பற்றி புருஷனுடைய காரியம் இப்படியிருந்தால், விவாகம்பண்ணுகிறது நல்லதல்ல என்றார்கள். | ஆதி 2:18 நீதி 5:15-19 நீதி 18:22 நீதி 19:13 நீதி 19:14 நீதி 21:9 நீதி 21:19 1கொரி 7:1 1கொரி 7:2 1கொரி 7:8 1கொரி 7:26-28 1கொரி 7:32-35 1கொரி 7:39-35 1கொரி 7:40-35 1தீமோ 4:3 1தீமோ 5:11-15 |
| 11 | அதற்கு அவர்: வரம்பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வசனத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். | 1கொரி 7:2 1கொரி 7:7 1கொரி 7:9 1கொரி 7:17 1கொரி 7:35 |
| 12 | தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார். | ஏசா 39:7 ஏசா 56:3 ஏசா 56:4 |
| 13 | அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் அவர் கைகளை வைத்து ஜெபம்பண்ணும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள். | மத் 18:2-5 ஆதி 48:1 ஆதி 48:9-20 1சாமு 1:24 சங் 115:14 சங் 115:15 எரே 32:39 மாற் 10:13 லூக் 18:15 அப் 2:39 1கொரி 7:14 |
| 14 | இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி, | ஆதி 17:7 ஆதி 17:8 ஆதி 17:24-26 ஆதி 21:4 நியா 13:7 1சாமு 1:11 1சாமு 1:22 1சாமு 1:24 1சாமு 2:18 மாற் 10:14 லூக் 18:16 லூக் 18:17 |
| 15 | அவர்கள்மேல் கைகளை வைத்து, பின்பு அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப்போனார். | ஏசா 40:11 மாற் 10:16 1கொரி 7:14 2தீமோ 3:15 |
| 16 | அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். | மாற் 10:17 லூக் 18:18 |
| 17 | அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். | 1சாமு 2:2 சங் 52:1 சங் 145:7-9 யாக் 1:17 1யோவா 4:8-10 1யோவா 4:16-10 |
| 18 | அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக; | கலா 3:10 யாக் 2:10 யாக் 2:11 |
| 19 | உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார். | மத் 15:4-6 லேவி 19:3 நீதி 30:17 எபே 6:1 எபே 6:2 |
| 20 | அந்த வாலிபன் அவரை நோக்கி: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான். | மாற் 10:20 லூக் 15:7 லூக் 15:29 லூக் 18:11 லூக் 18:12 லூக் 18:21 யோவா 8:7 ரோம 3:19-23 ரோம 7:9 கலா 3:24 பிலிப் 3:6 |
| 21 | அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். | மத் 5:19 மத் 5:20 மத் 5:48 ஆதி 6:9 ஆதி 17:1 யோபு 1:1 சங் 37:37 லூக் 6:40 பிலிப் 3:12-15 |
| 22 | அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான். | மத் 13:22 மத் 14:9 நியா 18:23 நியா 18:24 தானி 6:14-17 மாற் 6:26 மாற் 10:22 லூக் 18:23 யோவா 19:12-16 |
| 23 | அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். | மத் 13:22 உபா 6:10-12 உபா 8:10-18 யோபு 31:24 யோபு 31:25 சங் 49:6 சங் 49:7 சங் 49:16-19 நீதி 11:28 நீதி 30:8 நீதி 30:9 மாற் 10:23 லூக் 12:15-21 லூக் 16:13 லூக் 16:14 லூக் 16:19-28 லூக் 18:24 1கொரி 1:26 1தீமோ 6:9 1தீமோ 6:10 யாக் 1:9-11 யாக் 2:6 யாக் 5:1-4 |
| 24 | மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். | மத் 19:26 மத் 23:24 எரே 13:23 மாற் 10:24 மாற் 10:25 லூக் 18:25 யோவா 5:44 |
| 25 | அவருடைய சீஷர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால், யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். | மத் 24:22 மாற் 13:20 லூக் 13:23 லூக் 13:24 ரோம 10:13 ரோம 11:5-7 |
| 26 | இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார். | ஆதி 18:14 எண் 11:23 யோபு 42:2 சங் 3:8 சங் 62:11 எரே 32:27 சகரி 8:6 மாற் 10:27 லூக் 1:37 லூக் 18:27 |
| 27 | அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான். | மத் 4:20-22 மத் 9:9 உபா 33:9 மாற் 1:17-20 மாற் 2:14 மாற் 10:28 லூக் 5:11 லூக் 5:27 லூக் 5:28 லூக் 14:33 லூக் 18:28 பிலிப் 3:8 |
| 28 | அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். | ஏசா 65:17 ஏசா 66:22 அப் 3:21 2பேது 3:13 வெளிப் 21:5 |
| 29 | என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; | மத் 16:25 மாற் 10:29 மாற் 10:30 லூக் 18:29 லூக் 18:30 1கொரி 2:9 |
| 30 | ஆகிலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார். | மத் 8:11 மத் 8:12 மத் 20:16 மத் 21:31 மத் 21:32 மாற் 10:31 லூக் 7:29 லூக் 7:30 லூக் 13:30 லூக் 18:13 லூக் 18:14 ரோம 5:20 ரோம 5:21 ரோம 9:30-33 கலா 5:7 எபிரெ 4:1 |