| 1 | அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் கீர்த்தியைக் கேள்விப்பட்டு, | மாற் 6:14-16 மாற் 8:15 லூக் 9:7-9 லூக் 13:31 லூக் 13:32 லூக் 23:8-12 லூக் 23:15-12 அப் 4:27 |
| 2 | தன் ஊழியக்காரரை நோக்கி: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து எழுந்தான்; ஆகையால், இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான். | மத் 11:11 மத் 16:14 மாற் 8:28 யோவா 10:41 |
| 3 | ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான். | மத் 4:12 மாற் 6:17 லூக் 3:19 லூக் 3:20 யோவா 3:23 யோவா 3:24 |
| 4 | ஏனெனில்: நீர் அவளை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான். | லேவி 18:16 லேவி 20:21 உபா 25:5 உபா 25:6 2சாமு 12:7 1இரா 21:19 2நாளா 26:18 2நாளா 26:19 நீதி 28:1 ஏசா 8:20 மாற் 6:18 அப் 24:24 அப் 24:25 |
| 5 | ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான். | மாற் 6:19 மாற் 6:20 மாற் 14:1 மாற் 14:2 அப் 4:21 அப் 5:26 |
| 6 | அப்படியிருக்க, ஏரோதின் ஜென்மநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் குமாரத்தி அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள். | ஆதி 40:20 எஸ்தர் 1:2-9 எஸ்தர் 2:18 தானி 5:1-4 ஓசி 1:5 ஓசி 1:6 மாற் 6:21-23 |
| 7 | அதினிமித்தம் அவன்: நீ எதைக்கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான். | எஸ்தர் 5:3 எஸ்தர் 5:6 எஸ்தர் 7:2 |
| 8 | அவள் தன் தாயினால் ஏவப்பட்டபடியே: யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தாலத்திலே எனக்குத் தாரும் என்று கேட்டாள். | 2நாளா 22:2 2நாளா 22:3 மாற் 6:24 |
| 9 | ராஜா துக்கமடைந்தான். ஆகிலும், ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக்கட்டளையிட்டு, | மத் 14:1 மாற் 6:14 |
| 10 | ஆள் அனுப்பி, காவற்கூடத்திலே யோவானைச் சிரச்சேதம்பண்ணுவித்தான். | மத் 17:12 மத் 21:35 மத் 21:36 மத் 22:3-6 மத் 23:34-36 2நாளா 36:16 எரே 2:30 மாற் 6:27-29 மாற் 9:13 லூக் 9:9 வெளிப் 11:7 |
| 11 | அவனுடைய சிரசை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள். | ஆதி 49:7 நீதி 27:4 நீதி 29:10 எரே 22:17 எசே 16:3 எசே 16:4 எசே 19:2 எசே 19:3 எசே 35:6 வெளிப் 16:6 வெளிப் 17:6 |
| 12 | அவனுடைய சீஷர்கள் வந்து உடலை எடுத்து அடக்கம்பண்ணி, பின்பு போய் அந்தச் சங்கதியை இயேசுவுக்கு அறிவித்தார்கள். | மத் 27:58-61 அப் 8:2 |
| 13 | இயேசு அதைக் கேட்டு, அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஓர் இடத்துக்குத் தனியே போனார். ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவரிடத்திற்குப் போனார்கள். | மத் 14:1 மத் 14:2 மத் 10:23 மத் 12:15 மாற் 6:30-33 லூக் 9:10-17 யோவா 6:1-15 |
| 14 | இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார். | மத் 9:36 மத் 15:32-39 மாற் 6:34 மாற் 8:1 மாற் 8:2 மாற் 9:22 லூக் 7:13 லூக் 19:41 யோவா 11:33-35 எபிரெ 2:17 எபிரெ 4:15 எபிரெ 5:2 |
| 15 | சாயங்காலமானபோது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், நேரமுமாயிற்று; ஜனங்கள் கிராமங்களுக்குப்போய்த் தங்களுக்கு போஜனபதார்த்தங்களைக்கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். | மாற் 6:35 மாற் 6:36 லூக் 9:12 |
| 16 | இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டுவதில்லை; நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். | 2இரா 4:42-44 யோபு 31:16 யோபு 31:17 நீதி 11:24 பிரச 11:2 லூக் 3:11 யோவா 13:29 2கொரி 8:2 2கொரி 8:3 2கொரி 9:7 2கொரி 9:8 |
| 17 | அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள். | மத் 15:33 மத் 15:34 எண் 11:21-23 சங் 78:19 சங் 78:20 மாற் 6:37 மாற் 6:38 மாற் 8:4 மாற் 8:5 லூக் 9:13 யோவா 6:5-9 |
| 18 | அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். |
| 19 | அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள். | மத் 15:35 மாற் 6:39 மாற் 8:6 லூக் 9:14 யோவா 6:10 |
| 20 | எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள். | மத் 5:6 மத் 15:33 யாத் 16:8 யாத் 16:12 லேவி 26:26 1இரா 17:12-16 2இரா 4:43 2இரா 4:44 நீதி 13:25 எசே 4:14-16 ஆகா 1:6 லூக் 1:53 லூக் 9:17 யோவா 6:7 யோவா 6:11 |
| 21 | ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள். | யோவா 6:10 அப் 4:4 அப் 4:34 2கொரி 9:8-11 பிலிப் 4:19 |
| 22 | இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார். | மாற் 6:45 |
| 23 | அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார். | மத் 6:6 மத் 26:36 மாற் 6:46 லூக் 6:12 அப் 6:4 |
| 24 | அதற்குள்ளாகப் படவு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலைவுபட்டது. | மத் 8:24 ஏசா 54:11 மாற் 6:48 யோவா 6:18 |
| 25 | இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார். | மத் 24:43 லூக் 12:38 |
| 26 | அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். | 1சாமு 28:12-14 யோபு 4:14-16 தானி 10:6-12 மாற் 6:49 மாற் 6:50 லூக் 1:11 லூக் 1:12 லூக் 24:5 லூக் 24:45 அப் 12:15 வெளிப் 1:17 |
| 27 | உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார். | மத் 9:2 யோவா 16:33 அப் 23:11 |
| 28 | பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான். | மத் 19:27 மத் 26:33-35 மாற் 14:31 லூக் 22:31-34 லூக் 22:49-34 லூக் 22:50-34 யோவா 6:68 யோவா 13:36-38 ரோம 12:3 |
| 29 | அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின்மேல் நடந்தான். | மத் 17:20 மத் 21:21 மாற் 9:23 மாற் 11:22 மாற் 11:23 லூக் 17:6 அப் 3:16 ரோம 4:19 பிலிப் 4:13 |
| 30 | காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான். | மத் 26:69-75 2இரா 6:15 மாற் 14:38 மாற் 14:66-72 லூக் 22:54-61 யோவா 18:25-27 2தீமோ 4:16 2தீமோ 4:17 |
| 31 | உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். | சங் 138:7 ஏசா 63:12 மாற் 1:31 மாற் 1:41 மாற் 5:41 அப் 4:30 |
| 32 | அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. | சங் 107:29 சங் 107:30 மாற் 4:41 மாற் 6:51 யோவா 6:21 |
| 33 | அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள். | மத் 15:25 மத் 28:9 மத் 28:17 லூக் 24:52 |
| 34 | பின்பு, அவர்கள் கடலைக் கடந்து, கெனேசரேத்து நாட்டில் சேர்ந்தார்கள். | மாற் 6:53-56 |
| 35 | அவ்விடத்து மனுஷர் அவரை இன்னார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, பிணியாளிகளெல்லாரையும் அவரிடத்தில் கொண்டுவந்து, | மத் 4:24 மத் 4:25 மாற் 1:28-34 மாற் 2:1-12 மாற் 3:8-10 மாற் 6:55 |
| 36 | அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள். | மத் 9:20 மத் 9:21 மாற் 3:10 லூக் 6:19 அப் 19:11 அப் 19:12 |